-
20th September 2013, 11:35 AM
#2221
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
அட பாவி,
சத்திரியன் பட பன்னீர் செல்வம் போல நான் சமர்த்தாக uniform கழட்டி விட்டு ,எல்லோருடனும் அமைதியுடன் வாழ எண்ணினாலும், திலகன் போல என்னை uniform போட வைத்துதான் நீ ஓய்வாய் போல. ஏன் இந்த கொலை வெறி உனக்கு?
பன்னீர்செல்வம்...நீ வரணம்...இந்த பன்னீர்செல்வம் இல்ல...இந்த பன்னீர்செல்வம் எனக்கு வேண்ட...
உங்களுக்காக காதுற்றுப்பேன் ACP சார்..!
Last edited by NTthreesixty Degree; 20th September 2013 at 11:41 AM.
-
20th September 2013 11:35 AM
# ADS
Circuit advertisement
-
20th September 2013, 11:51 AM
#2222
Senior Member
Diamond Hubber
மீள் பதிவு
மதியிழந்த மனிதர்களின் மூக்குடைக்கும் 'காத்தவராயன்'
'காத்தவராயன்' மல்யுத்தக் காட்சி ஒரு ஆய்வுக் கட்டுரை.


'காத்தவராயன்' திரைப்படத்தில் வரும் நடிகர் திலகம் அவர்கள் செய்வதாக வரும் மல்யுத்தக் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதக் காட்சியாகும். அக்காலத்தில் அனைவராலும் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட ஒரு அரிய அற்புதமான மல்யுத்த சீன். ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் மல்யுத்த அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் ஏன் அதற்கு ஒருபடி மேலாகவே தந்து கலக்கியிருப்பார் நடிகர் திலகம். மல்யுத்த வீரனுக்குரிய உடல்வாகும்,தோற்றமும் அப்படியே அவருக்குப் பொருந்தி இருப்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
மல்யுத்தக் காட்சியின் தொடக்கத்தில் N.T. முதலில் களத்தில் இறங்கும்போது வலது கையால் வலது தொடையைத் தட்டி, மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, வலது காலை மட்டும் சற்றுத் தூக்கி, காலை உள்வாங்கி மடித்தபடி ஓடி வந்து ,சற்று உடலைத் தளர்வாக தொய்யவிட்டு யுத்தத்திற்கு ரெடி ஆகும் போதே மிகுந்த எதிர்பார்ப்புகள் நமக்கு ஏற்படத் துவங்கிவிடும். பின் போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார். தூக்கி வீசப்பட்ட மறு கணமே புள்ளிமான் போலத் துள்ளி எழுந்து நிற்பார் நடிகர் திலகம். பின் மறுமுறை எதிர்வீரர் N.T. யை வலதுபக்கமாக தன் தோள்பட்டை வழியாக தூக்கி வீசும்போதும் அதே சுறுசுறுப்புடன் எழுந்து கொள்வார் N.T. மூன்றாம் முறை எதிர்வீரர் N.T.யின் இரு தொடைப்பகுதிகளையும் இடுப்போடு பிடித்து தூக்க முயற்சி செய்யும் போது, N.T. அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு கைகளைத் தரையில் ஊன்றி நொடிப் பொழுதில் எழுந்து கைகளை நீட்டி யுத்தத்திற்கு மீண்டும் தயாராவது அருமை. பின் அந்த எதிரியின் இரு கைகளோடு தன் இரு கைகளையும் கோர்த்தவாறு பலப்பரீட்சை செய்வதும், பின் எதிராளியின் இடதுகையை தன் தலைக்குமேலாகக் பின்பக்கக் கழுத்து வழியே கொண்டுவந்து,அவர் கீழ் ஆடையைப் பற்றி அவரைத் தூக்க முயற்சிக்கும் போதே அந்த எதிராளி கொஞ்சமும் எதிர்பாராத வகையில் N.T. யின் முதுகைப் பிடித்து திருப்பி முறுக்கியவாறு பக்கவாட்டில் N.T. யைத் தூக்கிக் கிடாசும் போதும் நம் இதயமே சில்லிட்டுப் போகும். அப்படியே மனிதர் நேச்சுராக தரையில் விழுந்து எழுந்திருப்பார் பாருங்கள்! அடடா! தன் தொழிலின் மீது தான் எத்துனை ஈடுபாடு! எழுந்தவுடன் சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக அந்தப் போட்டிக் களத்தில் கொட்டிக் கிடக்கும் மணலின் மேல் N.T. ரவுண்டடித்து ஓடிவரும் அழகு இருக்கிறதே! காணக் கண் கோடி வேண்டும். (இடையிடையே கீழே விழுந்து எழுந்தவுடன் மறக்காமல் இரு கைகளிலும் ஒட்டியிருக்கும் மண்ணைத் தன் இரு தொடைப்பகுதிகளின் பக்கவாட்டில் தட்டித் துடைத்துக் கொள்வார்.)
