-
21st July 2014, 12:59 PM
#2091
Last edited by gkrishna; 21st July 2014 at 01:05 PM.
gkrishna
-
21st July 2014 12:59 PM
# ADS
Circuit advertisement
-
21st July 2014, 01:29 PM
#2092
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார், சார்
புஷ்பலதாவின் (இயற்பெயர் : பிலோமினா) ஆல்பம் மிக அருமை. பல்வேறு இடங்களிலிருந்து திரட்டியிருக்கிறீர்கள். எது ஒன்றையும் சிரத்தையெடுத்து செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே. இப்போதுதான் அவர் நடித்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பாடலைப் பார்த்து முடித்தேன்.
அவரது செகண்ட் இன்னிங்க்ஸில் சிட்டுக்குருவி, சிம்லா ஸ்பெஷல், ரத்தபாசம், டௌரி கல்யாணம், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் ரொம்பவே அழகாக இருந்தார்.
என்ன, பெர்சனல் வாழ்க்கையில் புஷ்பா கொஞ்சம் அடாவடி, கொஞ்சம் ரௌடித்தனம், வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பார். ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி. படத்தயாரிப்பு முழுவதையும் புஷ்பாதான் பார்ப்பார், ராஜன் சும்மா பெயருக்கு...
-
21st July 2014, 01:41 PM
#2093
Senior Member
Senior Hubber
//ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி. // ம்ம் புஷ்பலதா கொடுத்து வைத்தவர்..
ஸ்ரீ - தகவல்கள் படங்கள் நன்று.. நன்றி க்ருஷ்ணா சார்.. அந்த என்ன சொல்லி நானெழுத என் மன்னவனின் மனம் குளிர..
நல்ல பாட்டு..
மேலாடைக்குள் நான் போராடினேன் போரடையில் ஒரு நூலாகினேன்.. வெட்கம் விடுமோ..எனத் தொடரும் பாடல் அது..வாலியாக இருக்கும் என நினைக்கிறேன்
-
21st July 2014, 01:43 PM
#2094
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
டியர் வாசு சார், சார்
புஷ்பலதாவின் (இயற்பெயர் : பிலோமினா)
என்ன, ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி.முழுவதையும் புஷ்பாதான் பார்ப்பார், ராஜன் சும்மா பெயருக்கு...
பெண்களை (அதுவும் நடிகைகளை ) "அடிப்பதும் ", சில சமயம் அவர்களை "அடிக்க"விடுவதும் சுகம்தான். அதுவும் பிலோ ரசிகர்களான உங்களுக்கு....(நானில்லையப்பா,ஆளை விடுங்கள். விஜயகுமாரி,புஷ்பலதா பக்கமே போக மாட்டேன்)
(கார்த்திக்,தங்கள் ஆலோசனை படி "கொட்டை " எழுத்துக்களை தவிர்க்கிறேன். என்ன ஒன்னு இந்த "inverted cumma " புது பழக்கமாகி விட்டது.)
Last edited by Gopal.s; 21st July 2014 at 01:54 PM.
-
21st July 2014, 02:11 PM
#2095

Originally Posted by
mr_karthik
டியர் வாசு சார், சார்
புஷ்பலதாவின் (இயற்பெயர் : பிலோமினா) ஆல்பம் மிக அருமை. பல்வேறு இடங்களிலிருந்து திரட்டியிருக்கிறீர்கள். எது ஒன்றையும் சிரத்தையெடுத்து செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே. இப்போதுதான் அவர் நடித்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பாடலைப் பார்த்து முடித்தேன்.
அவரது செகண்ட் இன்னிங்க்ஸில் சிட்டுக்குருவி, சிம்லா ஸ்பெஷல், ரத்தபாசம், டௌரி கல்யாணம், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் ரொம்பவே அழகாக இருந்தார்.
என்ன, பெர்சனல் வாழ்க்கையில் புஷ்பா கொஞ்சம் அடாவடி, கொஞ்சம் ரௌடித்தனம், வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பார். ராஜன் இவரிடம் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பதாக கேள்வி. படத்தயாரிப்பு முழுவதையும் புஷ்பாதான் பார்ப்பார், ராஜன் சும்மா பெயருக்கு...
karthik sir
ஒரு தலை ராகம் படத்தில் ஒரு பொண்ணு வரும் கதாநாயகி கூட.புதிய வார்ப்புகள் படத்தில் ஆரம்ப சுகாதார மையத்தின் ஆயாவாக வரும் .பின்னாட்களில் 'நீலாம்பரி ராகம் உனக்காக ' என்று ஒரு தலை ராகம் பாடிய மன்மதனுடன் காதல்,கூடல்,ஊடல் .இறுதியில் தற்கொலைக்கு முயற்ச்சி செய்த போது அந்த தாடிக்கார டைரக்டர் தன கை கொடுத்து 'உயிர் உள்ளவரை' மனைவி ஆனார் .
அந்தம்மா வாயை திறந்தா கோட்டூர் புரம் கூவம் மணக்கும்

பாலாவின் இந்த வாய் நளினத்தை கேட்டு பாருங்களேன்
-
21st July 2014, 02:32 PM
#2096
-
21st July 2014, 02:54 PM
#2097
Senior Member
Senior Hubber
//சுகம் சுகமே தொட தொட தானே
சொந்தம் வரும் பின்னே . வரும் முன்னே
சுகம் கண்ணே . நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா ஞாயமா .// கலக்குறீங்க க்ருஷ்ணா சார்.. இந்தப் பாட்டு எனக்குக் கொஞ்சம் பிடிக்கும்..இள வயதில் 
அதுஸ்ஸரி....உஷ் என அழைக்கப் படும் உஷா - ஒரு தலை ராகத்திலேயே கொஞ்சம் வித்யாசமான அழகுடன் இருந்தவர்.. சில அப்போதைய இளமனங்களை (ம்க்கும்)ச் சற்றே கவர்ந்தவர்..ரூபாவை விட உஷாவைப் போட்டிருக்கலாம் என நான் படம் பார்த்த புதிதில் நினைத்திருக்கிறேன் இன் ஒருதலை ராகம்..ரவீந்தருடன் காதல் பின் டி.ஆருடன் கல்யாணம் என வாழ்க்கை..
சுற்றிச் சுற்றிச் சதுரம் போட்டால்(பின்ன ஃப்ளாஷ் பேக்கிற்கு எத்தனை நாள் வட்டம் போடறது) அவர் நடித்த ஒரு படம்..ஆகாய கங்கை.. பாவாடை சட்டை தாவணியில் நாட் ஸோ இம்ப்ரஸ்ஸிவ்..ஆனால் படத்தில் ஒரு அழகிய பாட்டு உண்டாக்கும்.. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு
தீம்..
ம்..
திர நன
ம்...ம் ம் ம்
தீம் திர நன திர ந தீர நன
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
திர நா...திர நா..
தொடரும்... கதையோ
திர நா...திர நா..
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட...
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ..
முக வாசல் மீது தீபம்
இரு கண்கள் ஆனதோ..
ம்..ம்..ம்.. ம் ம் ஆ...ஆ...ஆ..
முக வாசல் மீது தீபம்..
இரு கண்கள் ஆனதோ..
மண வாசல் கோலமே தினம் போடுதோ...
ஆ....ஆ...
துணையாகும் தேவியை கொடி தேடுதோ...
ஆ.....ஆ
புன்னகையோ... பூ மழையோ...
பொன் நடையோ.. தேர் படையோ
வரமோ... வருமோ
நான் வளம் பெற
தீம் திர நன திர நன தீம் திர நா
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
ஆ ஆ..ஆ ஆ...ஆ ஆ..ஆ
நாளும் ஒவ்வொரு நாடகமோ
எது மேடையோ
இனி மை விழி நாட்டியமோ
எனை வாட்டுமோ...
ஏன் தொலைவோ...நீ நிலவோ.
ஆ ஆ.ஆ.....ஆ...ஆ...
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட
தீம் திர நன... திர நன
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
தொடரும்... கதையோ
எது தான்... விடையோ...
மன வீணை... நான் இசைத்திட..
தேன் அருவியில் நனைந்திடும் மலரோ...
**
ம்ம் எழுதியவரும் எனக்குப் பிடித்த கவிஞர்.. மு. மேத்தா..
ஆனால் பாட்டுக்கு ஆடுவது கார்த்திக் சுஹாசினி..(பாவம்.. முகத்தில் அவ்வளவாக பாவம் காட்டியிருக்க மாட்டார் சுஹா என நினைவு)
எஸ்.பி.பி அண்ட் ஜானகியம்மா ப்ள்ஸ் இளைய ராஜா.. அசத்தலாக இருக்கும்
-
21st July 2014, 03:01 PM
#2098
Senior Member
Diamond Hubber
டியர் கார்த்திக் சார்,
நன்றி!
