-
26th March 2013, 12:05 AM
#11
ஆனந்தின் அன்பு சாம்ராஜ்ஜியம் ஆல்பர்டில் தொடருகிறது
காலத்தால் அழியாத காதல் சாம்ராஜ்ஜியம் தன எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறது.
இன்றைய தலைமுறையினரையும் காந்தம் போல் கவர்ந்து வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மூன்றாவது வார சனிக்கிழமையிலும் கணிசமான கூட்டம்.
நேற்று ஞாயிறோ 50 ரூபாய் டிக்கெட் புஃல். 70 ரூபாய் டிக்கெட் இருக்கைகள் கிட்டத்தட்ட நிறைந்து விட்டன. 18 டிக்கெட்கள் மட்டுமே விட்டுப் போயின.
அநேகமாக அனைத்து திரையரங்களிலுமே ஓடிக் கொண்டிருக்கும் படங்களைப் பார்க்க பொதுமக்கள் வராத சூழலில் வசந்த மாளிகைக்கு மட்டும் திரண்டு வரும் மக்கள் கூட்டம்.
இதை தவிர நெல்லையில் வெற்றிகரமான இரண்டாம் வாரம், பழைய படங்களே திரையிடப்படாத [திருசெந்தூர் அருகில்] ஆத்தூர் தம்பையாவில் மாளிகை திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று நெல்லை மாவட்ட செய்திகள் கூறுகின்றன. இந்த வாரம் வெள்ளியன்று நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் வெளியாகலாம் என்றும் தகவல்.
அன்புடன்
-
26th March 2013 12:05 AM
# ADS
Circuit advertisement
Bookmarks