பின் போட்டியாளரின் பின்புறம் நின்று அவர் உடம்பை உடும்புப் பிடியாகப் பிடித்து அவரை மூன்று முறை தூக்கித் தூக்கி நிறுத்தி நிலை குனிய வைப்பதும், அவரை இரண்டு முறை தலை கீழாகத் தூக்கி வீசுவதும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள். அடுத்து N.T. எதிரியின் கழுத்தைப் பிடித்து வளைத்து சர்வ சாதரணமாக மண்ணைக் கவ்வ வைப்பது மிரள வைக்கும் தத்ரூபக் காட்சி. எதிரி தன் முதுகின் மேலே படர்ந்து படுத்தவாறு இம்சை தர ,அப்படியே படுத்தவாக்கில் அவரை தலைகீழாக மாற்றிப் புரட்டிப் போட்டுப் படுக்கவைத்து, தான் அவர் முதுகின் மீது அமர்ந்து கொண்டு அவரது கைகளைப் பிடித்துப் பிடிபோட்டு அவரை தலை கீழாக நிறுத்தி (சிரசாசன பொசிஷனில்) அவரது இரு தூண் போன்ற தொடைகளுக்கிடையே தன் கழுத்தும்,முகமும் பதிந்திருக்க எதிரி அப்படியே தனது தொடைகளால் N.T. யின்கழுத்தை இறுக்கி அப்படியே புரட்டிப் போட, தூரமாகப் போய் டூப்பே இல்லாமல் N.T. விழுவது நம்மை திடுக்கிட வைக்கிறது. பின் எதிரி கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழக்க ஆரம்பிக்க, N.T. யின் கை ஓங்க, தான் வெற்றி பெறப் போவது உறுதி என்று நிச்சயமாகத் தெரிந்து விட்ட நிலையில், வெற்றி பெறப் போகும் களிப்பை முகத்தில் காட்டி, எதிரியை சர்வ அலட்சியமாக பலமுறை தூக்கிப் போட்டு பந்தாட வைத்து மண்ணைக் கவ்வச் செய்வதும், எதிரி சோர்ந்து போய் ஒவ்வொருமுறையும் தட்டுத் தடுமாறி எழுந்திருக்கையில், இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த இடத்தை வெகு அழகாக,அலட்சியமாய் ஓடியவாறு சுற்றி வருவதும்,தோள்பட்டைகளை சற்று துவளவிட்டு, உடலை சற்று தளர விட்டு,வலது தொடையைத் தட்டி வெற்றிக்கான அறிகுறியை முகத்தில் காட்டத் தொடங்குவதும், இறுதியில் அப்படியே அலாக்காக எதிரியை தூக்கி மனிதர் என்னமாய் தூக்கிச் சுழற்றுகிறார்!) தோள்பட்டையில் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி கீழே தூக்கிப் போட்டு வெற்றி வாகை சூடுவதும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அபாரமான அரிய காட்சிகள். அதே போல எதிரி தன்னை இம்சிக்கும் நேரங்களில் வலியின் வேதனையைக் காட்டியவாறும், காட்டாதவாறும் அவர் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்ச்சிகள் உன்னதமானவை. குறிப்பாக ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் அவர் மிகுந்த சிரத்தை எடுத்து செய்த சண்டைக் காட்சி (மல்யுத்தக் காட்சி) இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அந்த அற்புத, மனதை உறைய வைக்கும் மல்யுத்தக் காட்சி உங்களுக்காக.
அன்புடன்,
வாசுதேவன்.
-
20th September 2013, 11:58 AM
#2223
Senior Member
Diamond Hubber
இப்படி ஒரு மல்யுத்தத்தை வேறு எவரையாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவர் தொட்டு வணங்கும் கால் தூசு மண்ணுக்குத்தான் சமமாக முடியுமா? அடப் போங்கய்யா! உங்க காமெடிக்குத்தான் அளவில்லாம போச்சு! காமெடியிலேயே வளர்ந்தவங்களுக்கு அதை விட்டா என்ன தெரியும்?
-
20th September 2013, 12:29 PM
#2224
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
இப்படி ஒரு மல்யுத்தத்தை வேறு எவரையாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவர் தொட்டு வணங்கும் கால் தூசு மண்ணுக்குத்தான் சமமாக முடியுமா? அடப் போங்கய்யா! உங்க காமெடிக்குத்தான் அளவில்லாம போச்சு! காமெடியிலேயே வளர்ந்தவங்களுக்கு அதை விட்டா என்ன தெரியும்?
வாசுதேவன் சார்,
மக்கள் கலைஞர் திரு ஜெய்ஷங்கர் அவர்கள் பாடல் இந்த தருணத்தில் நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தை பற்றி வீம்புகேன்று பேசுபவர்களுக்கு சவுக்கடியாக இந்த பாடல் !
காய்த்த மரம் தான் கல்லடிபடும் என கண்கூடாக பார்த்ததுண்டு. ...புத்தன் ஏசு காந்தியை கூட குற்றம் சொல்லி கேட்டதுண்டு.....
-
20th September 2013, 12:56 PM
#2225
Junior Member
Newbie Hubber
நாளை எல்லோருக்கும் நீதி கூற போகிறேன். அனைவரும் வருக.
-
20th September 2013, 01:00 PM
#2226
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் காத்தவராயன் மல்யுத்தக் காட்சி மற்றும் அதைப்பற்றிய உங்களின் ஆய்வு பிரமாதம்.
Y .Gee .மகேந்திரா அவர்களின் சினிமா எக்ஸ்பிரஸ் கட்டுரை அருமை.
இத்தருணத்தில் திரு.Y .Gee .M - E -Mail தகவல் நமது திரி நண்பர்களுக்காக.
An imp and happy information for ALL.... Sep 29th issue of VARA MALAR of DINA MALAR will have Sivaji sir's foto as wrapper. This was suggested to them by Me and Mr Ragavendar. And they accepted. ALSO FROM SEP 29TH EVERY WEEK THE VARA MALAR WILL CARRY AN ARTICLE WRITTEN BY ME ABOUT Nadigar Thilagam. A series called "NAAN SWASITHA SIVAJI"...... PL SPREAD THIS INFO ALL OVER THE GLOBE. IT CAN ALSO BE READ ON THE DINAMALAR VARAMALAR NET SITE.
Thank u
YGEE MAHENDRA
-
20th September 2013, 01:03 PM
#2227
Senior Member
Seasoned Hubber
-
20th September 2013, 01:05 PM
#2228
Junior Member
Devoted Hubber
எங்கே எப்போது எத்தனை மணிக்கு ?
-
20th September 2013, 01:08 PM
#2229
Senior Member
Diamond Hubber
நன்றி சந்திரசேகரன் சார். 'தினமலர்' வாரமலருக்கும், ரசிக வேந்தருக்கும், திரு.ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களுக்கும், இந்த செய்தியை இங்கே பதிப்பித்த தங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த இனிய நன்றிகள். வாழ்த்துக்கள். இனி வரும் நாட்களில் 'தினமலர்' வாரமலர் நம் அனைவர் கையிலும் தவழும். நம் தவப்புதல்வனின் புகழ் அகிலமெல்லாம் மேலும் கூடும்.
Last edited by vasudevan31355; 20th September 2013 at 01:29 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
20th September 2013, 01:12 PM
#2230
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
நடிகர் திலகம் சமூக நலப் பேரவை சார்பாக 2-10-2013 அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழா சீரும் சிறப்புமாக நடைபெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Bookmarks