அப்படி நீங்கள் உள்வாங்கிக் கொண்டால் அது பிழையே. அதற்கு எதிரான நிலைதான் சரி. அதாவது ராஜா மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிடுகையில் எந்தெந்த தளங்களில் வேறுபட்டு விஸ்வரூபமாக நிற்கிறார் என்பதை பகுத்துப் பார்க்கும் ஞானம் பலருக்கு இங்கு இல்லை என்றே நினைக்கிறென். நீண்டதொரு பாரம்பர்ய இசைச்சங்கிலித் தொடரில் கடைசி முடிச்சாகவும் ஆனாலும் முற்றிலும் மாறுபட்டும் நிற்கும் புதுமை ராஜா. ஒரு பாஹ்-மொசார்ட்-பீதோவன்-தியாகரஜய்யர்-நாட்டாரிசை இசைவகைகளின் கலவை. அவருடன் இந்த நூற்றாண்டு மற்ற இசையமைப்பாளர்களை ஒப்பீடு செய்வதே ராஜாவின் வெறும் இருபத்து ஐந்து சதவீத இசைப்பங்களிப்பை ( பாடல்கள் ஆக்கம்) மட்டுமே கணக்கில் கொண்டு நடத்தப்படும் சிறு விளையாட்டுத் தனம்.
Bookmarks