-
1st June 2013, 06:14 AM
#11
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-34
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
----To be Continued .
Last edited by Gopal.s; 3rd June 2013 at 05:21 AM.
-
1st June 2013 06:14 AM
# ADS
Circuit advertisement
Bookmarks