-
17th August 2014, 07:36 AM
#121
Junior Member
Newbie Hubber
வெங்கி ராம்,
நகரவே விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.
நண்பர்களிடம்(சகோதரர் உட்பட) இவர் கொண்ட "அக்கறை" உலகறிந்த ஒன்று.விட்டு விடுவோம்.(நீங்கள் எல்லாவற்றையும் Glorify செய்கிறீர்கள்)
தேவேந்திரன்,அம்சலேகா,வித்யாசாகர் என்று அல்லாடி விட்டு ,ரகுமானுடன் பாரதிராஜா கை கோர்த்த இரு கிராமிய படங்கள் கிழக்கு சீமையிலே,கருத்தம்மா .
ரகுமானுக்கு( ஏழ்மையை அனுபவித்தவர் ஆயினும் ,பத்மா சேஷாத்ரி மாணவர்.city based) இளையராஜா போல கிராமிய பின்னணி,கலாச்சாரம் ,கம்யூனிசம்,ஊர் ஊராக ETC அற்றவர்.பாரதி ராஜாவிடம், இளையராஜாவிற்கு இருந்த comfort level ,Wave length ,vibe ,sync ,Background similarity ,Generation Sync எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் பாடல்கள் தரம்,nativity ,authenticity எதுவும் குறையாமல் ,B G M உம நன்றாகவே மாற்று அழகியல் நவீன இசை தந்தாரே?
இதுதான் Professionalism . என்ன மிஸ்ஸிங் என்பது புரிந்ததா நண்பரே?
Last edited by Gopal.s; 17th August 2014 at 08:13 AM.
-
17th August 2014 07:36 AM
# ADS
Circuit advertisement
-
17th August 2014, 07:50 AM
#122
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
இதுதான் Professionalism . என்ன மிஸ்ஸிங் என்பது புரிந்ததா நண்பரே?
எளிதாக படம் வரைந்து பாகம் குறிப்பது போல விளக்கி உங்களின் ஒப்பீட்டில் உள்ள பக்குவமின்மையை உடைக்கலாம். ஆனால் அப்படி செய்யப் போவதில்லை. உங்களது கலகத்தனம் ( மற்ற இசையமைப்பாளர்களை வைத்து ராஜாவின் திரையிசை பங்களிப்பை ஒப்பிடுவது) மீண்டும் மீண்டும் நிருபணமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இருந்தாலும் இரு கட்டுரைகளை (அதுவும் இசையிலக்கணம் தெரியாத, உணர்வு தளத்தில் இலக்கியம் படைக்கும் தேர்ந்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது..) தருகிறேன். வாசிக்கவும். முன்பேயே வாசித்திருந்தால் மீள்வாசிப்பு செய்யவும். அப்போதாவது ராஜாவின் மகத்துவம் தெரியும், அவர் மீதிருக்கும் அபிப்ராய பேதங்கள் தெளிய வாய்ப்பிருக்கிறது.
http://www.jeyamohan.in/?p=31098
http://www.jeyamohan.in/?p=6473
Last edited by venkkiram; 17th August 2014 at 08:06 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th August 2014, 08:08 AM
#123
Junior Member
Newbie Hubber
உணர்வுகள் என் மனம் சம்பத்த பட்டவை. அதற்கு ஜெயமோகன் மாதிரி அரசியல்வாதி எழுத்தர்களிடம்(unethical careerism ) இரவல் வாங்கும் எண்ணம் எனக்கில்லை.ஜெயமோகனை என் பரீக்ஷா நண்பன் மாமல்லன் (Madras Dada )வெளுப்பதை படித்ததில்லையா நண்பரே?ஷாஜி,ஜெயமோகன் எல்லாம் பம்மாத்துக்கள்.
ஏழாவது உலகம் தவிர்த்த அவரது எந்த படைப்புமே என்னை கவர்ந்ததில்லை.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்ற போலிகள் இலக்கிய உலகம் புகுந்தது ,நம்மை மாதிரி ஆட்கள் சம்பாதிக்க போனதால் நேர்ந்த விபத்து.
அழகுணர்ச்சி என்று மட்டும் ஆராய்ந்தால் சாருவே என் சாய்ஸ் .
(BY the Way,I already read this long back.Thanks.)
Last edited by Gopal.s; 17th August 2014 at 08:11 AM.
-
17th August 2014, 08:30 AM
#124
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
உணர்வுகள் என் மனம் சம்பத்த பட்டவை. அதற்கு ஜெயமோகன் மாதிரி அரசியல்வாதி எழுத்தர்களிடம்(unethical careerism ) இரவல் வாங்கும் எண்ணம் எனக்கில்லை.ஜெயமோகனை என் பரீக்ஷா நண்பன் மாமல்லன் (Madras Dada )வெளுப்பதை படித்ததில்லையா நண்பரே?ஷாஜி,ஜெயமோகன் எல்லாம் பம்மாத்துக்கள்.
ஏழாவது உலகம் தவிர்த்த அவரது எந்த படைப்புமே என்னை கவர்ந்ததில்லை.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்ற போலிகள் இலக்கிய உலகம் புகுந்தது ,நம்மை மாதிரி ஆட்கள் சம்பாதிக்க போனதால் நேர்ந்த விபத்து.
அழகுணர்ச்சி என்று மட்டும் ஆராய்ந்தால் சாருவே என் சாய்ஸ் .
(BY the Way,I already read this long back.Thanks.)
ஆக.. எப்படியும் அக்கரையிலிருந்து இக்கரை வரை நீந்திவர விருப்பமேயில்லை என்பதைத்தான் உங்களது இந்த மற்றுமொரு கலகப் பதிவும் சொல்லாமல் சொல்கிறது. வாழ்த்துகள். கலகத்தால் எந்தவொரு படைப்பாக்கத்தையும் உயிர்ப்புடன் அணுகவே முடியாது. இது நானே உணர்ந்து தெரிந்த/தெளிந்த ஒன்று. மற்றபடி "இந்த மாதிரி ,சொன்ன கருத்தை நோக்காமல்,சொன்னவனை நோக்கி ,அம்பு எய்வதெல்லாம் ,பழைய கதைகள் சார்."ன்னு மொட்டைமாடியில் நீங்கள் காயவைத்த வத்தல் இன்னும் காயவேயில்லை. அதுக்குள்ளேயே மழைவந்து விட்டதுபோல. ஜெயமோகனின் இரு தேர்ந்த கட்டுரைகளை வைத்தால் அதன் கருத்துக்களை நோக்காமல் உடனே உங்களிடமிருந்து முழு நிராகரிப்பு. இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2014, 09:16 AM
#125
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
ஆக.. எப்படியும் அக்கரையிலிருந்து இக்கரை வரை நீந்திவர விருப்பமேயில்லை என்பதைத்தான் உங்களது இந்த மற்றுமொரு கலகப் பதிவும் சொல்லாமல் சொல்கிறது. வாழ்த்துகள்.
வெங்கி ராம்,
நீங்கள் ஏன் இன்னொரு தேர்ந்த இளையராஜா ரசிகனிடம் பேசி கொண்டிருப்பதை உணர மறுத்து (இளையராஜாவையும் ரசிப்பவன்)மதமாற்றம் லெவல் போகிறீர்கள்?
நான் அனைத்து மதங்கள்,அனைத்து இலக்கியங்கள்,அனைத்து சினிமாக்கள்,அனைத்து புத்தகங்களின் முதல் ரசிகன்.ஆனாலும் எதையும் சாராதவன்.(ஆனால் தேர்ந்தெடுப்பு மிகுந்தவன்).என்னுடையது issue based .not personality based . இளையராஜா இசையமைப்பிலிருந்து குதித்து வெளியே வந்து ,உதிர்த்த முத்துகளையே ,நான் விமரிசித்தேன்.
மற்ற படி கலைஞர்களின் moods ,Constructive arrogance இவற்றை புரிந்து கொள்பவனே.
ஜெயமோகன் விஷயத்தில் நான் சொல்ல வந்தது,எனக்கு இரவல் அழகுணர்ச்சி தேவையில்லை என்றுதான். கருத்தை பகிர்பவர் நீங்கள்.உங்களை நோக்கி எந்த அம்பையும் தொடுக்கவில்லையே?உங்கள் நண்பர்கள்தான் மெடிக்கல் dictionary புரட்டி என்னை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் உங்களோடு வெட்டி-ஒட்டி உரையாடுவது சுவாரஸ்ய சுகானுபவமே.
Last edited by Gopal.s; 17th August 2014 at 09:18 AM.
-
17th August 2014, 11:49 AM
#126
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ஜெயமோகன் விஷயத்தில் நான் சொல்ல வந்தது,எனக்கு இரவல் அழகுணர்ச்சி தேவையில்லை என்றுதான்.
இப்படித்தான் செறிவான கருத்துக்களை உள்ளடக்கிய இரு தேர்ந்த கட்டுரைகளை அழகுணர்ச்சி என்றளவில் பேசி வசதியாக புறக்கணிப்பதா? எப்படி மெனக்கெட்டாலும் கழுவுற மீனுல நழுவுற மீன் போல துள்ளிக் குதித்து போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்களிடம் நூல் பிடித்தாற்போல ஒரு உரையாடல் நிகழ்த்துவதும் காளை மாட்டில் பால் கறப்பதும் ஒன்றுதான் போல. எல்லாமே குறைப்பிரசவமாக போய்விடுகிறது. ஆனாலும் தடங்களில் பதிந்து போவது உங்களைப் போன்றோர் உதிர்க்கும் நாவினால் சுட்ட வடுக்கள்தான். மொழி வசமிருக்கிறது என்ற ஒரே ஆயுதத்தைக் கொண்டு இணையத்தில் விமர்சகர்கள் என்ற பாணியில் புற்றீசல் போல நித்தம் பலர் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். குடிசைக்கும் கட்டிடத்திற்கும் மாளிகைக்கும் உள்ள வித்தியாசத்தை இனங்காணத் தெரியாமல்.. அப்படியே தெரிந்தாலும் மாளிகையை இடிக்கும் வேலைக்கு துணைபுரியும் அளவுக்கு எழுப்ப/அல்லது எழுப்பிய மாளிகையின் புகழ் பேச வாய் வராது. நான் முன்னேயே சொன்னதுபோல, இவை எல்லாம் பழகிப் போன திரைக்கதை முடிச்சுகள். வற்றாத ஜீவனுள்ள ராஜாவின் இசை அதையெல்லாம் தன்னுள் உள்வாங்கி சுத்தப்படுத்தி பயணித்துக் கொண்டெ இருக்கும்.
Last edited by venkkiram; 17th August 2014 at 11:53 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th August 2014, 12:01 PM
#127
Senior Member
Seasoned Hubber
"Vai Raja Vai" (music: Yuvan) song by IR.
thanks,
Krishnan
-
17th August 2014, 01:13 PM
#128
Junior Member
Newbie Hubber

Originally Posted by
venkkiram
இப்படித்தான் செறிவான கருத்துக்களை உள்ளடக்கிய இரு தேர்ந்த கட்டுரைகளை அழகுணர்ச்சி என்றளவில் பேசி வசதியாக புறக்கணிப்பதா?
நான் படித்து விட்டேன் என்று சொன்ன பிறகும் ஏனிந்த படுத்தல்?நான் வந்த போதே முழுதும் படித்து விட்டேன். அது மட்டுமல்ல ஜரதுஷ்டிரா,லாட்சு,பௌத்தம்,பைபில் ,குர்ரான்,ஜூடாயிசம்,எல்லாமே படித்துள்ளேன். ஒவ்வொரு முறையில் மதம் மாறி கொண்டிருக்க வேண்டுமா?
சரி.இவ்வளவு சொல்வதால்,இறுதியாக ஒன்றே ஒன்று. மொழியை மட்டும் நம்பி எதையும் எழுதுபவன் நானில்லை. முன்னேறிய அல்லது நடுத்தர புரிதல் ஆவது எனக்கு உள்ள subject மட்டுமே தொடுவேன்.அதுவும் யானை பார்த்த குருடர் கும்பல் போலல்ல.
இசையில் என்னை யாரும் மாற்ற முடியாது .மாற்றவும் கூடாது.
அது சரி,ஜெயமோகன் ,இந்தியாவில் இது வரை வெளிவந்ததில் சிறந்ததாக தன்னுடைய "விஷ்ணுபுரம்" நாவலை தேர்ந்தெடுத்துள்ளார்.என்னிடமும் படிக்க சொன்னார். அதை விட சொதப்பலான ,புரிதல் ,மோசமான நடையை நான் உலகத்திலேயே கண்டதில்லை.(Journey to Ixtlan ,Casteneda முழுதும் படித்தவன்)இதை, நல்ல மனநிலையில் இருக்கும் எவனாவது படித்து certificate கொடுத்தால்,நான் அக்கறைக்கு வந்து விடுகிறேன். ஒரே சான்ஸ் உங்களுக்கு. ஆனால் நடக்க வாய்ப்பு.....
-
17th August 2014, 04:49 PM
#129
Same thing happening for me too, Here my wife and kids are totally going wild for being craze on IR Sir.
die-hard fan of ilayaraja
-
17th August 2014, 09:20 PM
#130

Originally Posted by
venkkiram
இப்படித்தான் செறிவான கருத்துக்களை உள்ளடக்கிய இரு தேர்ந்த கட்டுரைகளை அழகுணர்ச்சி என்றளவில் பேசி வசதியாக புறக்கணிப்பதா? எப்படி மெனக்கெட்டாலும் கழுவுற மீனுல நழுவுற மீன் போல துள்ளிக் குதித்து போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்களிடம் நூல் பிடித்தாற்போல ஒரு உரையாடல் நிகழ்த்துவதும் காளை மாட்டில் பால் கறப்பதும் ஒன்றுதான் போல. எல்லாமே குறைப்பிரசவமாக போய்விடுகிறது. ஆனாலும் தடங்களில் பதிந்து போவது உங்களைப் போன்றோர் உதிர்க்கும் நாவினால் சுட்ட வடுக்கள்தான். மொழி வசமிருக்கிறது என்ற ஒரே ஆயுதத்தைக் கொண்டு இணையத்தில் விமர்சகர்கள் என்ற பாணியில் புற்றீசல் போல நித்தம் பலர் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். குடிசைக்கும் கட்டிடத்திற்கும் மாளிகைக்கும் உள்ள வித்தியாசத்தை இனங்காணத் தெரியாமல்.. அப்படியே தெரிந்தாலும் மாளிகையை இடிக்கும் வேலைக்கு துணைபுரியும் அளவுக்கு எழுப்ப/அல்லது எழுப்பிய மாளிகையின் புகழ் பேச வாய் வராது. நான் முன்னேயே சொன்னதுபோல, இவை எல்லாம் பழகிப் போன திரைக்கதை முடிச்சுகள். வற்றாத ஜீவனுள்ள ராஜாவின் இசை அதையெல்லாம் தன்னுள் உள்வாங்கி சுத்தப்படுத்தி பயணித்துக் கொண்டெ இருக்கும்.
Guys: why waste time with this guy? He thinks Rehman makes good music and is comparable and better than Ilaiyaraja. We dont think so. I have never seen the same brilliance that I see in IR's compositions in others. These are subjective opinions. There is no point arguing with these types - I have seen many of them. Similarly, even in temrs of personalities, I so admire Ilaiyaraja. I see rehman as a fake - contrived personality - he has his cronies doing the nasty things. his humility act is a fake. But some people are naive and will fall for that. OK with that. People's tastes, opinions, likes and dislikes are heterogeneous. There is nothing right or wrong about these opinions. I come to this forum just to the IR threads so that we can discuss things we like about IR and his music. I hate when guys like this come and spoiling with this vitriol driven by whatever the agenda.
I request that we all dont respond to him for a few days so that he goes away. I hope the guy atleast respects that people come to this forum under IR sections not to have these types of discussions. If he wants to spit his hatred of IR, my only request is that he opens a seperate thread and spits all this vitriol and all those types can go there. That way they can leave us alone
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks