-
13th June 2013, 03:48 PM
#991
Senior Member
Senior Hubber
நடிகர் திலகம் 300 படங்களுக்கும் மேலாக கொடுத்ததால் வெற்றி படங்களும் தெரியவில்லை. தோல்விபடங்களும் தெரியவில்லை. அவரது படங்களை அவரது படங்களே வெற்றி கொண்டன. வெற்றிப் படங்களையும் தோல்விப்படங்கள் என திரும்ப திரும்ப கூறுவார் முன்பு பம்மலார் போல எல்லாரும் எல்லாப் படங்களுக்கும் ஆதாரங்கள் கொடுத்திட முடியுமா?
தங்கப்பதுமை படத்தில் நடித்ததினால்தான் இதை போன்ற கதை அமைப்பு கொண்ட சிலப்பதிகார கதையான கலைஞரின் "பூம்புகார்' படத்தில் நடிகர் திலகம் நடிக்கவில்லை என்றும் தகவல் உண்டு.
-
13th June 2013 03:48 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2013, 12:03 AM
#992
தங்கப் பதுமை பற்றி இப்போதுதான் பேசினோம். வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3.30 மணிக்கு கலைஞர் தொலைகாட்சியில் தங்கப்பதுமை ஒளிப்பரப்பாகிறது
அன்புடன்
-
14th June 2013, 08:33 AM
#993
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
தங்கப் பதுமை பற்றி இப்போதுதான் பேசினோம். வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 3.30 மணிக்கு கலைஞர் தொலைகாட்சியில் தங்கப்பதுமை ஒளிப்பரப்பாகிறது
அன்புடன்
vibrations.
-
14th June 2013, 09:35 AM
#994
Junior Member
Newbie Hubber
ஆஹா,
ஞாயிறு தோறும் விருந்தளிக்கும் கலைஞருக்கு நன்றி.
-
16th June 2013, 07:42 PM
#995
Junior Member
Newbie Hubber
தங்க பதுமை.
உட்காரும் போது அரை நம்பிக்கையுடன் உட்கார்ந்தேன் ,ஏனென்றால் சிறு வயதில் என்னை அவ்வளவாக கவராத படம். ஆனால், I was Spell bound with performance ,dialogues ,music and making style . சிலப்பதிகாரத்தை விட விறுவிறுப்பான திரைக் கதை.என்னால் ஒரு நிமிடம் அங்கு இங்கு அசைய முடியவில்லை.
மிக மிக ரசித்தவை.....
சிவாஜியின் ஆரம்ப அப்பாவி காட்சிகள். நீராடும் போது அவர் காட்டும் குஷி (உண்மையான கண்மணிக்காக!!!),கல்யாணமான முதல் இரவு காட்சி (இதிலும் ஒவ்வொரு முதலிரவும் ஒவ்வொரு மாதிரி.),மாமனார் வேலை வாங்கும் காட்சியில் indifference ,மனைவியுடன் கொஞ்ச,சாப்பாட்டிற்கு அலைவது, தானறியாமலே நடன நர்த்தகியின் வலையில் விழும் காட்சிகள் (ராஜகுமாரி எவ்வளவு அழகு!!வயது அழகை கூட்டியே இருந்தது. சிவாஜியின் சிறந்த இணையாக இவரையும் தேர்வு செய்கிறேன்) ,உளறி கொட்டி சமாளிக்கும் இளவரசியின் சால்ஜாப்புகளை கேட்டு விடாமல் நகைத்து எள்ளி, உங்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது என்ற ஊசி குத்தல், கடைசி காட்சியின் மௌனம், NT மேதை என்று கட்டியமே கூறுகின்றன. பத்மினி நடிப்பு படு powerful (பூம்புகார் விஜயகுமாரி இதற்கு ஈடே கிடையாது).
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை படு பிரமாதம்.அரு.ராமநாதன் திரைக் கதை,வசனம் படு class .
என்னா படமைய்யா? சும்மாவா அத்தனை re -release போதும் பிளந்து கட்டியது?
-
17th June 2013, 08:30 AM
#996
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
தங்க பதுமை.
உட்காரும் போது அரை நம்பிக்கையுடன் உட்கார்ந்தேன் ,ஏனென்றால் சிறு வயதில் என்னை அவ்வளவாக கவராத படம். ஆனால், I was Spell bound with performance ,dialogues ,music and making style . சிலப்பதிகாரத்தை விட விறுவிறுப்பான திரைக் கதை.என்னால் ஒரு நிமிடம் அங்கு இங்கு அசைய முடியவில்லை.
'தங்கப்பதுமை' போல சுமாராகத்தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்து ஏமாந்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் அருமையான படங்கள் இன்னும் இதுபோல நிறைய நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் கலைஞர் தொலைக்காட்சியில் போட மாட்டார்கள். எல்லாவற்றையும் ஒழுங்காகப் பாருங்கள். உதாரணத்திற்கு நெஞ்சங்கள். Best of luck.
-
17th June 2013, 08:55 AM
#997
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
பத்மினி நடிப்பு படு powerful (பூம்புகார் விஜயகுமாரி இதற்கு ஈடே கிடையாது).
யாருடன் யாரை இணைத்துப் பேசுவது?...பத்மினி எங்கே? இந்த அலட்டல் எங்கே?
-
17th June 2013, 01:13 PM
#998
Junior Member
Newbie Hubber
பாத்துடறேம்பா. பாத்துடறேன்.
-
17th June 2013, 03:10 PM
#999
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kalnayak
நடிகர் திலகம் 300 படங்களுக்கும் மேலாக கொடுத்ததால் வெற்றி படங்களும் தெரியவில்லை. தோல்விபடங்களும் தெரியவில்லை. அவரது படங்களை அவரது படங்களே வெற்றி கொண்டன. வெற்றிப் படங்களையும் தோல்விப்படங்கள் என திரும்ப திரும்ப கூறுவார் முன்பு பம்மலார் போல எல்லாரும் எல்லாப் படங்களுக்கும் ஆதாரங்கள் கொடுத்திட முடியுமா?
திரு கல்நாயக் அவர்களே
அப்படி கூறுபவர்கள் முதலில் அவர்கள் தலைவரின் படங்கள் எவ்வளவு வெற்றிப்படங்கள் என்று உண்மையான ஞாயமான முறையில் கணக்கெடுத்தால்.வெட்கி தலைகுநியத்தான் வேண்டும். !
மற்றவர்கள் கவனம் தங்கள் தலைவரின் படங்களின் வெற்றியை தோல்வியை பற்றி ஆராய நினைக்ககூடாது, ஆராயகூடாது என்பதால் தான் நம் தலைவரின் படங்களின் வெற்றி தோல்வியை பற்றி அண்டப்புளுகு ஆகாசப்புளுகு அவிழ்த்துவிட்டு அதைபற்றி பட்டிமண்டபம் போடுகிறார்கள்.
நாம் சற்றே உஷாராக, அப்படி பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய தலைவரின் படங்களை ஆராயதொடங்கினால், அவ்வளவுதான்...காணாமல் போய்விடுவார்கள் !
நீங்கள் கூட ஒரு பாட்டு கேள்விபட்டிருப்பீர்கள் என்று நினைகிறேன் - "காலி பெருங்காய டப்பா. அதுல வசன பலமாதான் இருக்கு " என்ற பாடல். அந்த கதை தான் அவர்களுக்கும் !
-
18th June 2013, 06:34 AM
#1000
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
54. நான் சொல்லும் ரகசியம் NAN SOLLUM RAGHASIYAM

தணிக்கை – 07.01.1959
வெளியீடு – 07.03.1959
தெலுங்கில் செவ்வில்லோ ரஹஸ்யம் என மொழி மாற்றம் செய்யப் பட்டது.
தயாரிப்பு – கஸ்தூரி பிலிம்ஸ்
நடிக நடிகையர் –
சிவாஜி கணேசன் – கருணாகரன்
அஞ்சலி தேவி – மனோரமா
எம்.என்.ராஜம் – லீலா
ஜி.சகுந்தலா - ரோஸி
கே.ஏ.தங்கவேலு – வடிவேலு
ஜே.பி. சந்திரபாபு – டாக்டர் ஷைலக்
எஸ்.வி.சுப்பையா – வேலாயுதம்
ஸி.கே.சரஸ்வதி – அகிலாண்டம்
மனோரமா – காமாட்சி
என்.ருக்மணி – குப்புசாமியின் மனைவி
எஸ்.ஆர்.தசரதன் – ரவி
கே.எம். நம்பிராஜன் – கோவிந்தன்
ராம ராவ் – நோயாளி
நல்லி சுப்பையா – குப்புசாமி
தர்மராஜன் – குடிகாரன்
ஜி.மணி – சோமு
நடனம் – ஹெலன்
கதை வசனம் – கலைப் பித்தன்
பாட்டு – அ. மருதகாசி
சங்கீதம் – ஜி.ராமனாதன்
ஆர்க்கெஸ்ட்ரா – ஜி.ராமனாதன் ஆர்க்கெஸ்ட்ரா
பின்னணி பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன்
சீர்காழி கோவிந்தராஜன்
பி.பி.ஸ்ரீநிவாசன்
பி.லீலா
பி.லீலா
பி.ஜி.கிருஷ்ணவேணி – ஜிக்கி
ஏ.பி.கோமளா
ஒளிப்பதிவு – டி.வி. பாலசுந்தரம்
ஆர்ட் டைரக்ஷன் – சி. ராமராஜு
மேக்கப் – ஹரிபாபு, கே.எம்.குமார்
உடையலங்காரம் – ஒய்.வெங்கட் ராவ், பி.ராமகிருஷ்ணன்
ஸ்டில்ஸ் – ஆர்.என். நாகராஜ ராவ்
விளம்பரங்கள் – எலிகெண்ட் பப்ளிஸிட்டீஸ்
நடனம் டைரக்ஷன் – கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, சோஹன் லால், சம்பத் மற்றும் சின்னி லால்
ஒலிப்பதிவு – சி.பி.கன்னியப்பன்
ரிக்கார்டிஸ்ட் – எம்.எஸ்.நாகேஸ்வரன்
ஆபரேடிவ் காமிராமென் – எஸ்.வீ.ஸ்ரீகாந்தன்
செட்டிங் மாஸ்டர் – பி.தியாகராஜன்
பெயிண்டர் - எம்.நடராஜன், பார்த்த சாரதி நாயுடு
எலக்ட்ரீஷியன் – பி.தாமோதரன்
பேக்கிரவுண்ட் ஆர்ட் – ஜே.பி.சாமுவேல்
மோல்டிங் – பி.கே.சுப்பராயன்
போர்ட் எலக்ட்ரீஷியன் – ஜி.ஸ்ரீநிவாசன்
ப்ளோர் இன் சார்ஜ் – கே.ரகுநந்த், டி.கே. பாப்பையா
ஸ்டூடியோ அண்ட் ப்ராஸ்ஸிங் – கோல்டன் ஸினி ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட்
ப்ராஸ்ஸிங் – கடம்பாடி, பாஸ்கரன்
எடிட்டிங் – பி.வி. மாணிக்கம்
புரொடக்ஷன் நிர்வாகம் – ஜி.ஆர். செல்வரங்கம்
டைரக்ஷன் – பி.ஸ்ரீதர் ராவ்
தயாரிப்பாளர் – வி.சி. சுப்பராமன்
Last edited by RAGHAVENDRA; 18th June 2013 at 07:23 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks