-
14th May 2013, 06:32 PM
#11
Senior Member
Diamond Hubber
அருமை பார்த்தசாரதி சார்! நீங்கள் குறிப்பிட்ட 'ராமன் எத்தனை ராமனடி' காட்சி... குறிப்பாக இறுதியில் மகளிடம் விடை பெறும் போது இரண்டு கைகளையும் சற்றே உயர்த்தித் தூக்கியவாறே மகளின் அருகே வரும் அந்த வார்த்தைகளில் வர்ணிக்க இயலா ஜாலத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். தாங்களும் என்னைப் போலவே அப்படியே ஆழமாக ரசித்துள்ளீர்கள். அடடா! என்ன ஒரு அசாத்திய ஒற்றுமை! நிஜமாகவே மெய் சிலிர்க்கிறது. அடுத்தமுறை நாம் நேரில் சந்திக்கும் போது இதைப் பற்றி விரிவாக பேசுவோம்.
மகளைப் பார்த்து போவதைப் பாருங்கள்!

இன்னொன்று "ஞானஒளி"
கோடீஸ்வர அருண் பேத்தியின் கல்யாணத்தை தடபுடலாக நடத்த ஆசைபட்டு மகள் மேரியிடம் அதை வெளிப்படுத்தும் காட்சி. மகள்தான் சீரழந்து விட்டாள். அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சி நடத்தி வைத்து கண்குளிரப் பார்க்க முடியவில்லை. (ஆண்டனியாக இருக்கையில்). ஆனால் இன்று கோட்டீஸ்வரன் அருண். மகளிடமே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பரிதாபம். லாரன்ஸிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. மகளிடம் பாசத்தை மறைக்கவும் முடியாது. மகள் தன் மகளுக்கு திருமணம் என்று வந்து நிற்கிறாள். பேத்திக்கு கல்யாணம் என்ற சந்தோஷம். தானே தடபுடலாக நடத்தி வைக்க மனது கிடந்து தவிக்கிறது. ஆனால் மகளோ முட்டுக் கட்டை போடுகிறாள் தந்தை காவல்காரனிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று. இதுதான் சிச்சுவேஷன். பேத்தி கல்யாணம் என்றவுடன் அதை எவ்வளவு சிறப்பாக நடத்த வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு மகளிடம் சொல்வார்.
"மகளுக்கு செஞ்சு பார்க்க முடியாத கல்யாணத்த பேத்திக்காவது செஞ்சு பார்க்கிறேன்"

இதில் என்ன விசேஷம்? அங்குதான் நிற்கிறார் 'நான் வணங்கும் தெய்வம்'. வேறு யாராய் இருந்தாலும் ஒன்று அந்த டயலாகை அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள் அல்லது வருத்தமாய் சொல்லியிருப்பார்கள். அது பத்தோடு பதினொன்றாய் சாதரணமாய்ப் போய் இருக்கும். ஆனால் இந்த எமன் சொல்லும் போது...
"மகளுக்கு செஞ்சு பார்க்க முடியாத கல்யாணத்த" என்ற வ(ரி)ரையில் வார்த்தைகளின் உச்சரிப்பு சற்று வேகமாக வெளிப்படும். அதுவரையில் அழுகை வெளிப்படாது. எல்லா உணர்ச்சிகளும் வெடித்து வெளியே கிளம்பத் தயாராய் இருக்கும். ஆனால் நமக்குத் தெரியாது. எதிர்பார்க்கவும் மாட்டோம். அடுத்த வரியான
"பேத்திக்காவது செஞ்சு பார்க்கிறேன்"
எனும்போது ஒரு செகண்டின் பலபாகங்களின் ஒருபாக நேரத்தில் வெடித்து கதறுவார் பாருங்கள்! அவ்வளவு வேகமாக. ஒரு வரி வசனத்தின் பாதியை அமைதியாகக் கையாண்டு மீதியை ஆத்திரம், துக்கம் தொண்டையை அடக்க அழுதபடியே வெளிப்படுத்தி பார்ப்பவர் நெஞ்சங்களைக் கலங்கடிப்பார். என்ன திறமைடா சாமி! அந்த வசன வரியில் எட்டே எட்டு வார்த்தைகள்தான். அதுவும் சிறு சிறு வார்த்தைகள்தான். அதில் நான்கு வார்த்தைகளுக்கு ஒருவிதமான உச்சரிப்பு.... அடுத்த நான்கு வார்த்தைகளுக்கு வேறுவிதமான உச்சரிப்புடன் கூடிய எதிர்பாராத உணர்வுகளை காட்டும் உன்னத திறன். மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க முடியாமல் போன அங்கலாய்ப்பு... அவளால் பட்ட அவமானம்...அதை நேர் செய்வது போல இப்போது பேத்தியின் கல்யாணம்... அன்று அடைய முடியாத ஆனந்தத்தை இன்றாவது பேத்தியின் திருமணம் மூலம் அடைய வழி கிடைத்து விட்டதே என்ற சிறு திருப்தி... இன்னும் எத்தனை எத்தனை அர்த்தங்கள் அந்த ஒரு வரியில் உணர்த்தப்படும்!
நீ மனிதனே அல்ல...தெய்வம்... எங்கள் குல தெய்வம்... எங்கள் கௌரவம் காக்கும் தெய்வம்...எங்களைக் காக்கும் காவல் தெய்வம்.
அதனால் தான் 'ஞான ஒளி'
என்றுமே
எனக்கு நெம்பர் 1
இது ஒரு சிறு துளிதான். ஈரேழு ஜென்மத்திற்கும் சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன இந்தக் காவியத்தில்.
நன்றி!
Last edited by vasudevan31355; 14th May 2013 at 07:57 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
14th May 2013 06:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks