-
22nd February 2013, 11:45 AM
#1861
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கலகலப்பாக பல இதயங்கள் இத்திரியில்...
சிவாஜி புகழ் நிலையானது!
அன்பு வாசு உங்கள் அஞ்சல்பெட்டி வித்தியாச விமர்சனமும், திரு ராகுல்ராம் - உங்கள் தங்கசுரங்கம் பார்வையும் அருமை!
முரளி ஶ்ரீனிவாஸ் அவர்கள், ஜோ அவர்கள் மற்றும் பல நண்பர்கள் பங்களிப்பால் திரி ஒளிர்கிறது.. மிளிர்கிறது.
வாசு அவர்கள், ராகவேந்திரா அவர்களின் மனம் எவ்வளவு துள்ளும் என உணர முடிகிறது!
எல்லாப்புகழும் நம் நடிகர் திலகத்துக்கே!
நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
22nd February 2013 11:45 AM
# ADS
Circuit advertisement
-
22nd February 2013, 11:49 AM
#1862
Junior Member
Seasoned Hubber
When a Pig with shit comes towards us, we should give way for
it. If we throw stone that shit will come to us. Like this we should
not give reply for the silly comments on our Acting God.
-
22nd February 2013, 01:07 PM
#1863
Senior Member
Diamond Hubber

Originally Posted by
abkhlabhi
Dear Mr.Vasu,
Superb writing. I have not seen this movie till date though I heard and read often. I think this is 2nd half. (downloaded immediately in my mobile - GK, UVU, SES already stored in my mobile) Ist half missing. Can you try to upload ?
thanks a lot.
பாலா சார்,
அஞ்சல் பெட்டி 520 DVD உரிமை ராஜ் தொலைகாட்சி நிறுவனத்திடம் உள்ளது. அவர்கள் அளித்திருக்கும் DVD யிலும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் கிட்டத்தட்ட பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இல்லை. டக்கென தான் படம் துவங்குகிறது. சரோஜாதேவி தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்ப்பது, படத்தில் வரும் அருமையான கார் சேஸிங்கைக் கண்டு பின் மயங்கி விழுவது, நடிகர் திலகம், நாகேஷ் இருவரும் சரோஜாதேவயை கிளினிக்கில் சேர்ப்பது போன்ற காட்சிகள் மிஸ்ஸிங். சரி ராஜ் தொலைக்காட்சியில் படம் போடும் போது ரெகார்ட் செய்து கொள்ளலாம் என்று ஒருநாள் அஞ்சல் பெட்டி 520 போடும்போது உட்கார்ந்தால் சேனல் ஒலிபரப்பிலும் DVD யில் எப்படி படம் ஆரம்பிக்குமோ அப்படியேதான் ஆரம்பித்தது. source அவ்வளவுதான். இணையத்தில் தரவேற்றம் செய்திருப்பதும் அதே ராஜ் தொலைக்காட்சியின் dvd யைத்தான். அதனால் ஏமாற்றமே...பார்ப்போம்... கிடைக்காமலா போய் விடும்?
-
22nd February 2013, 01:54 PM
#1864
Junior Member
Seasoned Hubber
It is a horrible print and it is comes with the combination
of Arunodhayam. The print of Arunodhayam is far better
than AP 520.
-
22nd February 2013, 01:57 PM
#1865
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
பாலா சார்,
அஞ்சல் பெட்டி 520 DVD உரிமை ராஜ் தொலைகாட்சி நிறுவனத்திடம் உள்ளது. அவர்கள் அளித்திருக்கும் DVD யிலும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் கிட்டத்தட்ட பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இல்லை. டக்கென தான் படம் துவங்குகிறது. சரோஜாதேவி தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்ப்பது, படத்தில் வரும் அருமையான கார் சேஸிங்கைக் கண்டு பின் மயங்கி விழுவது, நடிகர் திலகம், நாகேஷ் இருவரும் சரோஜாதேவயை கிளினிக்கில் சேர்ப்பது போன்ற காட்சிகள் மிஸ்ஸிங். சரி ராஜ் தொலைக்காட்சியில் படம் போடும் போது ரெகார்ட் செய்து கொள்ளலாம் என்று ஒருநாள் அஞ்சல் பெட்டி 520 போடும்போது உட்கார்ந்தால் சேனல் ஒலிபரப்பிலும் DVD யில் எப்படி படம் ஆரம்பிக்குமோ அப்படியேதான் ஆரம்பித்தது. source அவ்வளவுதான். இணையத்தில் தரவேற்றம் செய்திருப்பதும் அதே ராஜ் தொலைக்காட்சியின் dvd யைத்தான். அதனால் ஏமாற்றமே...பார்ப்போம்... கிடைக்காமலா போய் விடும்?
Dear Mr. Vasudevan,
The opening chasing scene is from "Cold Sweat", a Charles Bronson starrer, was a terrific one.
Regards,
R. Parthasarathy
-
22nd February 2013, 02:01 PM
#1866
Junior Member
Seasoned Hubber
Today lot of NT's movies are screened in many
TV channels.
On Sunday at 7.30 in Murasu TV the Super Duper Hit of
NT Uthama Puthiran. Dont Miss it.
-
22nd February 2013, 04:05 PM
#1867
Junior Member
Newbie Hubber
முதல் மரியாதை- 1985-பகுதி-1
திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,
சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை. நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமுத்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாக்கி நெய்த அழகிய அதிசயம்.
நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.
ஏனெனில், நடிகர்திலகம் Stalinovsky ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objective படி கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த்தி,காத்து,அழ ித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner ,Straberg பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில், உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.
(தொடரும்)
முதல் மரியாதை-1985-பகுதி-2
மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.
மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணு வும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொ ன் னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தா ம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.
ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo copy ஐ போன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.
பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது
பொ ன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயி ர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.
(தொடரும்)
Last edited by Gopal.s; 23rd February 2013 at 02:13 PM.
-
22nd February 2013, 04:08 PM
#1868
Junior Member
Newbie Hubber
முதல் மரியாதை-1985-பகுதி-3
பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப் புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புகளை,சிதைவுகள ை இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.
Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உள வழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.
மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுணர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுயநலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியிடம் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறான்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)
படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன் சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து, வசமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போது மனைவி கெட்டு போன வரலாற்றை சொல்லி அவளை உதைக்கும் அளவு செல்வது, பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவியியிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustrationஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறான் .(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்புக்கிழுத்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவனுடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவன் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.
தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance ஐ வழங்கும், இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே? குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலை சாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை, அதனால் ஏற்படும் குற்ற உணர்வை, தியாகத்தால் மெழுகுகிறாள் .
பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் ,மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை , எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் வரும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா ?
இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.
(தொடரும்)
Last edited by Gopal.s; 23rd February 2013 at 03:00 PM.
-
22nd February 2013, 04:11 PM
#1869
Junior Member
Newbie Hubber
முதல் மரியாதை-1985-பகுதி-4
கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதா பாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன?அவர் வீட்டு-நாட்டு பிரச்சினைகளால்,உடலும் மனமும் சோர்ந்து கிடந்த போது ,இந்த பாத்திரம் வைத்ததில்,அவரால் பல மடங்கு இயல்பாக சோபிக்க முடிந்தது. அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.
தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூடு கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன்துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பரி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,
நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சாத்திய படாது)
(தொடரும்)
முதல் மரியாதை-1985- பகுதி-5.
வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.
இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.
பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)
கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜனரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோகமுள் கதை போல)
பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.
(முற்றும்).
Last edited by Gopal.s; 23rd February 2013 at 02:49 PM.
-
22nd February 2013, 06:01 PM
#1870
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
நடிகர் திலகத்தின் நடிப்பை, பங்களிப்பை வார்த்தைகளில் எழுதுவது சவால் என்பது போல், தங்களுடைய "முதல் மரியாதை" ஆய்வையும் வார்த்தைகளில் கொண்டு வருவது சவால் தான். அவரது பங்களிப்பை எழுதுவதற்கே இத்தனை விஷயங்களை அலச வேண்டியதிருக்கிறதே! அதனால் தான் அவரை கலைமகளின் அம்சம் என்கிறார்களோ!!
நீண்ட நாட்களுக்கப்புறம் அதிரடியாய் நுழைந்திருக்கிறீர்கள்.
அற்புதம்.
இன்னமும் இருக்கிறது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Bookmarks