-
7th March 2013, 03:02 PM
#11
Senior Member
Diamond Hubber


வா தலைவா வா...
தலைவாழை இலை விருந்து பரிமாற வா...
தமிழ்த் திரையுலகின் மானத்தை கர்ணனாய் மீண்டு வந்து மீட்டி கௌரவம் காத்தாய்.
இப்போது இரண்டாவது ஆனந்த் அவதார்.
கர்ணன் காதலை வாழ்க்கையில் ஒரு பகுதி ஆக்கினான்..
ஆனந்தோ காதலையே வாழ்க்கை ஆக்கினான்..
முன்னவன் மன்னவன்..
பின்னவன் சக்கரவர்த்தி..
அவன் தண்ணீரில் மிதந்து வந்த குழந்தை..
இவனும்தான்..
அவனோ ஆலையில் இடப்பட்ட கரும்பு... அன்னை உட்பட அனைவரும் அவனை சாறு பிழிந்தனர்.
இவனோ அனைவருக்கும் கனிச்சாறு கொடுப்பவன். பழச் சாற்றை பதம் பார்ப்பவன்.
அவன் மான அவமானங்களுக்கு அஞ்சுபவன்
இவன் அத்தனையையும் ஆரம்பத்தில் துறந்தவன்
அவன் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தான்.
இவன் காதல் கடன் தீர்க்க வசந்த மாளிகை சேர்ந்தான்.
தேரோட்டி என்ற இழிசொல் அவனுக்கு.
ஊதாரி என்ற பழிச்சொல் இவனுக்கு.
மகிழ்ச்சி இன்னதென்று அறியாதவன் அவன்.
மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றும் அறியாதவன் இவன்.
அவன் நட்புக்காக உயிர் துறந்தான்.
இவன் காதலிக்காக உயிர் துறக்க முற்பட்டான்.
இருவருமே
ஏழைகளின் கண்ணீர் துடைப்பவர்கள்
இருவருமே
வள்ளல்கள்
வசூலை வாரிக் கொடுப்பதில்.
Last edited by vasudevan31355; 7th March 2013 at 03:20 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
7th March 2013 03:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks