-
24th June 2014, 05:07 AM
#11
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றில் அவருடைய வெற்றிக்கு முக்கியமானவர்களில் இருவரின் பிறந்த நாள் இன்று .24.6.2014.
கவியரசர் - கண்ணதாசன்
மெல்லிசை மன்னர் - எம்.எஸ்.விஸ்வநாதன் .
கவியரசரின் பாடலுக்கு மெல்லிசை மன்னரின் இசைக்கு மக்கள் திலகம் உயிர் கொடுத்து திரை உலகை இன்றும் ஆண்டு கொண்டு வருகிறார் என்றால் அதற்கு இவர்களின் கூட்டணி வெற்றியே சாட்சி .
மதுரை வீரனில் துவங்கிய கண்ணதாசனின் வசனங்கள் நாடோடி மன்னனில் உச்சத்தை தொட்டது . 1958ல் கவியரசரின்
உரையாடல்கள் 1977ல் நிஜமாக்கியது .நாடோடி மன்னன் நாடாளும் தகுதி பெற்ற பொற்காலம் .இவரின் பாடல்கள் அழியாத கோலங்கள் .மக்கள் திலகத்தை தன்னுடைய பாடல்களில் புகழ்ந்து எழுதிய வைர வரிகள் மறக்கமுடியுமா ? ;
சில பாடல் வரிகள்
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ....
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் உலக பள்ளி வாழ்க்கையிலே .....
கட்டான கட்டழகு கண்ணா ...உன்னை காணாத கண்ணும் ஒரு ...
தர்மம் தலை காக்கும் .. தக்க சமயத்தில் உயிர் ....
பேசுவது கிளியா ...இல்லை பெண்ணரசி மொழியா .....
கண்ணனுக்கு எத்தனை கோயிலோ ... அவன் தொட்டது பொன்னாகும் ..
ஒன்று எங்கள் ஜாதியே ...உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் ...
கல்யாண நாள் பார்க்க....... நாம் கையேடு கை சேர்த்து ....
சின்னவளை முகம் சிவந்தவளை ....நான் .சேர்த்து கொண்டேன் ....
சத்தியம் நீயே ... தர்ம தாயே ..குழந்தை வடிவே ....
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே ........
என்று பாடல்கள் பட்டியல் நீளும் . ரசிகர்கள் மனதில் கண்ணதாசனின் எல்லா பாடல்களும் என்றென்றும் நினைவில் ஒலித்து கொண்டிருக்கும் என்பது உண்மை .
மெல்லிசை மன்னர் மக்கள் திலகத்தின் படங்கள் ஜெனோவா முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல படங்களுக்கு மேல்
இசை அமைத்து ரசிகர்களுக்கு விருந்த படைத்தவர் . மெல்லிசை மன்னரை அதிகம் வேலை வாங்கி , அமர்ந்து பல மெட்டுகளை
வாங்கி பாடல்களை வெற்றி பெற செய்த பெருமை மக்கள் திலகத்தை சேரும் .
1960களில் மற்ற தமிழ் படங்களில் மெல்லிசை மன்னர்களின் ஆதிக்கம் இருந்த நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் மெல்லிசை மன்னர்களின் திறமைகளை தன்னுடைய படங்களில் மேலும் மிளிர செய்து மகத்தான வெற்றி கண்டார் . டைட்டில் இசை அமைப்பில்
மக்கள் திலகத்தின் படங்களுக்கு தனி முக்கியவத்துவம் தந்தவர் மெல்லிசை மன்னர் .பல புதுமைகளை திரை இசையில் தந்தவர் .
படகோட்டி [ மெல்லிசை மன்னர்கள் ]- மகாதேவி - மன்னாதி மன்னன் - பாசம் - பணத்தோட்டம் .
எங்க வீட்டு பிள்ளை
ஆனந்த ஜோதி
ஆயிரத்தில் ஒருவன்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பில் அட்டகாசமான டைட்டில் இடம் பெற்ற படங்கள் .
கலங்கரை விளக்கம்
அன்பே வா
நான் ஆணையிட்டால்
பறக்கும் பாவை
காவல்காரன்
குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - நம்நாடு - ரகசிய போலீஸ் 115- எங்கள் தங்கம் - ரிக்ஷாக்காரன் - ராமன் தேடிய சீதை -சிரித்து வாழவேண்டும் - இதயக்கனி - மீனவ நண்பன் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்னமும் ரசித்து கொண்டிருக்கும் [எதிர்காலத்திலும் ] மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் என்று
நினைவுகளில் கண்ணதாசனும் - விஸ்வநாதனும் [ராமமூர்த்தியும் ] என்றென்றும் வாழ்வார்கள் இன்று பிறந்த நாள் காணும்
இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மகிழ்வோமாக .
-
24th June 2014 05:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks