Results 1 to 10 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

Threaded View

  1. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Method Acting - முன்பே வரையறுக்கப் பட்ட ஒரு வழிமுறையை எடுத்துக் கொண்டு அதனைப் பின்பற்றி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதே பெரும்பாலும் இந்த Method Acting எனப் படும் வழிமுறை நடிப்பாகும். சினிமா கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பிருந்த நாடகக் கலையின் அடிப்படையில் ருஷ்ய கலை வல்லுநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி அவர்கள் நடிப்பிற்கென்று ஒரு இலக்கணத்தை உருவாக்கினார். அதற்குப் பின் வந்த நடிப்புக் கலை பெரும்பாலும் அவருடைய வழிமுறையைப் பின்பற்ற, அதனால் உருவானது ஸ்தானிஸ்லாவ்ஸ்கி வழிமுறை. அவருக்குப் பிறகு, சினிமா கண்டு பிடிக்கப் பட்டு அதற்கேற்றவாறு நடிப்புத் தன்மை இருக்க வேண்டும் என்று கருதிய சில அறிஞர்களால் வெவ்வேறு வகையான வழிமுறைகள் நடிப்புக் கலைக்கென உருவாக்கப் பட்டன. அல்லது அதனைப் பின்பற்றுவோரால் அவை வழிமுறைகளாக பாவிக்கப் பட்டன. அவற்றில் சில, மிக்காயில் செக்கோவ், ஆஸ்கர் ஒயில்டு போன்றவர்களின் வழிமுறைகள். இந்த வழிமுறைகள் அவரவர் பாணிக்கேற்றவாறு ஆங்கிலத்தில் ஸ்கூல் என்ற வகையில் சேர்க்கப் பட்டு இவையெல்லாம் பலவிதமான நடிப்புப் பள்ளிகள் என்கிற பிரிவில் அடையாளம் காணப் பட்டன.

    இவையன்றி, பிரிட்டனின் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கென்று தனி நடிப்பிலக்கணம் உள்ளது. அது பெரும்பாலும் இலக்கியத்தை சார்ந்திருக்கும், அந்த கதாபாத்திரங்களுக்கென்று உருவாக்கப் பட்ட பாணியிலேயே அ்வை அமைந்திருக்கும். இவற்றை ஷேக்ஸ்பியர் வழிமுறை என நாம் கருதலாம்.

    இந்தப் பள்ளிகள் அல்லது இந்த வழிமுறைகள், அவை தோற்றுவிக்கப் பட்ட நாடு, இனம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையிலோ அல்லது அவற்றின் தாக்கத்துடனோ அமைந்திருக்க வாய்ப்புள்ளது. இவை பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சார அடிப்படையில் அமைந்திருக்கும். கீழ், மற்றும் தெற்காசிய நாடுகளின் நடிப்பிற்கு இவை ஒத்துப் போவது அபூர்வம். இந்திய, ஜப்பானிய கொரிய, சிங்கள, மற்றும் இதர தெற்காசிய மொழி, இன, கலாச்சார அடிப்படையிலான திரைப்படங்கள் இவற்றிலிருந்து விலகி இருக்கும்.

    நடிப்பிற்கென்று பொதுவான இலக்கணம் என்பது வரையறுக்க முடியாது. நாடகத்திற்கென ஒரு வழிமுறை, திரைப்படங்களுக்கென்று ஒரு வழிமுறை என மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது போக, மற்ற பற்பல அம்சங்கள் - மேலே கூறியவை உள்பட- நடிப்பின் வகையினை வரையறுக்கும்.

    இந்த அடிப்படையில் தான் நாம் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்க்க வேண்டும். இனி வரும் பதிவுகளில் இது விரிவாக இடம் பெறும்.
    Last edited by RAGHAVENDRA; 22nd May 2013 at 05:21 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •