Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    உண்மை உணரும் நேரம்

    நாம் இந்த தலைப்பில் எதுவும் எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் கூட நண்பர் வினோத் போன்றவர்கள் நம்மை விடுவதாக இல்லை.

    நேற்றைய தினம் நண்பர் RKS அவர்கள் எங்க வீட்டு பிள்ளை வசூலையும் திருவிளையாடல் வசூலையும் பற்றி ஒரு பதிவு செய்திருந்தார். அவர் சொன்னது மொத்த வசூலைப் பற்றியா அல்லது சென்னை மாநகரத்தின் மொத்த வசூலை குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை. காரணம் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை எங்க வீட்டு பிள்ளை மூன்று திரையரங்குகளிலும் சேர்த்து 573 நாட்களில் பெற்ற வசூல் Rs 13,23,000 சொச்சம். அதே நேரத்தில் அதே 1965-ம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் சென்னை நகரில் அதே போல் மூன்று அரங்குகளில் ஓடிய 537 நாட்களில் [அதாவது எங்க வீட்டு பிள்ளையை விட 26 நாட்கள் குறைவு] பெற்ற வசூல் Rs 13,82,002.91 p. அதாவது சுமார் 60,000/- அதிகம். அதே போல் மதுரை சென்ட்ரலில் 100 நாட்களில் எங்க வீட்டு பிள்ளை பெற்ற வசூல் Rs 2,78,000/- சொச்சம். மதுரை ஸ்ரீதேவியில் திருவிளையாடல் 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 2,84,000/- சொச்சம். ஒரு வேளை இதைத்தான் RKS குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை.

    நிற்க. நான் இங்கே சொல்ல வந்தது இதைப் பற்றியல்ல. RKS இப்படி பதிவு இட்டவுடன் நண்பர் வினோத் அவர்கள் கோபமாக வந்து பதில் பதிவிடுகிறார். அதன் மூலமாக இரண்டு செய்திகளை வலியுறுத்துகிறார். அதில் முதல் செய்தி அல்லது முதல் பாயிண்ட் என்னவென்றால்

    எங்க வீட்டு பிள்ளை வசூலை அடிமைப் பெண் படம்தான் முறியடித்தது என்பதாகும். அதற்கு ஆதாரம் இதோ என்று சேலம் மாவட்ட எம்ஜிஆர் ரசிகர் மன்றம் வெளியிட்ட நோட்டிஸை பதிவிடுகிறார். ரசிகர் மன்றம் அடித்த நோட்டிஸ். சரி அது 100% சரியானது என்றே ஒப்புக் கொண்டு விடுவோம். இங்கே என்ன சந்தேகம் என்றால் எங்க வீட்டு பிள்ளை வசூலை அடிமை பெண் முறியடித்து விட்டது என்று சொன்னால் எங்க வீட்டு பிள்ளையின் வசூல் விவரங்களை கொடுத்து விட்டு அதை இது தாண்டி விட்டது என்று சொல்ல வேண்டும். அப்படி எதுவும் அந்த நோட்டீஸில் என் கண்ணுக்கு தென்படவில்லை. அப்படியிருக்க அதை இது முந்தி விட்டது என்பது எந்த அடிப்படையில்?

    நண்பர் வினோத் அடித்து சொல்லிய இரண்டாவது செய்தி அல்லது பாயிண்ட் என்னவென்றால் 1956 முதல் 1977 வரை எம்ஜிஆர் அவர்களின் 10 படங்கள் மொத்த வசூலில் ருபாய் ஒரு கோடியை தாண்டியது என்றும் இதை பல பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார். [பத்திரிக்கையில் செய்தியாக வெளியாவது எந்த வகை ஆதாரத்தை சேர்ந்தது என்பது என் சிற்றவிற்கு தெரியவில்லை]. சரி இந்த கூற்றில் எத்தனை சதவிதம் உண்மை என்று பார்ப்போம்.

    இவர்கள் சொல்லும் 10 படங்களில் நிச்சயம் எங்க வீட்டு பிள்ளையும் அடிமைப் பெண்ணும் அடங்கும். சரி, அடிமை பெண்ணின் வசூல் விவரங்களை மாவட்ட வாரியாக இவர்கள் தொகுத்தளித்திருக்கும் இந்த நோட்டிஸின்படி தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களும் கர்நாடக மாநிலமும் சேர்த்தால் வரும் மொத்த வசூல் Rs 66,27,563.71 p. கேரளத்தின் விநியோகஸ்தர் பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் உத்தேசமாக மொத்த வசூலுக்கு மாற்றி அமைத்தால் 70 அல்லது 71 லட்சம் வரும். தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் Rs 58,67,348/- வருகிறது.

    அதற்கு பின் ஓடக் கூடிய ஊர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட அவை அனைத்தையும் சேர்த்தாலும் கூட [கர்நாடகம் + கேரளம் சேர்த்தாலும்] மொத்த வசூல் ஒரு கோடியை தாண்டுமா என்பது பெரிய கேள்விக்குறி. காரணம் மெயின் சென்டர்களில் சுமார் 60 லட்சத்திற்கும் கீழே வசூல் செய்த படம் B & C சென்டர்களில் 30 லட்சம் வசூலிப்பது அதுவும் 69-70 காலகட்டங்களில் மிக மிக கடினமான விஷயம்.என்பது விநியோகத் துறையில் பல வருடங்களாக ஈடுபட்டிருக்கும் நண்பர்களுடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் நன்றாக தெரியும்.

    அது மட்டுமல்ல இதன் மூலம் தெரிய வரும் மற்றொரு உண்மை என்ன? எங்க வீட்டு பிள்ளையை வசூலில் முந்தி விட்டது என்று இவர்கள் சொல்லும் [இவர்கள் என்ன? எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனமே அடிமை பெண் 100 வது நாள் விளம்பரத்தில் இது எங்க வீட்டு பிள்ளையின் 25 வார வசூலை முறியடித்து விட்டது என்று சொல்லியிருந்தனர்] அடிமை பெண்ணே ஓடி முடிய ஒரு கோடியை எட்ட முடியவில்லை எனும் போது எங்க வீட்டு பிள்ளை எப்படி ஒரு கோடி வசூல் செய்திருக்கும்?

    இவர்கள் அடிக்கடி சொல்வது மதுரை வீரன் ஒரு கோடி வசூல் செய்தது. அதை நாடோடி மன்னன் முறியடித்தது, நாடோடி மன்னனை எங்க வீட்டு பிள்ளை தாண்டியது, எங்க வீட்டு பிள்ளையை அடிமை பெண் தாண்டியது என்பார்கள். இப்போது இவர்களே கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி தெரிய வருவது என்னவென்றால் இதில் எந்தப் படமும் ஒரு கோடியை தொடவில்லை என்பதுதான். 1969-ல் இந்த வசூல் என்றால் 1958, 1956-ல் அன்றைய டிக்கெட் விலையை அனுசரித்து எந்தளவிற்கு வசூல் வந்திருக்கும் என்பதும் நம்மால் யூகிக்க முடிந்ததே.

    நீங்களே ஒப்புக் கொள்ளும் உண்மை நிலை இவ்வாறிருக்க நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மீது சீறி பாய்வது சரிதானா என்பதை அந்த நண்பர்களிடமே விட்டு விடுகிறேன்.

    அன்புடன்

  2. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •