-
1st August 2014, 03:37 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் கோபால் ஜி
சங்கராபரணம் ராகத்தை மட்டுமல்ல ஒவ்வொரு ராகத்தையும் மிக அழகாக தாங்கள் தருகின்றீர்கள். ஒவ்வொரு ராகத்தைப் பற்றியும் இங்குள்ளோர் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் போது பல புதிய விஷயங்கள் தெரிய வருகின்றன.
இனி வரும் காலங்களில் ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு அதற்கு உதாரணமாய் தரும் பாடலில் அதனுடைய பிரயோகம், விசேஷங்கள், அந்த ராகத்திற்கும் அந்தப் பாடலின் தாளத்திற்கும் ஒத்துப் போகிறதா, அல்லது ஒரு குறிப்பிட்ட ராகத்திற்கு ஒரு குறிப்பிட்ட தாளம் தான் அமைக்க வேண்டுமா என்பது போன்ற அம்சங்களையும் விளக்கினால், இது எதிர்கால சந்ததயினருக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். எந்த கால கட்டமாயிருந்தாலும் அதில் படைப்பாளியின் ஆளுமையும் புலமையும் நிச்சயம் வேறு படும். அந்த வேறுபாட்டையும் விளக்கலாம்.
ஒரே ராகத்தில் உருவானதாக சொல்ல பட்டாலும்,இவ்வளவு வேறுபாடுகள் எங்கிருந்து வருகின்றன?
இங்குதான் இசையமைப்பாளர்களின் மேதமை நிற்கிறது.(கீழ்கண்டவற்றை இசையின் தன்மை கெடாமல் மக்களின் ரசனையை அடிநாதமாய் பிடித்து அவர்களை கேட்ட உடனே அல்லது கேட்க கேட்க (acquired )அடிமை கொள்ள வேண்டும்)
1)ராகத்தின் tempo எனப்படும் metre மாற்றுவது.
2)சுருதி (Tonic )மாற்றி பாடலின் tone மாற்றுவது.
3)ஸ்வரங்களின் அணிவகுப்பில் விளையாடி,கமகம் (ornamentation ),கற்பனை (kalpana ) என்று ஒரு பிடி பிடிப்பது.
4)பல கலப்பு ராகங்கள் உருவாக்கி விளையாடுவது.
5)Musical arrangements மற்றும் interludes விளையாட்டுக்கள்.
6)தாளங்களில் மாற்றங்கள் மற்றும் புத்திசாலி கலப்படங்கள்.(rhythm Arrangement )
தாளங்களை(Clap ) பற்றி சுளுவாக சொல்லலாம்.
1)ஒரு தட்டு தொடையில் தட்டினால் அனுத்ருதம்(U ) ஒரு அக்ஷரம்..
2)ஒரு தட்டு தொடையில் தட்டி ,ஒரு வீச்சு காற்றில் வீசினால் த்ருதம் .(0) 2 அக்ஷரங்கள்.
3)ஒரு தட்டு தொடையில் தட்டி சுண்டு விரல்,மோதிர விரல்,நடு விரல் என்று கணக்காக்கி விளையாடுவது லகு(1) .(ஒரு தட்டு இரு விரல் என்றால் 3 அக்ஷர திச்ர ஜதி.ஒரு தட்டு மூன்று விரல் என்றால் சதுச்ர ஜதி 4 அக்ஷரம்.ஒரு தட்டு நான்கு விரல்கள் என்றால் கண்ட ஜதி 5 அக்ஷரங்கள்.ஒரு தட்டு 6 விரல்கள் என்றால் மிஸ்ர ஜதி 7 அக்ஷரங்கள். ஒரு தட்டு 8 விரல்கள் என்றால் சங்கீர்ண ஜதி 9 அக்ஷரங்கள் )
4)சதுஸ்ர ஜதி அடிப்படையில் 4 அக்ஷரங்கள் கொண்ட லகு என்று எடுத்து தாளங்களை அலசினால் சுலபம்..
ஆதி தாளம் என்பது 100(ஒரு தட்டு மூணு விரல் எண்ணி ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு ஒரு வீச்சு)- 8 அக்ஷரங்கள்.
ரூபக தாளம் என்பது U 0 (ஒரு தட்டு ஒரு வீச்சு ஒரு தட்டு)-3 அக்ஷரங்கள்.
மிஸ்ர சாப்பு என்பது ஒரு தட்டு இரண்டு விரல் ,ஒரு தட்டு ஒரு வீச்சு,ஒரு தட்டு ஒரு வீச்சு .7 அக்ஷரங்கள்.
இது மாதிரி நிறைய.
தாளத்தில் விளையாடி ஒவ்வொரு பாட்டுக்கும் புது மெருகு கொடுக்கலாம்.
இசை மிக சுலபம். கற்பனை வார்த்தைகளாக திரிந்து கெட்டு போகாமல் சுருதி சுரமாகவே பிறவியில் அமையுமென்றால்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st August 2014 03:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks