வார்ர்ரே வா கார்த்திக் சார்.... அமர்க்களம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரே சமயத்தில் கவிதாவையும், கல்பனாவையும் பற்றி எழுதி அந்தக் கவர்ச்சிப் பாவையின் கவர்ச்சிப் பாதைகளைப் பற்றி கலக்கலாகக் குறிப்பிட்டு இறுதியில் அவளுக்கு இரண்டிலும் ஏற்படும் சோக முடிவை எழுதி, வாழ்க்கையிலும் அவள் ஜீவனத்திற்கு இன்னும் கஷட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் என்ற நெஞ்சு கனக்கும் விஷயத்தையும் கொடுத்து, ஐட்டம் கேர்ள்ஸ் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை, அவர்கள் படும் வேதனைகளை, அவர்களின் மறு பக்கத்தையும் அலச ஆரம்பித்து அற்புதமான பதிவை வழங்கியுள்ளீர்கள்.
கரணம் தப்பினால் மரணம் என்பது போல இந்த சப்ஜெக்ட்டை ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டால் காமெரா மேதை கர்ணன் படம் போல ஆகி விடும். நல்ல வேளையாக நீங்கள் அதைக் கையில் எடுத்து நாகரீகமாகத் தந்து அசத்தி விட்டீர்கள். (நான் செய்த புண்ணியம் வேறு ஒருவர் கையில் இந்த சப்ஜெக்ட் சிக்கவில்லை. பின்னூட்டத்திற்கே இந்தப் பாடு படுத்துகிறது.)
ஜெயக்குமாரின் கவர்ச்சியை முகம் சுளிக்காவண்ணம் தந்து, அவருடைய கேரக்டரை அருமையாக அலசி, இப்போது குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பரிதாப நிலையையும் எழுதி எங்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.
அருமையான தொடரை அழகாக பரிமளிக்கச் செய்து வருவதற்கு எனது பாராட்டுகள்.
'இன்று வந்த இந்தப் பதிவு
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா'
இதோ உங்களுக்குப் பிடித்த கவிதா (எங்கிருந்தோ வந்தாள்)
கவிதாவினால் இப்படி ஆன கதாநாயகன்.
கல்பனா (கௌரவம்)
அதிசய உலகத்தை அலட்சியமாய் ரசிக்கும் அதிசய பாரிஸ்டர்
![]()
Bookmarks