-
31st August 2013, 10:00 AM
#3801
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு சுஹராம்
பாசம் படத்தில் மக்கள் திலகத்தின் இறுதி காட்சி ரசிகர்களால் ஏற்று கொள்ள படவில்லை . மக்களும் அதை விரும்பவில்லை . விதி விலக்கு - மதுரை வீரன் -1956 மட்டும் .
திரைப்படத்தின் தாக்கம் ஒரு நடிகரை நடிகராக மட்டும் பார்த்த உலக வரலாற்றில் முதல் முறையாக
ஒரு நடிகரை தங்களுடைய வீட்டு பிள்ளையாக பாவித்து ''எங்க வீட்டு பிள்ளை '' என்றும்
''ஆயிரத்தில் ஒருவன்'' என்றும்'' மன்னாதி மன்னன்'' என்றும் பார் போற்றும் புகழுடன் ஏற்று கொண்ட
உலக அதிசயம் வேறு எங்கும் யாருக்கும் கிடைக்காத பரிசாகும் .
தமிழன் - இந்தியன் -திராவிடன் - ஆரியன் என்ற பேதமில்லாமல் ஒரு நல்ல மனிதன் என்ற உலகளவு புகழ் பெற்ற மாஸ் லீடர் - மக்கள் தலைவன் எம்ஜிஆர் என்ற பெருமையினை தந்த
சினிமா உலகிற்கு நாம் என்றும் கடமை பட்டுள்ளோம் .
மக்கள் வெள்ளம்
மக்கள் ஆதரவு
மக்கள் உள்ளங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் தலைவன்
எம்ஜிஆரின் புகழ்
வைரமுத்து கூறியது போல்
சந்திரன் - சூரியன் - எம்ஜிஆர்
உலகம் உள்ளவரை .........
அதனால் தானே எம்ஜிஆர் அவர்கள், மக்கள் திலகம் என்று போற்றப் படுகிறார்.
-
31st August 2013 10:00 AM
# ADS
Circuit advertisement
-
31st August 2013, 10:42 AM
#3802
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் செல்வகணேஷ் சார்
நீங்கள் சொல்லியது நூற்றுக்கு நூறு சரியே.மக்கள் எப்போதும் தனிப்பட்ட சமூக ஆவலர்களை துல்லியமாக எடை போட்டு ஆதரித்து வந்துள்ளனர் .மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் கடந்து சென்றாலும் அவருடைய புகழின் செல்வாக்கும் , அவரது உண்மையான லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது [ 1991-2001 -2011 மூன்று பொது தேர்தலில் அமோக வெற்றி மூலம் அறியலாம் ] வரலாறாகும் .
உலகில் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய சக்தி கொண்ட ,தனி மனிதனின் அழியா புகழ் வரலாறு கிடையாது . ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் பெற்ற புகழை ஜீரணித்து கொள்ள முடியாத ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் -
பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் .
எம்ஜிஆர் - ரசிகர்கள் - ஒன்றை நினைத்தோம் - 1972
நினைத்தை முடித்தோம் -1977
இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் ?
மக்கள் என்றுமே புத்திசாலிகள் ...
நன்றி மறவாதவர்கள் .
-
31st August 2013, 12:51 PM
#3803
Junior Member
Veteran Hubber
பகைவனுக்கும் அருளிய பரமாத்மா.

நம் இதய தெய்வத்தின் வெற்றியும், புகழும் எளிதில் கிட்டியதல்ல. சிறு வயதிலிருந்தே அவரது அயராத உழைப்பும், திரையிலும், பொது வாழ்விலும் அவர் காட்டிய உண்மையும், நேர்மையுமே அவரை திரையில் முதல் இடத்திலும், அரசியலில் முதல்வராகவும் ஆக்கியது. அவரது வெற்றியும் இன்று வரை தொடர்கதையாக உள்ளது. அவர் திரையில் கூறியவற்றை எல்லாம் பொது வாழ்வில் செய்து காட்டினார். அதில் உண்மைதான் இருந்ததே தவிர எள்ளளவும் நடிப்பில்லை என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அதில் ஒரு வரலாற்று உண்மையை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நமது மக்கள் திலகம் 1967ம் ஆண்டு குண்டடிபட்டபோது நடந்தபோது பத்திரிகைகளிலும் வெளிவந்து கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் அறிந்த நிகழ்வுதான் என்றாலும் அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். திரு. எம்ஜிஆர் அவர்களும் எம்.ஆர். ராதா அவர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஆர். ராதா அவர்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக தன் கைத்துப்பக்கியால் எம்ஜிஆரை நோக்கி சுடும்போது, எம்ஜிஆர் சற்று குனிந்ததால் அந்த குண்டுகள் கழுத்தில் பாய்ந்தன. அப்போது எம்ஜிஆர் அவர்கள் கழுத்தைப் பிடித்துக்கொண்டே, எம்.ஆர்.ராதாவை பார்த்து கேட்ட கேள்வி 'என்னண்ணே இப்படி செய்துட்டீங்க'. இப்படி கேட்க யாரால் முடியும். ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுங்கள் என்று இயேசுபிரான் சொன்னதைப்போல, தன் உயிருக்கு ஆபத்து விளைவித்துவிட்டார் என்று தெரிந்தும், அவர் மீது இருந்த மரியாதை மாறாமல், அவரை தூற்றாமல், என்னண்ணே இப்படி செய்துட்டீங்க என்று கேட்டிருக்கிறாரே இதற்குமேல் அவரது உள்ளமும் அதிலிருந்த உண்மையையும் கூற உதாரணங்கள் வேண்டுமோ. ஒவ்வொரு மனிதன் என்னதான் பொது வாழ்வில் நடித்தாலும், அவன் உணர்ச்சிவசப்படும்போதும், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போதும், அவன் காட்டுகின்ற வெளிப்பாடு அவனைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால் தன் உயிருக்கு ஆபத்து என்றபோதும், அவர் சொன்ன வார்த்தைகள், அதிலிருந்த மரியாதை ஒன்றே போதும் அவர் எத்தகைய மாமனிதர் என்று.
எம்ஜிஆரை சுட்டுவிட்டோம்- இனி என்ன நடக்குமோ என்று பயந்து எம் ஆர் ராதா அவர்களும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மயங்கி வீழ்ந்தார். திடீரென்று நடந்த, அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த படத்தயாரிப்பாளர் வாசு மற்றும் அவருடைய உதவியாளரும், வீட்டில் இருந்த உதவியாளர்களும் விபரீதத்தை உணர்ந்து எம்ஜிஆரை தூக்கிக்கொண்டு காரில் ஏற்றும்போது, நம் இதய தெய்வம் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? 'என்னையே எல்லோரும் பார்க்கறீங்க', அங்கே அண்ணன் கிடக்கிறார் அவரையும் பாருங்க' என்று சொன்ன மனித நேயம் மிக்க மாமனிதர்தான் புரட்சிதலைவர் எம்ஜிஆர். இதற்கு மேல் நம் மக்கள் திலகத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது..அப்படிப்பட்ட மாமனிதரை, பகைவனுக்கும் அருளிய பரமாத்மாவை தெய்வமாக வணங்கும் நாம், பாக்கியம் செய்த பக்தர்கள். இன்னும் வள்ளலைப் புரிந்துகொள்ள வரலாற்றைத் திரும்ப படியுங்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்
Last edited by kaliaperumal vinayagam; 31st August 2013 at 12:55 PM.
-
31st August 2013, 01:14 PM
#3804
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
1967 ல் நடந்த எதிர்பாராத சம்பவம் பற்றி மிகவும் தெளிவாக விரிவாக பதிவிட்டுள்ளீர்கள் .
1967 ஜனவரி - மக்கள் திலகம் குண்டடி பட்ட செய்தியினை அன்று இரவு வானொலி செய்தி மூலம்
அறிந்து எங்கள் கிராமமே அதிர்ந்தது . மறுநாள் செய்தியில் அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை
என்றதும் நிம்மதி அடைந்தனர் .அவருடைய குரலில் பாதிப்பு இருந்ததால் பல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - இயக்குனர்கள் - ரசிகர்கள் - பொதுமக்கள் மத்தியில் ஒரு வித கலக்கம் இருந்தது .
மக்கள் திலகம் அவர்களின் கடுமையான முயற்சியினாலும் , தன்னம்பிக்கை யாலும் தன்னுடைய சொந்தக்குரலில் பேசி வெற்றி பெற்றார் .
பலர் கிண்டல் கேலி பேசினார்கள் . எதையும் மக்கள் - ரசிகர்கள் பொருட்படுத்தவில்லை .
வெற்றி மேல் வெற்றி - 1967- 1977
11 ஆண்டுகளில் 44 படங்கள் தந்து 22 வெற்றி காவியங்களை வழங்கியவர் நம் மக்கள் திலகம் .
1972 ல் பாரத் - பட்டம்
1972ல் புரட்சி நடிகர் - புரட்சி தலைவராக உருவானார்
1977-1987 தமிழக முதல்வராக பணியாற்றினார் .
1988ல் பாரதரத்னா - பட்டம்
மக்கள் திலகத்தின் உழைப்பிற்கும் , மனிதநேயத்திற்கும் , கிடைத்த விருதுகள் .
Last edited by esvee; 31st August 2013 at 01:52 PM.
-
31st August 2013, 01:29 PM
#3805
Junior Member
Veteran Hubber
இன்றும் திரையுலகை ஆளும் இதயக்கனி

சமீபத்தில் வந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'தேசிங்கு ராஜா' படத்தில், படத்தின் நாயகன் (விமல்) பெயர் இதயக்கனி. அவர் வைத்திருக்கும் கடையில் எம்ஜிஆரின் இதயக்கனி படம் போட்ட விளம்பர பலகை வைத்திருப்பார். அதை இரண்டு காட்சிகளில் காட்டுவார்கள். மேலும் ஒரு காட்சியில் விமல் கதாநாயகியைப் பிரிந்திருக்கும்போது, படகோட்டியின் 'பாட்டுக்கு பாட்டெடுத்து' பாடலைக் கேட்டு ஆறுதலடைவார். மக்கள் திலகத்தின் தாக்கம் இன்றைய புது படங்களிலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்
-
31st August 2013, 01:43 PM
#3806
Junior Member
Diamond Hubber
திரு வினோத் சார், சாதாரண சின்ன நடிகர்களே லட்சகணக்கில் பேசும்போது உண்மையாக அதிர்காரபூர்வமாக கோடானுகோடி பொதுமக்கள் ரசிகர்களை மறைந்த பின்னும் பெற்றிருக்கும் மக்கள்திலகம் அவர்களை யாரால் எவரால் எடை போட இயலும்? ஒரு திருத்தம் - பாரதரத்னா விருது திரு mgr -இக்கு தரப்பட்ட வருடம்-1988. மற்றபடி குண்டடி பட்ட பிறகும் அந்த பழுது பட்ட -ஒரு நடிகனுக்குரிய முக்கிய அம்சமாக கருதப்பட்ட குரலோடு திரைஉலகில் ஈடுபட்டு மிக பெரிய வெற்றியை ஆதாரபூர்வமாக பதிவு செய்தது -உலக அளவில் யாராலும் ஒப்புமை இல்லா வெற்றியாக தான் அனைவராலும் கருதபடுகிறது .....
-
31st August 2013, 01:45 PM
#3807
Junior Member
Devoted Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். தேவர், மக்கள் திலகம் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!
குண்டடிப்பட்ட பின்னர் தான், மக்கள் திலகம் இன்னும் பெரும் வெற்றிகளெல்லாம் குவித்தார் என்பது வரலாற்று உண்மை.
-
31st August 2013, 01:57 PM
#3808
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
1967 ல் நடந்த எதிர்பாராத சம்பவம் பற்றி மிகவும் தெளிவாக விரிவாக பதிவிட்டுள்ளீர்கள் .
1967 ஜனவரி - மக்கள் திலகம் குண்டடி பட்ட செய்தியினை அன்று இரவு வானொலி செய்தி மூலம்
அறிந்து எங்கள் கிராமமே அதிர்ந்தது . மறுநாள் செய்தியில் அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை
என்றதும் நிம்மதி அடைந்தனர் .அவருடைய குரலில் பாதிப்பு இருந்ததால் பல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - இயக்குனர்கள் - ரசிகர்கள் - பொதுமக்கள் மத்தியில் ஒரு வித கலக்கம் இருந்தது .
மக்கள் திலகம் அவர்களின் கடுமையான முயற்சியினாலும் , தன்னம்பிக்கை யாலும் தன்னுடைய சொந்தக்குரலில் பேசி வெற்றி பெற்றார் .
பலர் கிண்டல் கேலி பேசினார்கள் . எதையும் மக்கள் - ரசிகர்கள் பொருட்படுத்தவில்லை .
வெற்றி மேல் வெற்றி - 1967- 1977
11 ஆண்டுகளில் 44 படங்கள் தந்து 22 வெற்றி காவியங்களை வழங்கியவர் நம் மக்கள் திலகம் .
1972 ல் பாரத் - பட்டம்
1972ல் புரட்சி நடிகர் - புரட்சி தலைவராக உருவானார்
1977-1987 தமிழக முதல்வராக பணியாற்றினார் .
1988ல் பாரதரத்னா - பட்டம்
மக்கள் திலகத்தின் உழைப்பிற்கும் , மனிதநேயத்திற்கும் , கிடைத்த விருதுகள் .
உண்மை திரு. வினோத் சார். மக்கள் திலகத்தை அவருடைய ரசிகர்கள் நடிகராகப் பார்க்கவில்லை. தங்கள் வீட்டில் ஒருவராக, ஒரு அண்ணனாக, தம்பியாக, தாய்க்கும்-தந்தைக்கும் ஒரு மகனாக, பாசமுள்ள சகோதரனாக பார்த்து எங்க வீட்டுப்பிள்ளை என போற்றி மகிழ்ந்தார்கள். அதனால் அவருக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பையும் தங்களுக்கு ஏற்பட்டதாக பாதிப்பாக கருதி, இன்றும் அவரை இதய தெய்வமாய் வணங்குகிறார்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்
-
31st August 2013, 01:59 PM
#3809
Junior Member
Devoted Hubber
Last edited by NTthreesixty Degree; 31st August 2013 at 02:39 PM.
-
31st August 2013, 02:11 PM
#3810
Junior Member
Diamond Hubber
ஒவ்வொரு நடிகர் நடிகையர் -அரசியல் தலைவர் - இப்படி ரசிகர்கள் தொண்டர்கள் அனுதாபிகள் வேறுபட்வும் அவ்விஷயத்தை யாரோடும் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் அதற்கு மாறான தகவல்களை தான் கூறிகொண்டிருக்கிறார்கள் என என் நண்பர் உறுதியாக சொனதை இங்கு தெரிய படுத்துகிறேன் தோழர்களே -இது சரியா? தவறா?டுத்தான் இருப்பர். ஆனாலும் அவர்களின் அடிமனதிலும், முக்கியமாக மனசாட்சி- படியும் உண்மையான ஒரு அளவுகோல் இருக்கும்,
Bookmarks