Page 10 of 277 FirstFirst ... 891011122060110 ... LastLast
Results 91 to 100 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #91
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    இதே ஜெமினியும், ஜெய்சங்கரும் நடித்த 'அன்புக்கு ஒரு அண்ணன்' என்ற பிரபலமே இல்லாத படம் ஒன்றில் நம் இரு பாடகிகளும் பாடும் பாடல் ஒன்று. மிக அருமையான கருத்தை உணர்த்தும் பாடல்.

    திருமணம் வேண்டாம் அண்ணனே போதும் என்று சொல்லும் தோழியிடம் (சுசீலா) திருமணம் கொள்ளாமல் பெண் வாழ்வு சிறக்காது என்று பதிலுக்கு வாதம் செய்யும் தோழி (ஈஸ்வரி)

    (ஈஸ்வரி)

    அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு நாயகன் முன்னே
    நாம் நாயகிதானே

    ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு நாயகன் முன்னே
    நாம் நாயகிதானே

    (சுசீலா)

    தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
    தங்கை என்பதில் சொந்த உரிமை உண்டடி
    இதில் தலைவி என்னும் பெயரில்
    என்ன பெருமை உண்டடி
    இதில் தலைவி என்னும் பெயரில்
    என்ன பெருமை உண்டடி

    அடியேய் ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு ஆடவன் வந்தால் நாம்
    அடிமைகள்தானே

    (ஈஸ்வரி)

    தாயாரும் உன்னைப் போல்
    தனியாக வாழ்ந்தால்
    நீ ஏது உன் அண்ணன் உறவேதடி

    (சுசீலா)

    மாறாது உறவென்று அண்ணாவைப் பாடி
    வாழ்ந்தாலே கல்யாண நினைவேதடி

    (ஈஸ்வரி)

    பெண்டாட்டி ஆனால்தான் கொண்டாட்டமே

    (சுசீலா)

    பல பெண்வாழ்வில் கல்யாணம் திண்டாட்டமே

    அடியேய்... ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு ஆடவன் வந்தால் நாம்
    அடிமைகள்தானே

    (ஈஸ்வரி)

    இன்பங்கள் சரிபாதி
    துன்பங்கள் பாதி
    கொண்டாடும் இல்வாழ்வு
    குலவாழ்வடி

    (சுசீலா)

    இன்பங்கள் துன்பங்கள்
    எங்கென்று தேடி
    அங்கெல்லாம் நான்
    போக முடியாதடி

    (ஈஸ்வரி)

    தள்ளாடும் காலத்தில் அறிவாயடி

    (சுசீலா)

    அதில் தாய் வீட்டு துணை போல துணை ஏதடி

    (ஈஸ்வரி)

    அடியே ஒரு பேச்சுக்கு சொன்னேன்
    இது பெண்புத்திதானே!'
    ஒரு நாயகன் முன்னே
    நாம் நாயகிதானே

    (ஈஸ்வரி)

    ஆதாரம் நீயென்று அத்தானின் மார்பில்
    நீராடும் நிலை போல நிலை ஏதடி

    சுசீலா)

    நீராடு நாம் சென்று போராட நேர்ந்தால்
    வேரோடும் கண்ணீரில் முடிவேதடி

    (ஈஸ்வரி)

    கண்ணீரும் பெண் சொல்லும் கதைதானடி

    (சுசீலா)

    அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
    அது எந்நாளும் என் வாழ்வில் கிடையாதடி
    Last edited by vasudevan31355; 25th November 2013 at 06:45 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #92
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பேஷ்,பேஷ்,சுசீலா ,எல்.ஆர் .ஈ . கூட்டணியில் அத்தனை பாடல்களும் அருமை.ஜெமினி படங்கள்தான் அதிகம். உனது மலர் கொடியிலே,சித்திர பூவிழி வாசலிலே,கை நிறைய,அடி போடி,புன்னகை மன்னன்,இப்படி.
    நடிகர்திலகத்தின் படங்களில் கடவுள் தந்த இரு மலர்கள்.
    'ennadi mayakkamaa solladi' - savaale samaali.

    'thoodhu sella oru thozhi illaiyendru' - pachai vilakku.

  4. #93
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    K.Balachandar listil namma 'edhiroli' enna aachu?.

    pidiththa padangal listilum illai.

    pidikkaadha padangal listilum illai.

    romba pidiththa padangal listilum illai.

    that means?.

  5. #94
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    yaarai kekkureengannu theriyala. Irunthaalum ennai kettathaa nenachukittu soldren. Namma thalaivar padame thani. Athu entha listuleyum seraathu. Athanoda raenje vera.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #95
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நான் அவனில்லை எனக்குப் பிடித்த படஙக்ளில் ஒன்று.. நல்ல அனலிஸிஸ் கோபால்.. ஆனால் அந்தப் படம் ஓடாததினால் ஜெமினிக்கு ஏகப் பட்ட நஷ்டம்..என்று ஜெமினியின் வாழ்க்கைக் குறிப்பான டிவிடியில் சொல்லியிருந்தார்கள்.. அந்த டிவிடி பார்க்க வேண்டிய ஒன்று- டாக்டர் கமலா செல்வராஜ் இயக்கிய ஒன்று..
    அது பார்த்த பிறகு ஜெமினி மீது மதிப்பு மிக் கூடியது..

    எல் ஆர் ஈஸ்வரி, பி சுசீலா - இருவரும்பாடிய பாடல்கள் எனக்கும்பிடிக்கும்.. நன்று வாசுதேவன் சார்.. வெள்ளிவிழாவில் வி.குமார் இசை(என நினைக்கிறேன்) ஒரு வித்யாசம் வேண்டுமென்று எல்.ஆர்.ஈஸ்வரியை காதோடு தான் நான்பாடுவேன் என்று மென்மையாகவும் சுசிலாம்மாவை நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன் என்ற பாடலைப் பாட வைத்ததாகவும் பாலச்சந்தரோ அல்லது வேறு யாரோ எழுதியிருந்ததாக நினைவு..

    ஆ ஆனால்..காவியத் தலைவி - நான் ஒரு முறை கூட முழுமையாகப் பார்த்ததில்லை. சேனல் மாற்றும் போது ரெண்டு செளகார் பார்த்து பயந்து போய் மாற்றிவிடுவேன்..மெய்யாலுமே நல்ல படமா.

    ஜெமினி வித்யாசமாய் நடித்த தேன்மழை, வல்லவனுக்கு வல்லவன் பிடிக்கும்..

  7. #96
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    vasu,
    un kattalalaiyai erkiren.
    மற்ற பழைய தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி விவாதிக்க ஒரு திரி உள்ளது. இங்கே அவற்றை நாம் தொடரலாம்.

    http://www.mayyam.com/talk/showthrea...il-Films/page5
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #97
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    மற்ற பழைய தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி விவாதிக்க ஒரு திரி உள்ளது. இங்கே அவற்றை நாம் தொடரலாம்.

    http://www.mayyam.com/talk/showthrea...il-Films/page5
    Thank you Ragavendhar Sir. karpagam,Sumaithangi will be done in this thread. Gowravam and Engal Thanga Raja in NT thread. After this,it is vasu's favourites in the thread you suggested.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #98
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கற்பகம்-1963

    எனக்கு தெரிந்து வாழ்க்கையில் என்னுடன் முரண் பட்டவர்கள் உண்டே தவிர ,கெட்டவர்களை நான் சந்தித்ததே இல்லை. ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற கதைகளை படிக்கும் போது,உலகத்தில் நல்லவர்களை தவிர யாருமே இல்லை ஆனாலும் மனித பிரச்சினைகளுக்கும் அளவே இல்லை என்ற ரீதியில்தான் இருக்கும்.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மேல் அளவற்ற மதிப்பு கொண்டவன் நான் என்ற முறையில் ,அவரும் ஜெமினியும் இணைந்து,மற்ற திலகங்களை மீறி 1963 இல் பிரம்மாண்ட வெற்றியை சுவைத்த ,வாலியின் ,விஜயாவின் நுழைவு வாயிலான கற்பகம் பற்றி பேச போகிறேன். பார்க்கும் தோறும், இந்த மாதிரி ஒரு நல்லசிவத்துடன்,ஒரு சுந்தரத்துடன்,ஒரு கற்பகத்துடன்,ஒரு அமுதாவுடன் ,ஏன் மற்ற பண்ணையாட்களுடன் ஒரு நாளாவது வாழ முடியாதா என்ற எண்ணமே மிகும்.

    100 சதவிகித புத்தி கூர்மையுள்ள படத்தை அலசி விட்டதால்,100 சதவிகித இதயத்துக்கு இதம் தரும் இந்த படத்தை அலசுவதில் ஒரு இனிய சுவை.சிலர் இது போன்ற படங்களை synthetic ஆன ஒரு wishful assembly என்று உதறுவார்கள்.இருக்கட்டுமே,வாழ்க்கையில் நாம் சந்திக்கவே வாய்ப்பில்லாத தீமைகள்,தற்செயல்கள்,தீயவர்கள்,நல்லவர்களாக நடித்த தீயவர்கள் எல்லாவற்றையும் சகித்த நமக்கு,இந்த சுகமான சகிப்பினால் சுகிப்புதானே?

    என்னதான் சொல்லுங்கள்,கே.எஸ்.ஜி படம் பார்க்கும் போது நமது கலாச்சாரத்துடன் இணைந்து ,அதன் நீட்சியாக பண்பட்ட நல்லிதயங்களுடன் வாழ்ந்து,ஒத்து,முரண்பட்டு,பிரச்சினைகளை சந்தித்து ,தீர்வு கண்டு, இல்லம் திரும்பும் ஒரு இதத்திற்கு இணை இல்லவே இல்லை. (கிட்டத்தட்ட ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் ஹென்றிக்கு எளிமையான இணை இப்பட சுந்தரம்)

    இப்படத்திற்கு வேறு யாரையோ கே.எஸ்.ஜி தேர்வு செய்திருந்தாராம். நல்ல வேளை, அப்படி ஒரு விபத்திலிருந்து தமிழக ரசிகர்கள் தப்பி, ஜெமினி-ரங்காராவ் இணைவில் மெய்மறந்தோம்.

    அதுவரை நல்லவனாக வாழ்வதே ஒரு தண்டனை என்றே தமிழ் படங்கள் நமக்கு போதித்து வந்தன.கண்ணோ,கையோ,காலோ இழப்பது நிச்சயம், போனஸ் ஆக சந்தேகம்,உதாசீனம்,மற்றவர்களால் உறிஞ்ச படுதல் என்றெல்லாம் உப-பிரச்சினைகள் வேறு.இறுதியில் அகால சாவும் உண்டு .அதை மீறி நல்லிதயங்களால் சூழ பட்டு நல்வாழ்வு வாழும் மனிதனுக்கு சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் அவை மேலும் அவனை மெருகேற்றி ,நற்சூழலையே ஏற்படுத்தும் என்ற உணர்வை தந்த காவியம் கற்பகம்.இனி அதை விரிவாக அலசுவோம்.

    ---தொடரும்.
    Last edited by Gopal.s; 26th November 2013 at 10:57 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #99
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கற்பகம்-1963



    அதுவரை நல்லவனாக வாழ்வதே ஒரு தண்டனை என்றே தமிழ் படங்கள் நமக்கு போதித்து வந்தன.கண்ணோ,கையோ,காலோ இழப்பது நிச்சயம், போனஸ் ஆக சந்தேகம்,உதாசீனம்,மற்றவர்களால் உறிஞ்ச படுதல் என்றெல்லாம் உப-பிரச்சினைகள் வேறு.இறுதியில் அகால சாவும் உண்டு .அதை மீறி நல்லிதயங்களால் சூழ பட்டு நல்வாழ்வு வாழும் மனிதனுக்கு சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் அவை மேலும் அவனை மெருகேற்றி ,நற்சூழலையே ஏற்படுத்தும் என்ற உணர்வை தந்த காவியம் கற்பகம்.இனி அதை விரிவாக அலசுவோம்.

    ---தொடரும்.
    Dear Gopal,

    திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு என்ற இடத்திற்கு வரும் முன், காவிரி ஒரு சமுத்திரம் போல அகண்ட காவிரியாக ஓடும்.முக்கொம்பில் காவிரி கொள்ளிடம் என இரண்டாக பிரியும்.அதற்கு முன் அதிலிருந்து பிரியும் ஒரு வாய்க்கால் அந்த அகண்ட காவிரிக்கு இணையாக ஆனால் அமைதியாக ஓடும்.வைணவத்தலமான குணசீலம் செல்லும்போது அந்த வாய்க்காலில் நீராடுவது ஒரு சுகம்.

    நம் தலைவர் அகண்ட காவிரிக்கு இணையானவர் ..அவருடன் ஓடிய ரம்யமான வாய்க்காலுக்கு இணையானவர் காதல் மன்னன்.உங்கள் "நான் அவனில்லை"விமரிசனத்தை மிகவும் ரசித்து படித்து அதன் வாசம் நீங்குவதற்குள் கற்பகம் தந்துள்ளீர்கள்.இதில் நீங்கள் விவரித்துள்ள சில வார்த்தைகள் பலரும் உய்த்து உணர்ந்தது.இதை நீங்கள் JK masterpiece உடன் ஒப்பிட்டது உங்கள் அளவற்ற மேதமையை காட்டுகிறது,

    ஒரு சூறாவளி போல "அங்கே" இயங்கி விட்டு "கரை" கடந்த பின் ,இங்கே தென்றலாக வீசுகிறீர்களே.பலே!

    கற்பகம் பதிவிற்காக காத்துள்ளேன்.

    Very well done!

  11. #100
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    [SIZE=4]இப்படத்திற்கு வேறு யாரையோ கே.எஸ்.ஜி தேர்வு செய்திருந்தாராம். நல்ல வேளை, அப்படி ஒரு விபத்திலிருந்து தமிழக ரசிகர்கள் தப்பி, ஜெமினி-ரங்காராவ் இணைவில் மெய்மறந்தோம்.
    After the success of Saradha, KSG decided to make Karpagam with same pair of S.S.R. and Vijayakumari. But his friends adviced him, if he do that it may resemble as a repeatation. So he decided to change to Gemini & Savithri and a new introduction of KRV.

    nijamaagave thappinom.

Page 10 of 277 FirstFirst ... 891011122060110 ... LastLast

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •