Page 382 of 399 FirstFirst ... 282332372380381382383384392 ... LastLast
Results 3,811 to 3,820 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3811
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் உற்ற நண்பன் வாசு கூட இந்த விஷயத்தில் சிறிதே சறுக்கி விட்டார். ராகவேந்தர் மனம் கோண கூடாதே என்று நானும் ,முரளியும் பதிவுகளை நீக்கினோம்.(இன்று பொது,யார் வேணும்னாலும் எது வேணும்னாலும் எழுதலாம் என்று பேசும் வாய் அன்று எங்களை பிரஷர் கொடுத்தது என்ன ஜனநாயகம்?)
    வாசுவிடம், நடிப்பிலக்கணம் திரியில் தரமற்ற பதிவுகள் வந்தால் எங்கள் உழைப்பே நகைப்புக்குரியதாகும் என மரியாதையுடன் வேண்டி கேட்டும் ,எந்த மதிப்பும் கொடுக்கவில்லை என்றால் ,ராகவேந்தர் என்ன வேண்டுமானாலும் கோஷ்டி சேர்த்து ஆடலாம், நான்,முரளி,கார்த்திக், ஜோ போன்றார் அவருக்கடங்கி எங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும்.என்ன அநியாயம்?
    (நல்ல துவைத்து அயர்ன் பண்ணி போட்ட என் favourite சட்டையில்,காக்கை எச்சமிட்டது போல வந்த சிரஞ்சீவி பதிவு???அதிலும் கண்ட்றாவி visual வேறு????????????????????)
    Last edited by Gopal.s; 9th November 2013 at 08:17 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3812
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தை தெய்வமாக தொழுபவன் நான். அவருக்கு மீறி ஒரு நடிகன் பிறந்ததும் இல்லை,பிறக்கவும் இல்லை,பிறக்க போவதும் இல்லை. ஆனால் எல்லா படங்களிலும் அவர் பங்களிப்பு சூப்பர் என்பதை, அவர் பக்தர்களே ஒப்ப மாட்டார்கள். தர்மராஜா படத்தில் நடிக்க ,அவர் என்ன கராத்தே கற்று பாத்திரத்தை justify பண்ணினாரா?அமர காவியம் போன்ற படங்களில் ஏனோதானோ என்று வந்து போகவில்லையா?சிரஞ்சீவி போன்ற படங்களை பார்த்து நொந்து போனது எத்தனை ரசிகர்கள்? ஓங்கி சொல்கிறேன். 81 க்கு பிறகு வந்த 90% படங்கள் தரமற்ற குப்பைகளே. அவற்றில் நடித்ததற்கு ,நடிகர்திலகத்தை மன்னிக்கவே முடியாது. அவர் நடிப்பும் பெரிய imaginative ஆக,அவர் திறமைக்கேற்ப அமையவில்லை. அதை பற்றி ராகவேந்தர் எங்கு,எப்போது எழுதினாலும் என் எதிர் கருத்து வரத்தான் வரும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #3813
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )

    ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

    தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

    சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

    எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

    எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

    சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

    ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)

    ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)
    Last edited by Gopal.s; 9th November 2013 at 09:28 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #3814
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    உற்ற நண்பர் கோபாலுக்கு,

    தங்களுக்கு மீண்டும் என்னுடைய இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    நிச்சயமாக நீங்கள் நினைப்பது போல் அல்ல. எனக்கு ராகவேந்திரன் சாரும், நீங்களும் வெவ்வேறல்ல. இருவருமே சம நிலையில் மனதில் கோலோச்சுபவர்கள்தாம். இதில் அவர் ஒஸ்தி இவர் மட்டம் என்று என்றுமே நான் பார்த்ததில்லை. உங்களுக்குள் வாக்குவாதங்கள், பிரச்சனைகள் வந்த போது ஒரு நடுநிலையாளனாகத்தான் அதைத் தீர்க்க பாடுபட்டு வந்துள்ளேன். இதில் நான் சறுக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்குள் உள்ள பிரச்னை தீர்க்கப்படவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் எனக்கு.

    தாங்கள் நிச்சயமாக என் வேண்டுகோளின் படி அல்லது என் அன்புக் கட்டளையின்படி சில பிரச்சனைக்குரிய பதிவுகளை நீக்கியுள்ளீர்கள். அதற்கு மிகவும் நன்றி சொல்லக் கடமைப் பட்டவன் ஆகிறேன். திரியில் உங்கள் மனநிலைமையை ராகவேந்திரன் சாருக்கும், அவருடைய எண்ணங்களை உங்களுக்கும் பலமுறை ஒரு தூதுவனாக எடுத்துச் சொல்லியும் இருக்கிறேன்.

    ஆனால் பிரச்னை என்பது ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில பதிவுகள் வேண்டாம் என்பது தங்கள் கருத்து. ஏன் வேண்டாம் என்பது ரசிக வேந்தரின் கருத்து. இதில் சமாதான முயற்சியை ஓரளவிற்கு ஏன் அதற்கு மேலும் என்னால் ஆனதை நான் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்தும் இருக்கிறேன்.

    என்னை விடுங்கள். இதில் நான் நியாயவாதி என்று சொல்வதற்காக இந்தப் பதிவல்ல.

    இனி ஆக வேண்டியது என்ன என்று பார்ப்போம். நீங்கள் தரமான படங்களின் பதிவுகள் மட்டுமே வேண்டும் என்று நினைப்பவர். ராகவேந்திரன் சார் சுமாரான படங்களிலும் நடிகர் திலகம் கொடி நாட்டியுள்ளார் என்று வாதிடுபவர்.

    இப்போது நீங்களே சொல்லுங்கள். இதில் எது நியாயம், எது அநியாயம் என்று நானோ அல்லது திரி நண்பர்களோ எப்படி முடிவெடுப்பது?

    என்னுடைய மன நிலைமையில்தான் திரி நண்பர்களும் இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். அதனால்தான் ஒரு சிலர் தவிர பல நண்பர்கள் மௌனம் காத்தோ அல்லது பட்டும் படாமலுமோ ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

    இப்படியே போனால் இதற்கு தீர்வுதான் என்ன? எதுவாய் இருந்தாலும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? அது ஒரு சுமூகமான தீர்வாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.

    ராகவேந்திரன் சாரும், நீங்களும் என்ன ஜென்ம பகையாளிகளா? இல்லையே! எதனால் உங்களுக்குள் கருத்து வேறுபாடு வருகிறது? இது என்ன சொத்துப் பிரச்னையா? அனைவருமே நம் இதயதெய்வத்தைப் மட்டுமே போற்றிப் புகழ்ந்து வருகிறோம். அதில்தானே சில கருத்துக்கள் மாறுபடுகின்றன?

    அந்தக் கருத்துக்கள் வன்மமாகவோ அல்லது சொந்தப் பகை போலவோ மாறவேண்டாம் என்பதுதான் என் வேண்டுகோள். உங்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஆத்மார்த்தமான அன்பும், நட்பும் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? பின் ஏன் இந்த முரண்பாடுகள்?

    ராகவேந்திரன் சார் பல விஷயங்களில் தன்னை டிஸ்டர்ப் செய்வதாக கோபால் நிஜமாகவே வருத்தப்படுவதாக தெரிகிறது. அதே போல வயதில் மூத்தவரான பழுத்த அனுபவசாலியான ரசிகவேந்தரும் கோபாலின் சில பதிவுகளால் வருத்தப்படுகிறார் என்பதும் புரிகிறது.

    இனி நாம் தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தினத்தந்தி கன்னித்தீவு கதையாக இது தொடரும்.

    இப்போது என்னுடைய நிலைமையை நான் சொல்லி விடுகிறேன். இதில் மழுப்பல்களோ ஒளிவு மறைவோ இல்லை.

    சின்னக் கண்ணன் சாரும், ராஜேஷ் சாரும் அழகாக தங்கள் பதிலைத் தந்து விட்டார்கள். கோபால் அவருடைய எண்ணப்படி விமர்சனங்களை எழுதட்டும். அவர் தகுதியான படங்களை மட்டுமே எடுத்துக் கொள்பவர். ஆதலால் அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மாறாக அது போற்றி வைத்துக் கொண்டாடத்தக்க வகையில் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    ராகவேந்திரன் சார் நடிகர் திலகத்தின் பிந்தைய நாட்களின் படங்களைப் பற்றி எழுதினால் கோபாலுக்கு அவமானம் பிடுங்கித் தின்கிறது. இப்போது அதுதான் பிரச்னை.

    இனி ராகவேந்திரன் சார் எழுதுவதை கோபால் தடுக்க வேண்டாம். அதே போல் கோபால் எழுதுவதற்கு ராகவேந்திரன் சாரும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டாம்.

    கோபால் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. உங்கள் எதிர்ப்பை பிரதிபலிக்கவும் உரிமை உண்டு.

    ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கும் முறைதான் முரண்படுகிறது. வாந்தி, பூச்சாண்டி போன்ற வார்த்தைகள் நாமே மால்லாந்து படுத்து நம் மேல் எச்சில் துப்பிக் கொள்வது போல. என்றும் இளமையாக இருக்க நடிகர் திலகம் மார்கண்டேயன் அல்லவே! நீங்களே உலகில் நான் வணங்கும் ஒரே நடிப்புக் கடவுள் சிவாஜிதான் என்று உள்ளார்ந்த, ஆத்மார்த்தமான, உலகம் போற்றும் நடிப்பிலக்கணத்தை படைத்து விட்டு நீங்களே நடிகர் திலகத்தை ஒரு பொதுத் திரியில் அதுவும் பார்வையாளர்கள் அதிகம் உள்ள திரியில் பூச்சாண்டி, வாந்தி வருகிறது என்று எழுதி புண்படுத்தலாமா? மற்றவர்கள் நம்மாளை எள்ளி நகையாட நீங்கள் காரணாமாய் இருக்கலாமா? நீங்களே வழிவகுத்துக் கொடுக்கலாமா?

    உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் நிரம்பவும் மதிப்பவன் நான் என்பது தங்களுக்கே நன்கு தெரியும். உங்கள் கருத்துக்களை உங்கள் எதிர்ப்புகளை இங்கே நாசூக்காகவும் நயமாகவும் பதியலாமே!


    இனி திரி நண்பர்களுக்கு,

    கண்டிப்பாக இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களால்தான் முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

    இப்போது எதையும் சுற்றி வளைக்க வேண்டாம். ஒரு ஓட்டெடுப்பு போல இதை ஒவ்வொருவரும் கண்டிப்பாக செய்வோம் என்பதை என் சிரம் தாழ்ந்த வேண்டுகோளாக இங்கு வைக்கிறேன்.


    1. சிரஞ்சீவி, தாம்பத்யம் போன்ற நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்கள் இங்கு விவாதிக்கப் படலாமா? வேண்டாமா?

    2. தரமுள்ள படங்களில் இருந்துதான் நடிகர் திலகத்தின் நடிப்பு அலசப்பட வேண்டும் என்ற கோபாலின் எதிர்பார்ப்பு சரியா? அல்லது தவறா?

    3. எல்லாப் படங்களிலுமே நடிகர் திலகம் முத்திரை பதித்திருக்கிறார்... அதைப் பற்றி எழுதுவதில் என்ன தவறு என்ற ராகவேந்திரன் சாரின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இல்லையா?

    4. அல்லது கோபாலுக்காக தொடங்கப் பட்ட தனி ஸ்கூல் ஆப் ஆக்டிங் திரியில் தரமுள்ள படங்களின் அலசல் என்று மட்டுமே வைத்து விட்டு
    இங்கே நமது மெயின் திரியில் எல்லாப் படங்களையும் அலசலாமா?



    மேற்கண்ட நான்கு கேள்விகளுக்கும் இந்தத் திரியின் அங்கத்தினர்கள் அவசியம் பதில் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கைப் பிரச்னை என்பார்களே அது போல இது திரியின் பிரச்னை. திரியின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. திரியின் மேன்மை சம்பந்தப்பட்டது. திரியின் கௌரவம் சம்பந்தப்பட்டது.

    ஆகவே ஒவ்வொருவரும் கண்டிப்பாக நேரம் இல்லாவிடினும் ஒரு ஐந்து நிமிடங்கள் இதற்காக ஒதுக்கி தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக பதியுங்கள். அனைவர் கருத்துக்களும் வந்தவுடன் ஒரு நல்ல முடிவாக எடுக்கலாம்.


    இப்போது என்னுடைய கருத்தை சொல்லி விடுகிறேன்.

    நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம். அதில் கோபால் அவருடைய கருத்துக்களைக் கூறலாம், விமர்சனங்கள் அளிக்கலாம். ஆனால் அது தலைவரோ அல்லது பதிவாளர்களையோ hurt பண்ணும்படி நிச்சயம் இருக்கக் கூடாது. கவனிக்கவும். நிச்சயம் இருக்கக் கூடாது. அல்லது பிடிக்காமல் போனால் பேசாமல் இருந்து விடலாம்
    (கோபால் சார், இது என்னுடைய வேண்டுகோள்).

    கோபால் சாருக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட school of acting திரியில் மிகத் தரமான நடிகர் திலகத்தின் படங்கள், நடிப்பு மட்டும் அலசப்படட்டும். அங்கு கோபால் பின்னடைவாக நினைக்கும் படங்களைப் பற்றி யாரும் பதிவுகள் போட வேண்டாம்.

    (ராகவேந்திரன் சார், நீங்களும் அது போன்ற படங்களின் விமர்சனங்களையோ, நடிப்பைப் பற்றியோ அங்கு எழுத வேண்டாம். மெயின் திரியிலேயே எழுதுங்கள்.
    இது என்னுடைய வேண்டுகோள்.).

    நடக்க இருப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.


    இந்தி திரி நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைக் கூறவும்.
    Last edited by vasudevan31355; 9th November 2013 at 09:14 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3815
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் கருத்தை பிரதிபலித்த தங்களுக்கு 100% நன்றி வாசு.எனக்கு ராகவேந்தர் சார் மீது தனி பட்ட எந்த வருத்தமும் இல்லை. அவர் சேவைக்கு நான் அவருக்கு என்றுமே கடன் பட்டவன்.நம் கருத்துக்கள் மதிக்க பட வேண்டுமென்றால் ,நாம் தூக்கி பிடிப்பது ,மற்றவர்களுக்கு புதிய கோணத்தை உணர்த்தி,அவர்களுக்கு நடிகர்திலகத்தின் முழு பரிமாணத்தையும் உணர்த்த வேண்டும். ராகவேந்தர் தன் தனி பட்ட பிடிவாதத்தை எல்லார் மீதும் திணித்து, பொது கருத்தை உதாசீனம் செய்வதுடன்,நம்
    எழுத்துக்களின் மாண்பையே குலைக்கிறார்.அது மட்டுமே என் குறை.

    நான் மிக மிக விரும்பும் துணை,வாழ்க்கை,முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களில் அவர் இளைஞர் அல்லவே!!!!!!!!!நான் வெறுத்தது அவர் முதுமையை அல்ல. பட தேர்வுகளில் அவர் சறுக்கல்களையே.
    Last edited by Gopal.s; 9th November 2013 at 09:27 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #3816
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Hello vasu sir,

    1. We can & must discuss about all NT movies, as I have watched/watching many movies of NT based on our discussion (movies after 1980s pre dominantly)

    2. NO none must post provocative / statements to hurt NT or his fans writings
    3. Gopal sir can post in main thread also analyse in NT school of acting



    நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம்

  8. #3817
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Hello vasu sir,

    1. We can & must discuss about all NT movies, as I have watched/watching many movies of NT based on our discussion (movies after 1980s pre dominantly)

    2. NO none must post provocative / statements to hurt NT or his fans writings

    நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம்
    பிரபுராம் போன்றவர்கள் ஒளி கொடுத்த திரியில் இப்படியும் ஒரு இளைஞர்?? காலத்தின் கோலம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #3818
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    எனக்கு ரோஜா பிடிக்கும்
    என் மனைவிக்கு முல்லை
    என் நண்பனுக்கு மரிக்கொழுந்து..
    அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
    தப்பில்லை..
    அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
    எப்படி..
    அர்ச்சிக்கப் படும் பூக்களில்
    சிலசமயம்
    முட்களும் கலந்திருக்கும்
    அதற்காக ஆண்டவன் கவலைப் படுவதில்லை..
    ..
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கோபால் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. உங்கள் எதிர்ப்பை பிரதிபலிக்கவும் உரிமை உண்டு.
    ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கும் முறைதான் முரண்படுகிறது. வாந்தி, பூச்சாண்டி போன்ற வார்த்தைகள் நாமே மால்லாந்து படுத்து நம் மேல் எச்சில் துப்பிக் கொள்வது போல. என்றும் இளமையாக இருக்க நடிகர் திலகம் மார்கண்டேயன் அல்லவே! நீங்களே உலகில் நான் வணங்கும் ஒரே நடிப்புக் கடவுள் சிவாஜிதான் என்று உள்ளார்ந்த, ஆத்மார்த்தமான, உலகம் போற்றும் நடிப்பிலக்கணத்தை படைத்து விட்டு நீங்களே நடிகர் திலகத்தை ஒரு பொதுத் திரியில் அதுவும் பார்வையாளர்கள் அதிகம் உள்ள திரியில் பூச்சாண்டி, வாந்தி வருகிறது என்று எழுதி புண்படுத்தலாமா? மற்றவர்கள் நம்மாளை எள்ளி நகையாட நீங்கள் காரணாமாய் இருக்கலாமா? நீங்களே வழிவகுத்துக் கொடுக்கலாமா? உங்கள் கருத்துக்களை உங்கள் எதிர்ப்புகளை இங்கே நாசூக்காகவும் நயமாகவும் பதியலாமே!
    நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம். அதில் கோபால் அவருடைய கருத்துக்களைக் கூறலாம், விமர்சனங்கள் அளிக்கலாம். ஆனால் அது தலைவரோ அல்லது பதிவாளர்களையோ hurt பண்ணும்படி நிச்சயம் இருக்கக் கூடாது. கவனிக்கவும். நிச்சயம் இருக்கக் கூடாது. அல்லது பிடிக்காமல் போனால் பேசாமல் இருந்து விடலாம்
    (கோபால் சார், இது என்னுடைய வேண்டுகோள்).
    நான் இதில் கருத்து கூறவேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் வாசு சார் கூறியதுமாதிரி, பிரச்சினைகளின்போது அதனைத் தீர்க்க முயல்வதுதான் பண்பாடு என்ற அடிப்படையில் எனது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரையில் திரு.சின்னக்கண்ணன் மற்றும் திரு.வாசுதேவன் ஆகியோருடைய கருத்துக்களில் உடன்படுகிறேன்.

    நான் நடிகர்திலகம் திரியில் இணைந்த பிறகு வேறு எந்தத் திரியையும் பார்த்ததில்லை. நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட மற்ற திரிகளையேகூட பார்ப்பது மிகவும் அரிதே. இந்நிலையில் ராகவேந்திரன் சாரின் பதிவுகளும், கோபால் சாரின் ஆய்வுப் பதிவுகளும் இதே திரியில் இடம்பெற்றால் இந்த ஒரு திரியை மட்டுமே வாசிக்கும், பங்கேற்கும் என்னைப்போன்றவர்களுக்கு, எல்லாவற்றையும் ஒரே திரியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டும் என்பதே என்னுடைய வென்டுகோள்.

    நதிகள் உற்பத்தியாகுமிடம் வெவ்வேறாக இருந்தாலும், பாயுமிடம் வெவ்வேறாக இருந்தாலும், இறுதியில் கலக்குமிடம் கடலாக இருப்பதுபோல், திரு.ராகவேந்திரன் மற்றும் திரு.கோபால் ஆகியோரின் பதிவுகள், பார்வைகள் வெவ்வேறாக இருந்தாலும், புகழ் சேர்ப்பது என்னவோ நம் நடிகர்திலகத்துக்குத்தான்.

    இனி திரி சிறப்பான முறையில் பயணிக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    Last edited by KCSHEKAR; 9th November 2013 at 11:18 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #3819
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th nov )
    ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
    டியர் கோபால் சார்,

    தங்களது சிவந்த மண் நினைவுகள் அருமை. நான் ஏற்கனவே இத்திரியில் வந்த சிவந்த மண் நினைவுகள் பற்றிய ஒரு பதிவை சேமித்து வைத்திருந்தேன். Over to சாரதா மேடத்தின் பதிவு

    அந்தப் பதிவினை தங்களுடைய பதிவிற்கு சப்போர்ட்டாக தற்போது அளிக்கிறேன்.

    'சிவந்த மண்' நினைவுகள்


    வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.

    ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் camera angles செட் செய்த இயக்குனர் sreedhar க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்

    சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.

    உதாரணத்துக்கு சில:

    1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.

    2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.

    3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.

    4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.

    5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.

    6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.

    7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.

    8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.

    9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.

    10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')

    11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.

    12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).

    13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.

    14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".

    இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....

    "....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.

    "......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".

    "பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).

    "ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)

    "இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)
    இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.

    இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.

    15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).

    16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.

    17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).

    'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
    மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
    கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
    ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
    என அந்த சூழலே களை கட்டுகிறது.

    ('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)
    இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).

    எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.

    1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.

    சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.

    அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.

    குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.

    அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்
    Last edited by KCSHEKAR; 9th November 2013 at 02:26 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #3820
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

    தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்தமண் //மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும் //

    வாவ்..கோபால் சார், சந்திர சேகர் சார்..சிவந்தமண்ணைப் பற்றி எழுதி என் என்..(அவசரத்திற்கு உவமை வரலையே..சரி இதுஓகேயா இருக்குமா) நினைவுக்கடலில் பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக் அடித்து பின்னால் போக வைத்து விட்டீர்கள்.. சில பல விஷயங்கள் புதிது..ம்ம் நன்றி..

    தாதா மிராஸி யாராக வருவார்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •