-
25th August 2013, 11:56 AM
#3571
Junior Member
Seasoned Hubber
-
25th August 2013 11:56 AM
# ADS
Circuit advertisement
-
25th August 2013, 11:57 AM
#3572
Junior Member
Veteran Hubber
எனது நண்பர் திருசத்யா அவர்களின் படைப்பு

நன்றி சத்யா
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Last edited by MGRRAAMAMOORTHI; 25th August 2013 at 07:00 PM.
Reason: correction
-
25th August 2013, 12:50 PM
#3573
Junior Member
Seasoned Hubber
கந்தனின் கனவு
பொங்கல் புதுநாள். உழைப்பாளிகள் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய நன்னாள். உழைப்பின் பலனைக் கண்டு ஆனந்தம் கொள்ளும் புனித நாள். உழைப்பை உரமாக்கி , குருதியை நீராகப் பாய்ச்சிப் பயிரிட்டதன் பலனாக சிரித்துக் கொண்டு நிற்கும் செந்நெல் கதிர்களைக் கண்டு களிக்கும் திராவிடர் திருநாள்.
இந்த வார்த்தைகள் ஏழைக் கந்தனின் இதயத்திலே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. அவன் கேட்டறியாத சொற்றொடர். புதிதாகத் தெரிகிறது. புரட்சி யுகத்தின் முதல் அத்தியாயம் எழுதப்படுகிற இக்காலத்தில், கந்தனைப் போன்றவர்களின் சிந்தனைக்கும் வேலை தரப்படுவதால் கந்தனும் அதனின்றும் தப்ப முடியவில்லை. ...
அல்லி நகரத்திலே குறைந்தது ஐம்பது வீடுகளாவது இருக்கும். அவைகளிலே நான்கைந்து வீடுகள் தான் வீடுகள் என்று அழைக்கப்படும் இலக்கணத்திற்குரியதாக விளங்குபவை. மற்றவை அனைத்தும் வீடு என்ற பெயரிலே விளங்கும் வேதனைக் கூடுகள்.
நிலவு ஒளியையே விளக்கு வெளிச்சமாகக் கொள்ளும் ஓலையால் வேயப்பட்ட கூரைகள் ... நிமிர்ந்து வாழாதே என்று ஊழையைக் குனிய வைக்கும் வாயிற்படிகள். அப்படிப்பட்ட குடிசைகளில் வாழ்ந்து வருவதால் தான் கந்தன் பரம்பரை, தாழ்ந்து, தாழ்ந்து வளைந்த உள்ளத்தினராய் வாழுகிறார்கள். அப்படிப்பட்ட மாளிகைகளில் ஒன்று தான் கந்தனுடைய இருப்பிடம்.
வரப்போகும் பொங்கல் திருநாள் கந்தனுடைய மனதில் துன்பரேகைகளைப் படரவிட்டு , அவன் உள்ளத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
பொங்கலுக்கு புது ஆடைகள் வேண்டும். அன்புக் குழந்தை. அருமை மனைவி ஆகியோர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைக்க வேண்டும். வருடத்தில் ஒரு நாள் இன்பத்தை ருசிக்க வேண்டும் என்றெல்லாம் கந்தனின் உள்ளம் திட்டமிட்டது. ஆனால் எப்படி முடியும். கந்தன் என்ன மிட்டாவா, மிராசுவா. ஏழை உழவனாயிற்றே. உயிர் உடலில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு மட்டும் தானே அவனுக்குக் கூலி கொடுக்கப்படுகிறது. உழைப்பு ஒன்று தானே அவனிடமிருந்து யாரும் பறிக்க முடியாத சொத்து.
ஆனால், இன்றைய சமுதாயத்தில் உழைப்பை மட்டும் பெற்றிருப்பதனால் வாழ்க்கையில் உயர முடியவில்லையே. அதனின்றும் கந்தனின் நிலை எப்படி மாறுபட முடியும்?
பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் தானே, இந்த ஜென்மத்தில் பளபளப்பான வாழ்வைப் பெற முடியும். மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் என்ன பயன்? அவரவர்கள் விதிப்படி தான் நடக்கும் இவைகளையெல்லாம் தான் கந்தனின் வாழ்க்கையிலே அமைதியை ஏற்படுத்தி வந்தது.
ஆம். ஏழைகளைக் கட்டிப் போட்டு உழைக்கும் இயந்திரங்களாய் மாற்றுவதற்குத் தானே இந்த உபதேசங்கள் பரப்பப்பட்டு , இப்பொழுதும் பட்டுவிடாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சேற்றிலே சிக்கிய கந்தன் உள்ளத்திலே அறிவுத் தெளிவு பெற்ற எண்ணங்கள் எப்படி இடம்பெறும்?
அதனால்தான், தன்னுடைய கவலைக்கு மாற்று மருந்தாக நினையாதொன்று வந்தெய்தினும் எய்தும், எனையாளும் ஈசன் செயல் என்று ஒருநாள் அடிகள் ஒருவர் உபதேசித்த தாரக மந்திரத்தை கஷ்டம் வரும் சமயங்களில் கந்தன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுதுதான், அவனுடைய இல்லத்தரசி எழிலரசியாய் வந்து நின்றாள். அவளுடைய ஆவலையெல்லாம் முகத்தில் தேக்கியவனாய்க் கந்தன் எதிரே வந்து நின்ற்ள். கணவனும் மனைவியும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சிதான் ஏழைகள் வீட்டில் கிடைக்காத அருமருந்தாயிற்றே. கந்தன் குடும்பம் மட்டும் அதற்கு விதிவிலக்காகுமா? மனைவியின் சிரித்த முகம், கந்தனுக்கு கோபத்தையும், வேதனையையும் அதிகப்படுத்தத் தான் உதவியது. கந்தனின் நிலையை அறிந்தாலும் தன்னுடைய ஆசையை அடக்கி வைக்க முடியவில்லை சொர்ணத்தால்.
ஆமா, இப்படியே முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டே இருந்தால் காரியம் எப்படி நடக்கும்? நாளை விடிந்தால் பொங்கல் ...
ஆமா அதற்கு என்ன செய்யச் சொல்கிறாய்?
வேதனை வெறுப்பு உருவத்தில் வெளிப்பட்டது.
என்ன செய்வதா? கோடி வாங்க வேண்டாமா? பொங்கலுக்கு சாமான்கள் ... வார்த்தையை முடிக்கவில்லை. அதற்குள் கந்தன் இடைமறித்து விட்டான்.
ஆமாம். நீ கோடீஸ்வரன் வீட்டிலே பொறக்க வேண்டியவ தவறி ஏழையின் வீட்டிலே பிறந்து விட்டாய். அதனால் என் பிராணன் போகுது. இப்போ என்ன குடி முழுகிப் போயிடும்? நாளைக்கு புதுசு கட்டினாத்தான் சோறுபொங்குமா? புதுப்பானை பொங்கல் வைக்கவில்லையானால் அரிசி வேகாதா?
அவனவன் ஏதோ அரை வயித்து கஞ்சியாவது கிடைச்சா போதும், உடுத்திக் கொள்ள ஒரு பழைய துணி கிடைக்காதா? என்று ஏங்கித் திரிகிறான். அதை விட நாம் ஒன்றும் மோசமாயிடலே. சும்மா இரு. ஏதோ மானத்தைக் காப்பாத்த ஒரு துணியும், பசியோற ஒரு வேளை சாப்பாடும் ஒழுங்கா கிடைக்குதேன்னு திருப்திபடாம, ஒரேயடியா பேராசைப்படுற...
ஆத்திரத்துடன் சொர்ணத்தின் மனசை நோகவைக்கும் முறையில் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பொறுமை உபதேசம் செய்தானே தவிர, கந்தனுடைய உள்ளம் உலைக்கூடமாகத்ததான் இருந்தது. கந்தனுடைய கோபத்தை அவன் மனைவியிடம் காட்ட முடியுமே தவிர வேறு யாரிடம் காட்ட முடியும்?
ஆனால், மனைவி உள்ளே போனபிறகு, கந்தனுடைய சிந்தனை சுழல ஆரம்பித்தது. சுவையான நவாலைப் படிக்கும் போது, முன்னால் படித்துவிட்ட பகுதியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக , படித்த பக்கங்களை வேகமாகப் புரட்டுவது போல் கடந்து போன வாழ்க்கை ஏடுகள் புரள ஆரம்பித்தன.
ஆம். கந்தன் சிறுவனாக இருந்த பொழுது நடந்து சம்பவம். கந்தன் சிறந்த புத்திசாலி என்பதற்கு அடையாளமாக, கந்தனின் தகப்பனார் அந்த நிகழ்ச்சியை, நாலு பேர் முன்னிலையில் கூறி பெருமைப்படுவார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பொங்கல் சமயம். கந்தனின் தந்தை சாத்தான் தன் மனைவியிடம் பணக்கஷ்டத்தைப் பற்றி பேசி, இருவரும் கவலையில் மூழ்கி இருந்தனர். சாத்தான் ஒரு மிராசுதாரரிடம் பண்ணையாளாக வேலை பார்த்து வந்தார்.
ஆம் கந்தனின் தநதை தானே. வேறு என்ன வேலை பார்க்க முடியும். பரம்பரைத் தொழிலை விட்டு எப்படி வேறு வேலைக்குப் போக முடியும்? வர்ணாசிரமப் பொறியில் சிக்கிய தமிழர் பரம்பரை, தகப்பன் வேலைக்கு மகன் என்ற வர்ணாசிரம முறையை எப்படி மாற்ற முடியும்?
அதன்படி, சாத்தான் உயிர் வாழ வேண்டுமானால் ஓடியாடி உழைக்க வேண்டும் என்ற நியதிப்படி உழைத்து வருபவர். அப்படிப்பட்ட சாத்தானுக்கு அருமை குமாரன் கந்தன். அவனுக்குப் புதிய ஆடைகள் வாங்க முடியவில்லையே என்று தாயும் தந்தையும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கந்தன் அப்பா அப்பா பண்ணையார் வீட்டு மாணிக்கம் புதுச்சட்டையெல்லாம் போட்டிருக்கிறானே., எனக்கு ஏம்பா இல்லை என்று கேட்டான்.
மாணிக்கம், பண்ணையார் மகன் போடலாம். நமக்கு ஏதப்பா புதுச்சட்டை சாத்தானின் சோகம் கலந்த பதில்.
அவன் கட்டலாம்னா நான் ஏம்பா கட்ட முடியாது?
கட்டலாம்டா கண்ணு. ஆனா இல்லையே.
ஏம்பா இல்லை அவனுக்குமாத்திரம் எப்படிக் கிடைத்தது?
அவங்க பணம் கொடுத்தாங்க வந்தது
நாமும் பணம் கொடுத்தால் வருது
நம்மகிட்ட பணம் இல்லையே
அவங்களுக்கு ஏது பணம்
ஏது பணமா? என்னடா இப்படி கேக்குறே அவங்க பணக்காரங்க நாம ஏழை
நாமும் பணக்காரங்க ஆகிறது.
எப்படியப்பா முடியும்?
ஏம்பா முடியாது?
சும்மா இருடா அவங்க பண்ணையார். அவங்க வீட்டு வேலைக்காரங்க நாம். தெரியுதா?அவங்களுக்கு நிலம் இருக்கு . வீடு இருக்கு. சொத்து இருக்கு
நமக்கு ஏம்பா அதெல்லாம் இல்லை.
அது வவுங்க அவுங்க செய்த புண்ணியம். தலையெழுத்து அப்படி
தலையெபத்தா ? யார் எழுதினா ... -?
கடவுள்
ஏன் எழுதினார்?
புண்ணியம் செய்தால் நெறைய சொத்து கிடைக்கும்னு எழுதுவார். பாவம் செய்தா நம்ம மாதிரி ஏழையாய் பொறக்கணும்னு எழுதுவார். நாம் தான் புண்ணியம் செய்யலையே அதனால் தான் இப்படிப் பொறந்தோம்.
ஏன் செய்யலே. அவங்க மாத்திரம் எப்படி செய்தாங்க
அவ்வளவு தான். சாத்தானுக்குக் கோபம் பொங்கிவிட்டது. ஓங்கி அறைந்து விட்டான்.
அதனாலே கீழே விழுந்த கந்தனுக்குக் காயம்பட்டு, அது இன்னும் மாறாமல் இருக்கிறது ...
அந்தப் பழைய நினைவு வந்தவுடனே கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டான். கண்கள் சொர்ணத்தை கடினமாகப் பேசிவிட்டது பற்றி வருந்தினான். அதற்காக கண்ணீர் துளியைக் காணிக்கையாக்கிவிட்டு நின்ற இடத்திலேயே உட்கார்ந்துவிட்டான். கண்களும் ஓய்வு பெற ஆரம்பித்தன.
உள்ளே இருந்து ஓடிவந்தான் 19வயது வாலிபன் ... கந்தனின் மகன் ... கையில் புதுத் துணிகள் முகத்திலே மகிழ்ச்சி. உடலிலே முறுக்கு. உள்ளத்திலே தெளிவு. இவ்வளவும் அவனிடம் காணப்பட்டன.
அதைக் கண்டவுடன் அடிமைக்குப் பொருள் கூறும் அகராதி போலக் கூனிக் கிடந்து அவன் முதுகு நிமிர்ந்தது. மகிழ்ச்சி பொங்க மகனே பார்த்தாயே நினையாதொன்று வந்தெய்தினும் எய்தும் எனையாளும் ஈசன் செயல் என்பது எவ்வளவு உண்மை பார்த்தாயா? இப்போது தான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன். கவலை போக்கும் மருந்தாக நீ வந்து விட்டாய். என்றான்
உடனே அந்த வாலிபன் அப்பா தாங்கள் சொன்ன பாட்டு தப்பு நினையாதொன்று வந்தெய்தினும் எய்தும் வினை முடிக்கும் செயல் வீரர்களால் என்று பாடுங்களப்பா இதுதான் புது மொழி. என்னையும், பண்ணையார் வாழ்க்கையை வளப்படுத்தப் பலியிட்டிருந்தால், இதையெல்லாம் நானும் நினைத்த நேரத்தில் சம்பாதிக்க முடியாது போயிருக்கும்.
எப்படியோ படித்து, அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்துவதால் வளமான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறேன். இனிமேல் நமக்கு கஷ்டமில்லையப்பா. இனி உழைப்பாளிகள் தான் உலகை ஆளப் போகிறார்கள். இதோ பாருங்களப்பா , புது யுகத்தின் புதுமொழிகளை. ... என்று ஒரு இதழைக் கொடுத்தான்.
உடனே தகப்பனாருக்கு படிக்கத் தெரியாது என்பதை உணர்ந்து தானே படித்தான். உழைப்புத்தான் உலகை ஆள வேண்டும். உழைப்பவன் தான் இந்த உலகத்தின் சொந்தக்காரன். உழைப்பாளிக்கே உலகம் என்று அறிவிப்பது தான் பொங்கல் விழா. இந்த இலட்சியம் ஈடேறினால் தான் உலகில் அமைதி நிலவும். சமத்துவம் தழைக்கும். ஒற்றுமை ஓங்கும். அது ஏற்படாத வரையில் இயேசுவை சிலுவையில் அறைந்து சித்ரவதை செய்தபிறகு அவரை வழிகாட்டியாகக் கொள்வது போலவும், சாக்ரடீசை நஞ்சுக்கு இரையாக்கிவிட்டு அவரைப் போற்றுவது போலவும் உத்தமர் காந்தியாரின் உயிரைக் குடித்துவிட்டு சிலை எடுத்துப் பாராட்டுவது போலவும் தான் இருக்க முடியும்.
ஆனால், பகுத்தறிவு பெற்ற இளைஞர் பட்டாளம் எழுச்சி பெற்று புதுயுகத்தை ஆக்கியே தீரும் ... ... அந்த உலகத்தில் ஆண்டான் அடிமை, ஏழை - பணக்காரன், உயர்ந்தவன்- தாழ்ந்தவன், முதலாளி-தொழிலாளி என்ற மனித சமுதாயத் தொத்து நோய்கள் இருக்காது.
யாதும் ஊரே யாவரும் கேளீர். எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் அன்பே கடவுள், சக்திக்கேற்ற உழைப்பு - தேவைக்கேற்ற வசதி என்ற இலட்சியங்கள் நிறைந்த பொற்காலம் தோன்றப் போகிறது. பழமை, ஆதிக்க வெறி, வர்ணாசிரமக் கொடுமை அழியப் போகிறது. என்று இலட்சிய முழக்கத்தைப் படித்துக் காண்பித்தான்.
ஆமப்பா ஆமா என்று அன்போடு மகனைக் கட்டித் தழுவினான்.
கண் திறந்து பார்த்த சமயம் அருகில் தன் அருமைச் செல்வன் பத்து வயது சிறுவன் அப்பா அப்பா என்று எழுப்பிக் கொண்டிருந்தான். எதிரில் ஏங்கிய முகத்துடன் சொர்ணம் நின்று கொண்டிருந்தாள்.
பண்ணையார் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது கந்தனுக்கு பொங்கல் வேலை செய்வதற்கு. கலங்கிய கண்களுடன் கந்தனும் வீட்டை விட்டு வெளியேறினான். பண்ணையார் வீடு போய்ச் சேரும் வரை தான் கண்ட கனவையே நினைத்துக் கொண்டு சென்றான். எதிரே கனவில் கண்ட இன்பத் தாயகம் -சுதந்திர தமிழகம் காட்சியளித்தது.
அவன் வாய் அவனையறியாமலே, நினையா தொன்று வந்தெய்தினுட்ம எய்தும் வினை முடிக்கும் வீரர்களால் என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
Last edited by jaisankar68; 25th August 2013 at 01:36 PM.
-
25th August 2013, 12:57 PM
#3574
Junior Member
Veteran Hubber
வெகு விரைவில் வெளிவர இருக்கும் மக்கள்திலகத்தின் வள்ளலின் வரலாறு DVD க்கு VIT வேந்தர் அவர்களிடம்
மக்கள்திலகம் பற்றி சிறப்பு பேட்டி எடுக்கப்பட்டது
அப்போது எடுக்கப்பட்ட போட்டோ உடன் திரு பிரதீப் ,பி .எஸ் .ராஜூ, சந்திரசேகர்

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
-
25th August 2013, 01:17 PM
#3575
Junior Member
Diamond Hubber
Hai sri Jayashankar sir, the photographs are beautiful. what's the occasion did photos taken? kindly reply sir
-
25th August 2013, 01:23 PM
#3576
Junior Member
Diamond Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
வெகு விரைவில் வெளிவர இருக்கும் மக்கள்திலகத்தின் வள்ளலின் வரலாறு DVD க்கு VIT வேந்தர் அவர்களிடம்
மக்கள்திலகம் பற்றி சிறப்பு பேட்டி எடுக்கப்பட்டது
அப்போது எடுக்கப்பட்ட போட்டோ உடன் திரு பிரதீப் ,பி .எஸ் .ராஜூ, சந்திரசேகர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
Thiru vellore mgr ramamurthy sir, finely. edhuvarai velivaratha pudhia seithihal parimarapattatha? light aha hint kodunga sir!!!
-
25th August 2013, 01:35 PM
#3577
Junior Member
Diamond Hubber
Iniya nanbarhalae, suharaam - naan podhuvaha pazhaya(old) thirai padangalin, nadihar,nadihayarin muzhluthumana sarasari rasihan enbathai koorikolvathilae perumitham kolhiraen!!! my favourite mgr films... 1) mathuraiveeran, 2) nadodimannan, 3)engaveettupillai, 4)olivilakku, 5)adimaipenn - indha padangalin arumai, perumai, saathanaihalai villakka mudiyumaa?
-
25th August 2013, 01:37 PM
#3578
Junior Member
Seasoned Hubber
மேலே பதிவிடப்பட்டுள்ள கந்தனின் கனவு சிறுகதையின் சிறப்பு என்ன? எதற்காக அது இங்கே பதிவிடப்பட்டுள்ளது?
அந்தச் சிறுகதையை எழுதியவர் நம் மக்கள் திலகம். சிறுகதையில் கூட அவரது சமூக சிந்தனைகளின் தாக்கம் எவ்வளவு அருமையாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
நன்றி ராணி வாரஇதழ்
Last edited by jaisankar68; 25th August 2013 at 01:42 PM.
-
25th August 2013, 01:53 PM
#3579
Senior Member
Seasoned Hubber
From Facebook AVM page

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th August 2013, 04:06 PM
#3580
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
வெகு விரைவில் வெளிவர இருக்கும் மக்கள்திலகத்தின் வள்ளலின் வரலாறு DVD க்கு VIT வேந்தர் அவர்களிடம்
மக்கள்திலகம் பற்றி சிறப்பு பேட்டி எடுக்கப்பட்டது
அப்போது எடுக்கப்பட்ட போட்டோ உடன் திரு பிரதீப் ,பி .எஸ் .ராஜூ, சந்திரசேகர்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
ராமமூர்த்தி சார்,
தங்களது தகவலுக்கு நன்றி. வள்ளலின் வரலாறு வரும் நாளை வெகு ஆவலாக எதிர்பார்க்கிறோம். இது வரை அறியாத பல அரிய செய்திகளும் படங்களும் இடம்பெறும் என்று நம்புகிறோம்.
Bookmarks