-
8th July 2013, 10:53 AM
#991
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
கோபால்,
ரோஜாவின் ராஜாவிற்கு ஒரு பாராதானா? இன்னும் எழுதியிருக்கலாமே! ஒரு சில விஷயங்களை தொடாமலேயே போய் விட்டீர்களே!
என்று தொடங்கி,
கோபாலின் பதிவிற்கு ஒரு சின்ன பின்னூட்டம் இட நினைத்து தொடங்கியது ஒரு பெரிய பதிவாக அமைந்து விட்டது. பழைய nostalgic நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றி கோபால்!
அன்புடன்
என்று முடியும் வரை
உள்ள நடையில் இருக்கும் சரளம் அசத்தவைக்கிறது முரளி சார்.அப்படியே கல்கி,தேவன்,போன்றோர் எழுத்தில் உள்ள சுபாவமான வார்த்தைகள், சரளமான நடை.அசத்தி விட்டீர்கள்.
அடுத்து நண்பர் கோபாலின் சவாலே சமாளி..
"மய்யம் ஸ்டைலில்" மிக நன்றாக எழுதியுள்ளார்.வழக்கம் போல நண்பர் ராகவேந்தர் சினம் கொள்ள சில வரிகள்.(அவருக்கோ தியேட்டர் usher in டிக்கட்டை கிழித்தாலே கோபம் வரும்
.)சவாலை நன்கு சமாளித்து விட்டீர்கள் கோபால்.welcome back to Plaza theater in a few days time.
இறுதியாக பட்டை கிளப்பும் NT360degree சிவாஜி ஒரு சித்தர்.
என்ன சொல்வது..பிய்த்து உதறுகிறார். சுருங்க சொன்னால் இவரை தனிக்குடித்தனம் அனுப்ப வேண்டிய எல்லாத்தகுதிகளும் வந்து விட்டது.நண்பர் ராகவேந்தர் would be on the job என நம்புகிறேன்.
இப்படிக்கு,
பக்தர்களின் பக்தன்,
Ganpat.
-
8th July 2013 10:53 AM
# ADS
Circuit advertisement
-
8th July 2013, 11:02 AM
#992
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால் சார்,
தங்களுடைய ரோஜாவின் ராஜா பதிவு அருமை. ஒருபாராவை முன்னுரையாக எழுதி முரளி சாரை அழகான விமர்சனம் எழுத வைத்துவிட்டீர்கள்.
நடிகர்திலகம் - ஜெயலலிதா கூட்டணியில் அமைந்த மற்றுமொரு வெற்றிக் காவியம் சவாலே சமாளி பற்றி தங்களுடைய விமர்சனப் பதிவு சிறப்பு.
-
8th July 2013, 11:05 AM
#993
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி சார்,
ரோஜாவின் ராஜா - கோபால் சார் எழுதிய முன்னுரைக்கு தங்களுடைய விமர்சனப் பதிவு மிகவும் சிறப்பு.
-
8th July 2013, 11:11 AM
#994
Senior Member
Veteran Hubber
// சவாலே சமாளி
கதை என்று பார்த்தல் ஏற்கனவே நாம் பார்த்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் சாயல் உள்ள கதை தான் Rich Vs Poor . //
Dera Raghulji,
ஏற்கனவே நாம் பார்த்த..?????????
Please note 'Savale Samaali' came one year before 'Pattikkada Pattanama'.
-
8th July 2013, 11:12 AM
#995
Senior Member
Seasoned Hubber
டியர் ராகுல்ராம் சார்,
தங்களுடைய சவாலே சமாளி - விமர்சனம் அருமை. ஆயிரம் சொன்னாலும், நடிகர்திலகத்தின் black & white திரைப்படத்தைப் பார்க்கும்போது இருக்கும் இன்பமே தனிதான்.
-
8th July 2013, 11:39 AM
#996
Senior Member
Seasoned Hubber
கோபால் சார்
சவாலே சமாளி திரைப்படத்தைப் பற்றிய தங்கள் பதிவு அட்டகாசம் ... திருஷ்டிப் பொட்டாக ஓரிரு வரிகள் தவிர...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th July 2013, 11:41 AM
#997
Senior Member
Seasoned Hubber
கண்பத் சார்
நான் என்ன வேண்டாத மாமியாரா... எல்லோரையும் தனிக்குடித்தனம் அனுப்ப... கோபால் சாருக்கு மட்டும் தான் அந்த சலுகை...
மற்றவர்களெல்லாம் இங்கேயே கிடந்து அடித்துக் கொள்ள வேண்டியது தான்...சௌரி சார் உள்பட
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
8th July 2013, 11:58 AM
#998
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
என்று முடியும் வரை
இறுதியாக பட்டை கிளப்பும் NT360degree சிவாஜி ஒரு சித்தர்.
இவரை தனிக்குடித்தனம் அனுப்ப வேண்டிய எல்லாத்தகுதிகளும் வந்து விட்டது.நண்பர் ராகவேந்தர் would be on the job என நம்புகிறேன்.