புஷ்பலதா 'அடாவடி' பற்றி நீங்கள் எழுதியதை ஷிப்ட்டில் இருந்தபடியே படித்தேன். அப்படியே 'பகீர்' என்றது.
ஒரு சம்பவம் வேறு ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு பதினைந்து அல்லது பதினெட்டு வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி சுற்றுலா சென்றோம். அங்கே பொடானிகல் கார்டனில் சுற்றும் போது அருகே கடந்து சென்றவரைப் பார்த்தால் ரொம்ப பரிச்சயமாய்த் தோன்றியது. பின் உற்று நோக்கியதில் அது புஷ்பலதா. 'திரிசூலம்' படத்தில் தோன்றியது போலவே அப்படியே இருந்தார். கையில் ஒரு சிறுமியையும், ஒரு சிறுவனையும் பிடித்திருந்தார்.(பேரக் குழந்தைகள் என்று நினைக்கிறேன்)
நான் அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு 'நீங்கள் புஷ்பலதாதானே?' என்றேன். 'ஆமாம்' என்று சிரித்தார்கள். பின் ஒரு சில நிமிடங்கள் அவருடன் உரையாடினேன். கிடைத்த நிமிடங்களுக்குள் தலைவருடன் அவர் நடித்த படங்களைக் குறிப்பிட்டு அவருடைய நடிப்பையும் பாராட்டினேன். புன்னகைத்தபடியே பதில் அளித்துவிட்டு சிறுவர்களை விளையாட அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
தூரத்தில் ஒருவர் பார்க்கில் உள்ள பெஞ்ச்சில் குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டிருந்தார். புஷ்பலதா நேராக அந்த நபரிடம் போய் ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் சிறார்களை விளையாட அழைத்துச் சென்று விட்டார்.

'சரி! யார்தான் அது போய்ப் பார்ப்போமே' என்று அருகில் சென்று பார்த்தால் ஏ.விம்.ராஜன் பரிதாபமாய் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவரிடமும் போய் பேச்சுக் கொடுத்தேன். கற்பூரம், தரிசனம் பற்றி பேச ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் கல்லுளிமங்கன் நான் சொன்னதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. எந்த பதிலும் சொல்லவில்லை. எனக்கு ஒருமாதிரி அசிங்கமாய் போய் விட்டது.
'அடப் போய்யா! எங்கள் நடிகர் திலகத்தையே தன்னந்தனியே எத்தனை முறை பார்த்து அவருடன் பேசி இருக்கிறேன்....அவர் எவ்வளவு ஜாலியாக எங்களிடமெல்லாம் உரையாடி இருக்கிறார்.... நீ என்ன பிசாத்து' என்று நினைத்தபடி திரும்பி வந்து விட்டேன். அதிலிருந்து சுத்தமாக அந்த ஆளை எனக்குப் பிடிக்காது.
கொஞ்சமான திமிர் இல்லை. இத்தனைக்கும் மார்க்கெட் இல்லாமல் சும்மா கிடந்த நேரம் வேறு அது. இதுக்கே இப்படி.
இப்போது உங்கள் பதிவைப் படித்ததும் மேற்சொன்ன சம்பவம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.
இப்போதுதான் புரிகிறது.
மனுஷன் புஷ்பலாதாவிடம் நீங்கள் சொன்னபடி 'வாங்கி' வந்திருப்பாரோ!?
அப்படி என்றால் அவர் மீது தவறில்லை. மன்னித்து விடுவோம்.
Last edited by vasudevan31355; 21st July 2014 at 03:12 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
21st July 2014, 03:07 PM
#2099
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
பெண்களை (அதுவும் நடிகைகளை ) "அடிப்பதும் ", சில சமயம் அவர்களை "அடிக்க"விடுவதும் சுகம்தான். அதுவும் பிலோ ரசிகர்களான உங்களுக்கு
டியர் கோபால் சார்,
நீங்க பேசுறது "சாதாரண" ரகமாக தெரியலையே. "சந்தான" ரகமாக அல்லவா தொனிக்கிறது.
சந்தேகம் வரக்காரணம் சொல்லியிருப்பது நீங்களாச்சே...
-
21st July 2014, 03:30 PM
#2100

Originally Posted by
vasudevan31355
நடிப்பு சுடர் கையில் இருப்பது என்ன கம்பா பெரிய வம்பாக இருக்கும் போல் இருக்கிறதே
Bookmarks