-
20th July 2014, 06:15 AM
#11
Junior Member
Newbie Hubber
வெங்கிராம் ,
இசையை பொறுத்த வரை கீழ்கண்ட வகையாக பிரிக்கலாம்.(நான் of all the people why இளைய ராஜா என்று கேட்டது ,நான் ஏன் அவரை accuse செய்ய போகிறேன் என்று?)
1)சிறு வயதின் ஞாபக எச்சங்கள், பரிச்சயமான இசை,அது சார்ந்த எண்ண எழுச்சிகளின் நீட்சி.உதாரணம் இன்னும் சில வாழ்வின் தருணங்களை நான் சில பாடல் கொண்டே உணர்வேன். அதன் மேல் எனக்கு விசேஷ பிரியம் இருக்கும். சில சமயம் என் மனைவியே கூட இந்த பாட்டிலே என்ன இருக்குன்னு இவ்வளோ கொண்டாடுறீங்க என்பார்.
2)சிறு வயதில் ஒரு இசையமைப்பாளரை தேர்வு செய்து ,அவரையே சிறந்தவர் என்று நிறுவும் மனநிலை எய்தி revisionism என்ற rationality இல்லாமல் ,critisism /reviews /analysis ஆகியவற்றை தன் மீது தொடுக்க பட்ட அம்பாக எண்ணி துடித்து போதல்.(தமிழர்களுடன் இந்த Brain Wash செய்ய பட்ட மனநிலை அதீதம்.இவற்றிற்கு அரைகுறை விமர்சகர்கள்/media துணை போய் கொண்டே இருப்பார்கள்)
3)வேறு ஏதாவது இசையை கேட்க சொன்னால் ,சிலவற்றிற்கு technology மறந்து இசையில் தோயும் மன நிலை இல்லாமல்(Regression).நம் பரவல் இசைக்கு நேர்ந்த இன்னொரு விபத்து சினிமாக்களுடன் பிணைக்க பட்டது.பாடல்கள் intrinsic content value அறிய படாமல்,படங்களின் படமாக்கம்,பின்னணி,மற்றும் மற்ற ஆதர்சங்கள் சார்ந்து சுயத்தை இழக்கின்றன.
6)இது டீன்களில் ,தேர்ந்த ரசிப்பு தேடல் கொண்ட சிலரின் நமைச்சல் . அப்போதுதான் ஆதர்சங்களின் சாயம் வெளுத்து, நாம் பல இசைகளோடு பரிச்சயம் கொண்டு , தேர்ந்தெடுக்கும் மனநிலை துறந்து பல ஆச்சர்யங்களுக்கு ஆட்படுவோம்.சிலைகள் ,சுவர்கள் உடை பட்டு காற்று வரும். இது இசையில் மட்டுமல்ல ,பிற கலைகளில்,இலக்கியத்தில் ,அரசியலில் . நாமே நம்மை புதுப்பித்து கொண்டதை உணர்வோம்.கடைசியாக ,யார் போட்டிருந்தாலும் ,எனக்கு பின்னணி முன்னணி தகவல்கள் தேவையற்று ,இசையை மட்டும் பிரித்துணர்ந்து துய்க்கும் மனநிலைக்கு தயார் ஆவோம்.
7)இவ்வளவு சொல்லி விட்டு மீதியை உங்கள் பார்வைக்கு விடுகிறேன்.ஆனால் உங்கள் எல்லோரையும் விட இளையராஜாவின் இசையை தொடர்ந்தவன் என்ற வகையில் ,அவரின் மீது எனக்குள்ள உரிமை,பாசம்,கோபம்,விமர்சனம்,இவற்றை உங்களுக்காக நான் தியாகம் செய்ய முடியாது.நான் அவரை பற்றி ஒரு ஆய்வு செய்ய ஆவல் கொண்டுள்ளேன். அவர் இசை துறையின் ஒரு உன்னத தமிழ் அடையாளம்.காரணம் நான் ஆறாவது மனநிலையில் உள்ள பக்குவ பட்ட இசை ரசிகன்.
Last edited by Gopal.s; 20th July 2014 at 06:49 AM.
-
20th July 2014 06:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks