Part 21

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-21


விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?

------To be continued .(தற்போதைய உத்தம புத்திரன் பதிவுகள் 318-3175, 321-3204, 326- 3251, 326-3259)
Part 22

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-22


தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.

அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.

கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.

தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.

கொஞ்சம் மனோதத்துவ அடிப்படை கொண்ட பாத்திரமாதலால் medical jargon உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை எனக்கு. இதை தயவு செய்து பரிச்சித்து கொண்டு என்னை(இரு கோபாலையும்)தொடர வேண்டுகிறேன்.

-----To be continued .
Part 23

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-23

எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.

இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .

இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.

இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .

இனி அந்த பாத்திரத்துக்குள் ஆழமாக நுழைவோம். ஆனால் நான் கூறியவற்றை தயவு செய்து இன்னொரு முறை படித்து தெளிவு செய்து கொள்ளவும். நாம் பேச போவது சராசரி விஷயம் அல்ல.இந்த தயாரிப்பு நமக்கு அவசியம்.

-----To be continued .
Part 24

ந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-24


மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.

-----To be continued .
Part 25

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-25

அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.

லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.

விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.

அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.

அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.

-----To be continued .