Page 44 of 399 FirstFirst ... 3442434445465494144 ... LastLast
Results 431 to 440 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #431
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு சார்,

    நடிகர் திலகம் மலையாள நடிகர்களுடன் இணைந்து நடித்த விவரங்களை பற்றி நான் எழுதியதை படித்தவுடன் அவர்களோடு நடிகர் திலகம் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிலும் குறிப்பாக [ஏற்கனவே பார்த்த புகைப்படம் என்றாலும் கூட] கலையுலக பீஷ்மர் தன மாணாக்கர்களோடு காட்சியளிக்கும் அந்த அரிய புகைப் படத்திற்கு நன்றி. உங்களுக்காக ஞான ஒளி பற்றிய ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு.

    தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி பேசினோம். அந்த பாடல் எப்போது படமாக்கப்பட்டது தெரியுமா?

    1972-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி புதன்கிழமை வசந்த மாளிகை படத்திற்கு பூஜை போடப்பட்டு அன்றே படப்பிடிப்பும் துவங்கியது. முன்பொரு முறை குறிப்பிட்டது போல முதல் நாள் வாணிஸ்ரீயின் திருமண நாள் அன்று நடிகர் திலகம் முதலில் வாசல் வழியாக வருவதும் பின்னர் பின்புற வாசல் வழியாக வந்து ஆசி கூறி செல்வதுமான காட்சிதான் முதன் முதலாக படமாக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு முதல் ஷெட்யூல் நடைபெற்றது.

    அடுத்த புதன்கிழமை ஜனவரி 26. நம் யாராலும் மறக்க முடியாத ராஜா ரிலீஸ் ஆன நாள். விமானப் படை அதிகாரிகளின் குடும்ப நல நிதிக்காக [ராகவேந்தர் சார், கரெக்ட்தானே?] சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் காலையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு நாள் மீண்டும் மாளிகை ஷூட்டிங். 28-ந் தேதி வெள்ளி இரவு நடிகர் திலகம் கொடைக்கானல் புறப்பட்டார்.

    29-ந் தேதி சனிக்கிழமை முதல் பிப்ரவரி 1 வரை நான்கு நாட்கள் கொடைக்கானலில் ஞான ஒளி படப்பிடிப்பு. தேவனே என்னைப் பாருங்கள் பாடலும் மற்றும் சில வெளிப்புற காட்சிகளும் அப்போதுதான் படமாக்கப்பட்டன.

    பிப்ரவரி 2 அன்று காலையில் மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் திலகம் அன்று கலந்துக் கொண்ட நிகழ்ச்சி என்ன தெரியுமா? அன்றுதான் சாரதா ஸ்டுடியோவில் ராஜ ராஜ சோழன் பூஜை நடைப்பெற்றது. அங்கே சென்று அந்த தொடக்கவிழா பூஜையில் கலந்து கொண்டுவிட்டு முதல்நாள் சம்பிரதாயமான படப்பிடிப்பிலும் நடித்தார்.

    ஒரே பதிவில்

    கார்த்திக்கிற்கு பிடித்த வரலாற்று சுவடுகள்!

    கோபாலை குஷிப்படுத்த வசந்த மாளிகை!

    ராகவேந்தர் சாரின் மனம் கவர்ந்த ராஜா!

    வாசுவின் உள்ளதோடு கலந்து விட்ட ஞான ஒளி!

    சுப்புவிற்கு ராஜ ராஜ சோழன்!

    அன்புடன்

    வாசு சார்,

    ஆடை அலங்கார அணிவகுப்பை சீரும் சிறப்புமாக துவக்குங்கள்!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #432
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கார்த்திக்,

    உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றையும் அதனுடன் பின்னிப் பிணைந்த அரசியல் நிகழ்வுகளையும் எழுதுவதில் எனக்கு எத்துனை இன்பமோ அத்துணை இன்பம் உங்களுக்கு அதைப் படிப்பதில் என்பது எனக்கு தெரியும். நீங்கள் சில காலம் திரிக்கு வராமல் இருந்த காலக்கட்டத்தில் நான் ஒரு வரலாற்று குறிப்பு எழுதினேன். அதாவது எங்கள் மதுரையில் 1978 மார்ச் 4-ந் தேதி தியாகம் வெளியான நாள் முதல் அந்தப் படம் 175-வது நாளை நிறைவு செய்த ஆகஸ்ட் 25-ந் தேதி வரை வெளியான் திரைபபடங்கள், சில முக்கியமான அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு பதிவு அது. நீங்கள் அதை படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பதிவை இட்ட போதும் அதை பற்றிய பின்னூட்டங்கள் பலரும் பதிந்த போதும் நீங்கள் எழுதவில்லை என்ற குறை மனதில் இருந்தது நிஜம். ஆனாலும் எப்போதும் இது போன்ற பதிவுகளுக்கு மேலதிக தகவல்களுடன் கூடிய உங்கள் பதில் பதிவு எப்போதும் படிக்க சுவை.

    அன்புடன்

  4. #433
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks for encouraging words Ragavendran sir and Neyveli Vasu sir

  5. #434
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Neyveli Vasu sir,

    You have asked why I did not upload photos, my camera was not good secondly when I went there I was completely awestruck by celebrations there superb, gala time but decent at same time, Iam sure from now on more NT movies would be screened in Kovai following the success of Raja , will surely upload photos from nwxt time

    Thank you very much for considering my request starting a series on NT dressing style & accessories

  6. #435
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    இந்த கேள்விக்கு பதில் நான் அவர்பாணியில் கூறுவதென்றால் - " சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா ..சமத்துவம் தான் நான் அறிந்த பாடமும் அம்மா ! "
    அந்த course எந்த காலேஜ் என்று கூறினால் நானும் சேருவேனே. ஆமாம் ,இதெல்லாம் படித்தால் மட்டும் போதுமா?

  7. #436
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear hubbers,
    Are Chiranjeevi, En desam En makkal, Anjal Petti 520(other than Raj video vision) available in DVD's in market kindly help

  8. #437
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Thank u Raghul.

    That is not 'En desam En makkal'. 'En tamizh en makkal'.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #438
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய சூப்பர் நிழற்படம் (விஜய்)

    Last edited by vasudevan31355; 12th June 2013 at 09:37 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #439
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆஹா, என் மகனின் பெயர் கொண்ட(பெயருக்கு காரணமான?) ,அவனை போலவே நான் நேசிக்கும் ஒருவன்.
    Last edited by Gopal.s; 12th June 2013 at 07:31 AM.

  11. #440
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    கார்த்திக்,

    நீங்கள் அதை படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த பதிவை இட்ட போதும் அதை பற்றிய பின்னூட்டங்கள் பலரும் பதிந்த போதும் நீங்கள் எழுதவில்லை என்ற குறை மனதில் இருந்தது நிஜம். ஆனாலும் எப்போதும் இது போன்ற பதிவுகளுக்கு மேலதிக தகவல்களுடன் கூடிய உங்கள் பதில் பதிவு எப்போதும் படிக்க சுவை.

    அன்புடன்
    கார்த்திக் சார்,
    நானும் recommend பண்ணுகிறேன். நிஜமாகவே மிக நல்ல சுவாரஸ்யமான பதிவு அது.திரி-10 .பக்கம்-126. பதிவு எண்கள் 1256,1257. அவர் பாணியில் சொன்னால் "அற்புதம்" என்ற ஒற்றை சொல்லை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.(முரளி சார் ,நீங்கள் பம்மலார் என்ற புனை பெயரில் எழுதியிருந்தால் கார்த்திக் சார் ஓடோடி வந்திருப்பார்.)
    Last edited by Gopal.s; 12th June 2013 at 10:30 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •