-
23rd July 2014, 10:01 PM
#11
Senior Member
Diamond Hubber
அரிய தகவல்கள் ராஜேஷ் சார்.
ஹரிநாத் என்ற ராஜா 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தின் வில்லன்.
கீதாஞ்சலி 'பணம் படைத்தவனி'ல் நாகேஷுடன் ஆட்டம். ('கண் போன போக்கிலே' இடையிசையில்)
என் அண்ணனில் 'சோ' வுக்கு ஜோடி.
இரண்டும் காமெடி.
கீதாஞ்சலி கணவர் நடிகர் ராமகிருஷ்ணா தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் 'வல்லவன் வருகிறான்' ஹீரோ இவர்.
மதர் இந்தியா 'புண்ணியபூமி' யான போது நடிகர் திலகத்தின் அண்ணன் வேடம் இவருக்கு.
'அன்னப் பறவை'.படத்திலும் லதாவுடன் நடித்திருந்தார். ('பொன்னென்பதோ... பூவென்பதோ')
ராஜேஷ் சார்! ஒரு சந்தேகம்.
1976-இல் 'நா பேரே பகவான்' என்ற தெலுங்குப் படத்தில் ராமகிருஷ்ணா நடித்திருந்தார். (தமிழில் அது 'பைட்டர் பகவான்' என்று மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்தது) அதுதான் இந்தியில் 'தர்மா' என்று ரீமேக் செய்யப்பட்டதா?
Last edited by vasudevan31355; 23rd July 2014 at 10:03 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd July 2014 10:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks