-
17th August 2014, 11:49 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ஜெயமோகன் விஷயத்தில் நான் சொல்ல வந்தது,எனக்கு இரவல் அழகுணர்ச்சி தேவையில்லை என்றுதான்.
இப்படித்தான் செறிவான கருத்துக்களை உள்ளடக்கிய இரு தேர்ந்த கட்டுரைகளை அழகுணர்ச்சி என்றளவில் பேசி வசதியாக புறக்கணிப்பதா? எப்படி மெனக்கெட்டாலும் கழுவுற மீனுல நழுவுற மீன் போல துள்ளிக் குதித்து போய்க்கொண்டே இருக்கிறீர்கள். உங்களிடம் நூல் பிடித்தாற்போல ஒரு உரையாடல் நிகழ்த்துவதும் காளை மாட்டில் பால் கறப்பதும் ஒன்றுதான் போல. எல்லாமே குறைப்பிரசவமாக போய்விடுகிறது. ஆனாலும் தடங்களில் பதிந்து போவது உங்களைப் போன்றோர் உதிர்க்கும் நாவினால் சுட்ட வடுக்கள்தான். மொழி வசமிருக்கிறது என்ற ஒரே ஆயுதத்தைக் கொண்டு இணையத்தில் விமர்சகர்கள் என்ற பாணியில் புற்றீசல் போல நித்தம் பலர் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். குடிசைக்கும் கட்டிடத்திற்கும் மாளிகைக்கும் உள்ள வித்தியாசத்தை இனங்காணத் தெரியாமல்.. அப்படியே தெரிந்தாலும் மாளிகையை இடிக்கும் வேலைக்கு துணைபுரியும் அளவுக்கு எழுப்ப/அல்லது எழுப்பிய மாளிகையின் புகழ் பேச வாய் வராது. நான் முன்னேயே சொன்னதுபோல, இவை எல்லாம் பழகிப் போன திரைக்கதை முடிச்சுகள். வற்றாத ஜீவனுள்ள ராஜாவின் இசை அதையெல்லாம் தன்னுள் உள்வாங்கி சுத்தப்படுத்தி பயணித்துக் கொண்டெ இருக்கும்.
Last edited by venkkiram; 17th August 2014 at 11:53 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th August 2014 11:49 AM
# ADS
Circuit advertisement
Bookmarks