இப்படிக்கு,
பக்தர்களின் பக்தன்,
Ganpat.
திரு.கண்பட் அவர்களுக்கு
மிகவும் நன்றி, தங்களுடைய பாராட்டிற்கு..!
நடிகர் திலகத்தை போலவே நானும் கூட்டு குடும்ப கலாசாரத்தை எப்போதுமே விரும்புபவன். தனிக்குடித்தனம் எனக்கு பிடிக்காத ஒன்று ..!
-
8th July 2013, 12:14 PM
#999
Senior Member
Veteran Hubber
அன்புள்ள முரளி சார்,
அடிக்கடி தங்கள் வருகையும், அற்புதமான பதிவுகளும் மனதுக்கு நிறைவை அளிக்கின்றன. 'ரோஜாவின் ராஜா' பதிவு வெகு அற்புதம். பார்த்து நாளாகிவிட்ட படத்தை காட்சிவாரியாக விவரித்து மீண்டும் தங்கள் எழுத்துக்களால் காணவைத்து விட்டீர்கள்.
சென்ற ஆண்டு 'ரோஜாவின் ராஜா' வெளியீட்டு நாள் குறித்து நான் எழுதிய பதிவில்கூட, படம் வெளியான பிராட்வே தியேட்டர் நிகழ்வுகள் குறித்து அதிகம் எழுதியிருந்தேனே தவிர படத்தின் கதை, நடிப்பு, பாடல்கள் பற்றி அவ்வளவாக எழுதவில்லை. சும்மா கொஞ்சம் கொஞ்சம் தொட்டிருந்தேன். அவ்வளவுதான்.
தற்போது நீங்கள் மிக அருமையாக ரோஜாவின் ராஜா படத்தை அலசி விட்டீர்கள். மைசூர் அரண்மனை முன் படமாக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடலில் அட்டகாசமான காஸ்ட்யூமில் அண்ணனும் வாணியும் சூப்பரோ சூப்பர்.
(இந்த இடத்தில் தொலைக்கட்சி காம்பியர்கள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் : 'மயக்கம் என்ன', ‘யமுனா நதியிங்கே’, 'மதன மாளிகையில்' போன்ற பாடல்களோடு நின்றுகொண்டிருக்காமல், 'அலங்காரம் கலையாத', 'செந்தமிழ் பாடும்', 'மாந்தோரண வீதியில்', 'சித்திர மணடபத்தில்' , 'நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்', 'வேலாலே விழிகள்' பாடல்களின் பக்கமும் கொஞ்சம் கவனத்தை திருப்புங்கள்)
படத்தின் ஜீவநாடியான பல காட்சிகளை தங்களுக்கே உரிய நயத்தோடு விவரித்துள்ளீர்கள். அவற்றில் ஒன்று 'அம்மா போயிட்டியா' என்று அசால்ட்டாக கேட்கும் காட்சி. 'ஜனகன் மகளை' பாடல் காட்சியில் வாணியின் அற்புத பெர்மாமென்ஸ் பற்றிய தங்கள் ஸ்பெஷல் மென்ஷன். அண்ணனின் ஜோடிகளில் அண்ணிக்கு அடுத்து வாணிதான் என்பது என் திண்ணமான எண்ணம். (சிலருக்கு வாணி முதன்மையாகத் தோன்றலாம்). ஆனால் நம் துரதிஷ்டம் இவர்கள் இருவரையும் விட 'என்னங்க' விஜயாவுடன் அதிகப்படங்களில் அண்ணன் ஜோடி சேர்ந்ததுதான்.
பாடல்கள் அனைத்தும் அருமைஎன்றாலும் 'நாளை நீ மன்னவன்' பாடல் தேவையில்லாத இடத்தில் வந்த இடைச்செருகல். சாம்ராட் அசோகனைத் தரிசிக்க ரெடியாக இருக்கும்போது இது என்ன சோதனையாக என்று சலிப்பூட்டியது உண்மை.
சுருக்கமாக தங்களின் 'ரோஜாவின் ராஜா' அலசல் அறுசுவை விருந்து.
-
8th July 2013, 12:22 PM
#1000
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
'ஜனகன் மகளை' பாடல் காட்சியில் வாணியின் அற்புத பெர்மாமென்ஸ் பற்றிய தங்கள் ஸ்பெஷல் மென்ஷன். அண்ணனின் ஜோடிகளில் அண்ணிக்கு அடுத்து வாணிதான் என்பது என் திண்ணமான எண்ணம். (சிலருக்கு வாணி முதன்மையாகத் தோன்றலாம்).
ஒப்பு கொள்ள முடியாது. அது என்ன "சிலருக்கு"? "பலருக்கு" என்று திருத்தும் வரை அடையாள வேலை நிறுத்தம்.(நண்பன் வாசுவோடு நானும் ஓய்வெடுக்கலாம் இல்லை?)
Bookmarks