Quote Originally Posted by geno View Post
None of the single quotes "refer" to any other poetry or a particular/specific issue, so that it can made to sound ironic! except the obvious ones like :

'வலம்புரியா?'...'இடம்புரியா?' and 'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'.
அதுனால தான் கேட்டேன். சிலபல இடங்கள்ல ஐரனி தெரிஞ்சுது.

Quote Originally Posted by geno View Post
பழைய பதிவுகளில் அவ்வளவா கவிதைகள் இல்லை; ஆனால் சில கவிதை "முயற்சிகள்" உண்டு!
வலையெனும் பெருங்கடலில் தேடி Elizabeth Barret Browning translation படிச்சிக்கிட்டு இருக்கேன் வரிசையா வரேன்.

Quote Originally Posted by geno View Post
- ந.மகுடேசுவரன், பசுவய்யா, தருமு சிவராமு, ப்ரமிள், கல்யாண்ஜி, ஞானக்கூத்தன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன் - என்று நிறைய படிக்கக் கிடைத்தது..இன்னும் அதில் சிலதை - பக்கங்கள் கிழித்து சேகரித்து என் வீட்டு மொட்டை மாடி பரணில் வைத்திருக்கிறேன்
தருமு சிவராமு, ப்ரமிள் ஒரே ஆள் தானே? ஒரு வேளை அந்த இரண்டு பெயர்கள்ல வந்த கவிதை style வெவ்வேற மாதிரியா?

Quote Originally Posted by geno View Post
(ஆனால் தேடினால் அப்பம் நான் வாங்கியிருந்த ஒரு மேட்டர் புக்குதான் கெடைச்சது!)......
Haha. மகுடேஸ்வரனோட 'சிற்றின்பம்' ன்ற கவிதை ஞாபகத்துக்கு வருது. சரியா வரிகள் ஞாபகம் இல்லை. தேடிக் கிடைச்சதும் சுட்டி தரேன்.

Quote Originally Posted by geno View Post
இதேபோல, கமல் பேட்டிகளை வெட்டி ஸ்டேப்ளர் போட்டு வைத்திருக்கிறேன்..அவருடைய "தேடித் தீர்ப்போம் வா" புத்தகம் கூட இருக்குது..ஒருமுறை அதை ஜோவுக்காக எடுத்து ஸ்கேன் பண்ணலாம்னு தேடினேன் - அது கெடைக்கலை!
I think maiam guys would be pretty interested if you do manage to find them.

Quote Originally Posted by geno View Post
"மேசை நடராசர்" என் நினைவில் இருந்து தேடி எடுத்ததுதான்! கூகுளாண்டவர் முழு கவிதையையும் கொடுத்து விட்டார்!
ஞானக்கூத்தன் - ஓரளவுக்கு கல்யாண்ஜி - தவிர ரொம்ப பிடிச்சவங்கன்னு யாரையும் சொல்ல முடியாது.
ஞானக்கூத்தனுக்கு ஒரு திரி ஆரம்பிச்சு நகரவே இல்லை : http://www.mayyam.com/talk/showthrea...3-GnAnakoothan

அவர் கவிதைகளைப் பத்தி நீட்டி முழக்கி எழுதணும்னு - பரிமேலழகனும்னு - நினைப்பேன். கவிதையைப் பத்தி எழுதி ரொம்ப தட்டையாக்கிடுவோம்னு ஒரு தயக்கம். புறநானூறு பத்தி ஒரு podcast பண்ணி ரொம்ப flat ஆயிடுச்சு. அதுனால ஞானக்கூத்தன் பிழைச்சிக்கிட்டே வரார். ஒருநாள் சிக்க வச்சிருவேன்.

Quote Originally Posted by geno View Post
பழைய காதலி அனுப்பியிருந்த ஒரு க்ரீட்டிங் கார்டு! நேரில் கிடைக்காதது அதில் "ஒற்றி"...
எப்போது கிடைத்தாலும் அந்த செல்லரித்த தாள்களில் என் பால்ய கால சந்தோஷமும் இருக்கப் போகிறது.
Paruthiveeran sidekick kid: நீ இந்த மாதிரி பேசி நான் பார்த்ததேயில்லப்பா!