Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டைரக்டர்கள் பாணி

    ஒரு ஜாலி பார்வை.

    நம் தமிழ்ப்பட இயக்குனர்கள் அனைவரும் அவரவர்களுக்கென்று ஒரு தனிப் பாணியை கடைப் பிடிப்பார்கள். சில விஷயங்களை அவர்களால் விட்டுக் கொடுக்கவே முடியாது. அது படத்திற்கு சிறப்பு சேர்த்தாலும் சரி! படத்தை பஸ்பமாக்கினாலும் சரி. சரி! சில இயக்குனர்களின் பாணிகளைப் பற்றி ஜாலியாகப் பார்ப்போம். இது பொதுவான ஒரு பார்வைதான். நடிகர் திலகங்களின் படங்களும் இதில் சேர்ந்து கொள்ளும். அவர் இல்லாமலா?

    கிருஷ்ணன் பஞ்சு:



    பார்ப்பதற்கு கிராமத்து ஏர் உழவர்கள் போல் அப்பாவிகள் போல இருப்பார்கள். பார்த்தால் இயக்குனர்கள் போலவே தெரியாது. ஆனால் கில்லாடிகள். ஹை-கிளாஸ் ரசனை உள்ளவர்கள். உருவத்திற்கும், இயக்ககத்திற்கும் சம்பந்தமே இருக்காது. இவர்களுக்கு ஒளிப்பதிவு நச்சென்று இருக்க வேண்டும். இவர்கள் இயக்கம் படங்களின் காட்சிகள் போட்டோ பிரேம் போல இருக்கும். பராசக்தி ஒன்று போதாதா! அதே போல காட்சிகளின் கோர்வை அட்டகாசமாக இருக்கும். காட்சிகள் தவ்வாது. அதிகமான நடிக நடிகையர்களைக் கையாளுவார்கள். காட்சிகளில் அழுத்தம் கொடுத்து மனதில் ஆழமாகப் பதிய வைப்பதில் கை தேர்ந்த திறமை சாலிகள். படு ஜென்டிலாக படத்தைக் கொண்டு போவார்கள். உயர்ந்த மனிதன் போன்ற சிக்கலான கதையமைப்பு, பாத்திரம் இவைகளை அநாயாசமாகக் கையாளுவார்கள். பாத்திரத்தின் தன்மை கெடாது. நிஜமாகவே உயர்ந்த மனிதர்கள். இந்த நாள் உங்கள் நாள் போல் இன்பமாயில்லையே? அது ஏன்... ஏன்? கிருஷ்ணன் பஞ்சுவே!

    ராமண்ணா:

    இவர் பாணியே தனி. கமர்ஷியல் பைத்தியம். குடும்பக் கதையை எடுத்துக் கொண்டு ஆக்க்ஷன் பேக்கேஜ் ஆக்குவார். ஆக்ஷன் படங்களில் குடும்பப் பாசத்தை நுழைப்பார். தங்கச் சுரங்கம் ஞாபகத்திற்கு வருமே!

    இவரது படங்களில் நீளம் அதிகமாக இருக்கும். கத்தரி வைக்க மாட்டார். கத்தரியும் போட மாட்டார். எப்படியோ ரசிகர்களின் நாடி பார்த்து உட்கார்ந்து ரசிக்க வைத்து விடுவார். செலவுக்கு கொஞ்சமும் அஞ்சாத இயக்குனர். பணத்தை தண்ணீராக செலவழிப்பார். காட்சிகளிலும் பணத்தைப் பறக்க விடுவார். உடைகளில் கூட சில்லறைகளைப் பதிப்பார். அப்போதே நிறைய கலர் படங்களை எடுத்து தள்ளியவர்.

    கவர்ச்சிப் பிரியர். ஹீரோயின்களை படு கிளாமராகக் காட்டுவதில் சூரர். (நான்- ஜெயா பிகினி சீன். மூன்றெழுத்து ஸ்ரீவித்யா போட்டில் ஆட்டம். தங்கச்சுரங்கம்- நிர்மலா குளியல்) துணை நடிகைகளை அதிகமாக பயன் படுத்துவார். சண்டைக் காட்சிகள் நிறைய சேர்ப்பார். ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் உண்டு. ரவிச்சந்திரன் என்றால் இவருக்கு ரசகுல்லா.

    இவருக்கு ஒரு தனிப் பாணி உண்டு. ஹீரோயின்களை சேற்றில் மூழ்க வைத்துப் பார்ப்பதில் இவருக்கு தனி சுகம்.(பாரதி) ஹீரோயின்கள் மாத்திரமல்ல. வண்டிகளையும்தான். சொர்க்கம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டையில் சேற்றில் தான் படமே ஓடும். அது போல நடிகைகளின் மேலே பெயின்ட்டைப் பீய்ச்சிப் பார்பதிலும், பார்க்க வைப்பதிலும் கை தேர்ந்தவர். துப்பாக்கி வழியாக் கூட பெயின்ட்டைப் பாய்ச்ச வைப்பார். (மூன்றெழுத்து) குளியல் சீன கண்டிப்பாக உண்டு. டப்பாங்குத்து ஆட்டம் இல்லாமல் இவர் படம் இருக்காது. கட்டழகு பாப்பா, ஆணாட்டம் பெண்ணாட்டம், இரவில் வந்த குருவிகளா, ராஜா கண்ணு போகாதடி) லாரி, கார், பெட்டி, என்றால் இவருக்கு அல்வா. (பெட்டிக்குள்ளே போட்டடைத்த பெட்டைக் கோழி, போதுமோ இந்த இடம், சொல்லாதே யாரும் கேட்டால், என்னைப் போல் ஒருவன் கிளைமாக்ஸ் சண்டை) ஜெயலிதா மேடம் என்றால் இவருக்கு உயிர். (சக்தி வந்தாளடி) நிறைய படங்களில் பாக்தாத் பேரழகி நாயகி. குலுக்கு ஆட்டப் பைத்தியம். (பொன் மகள் வந்தாள்) அசோகன், மனோகர் இல்லாமல் இவர் படம் பெரும்பாலும் இருக்காது. ரிஸ்க் எடுப்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. இல்லையென்றால் திரையுலகின் இரு துருவங்களையும் இணைத்து கூண்டுக்கிளி எடுத்து இரு தரப்பு ரசிகர்களையும் இன்று வரை சிறைக் கூண்டுக்குள் தள்ளியபடி இருப்பாரா!

    கே.எஸ். கோபால கிருஷ்ணன்



    பலே கில்லாடி. ஆள்தான் பார்க்க நோஞ்சான். ஆனால் கீர்த்தி பெரிது.

    குடும்பம், குழப்பம், விரிசல், உணர்ச்சிப் பிரவாகம் இப்படியாகக் காய் நகர்த்துவதில் கை தேர்ந்தவர். இவர் பள்ளியில் படிக்கும் போது பரீட்சை சமயங்களில் டீச்சரிடம் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கியே அவரை கொன்னு இருப்பார் போல. பக்கம் பக்கமாக வசனங்கள் எழுதுவார். அளவுக்கு அதிகமாக நடிகர்களை எக்ஸ்ப்ரெஷன் கொடுக்க வைப்பார்.

    இவருக்குப் பிடித்த நடிகர்கள் 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி, சாமிக்கண்ணு, ரங்காராவ், தேங்காய் சீனிவாசன், கே.ஆர்.விஜயா.

    இப்போதுதான் நீங்கள் ஆழமாக கவனிக்க வேண்டும். இவர் ஒரு குறப் பிரியர். ஆமாம் சார். இவர் படங்களில் பெரும்பாலும் குறவர்கள் டான்ஸ் அல்லது அது தொடர்பான டான்ஸ் இல்லாமல் இருக்காது. அவ்வளவு ஏன்? குறத்தி மகன் என்று முழு நீள அதுவும் கலர்ப்படமாக எடுத்து விட்டாரே! நீர் நிலம் நெருப்பு அப்படிப்பட்ட டைப்தான். ஏன்? தலைவர், பத்மினிக்கு பேசும் தெய்வத்தில் அழகான இதய ஊஞ்சல் ஆடவா பாட்டைக் கொடுத்து பின் இருவரையும் குறவர்களை விட மோசமான டப்பங்குத்து ஆடவைத்து அந்தப் பாட்டைக் கெடுத்தாரே! ஆயாலோ! ஆயாலோ! கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா.

    ஒரு குடும்பத்தை வைத்து அதில் குழப்பம் உண்டாக்க இரு வில்லிகளை (மாமியாரோ, நாத்தனாரோ) வைத்து விடுவார். (அந்தக் காலத்தில் சுந்தரிபாய், தாம்பரம் லலிதா இடைக்காலத்தில் ராஜசுலோச்சனா, சி.ஐ.டி.சகுந்தலா) செக்ஸை லாவகமாகப் புகுத்துவதில் வல்லவர். கே. ஆர். விஜயாவையே நத்தையில் முத்துவில் ஓடும் நதியில் குளிக்க வைத்து ஆடையை ஓட வைத்தவர் ஆயிற்றே. இவரின் ஆஸ்தான நடிகை கே.ஆர்.விஜயா. தமிழ்ப்படங்கள் கலரை நோக்கி ஓடும் போது அடுக்குமல்லி என்ற கருப்பு வெள்ளை, பாலாபிஷேகம் என்ற கருப்பு வெள்ளை படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றி அடையச் செய்து அனைவரையும் மிரள வைத்த பேர்வழி. சாமிப் படங்களையும் வெற்றி பெறச் செய்து காட்டியவர். ஆதி பராசக்தி எடுத்து அப்போதே தசாவதாரம் காட்டியவர்.

    இவர் ஜெமினியை வைத்து எடுத்த உறவுக்குக் கை கொடுப்போம் படுதோல்வி அடைந்தது. ஆனால் பின்னாளில் விசு இதே கதையை சுட்டு சம்சாரம் அது மின்சாரம் எடுத்து சூப்பர் ஹிட்டானது. இதுதான் விதி. கன்னட உதயசந்திரிகாவை வைத்து சுவாதி நட்சத்திரம் என்ற ஒரு நல்ல படத்தையும் அளித்தவர்.

    எப்படியோ! குடும்பக் கதையா? கூப்பிடு கோபாலை (நான் கோபால் கிருஷ்ணனை சொன்னேன்பா....குடும்பக் கதைக்கும் கோபாலுக்கும் என்ன சம்பந்தம்?) என்று சொல்லுமளவிற்கு வெற்றிகளைக் குவித்தவர். படிக்காத பண்ணையார்தான் ஷாமியோவ்.

    ஏ.சி.திருலோகசந்தர்.



    நம்ம இயக்குனர். கலக்கல் பேர்வழி. அப்போதே M.A. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் தலைவர் எழுந்து நிற்பாராம். படிப்புக்கு நடிப்பு கொடுக்கும் மரியாதை.

    இவர் எப்படி தெரியுமா? ஏறினால் ரயில். இறங்கினால் ஜெயில். பின்னு பின்னுவென்று பின்னுவார். தங்கை, இருமலர்கள், தெய்வ மகன், திருடன், என்று கலக்கி காக்டெயில் விருந்து படைப்பார். அதே நேரத்தில் அன்பே ஆருயிரே, அன்புள்ள அப்பா என்று தடம் புரள்வார். கொஞ்சம் கத்தரி போட மறந்து விடுவார். இழுவை சில படங்களில் ஜாஸ்தி. இவரும் ஒரு கே.ஆர்.விஜயா பிரியர். ஒன்றிரண்டு சண்டைக் காட்சிகள் வேண்டும் இவருக்கு. தலைவரை சக்கை வேறாக சாறு வேறாகப் பிழிந்து எடுத்து விடுவார். துணிச்சல்காரர். விஜயஸ்ரீயை காபரே ஆட வைத்த இவர் கே.ஆர். விஜயாவையே காபரே டான்ஸ் ஆட வைத்து நம்மை ஓட வைத்த இயக்குனர். இருமலர்களை அருமையாகப் பண்ணி சக்செஸ் ஆக்கினார். தெய்வ மகனைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

    (இவரைப் பற்றி ஒரு சமயம் தலைவரிடம் பேசி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். இவரைப் பற்றி ஏதாவது சொன்னால் தலைவருக்கு கோபம் வந்து விடும்.)

    ம்...நிஜமாகவே அவன்தான் மனிதன் இந்த தெய்வ மகன் (வீரத் திருமகன் ஆயிற்றே)! கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா.

    ஏதோ! என் இஷ்டத்திற்கு எழுதி விட்டேன். பிடித்திருந்தால் சொல்லுங்கள். இன்னும் சில இயக்குநர்களைப் பற்றி தொடர்கிறேன். இல்லையென்றால் கழட்டிக் கொள்கிறேன்.

    ஓ.கே.வா.?
    Last edited by vasudevan31355; 18th October 2013 at 10:05 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •