Page 310 of 399 FirstFirst ... 210260300308309310311312320360 ... LastLast
Results 3,091 to 3,100 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3091
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சிவாஜியின் காதல்கள்- 2

    அந்த நாளும் வந்திடாதா.......

    நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)
    இதை சொல்றதுக்கும் ஒரு தைரியம் வேணுமப்பு... அதுலே கோபால் டாப்பு...

    இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.
    சரியான அணுகுமுறை... இந்தப் படத்திற்கு அது தான் ஆணிவேர்.

    அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),
    அது தாம்பரம் லலிதா என்று நினைத்திருந்தேன்... வாசு சார் ... ஹெல்ப் ப்ளீஸ்...

    சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும்

    படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.
    One of the best scenes of Andha Naal

    உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.

    ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.

    கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதிர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.

    மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.
    Fantastic analysis in the perfect dimension. Only Gopal can do this.
    Last edited by RAGHAVENDRA; 11th October 2013 at 09:43 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3092
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    Ganpat sir - you have excellent sense of humour

    இந்த மாதிரியும் வைத்து கொள்ளலாமே :

    சின்ன கண்ணன் எழுதுகிறான் ! சின்ன கண்ணன் எழுதுகிறான் !

    மிக்க நன்றி நண்பரே.

    உங்கள் பாடல் அருமை..ஒரு சின்ன யோசனை.சந்தம் வருவதற்கு..


    சின்ன கண்ணன் எழுதறார்! சின்ன கண்ணன் எழுதறார்!

    என்று மாற்றுங்களேன்..

  4. #3093
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    அது தாம்பரம் லலிதா என்று நினைத்திருந்தேன்... வாசு சார் ... ஹெல்ப் ப்ளீஸ்....
    அது சூரிய கலா ராகவேந்திரன் சார்





    Bonus still (Thalaivar)



    Last edited by vasudevan31355; 11th October 2013 at 09:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3094
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால் சார் குறிப்பிட்ட அந்த மிகப் பிரபலமான, அந்த நாள் படத்திற்கு சிறப்பு சேர்த்த, நடிகர் திலகத்தின் ஓரக்கண் பார்வை நிழற்படம். இந்தப் படத்தின் ஹைலைட்டே இந்தப் பார்வை தான். அந்தக் கிழவரின் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்து வளைத்துப் போடும் வசீகரம் .... இந்த மாதிரி இமேஜ் பார்க்காமல் நடிக்கக் கூடிய ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான் என்பதை 1954லேயே நிரூபித்த படம் அந்த நாள்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #3095
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மிக்க நன்றி வாசு சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3096
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    உங்கள் பாடல் அருமை..ஒரு சின்ன யோசனை.சந்தம் வருவதற்கு..


    சின்ன கண்ணன் எழுதறார்! சின்ன கண்ணன் எழுதறார்!

    என்று மாற்றுங்களேன்..[/QUOTE]

    தவறுக்கு மன்னிக்கவும் - பாலமுரளியும் ஒருமையில் தான் சின்ன கண்ணனை அழைக்கிறார் - அவரின் நடையில் இருந்த வேகத்தை சிரிதே பாட்டிலும் காண்பித்துவிட்டேன்

  8. #3097
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அந்த நாள்' சில ஸ்டில்ஸ்







    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3098
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    காதல் தொடரை அமர்க்களமாக தொடங்கியிருக்கிறீர்கள்! பராசக்தியை காதலித்து விட்டு அந்த நாளுக்கு போய் விட்டீர்கள். பராசக்தி பற்றி சொல்லும்போது அதிலும் குறிப்பாக காதல் காட்சிகளைப் பற்றி குறிப்பிடும் போது எப்போதும் நண்பர்களிடம் சொல்லி சிலாகிக்கும் ஒரு ஸீன் உண்டு. அதுதான் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே பாடல் காட்சி.

    பொதுவாகவே காதல் வயப்படும் போது தான் விரும்பும் ஆளை அடிக்கடி பார்க்க வேண்டும், பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனம் துடிப்பார்கள்.அதிலும் தனிமை கிடைக்கும் இடங்களாக யாரும் குறுக்கீடு செய்யாத இடங்களாக, அப்படிப்பட்ட பொழுதுகளாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். காரணம் sweet nothings பேசுவதற்கு disturbance இல்லாமல் இருந்தால் நல்லது என்ற எண்ணம் ஒன்று மற்றொரு காரணம், ஆண் எப்போதும் தனிமையும் வாய்ப்பும் கிடைக்கும் போது சிற் சில குறும்புகளில் ஈடுபடுவது வழக்கம்.

    நமது கதையில் நாயகனும் இந்த உணர்விற்கு விலக்கல்ல. படத்தில் நாயகனும் நாயகியும் சந்திக்கும் நேரத்திலே வரும் காதல் பாடல் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே. நான் ஏற்கனவே சொன்னது போல் எப்போதும் ஆண்தான் தனிமையையும் இருட்டையும் விரும்புவான். இங்கே ஆண் அமைதியாக நிற்க பெண் மட்டும் பாடுகிறாள்.

    முதல் சரணத்தில் நாயகி பாடிக்கொண்டே வரும்போது இரண்டு வரிகள் பாடுவாள்.

    இருட்டு வேளையிலே

    யாரும் காணாமலே

    அந்த புதுமுக நடிகன் கணேசன் ஒரு மரத்தின் அருகில் நிற்பார். நாயகி அபிநயம் பிடித்துக் கொண்டே இந்த வரிகளை பாடும் போது அந்த புதுமுகம் காட்டும் reaction. ஒரு ஆண் நினைப்பதை ஆசைப்படுவதை ஒரு பெண் இப்படி வெளிப்படையாக பேசுகிறாளே, அவளுக்கே அந்த ஆசை இருக்கிறதோ, அழைப்பு விடுகிறாளோ என்று ஆணுக்கேயுரிய அந்த ஆசையை ஒரு விஷமத்தனமான புன்னகையுடன் வெளிப்படுத்தும் பாங்கு இருக்கிறதே, அதில் beauty என்னவென்றால் இந்த உணர்வையெல்லாம் முகத்தின் ஒரு பாகத்தை காட்டியே வெளிப்படுத்துவார். ஆம் படம் பார்ப்பவர்களுக்கு அந்த புதுமுக நடிகனின் profile போஸ் மட்டும்தான் தெரியும்.வலது பக்க கண், கன்னம் மற்றும் உதட்டின் ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? அதுவும் முதல் படத்திலேயே?

    இந்தப் படம் வெளிவந்து வரும் அக்டோபர் 17-ந் தேதியோடு 61 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இது வெளியான் போது நீங்களோ நானோ ஏன் இந்த திரியை படிக்கும் 99.9% ஆட்களும் பிறக்கவில்லை. நாம் பிறப்பதற்கு முன்னரே இப்படி ஒரு ஆற்றலை வெளிப்படுத்தி நம்மையெல்லாம் ஜென்மஜென்மாந்தரங்களுக்கு கட்டி போடுவான் இந்த புதுமுக நடிகன் என்று தெரிந்ததானலோ என்னவோ இந்த பாடலை எழுதிய கவிஞர் இரண்டாவது சரணத்தில் இரண்டு வரிகள தீர்க்க தரிசனமாக எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார்.

    அன்புக் கயிறுடுவாய்
    அறுக்க ஆராலும் ஆகாதையா!


    நம்மையும் அந்த புதுமுக நடிகன் கணேசனையும் பிணைத்திருக்கும் அந்த அன்பு கயிறை யார் அகற்ற முடியும்? நம் வாழ்நாள் முழுக்க இணைந்திருக்க கூடியதன்றோ அது!

    அன்புடன்

  10. #3099
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சத்ரபதி சிவாஜி பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

    கணேஷ் சார், உங்கள் காவேரி குசும்பிற்கு எப்போதும் நான் ரசிகன். இப்பவும் லீலாவதி அம்மையாரையும், மோகனாம்பளையும் இணைத்து நீங்கள் எழுதிய பதிவை நினைத்து நினைத்து ரசிக்கிறேன்.

    சின்ன கண்ணன், பேஷ் பேஷ் சூப்பர்!

    ரவி,

    நெஞ்சிருக்கும் வரை சிவாஜி ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பலருக்கும் மனதுக்கு நெருக்கமான படம். விநியோகஸ்தர்கள் பேச்சை கேட்டு ஸ்ரீதர் மட்டும் இடைவேளைக்கு பிறகு திரைகதையில் மாற்றம் செய்யாமல் இருந்திருந்தால் படத்தின் range எங்கேயோ போயிருந்திருக்கும். மற்றொன்று, தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிப் போட்ட 1967 பொது தேர்தல் நேரத்தில் படம் வெளியானது படத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாக் அமைந்தது. எப்படி இருபபினும் படம் A கிளாஸ்.

    அன்புடன்

  11. #3100
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !

    மேற்கண்ட விஷயம் P _R தனது தேவர் மகன் விமர்சனத்தில் குறிப்பிட்டது. அந்த நாள் படத்தில் வரும் காட்சியே.

    அந்த நாள் படத்தில் பதிவிட்ட ஒரு நிழற்படத்தில் பார்க்கலாம்(#3104 ,first picture by Vasudevan) இது அம்புஜம் (சூர்யகலா) கர்ப்பம் என்று ராஜனை(சிவாஜி)வேண்டும் காட்சி.
    Last edited by Gopal.s; 12th October 2013 at 07:29 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •