- 
	
			
				
					11th March 2014, 11:51 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால் [அது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் ஒன் டே மேட்ச் என்றாலும்] அந்தந்த காலண்டர் வருடங்களில் அதிக ரன் எடுப்பவர்களை அந்தந்த வருட சாம்பியன் [cricketer of the year] என்று அழைப்பார்கள். இது அந்தந்த வருடத்திற்கு பொருந்தும். அதற்கு அடுத்த வருடம் மாறி விடும். 2011-ல் யுவராஜ் என்றால் 2012-ல் ஷிக்கார் தவான்,2013-ல் விராத் கோஹ்லி என்று போகும். ஆனால் சச்சின் என்றும் சச்சின்தான். 
 
 அது போன்றே ஒரு சிலரின் படங்கள் ஒரு சில வருடங்களில் வெற்றி பெறும்.ஆனால் நமது நடிகர் திலகமோ நடிக்க வந்த 1952 முதல் ஹீரோதான். ஆகவே அவரை ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு என்று வரையறுக்க முடியாது. எல்லா வருடங்களிலும் அவர் ஹீரோதான். இன்னும் சொல்லப் போனால் நடிக்க வந்த 1952 முதல் ஆக்டிவாக அவர் திரையுலகில் இருந்த 1988 வரை ஒரு வருடம் கூட இடைவெளி இல்லாமல் அந்த 37 வருடங்களிலும் 100 நாட்கள் ஓடிய படங்களை கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே. எனவேதான் ஹீரோ 72 என்ற பெயர் மாறி வைர நெஞ்சம் ஆக வெளி வந்த போதும் அதை ஏற்றுக் கொண்டனர் ரசிகர்கள்.
 
 அந்த ஹீரோ 1952 - 2014 -----(millenniums to come) ஆன நமது நடிகர் திலகம் நடித்த வைர நெஞ்சம் திரைக் காவியம் வரும் 14.03.2014 வெள்ளி முதல் மதுரை அலங்கார் திரையரங்கில் வெளியாகிறது. இதற்கு முன் இதே அரங்கில் சென்ற வருடம் வெளியான இரண்டு நடிகர் திலகத்தின் காவியங்களும் முறையே வசந்த மாளிகை மற்றும் பாச மலர் பெரிய வசூலை குவித்தது. ஹாட்ரிக் வெற்றி படமாக வைர நெஞ்சம் அமைய நமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
 
 அன்புடன்
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							11th March 2014 11:51 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
Bookmarks