Page 383 of 401 FirstFirst ... 283333373381382383384385393 ... LastLast
Results 3,821 to 3,830 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3821
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (87)

    இன்றைய ஸ்பெஷலில் அன்றைய சூப்பர் ஹிட் பாடல் ஒன்று.

    படம்: ஓர் இரவு (1951)



    நடிகர்கள்: கே.ஆர்.ராமசாமி, நாகேஸ்வரராவ், பாலையா, டி.கே.சண்முகம், லலிதா.

    பாடல் : கு.ம.பாலசுப்ரமணியம்

    பாடியவர்: எம்.எல்.வசந்த குமாரி

    இசை: ஆர்.சுதர்சனம்

    தயாரிப்பு: ஏ.வி.எம்.

    இயக்கம்: ப.நீலகண்டன்


    பேரறிஞர் அண்ணா ஒரே இரவில் எழுதத் தந்த திரைக்கதை.



    நயவஞ்சகக் கூட்டத்திற்கு நயமாக புத்தி சொல்லும் பாடல். நாடகம் ஒன்றில் 'குறத்தி' வேடம் கொண்ட பெண் பாடும் அற்புத நாட்டுப்புற கானம். எளிமையான வரிகளில் பணத்திமிர் பிடித்த நரிகளின் குணத்தை காட்டிலுள்ள நரிகளுடன் ஒப்பிட்டு 'அதைக் காட்டிலும் இது எவ்வளவோ தேவலை' என்று உரைக்கும், தோலுரிக்கும் பாடல். எம்.எல்.வியின் இனிமையான குரலில்.

    1950-ல் வெளிவந்த 'சமாதி' இந்தித் திரைப்படத்தில் வெளிவந்த மிகப் புகழ் பெற்ற பாடலான 'Gore gore o baanke chhore' என்ற பாடலின் (இசை சி.ராமச்சந்திரா) அப்பட்டமான தழுவலாக இப்பாடல் இருந்தாலும் எம்.எல்.வசந்தகுமாரியின் ஈடு இணையற்ற குரல் வளத்தால் இப்பாடல் ஒரிஜினல் இந்தி பாடலைத் தூக்கி ஏப்பம் விட்டு விட்டது.

    அதுவும் 'ராய்யா' என்ற தெலுங்கு வார்த்தையும், 'வாய்யா' என்ற தமிழ் வார்த்தையும் அதற்கு ஈடான 'யூ கம்மய்யா' என்ற வார்த்தையும் கலந்த ஒரு அற்புதக் கலைவையாக இப்பாடல் அமைந்தது ஒரு தனிச் சிறப்பு.

    அதுவரை துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்த லட்சுமி காந்தம் என்ற நடன நடிகை இந்த குறத்தி நடனப் பாடலின் மூலம் உன்னதப் புகழை அடைந்தார்.


    இனி பாடலின் வரிகள்.



    ஓ... சாமி
    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    அய்யா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ

    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    அய்யா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
    ஐயா சாமி
    ஓ..ஐயா சாமி

    கோழி ஆட்டைப் பிடிக்கும் எங்க குள்ள நரி
    ஏழை ரத்தம் குடிக்கும் இங்க உள்ள நரி
    பல் இளித்துக் காட்டி
    பட்டம் பதவி தேடி
    கட்சி பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும்

    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ

    வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி
    மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நோட்டு நரி
    வேலை ரொம்ப வாங்கும்
    கூலி தர ஏங்கும்
    பட்டினியைப் பார்த்தும் புளி ஏப்பம் விடும்

    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
    ஐயா சாமி
    ஓ... ஐயா சாமி

    காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க
    உங்க நாட்டிலுள்ள நரி ரொம்பப் பொல்லாதுங்க
    குள்ள நரிக் கொம்பை
    கோர்த்துப் போடு சாமி
    குள்ள நரிக் கொம்பை
    கோர்த்துப் போடு சாமி
    புள்ளை குட்டிக்காச்சும்
    நல்ல புத்தி வரும்

    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
    ஐயா சாமி
    ஆவோஜி சாமி
    நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ





    'சமாதி' இந்தித் திரைப்படத்தில் வெளிவந்த மிகப் புகழ் பெற்ற பாடலான 'Gore gore o baanke chhore' பாடல். (original)

    Last edited by vasudevan31355; 5th October 2014 at 02:13 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3822
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    ஜெயா மொவீஸ் தொலைகாட்சியில் ராஜா
    கலக்கல் ரந்தாவா தலைவர் fight ஓடி கொண்டு இருக்கிறது
    gkrishna

  5. #3823
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் வாசு சார்

    ஓர் இரவு எம் எல் வீ யின் அற்புத பாடல் எழுப்பிய சில நினைவலைகள்
    அறிஞர் அண்ணா.நெட் வலைப்பூவில் இடம் பெற்று இருந்த ஒரு நல்ல கட்டுரை

    அண்ணாவும் நடிப்பிசைப்புலவரும்
    கே.ஆர்.ஆர்.கல்யாணி ராமசாமி

    1944-ல் கலைவாணர் அவர்களின் அன்பு அரவணைப்பில் இருந்த கே.ஆர்.ஆருக்காக ஒரு நாடகக் கம்பெனியை வாங்கி என்.எஸ்.கே.நாடகசபா என்ற பெயரில் கே.ஆர்.ஆரின் மேற்பார்வையில் ஒற்றைவாடைத் தியேட்டரில் சிறப்பாக நாடகங்கள் நடந்து வந்த நேரம். ஒரு சிலரின் சூழ்ச்சியால் கலைவாணரும் தியாகராஜ பாகவதரும் ஜெயிலுக்குப்போகும் நிலை ஏற்பட்டது.

    நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது. நானும் இதில் நடித்து வந்தேன். அண்ணா நாடகம் பார்க்க அடிக்கடி வருவார். நாடகம் முடிந்ததும் உள்ளே (ஸ்டேஜ்) வந்து கே.ஆர்.ஆரிடம் பேசிவிட்டுப் போவார். அண்ணாவின் வேலைக்காரி நாடகத்தை என்.எஸ்.கே. நாடக சபாவில் கொடுத்திருந்ததார் அண்ணா. இந்த நிலையில் நாடகக் கம்பெனியின் நிர்வாக முறையில் சில மாற்றங்கள் எற்பட்டதால் எல்லோரும் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார்கள். இதனால் தான் இந்தக் கம்பெனியிலிருந்து விலகுவதாக கே.ஆர்.ஆர். முடிவு செய்து கையெழுத்திட்டு வெளியேறினார். வரும்போதே அண்ணா எழுதிய வேலைக்காரி நாடகத்தையும் வாங்கி வந்துவிட்டார்.

    கே.ஆர்.ஆரைப் பின்பற்றி உடனிருந்த நடிகர்கள் மேனேஜர், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என்ற சுமார் 50 பேர்கள் முக்கியமானவர்கள் எல்லாம் கம்பெனியைவிட்டு வெளியேறினார்கள்.
    இதில் எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், பி.வி.எத்திராஜ், பொன்னுசாமிபிள்ளை, கே.டி.சந்தானம். பி.எஸ்.தட்சிணாமூர்த்தி, எஸ்.ஸி.கிருஷ்ணன், எம்.என்.கிருஷ்ணன், சிவாஜிகணேசன், சிவசூரியன், வி.எஸ்.நடேசன் சின்னபொன்னுசாமி முதல் முக்கியமானவர்கள் எல்லாம் வெளியேறினார்கள்.

    இதைக் கண்ட கே.ஆர்.ஆர். அவர்கள் எல்லோரையும் அரவணைத்து என்னை நம்பி வெளியேறிய உங்களை எல்லாம் வைத்து கலைவாணர் பெயரிலேயே நாடகக் கம்பெனி துவங்கப் போகிறேன்என்றார். இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    கம்பெனி ஆரம்பிக்க ஒன்றிரண்டு மாதம் ஆகும் அதுவரை ஊருக்குப்போய் வருபவர்கள் எல்லாம் போய் வாருங்கள் என்றார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஊருக்குப் புறப்பட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்க பணப் பற்றாக்குறை இருந்ததால் தனக்கு கலைவாணர் கொடுத்த அன்பளிப்பான வைரக் கம்மலை கொடுத்து விற்றுவரச் சொல்லி செலவுக்குக் கொடுத்தனுப்பினார்.

    பிறகு காஞ்சீபுரம் சென்று அண்ணா அவர்களிடம் நடந்த விபரத்தைச் சொல்லி வேலைக்காரி கதையை அங்கிருந்து கொண்டு வந்ததையும் தான் கலைவாணர் பெயரில் நாடகக் கம்பெனி துவங்கப்போவதையும் வேலைக்காரி நாடகத்தை தான் நடத்துவதாகவும் கூறினார். அண்ணா இதில் ஆர்வம் காட்டினார்கள். தஞ்சையிலே நாடகங்கள் நடத்துவதற்குண்டான ஏற்பாடுகள் நடந்து வந்தது. நடிகர்கள் எல்லோரையும் வரவழைத்து காஞ்சியில் திராவிடநாடு அலுவலகத்தில் ஒரு மாதம் இருக்கவைத்து உணவு விடுதியில் எல்லோருக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    1945-ல் கிருஷ்ணன் நாடக சபா என்ற பெயரில் கே.ஆர்.ஆரின் நாடக மன்றம் துவங்கப்பெற்றது. முதலில் மனோகரா, பம்பாய் மெயில் நாடகங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் நான்கு ஐந்து படங்களில் படப்பிடிப்பு நடந்து வந்ததால் நேரம் கிடைக்கும்போது ஒன்றிரண்டு நாள் தஞ்சையில் நாடகங்களில் நடிப்பார் கே.ஆர்.ஆர்.

    அண்ணாவிடம் கே.ஆர்.ஆர். வேலைக்காரி நாடகம் நடத்த சீன், டிரஸ், செட்டிங்குகள் செய்ய நாளாகும் எனவே வேறு ஒரு சாதாரண கதையாக எழுதித் தாருங்கள் என்று கேட்டார். அண்ணாவும் உடனடியாக ஓர் இரவு கதையை ஒரே நாளில் எழுதித் தந்தார். இந்தக் கதை ஒரே இரவுக்குள் கதையே முடிந்து விடுவதைப் போலவும் அன்றாட வாழ்வில் மனிதன் அவதிப்படும் நிலையும் இரவில் நடக்கும் அவலங்களையும் சம்பவங்களையும் எடுத்துக்காட்டுவதுடன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

    இதைப்படித்த கே.ஆர்.ஆர். இதுவரை எவரும் நடத்தாத நாடகமாக இருப்பதைக்கண்டு உடனே எம்.எஸ்.முத்துகிருஷ்ணனிடம் எல்லோருக்கம் பாடம் எழுதிக்கொடுக்கச் சொல்லி சீன் மற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்யச்சொன்னார். சென்னையில் படப்பிடிப்புகளையெல்லாம் ஒரு மாதம் தள்ளி வைக்கச் சொல்லிவிட்டு, அண்ணாவோடு தஞ்சைக்குச் சென்று கம்பெனியிலேயே தங்கி ஒத்திகையும் பார்த்து நாடகத்தை அரங்கேற்றிவிட்டு சென்னை வந்தார்கள். இந்த நாடகம் மக்களின் ஆதரவைப் பெரும் அளவில் பெற்று வருவதைக் கண்டு இதை அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் காணவேண்டும் என்று நாடகத்திற்குத் தலைமை ஏற்க பல பெரியோர்களையும் அறிஞர்களையும் அழைத்தார் கே.ஆர்.ஆர்.

    கல்கி, மு.வரதராசனார், நாமக்கல் கவிஞர். வே.ராமலிங்கம், பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதம். எஸ்.சொளந்தரபாண்டியன், கலைவாணர், தந்தை பெரியார், பாரத தேவி ஆசிரியர் சாமரத்தினம், வ.ரா.மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், சோமசுந்தர பாரதியார், ஜெயப்பிரகாஷ் நாராயண், டாக்டர். தர்மாம்பாள், பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன், குடந்தை கே.கே.நீலமேகம், குடந்தை சின்ன தம்பி நாடார், அருளானந்த சாமிநாடார், நாவலர் முதல் இன்னும் பல பெரியோர்கள் எல்லாம் அண்ணா அவர்களின் புரட்சிப் படைப்பைக் கண்டு வானாளாவப் புகழ்ந்தார்கள்.

    குறிப்பாக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையேற்க அழைத்தபொழுது இந்தக் கதையில் சுருக்கத்தை எழுதித்தரக் கேட்டார். அண்ணாவிடம் கே.ஆர்.ஆர். ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் எழுதித் தரச் சொன்னார். அண்ணாவும் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பினார்.

    அதைப்படித்த ஜே.பி. இவ்வளவு அருமையாக எழுதக்கூடிய அறிஞர் தமிழகத்தில் இருக்கிறாரா, யார் அவர்? என்று விசாரித்தார்.

    கல்கி அவர்கள் நாடகத்திற்கு தலைமை ஏற்றபோது நம் தமிழகத்திற்கு ஒரு பெர்னாட்ஷாவாக அண்ணா இருக்கிறார் என்று மனமார புகழ்ந்தார்.

    பாவேந்தர் பாரதிதாசன் தலைமையேற்றபோது கரும்பு நுனியிலிருந்து சுவைத்து வந்தால் போகப்போக எப்படி சுவை அதிகரிக்குமோ அதைப்போல நாடகம் அமைந்திருக்கிறது என்றும் தமிழகத்திற்கு ஒரு பேரறிஞர் அண்ணா கிடைத்திருக்கிறார் என்று வார்த்தைக்கு வார்த்தை பேரறிஞர் அண்ணா என்று பெருமையோடு புகழ்ந்தார்.

    கலைவாணர் அவர்கள் தலைமையேற்றபோது, இந்த நாடகத்தில் நாட்டு மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று, சமுதாயம் சீர்திருந்த, சமுதாயத்தில் நடைபெறும் பல கொடுமைகள் ஒழிய இந்த நாடகம் உதவியாக இருக்கிறது. இந்த நாடகத்தை இவ்வளவு சிறப்பாக எழுதிக் கொடுத்த அண்ணாவை பாராட்டுகிறேன். மக்கள் சீர்திருந்த துணிந்து முதன் முதலாக அதை நடத்திய பெருமை கே.ஆர்.ராசாமியையே சேரும். ஆயிரம் மேடைப் பிரசங்கமும் சரி ஒரு நாடகமும் சரி என்று நிரூபித்தவர் கே.ஆர்.ராமசாமி என்றார் கலைவாணர்.

    ஆனைவரும் இதை ஏற்று நடத்திய கே.ஆர்.ஆரை மனமார வாழ்த்தி பெருமைப்படுத்தினார்கள். இதற்குப் பிறகுதான் கே.ஆர்.ஆர் நாடக மன்றதின் நாடக விளம்பரங்களில் தமிழகத்தின் பெர்னாட்ஷா அண்ணா கதை வசனம் என்றும் தமிழகத்தின் பேரறிஞர் அண்ணா கதை வசனம் என்றும் விளம்பரங்கள் முதன் முதலாக செய்யப்பட்டு, அறிஞர் அண்ணாவுக்கு பெருமைகளைச் சேர்த்தார் கே.ஆர்.ஆர். இதற்குப் பிறகுதான் மற்றவர்களெல்லாம் இதைப் பின்பற்றி எழுதினார்கள். இந்த நாடகத்தில் ஒரு சீனில் காளிகோயிலில் காளியிடம் நீதிகேட்டு அதை அலங்கோலம் செய்யும் கட்சி வருவதால், இதை நடத்தினால் மக்களின் ஆதரவு இருக்குமா? நாடகம் நடக்குமா என்ற சந்தேகத்தால் யாரும் நடத்த முன்வரவில்லை. அண்ணா அவர்கள் சார்ந்த திராவிடக் கழகத்தின் கொள்கைகளை ஏற்று மிகத் தீவிரதியாக செயலில் இறங்கி வெற்றியோ தோல்வியே எது வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்று துணிந்து இதையும் நடத்திக் காட்டினார் கே.ஆர்.ஆர். இதன் வெற்றியும் இமாலயவெற்றியாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தமிழகத்திற்கு வாய்த்தது!

    ஓர் இரவு நாடகம் 8 மாதமும் வேலைக்காரி 8 மாதமும் தொடர்ந்து நடந்தது. 1945-ல் துவங்கிய கே.ஆர்.ஆர்.நாடக மன்றத்தை 1950 வரை தொடர்ந்து நடத்தி வந்தபோது அண்ணாவின் மேற்பார்வையில்தான் கம்பெனியை கவனித்து வந்தார்கள். பலதடவைகள் கம்பெனி வீட்டிலேயே தங்கி இருந்து ஆலோசனை கூறி எல்லாவற்றையும் கவனித்துவந்தார்கள். அண்ணா நாடக கம்பெனி எந்த ஊருக்கு போவது எந்த நாடகம் நடத்துவது என்பது முதல் கவனித்துவந்தார்.

    கே.ஆர்.ஆர். நாடக மன்றமும் எங்கள் வீடும் அண்ணா அவர்களுக்கு கழக ஆதரவாளர்களையும் கழகத்தையும் வளர்க்க அன்றைக்கு ஒரு பாசறையாகவே விளங்கியது என்று கூறலாம்.

    திருச்சியிலிருந்தும் தஞ்சைக்கு வரும் பாசஞ்சர் ரயிலுக்கு ஓர் இரவு ரயில் என்றும் வேலைக்காரி ரயில் என்றும் அன்றைக்கு சொல்வார்கள். இந்த ரயில் தஞ்சைக்கு வந்ததும் மக்களெல்லாம் இறங்கி ரயில் காலியாகிவிடும். சென்னையிலிருந்து கன்யாகுமரி வரையிலுள்ள மக்களும் திரளாக வந்து நாடகத்தை கண்டுகளித்தார்கள். கருத்துக்களை ஏற்றார்கள். எந்த எந்த ஊர்களுக்கு நாடகக் கம்பெனி போய்க்கொண்டிருந்ததோ அங்கெல்லாம் கழகத்தோழர்கள் - ஆதரவாளர்கள் - பொது மக்களின் ஆதரவையும் பெற அண்ணாவுக்கு கே.ஆர்.ஆர். நாடக மன்றம் திரட்டிக் கொண்டிருந்தது. அண்ணாவுக்கு பின்னால் ஒரு அஸ்திவாரமாக அமைந்தது கே.ஆர்.ஆர். நாடக மன்றம் என்றே கூறலாம்.
    gkrishna

  6. Likes Russellmai liked this post
  7. #3824
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கல்கி எழுதியது:



    தற்கால நாடகக் கலையை பற்றி பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட் ஷாவுடன் இப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு இப்சனுக்கு எங்கே போவது? திருடப் போக வேண்டியதுதான்! என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம், தமிழ் நாடு நாடகாசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.

    இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார்! இப்சனும் இருக்கிறார்! இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்!” என்று தோன்றியது.

    ஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி.என். அண்ணாதுரை.
    – (கல்கி இதழ் 07-12-47)
    gkrishna

  8. #3825
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Thanks to The Hindu

    oor iravu by Randor Guy


    Starring: K. R. Ramasami, A. Nageswara Rao, T. K. Shanmugham, B. S. Saroja, Lalitha, T. S. Durairaj, T. S. Balaiah, and T. P. Muthulakshmi

    At his disciple Ramasami's request, Annadurai sat up one night and wrote a play and at dawn, it had been written to the last scene with hardly any corrections! The time-frame too was a single night and narrated the events taking place on that night. The hero wore only one costume right through! Hence, for more than one reason Anna titled the play, Ore Iravu!

    AV. Meiyappan met Anna who agreed to write the screenplay and dialogue for Rs. 10,000. A week later, he came to the AVM Studio and stayed at No. 10 (Meiyappan's office, now renovated and modernised!). Seated on a mat at a desk without legs, Anna wrote the screenplay, while the dark hours of the night ticked away. When Meiyappan and Neelakantan called on him the next morning they found the Ore Iravu script ready and written on 300 sheets of paper.

    Meiyappan gave Pa. Neelakantan the break he had been waiting for and with Ore Iravu began his long and successful career as filmmaker with several box-office hits.

    Ramasami played the same role he had played on stage. The story is about a thief, the illegitimate son of a rich zamindar (Shanmugham) who had seduced the mother (Saroja). Poverty drives him to take to stealing. Indeed Anna dealt with the eternal problem of the haves and the have-nots in this film. He did this in his Velaikari too. In an interesting turn of events, the thief breaks into his father's house at night when his stepsister (Lalitha) is about to commit suicide! Of course, one is not aware of the real identity of the other.

    Lalitha played the zamindar's daughter and Akkineni Nageswara Rao, her lover.

    Others in the cast included noted screen villain and character actor T. S. Balaiah as the blackmailer, well-known comedian T. S. Durairaj, and yesteryear star B. S. Saroja.

    Ore Iravu had many songs and in true AVM fashion, a dance drama Shiv-Shakthi. The dancers were Lalitha-Padmini, and Kumari Kamala (Baby' Kamala, now a young woman!). It had a Tamil folk dance (Kurathi dance) too. Interestingly for this dance, a song rendered by M. L. Vasanthakumari, Ayya Sami... avoji sami...ayya rayyaa vayyaa you comeayaaa...!, adapted from a popular Hindi film song, Gorey...gorey..., was used and it turned out to be a hit. The dancer was a noted starlet Lakshmikantham.

    One of the songs which became popular was Tunbam nergayil nee..... It was penned by none other than Bharathidasan (pseudonym of Kanaka Subburatnam, voices V. J, Varma and M. R. Rajeswari.)

    T. K. Shanmugham also contributed a song written earlier and used by him in one of the TKS Brothers' plays. Enga naadu...ithu enga naadu...! was about India and the problems the country faced.

    A song by Bharathiar, Kottu murasey...kottu murasey...! also found place and was rendered by K. R. Ramasami and T. S. Bhagavathi.

    Ore Iravu was released in April 1951 with much expectation what with the AVM banner, Annadurai's script based on his hit play, dance dramas and melodious music but, it did not do well.

    Remembered for: Annadurai's interesting storyline and dialogue, impressive performances by Ramasami and good music (R. Sudarsanam)
    gkrishna

  9. #3826
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஓர் இரவு படத்தில் இடம் பெற்ற இன்னொரு நல்ல பாடல்

    “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ”

    பின்னாட்களில் நிறைய படங்களில் இந்த பாட்டையோ அல்லது பாட்டின் இசையையோ கையாண்டு இருப்பார்கள். நினைத்தாலே இனிக்கும் 1979 திரைபடத்தில் இறுதி காட்சியில் கமல் ஜெயப்ரதா திருமணத்திற்கு சம்மதம் கேட்கும் இடத்தில இந்த பாடலின் இசை இடம் பெற்று இருக்கும் .திருமணத்திற்கு பின் மெல்லிசை மன்னரின் ஹோ ஹோ என்ற ஒலியுடன் கூடிய ஒரு அருமையான ஹம்மிங் .அதே போல் மனதில் உறுதி வேண்டும் திரைபடத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் டாக்டர் கதாபாத்திரத்தில் செயின் ஸ்மோகர் ஆக வருவார் .அப்போது அவர் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மிக அருமையாக இருக்கும்

    gkrishna

  10. Likes Russellmai liked this post
  11. #3827
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திடுதிப்பென்று முந்தா நாள் நண்பருடன் பேசி, நேற்றுக் காலை கிளம்பி சென்று விட்டு இன்று தான் வந்தேன்..எங்கே..என்ன எப்போ என்ற கேள்விகளுக்கான விடை என்னவெனில்..

    மஸ்கட்டில் scenic beauty நிறையவே உண்டு..(கந்தசாமியில் வரும் எச்சூஸ்மி மிஸ்டர் கந்தசாமி) தீபாவளியில் வரும் ஜெயம் ரவி பாவனா பாட்டு, என் இதயம் இதயம் துடிக்கிறதே எனத் தாவித்தாவி அனுஷ்கா பாட சூர்யாவும் இசப்பாட்டுப் பாடும் பாடலும் எடுக்கப்பட்டது மஸ்க்ட் தான்..

    இருப்பினும் இங்கு உள்ள wahiba sands என்னும் இடத்தில் உள்ள sand dunes களின் அழகு+ஆபத்து எல்லாம் பார்க்காமலேயே போய்விட்டது எனக் குறை உண்டு மனதில்.. நேற்று அதற்கான சந்தர்ப்பம் வாய்க்க சென்று ( நாலு மணி நேரம் டிரைவ்+ பாலைவன நடுவில் ஒரு மணி நேரம் டபக்கென மணலிறக்கத்தில் இறங்கி ஏறிச் சென்று – 1000 arabian nights –என்ற இடத்திற்குச் சென்று டெண்ட் டில் இரவு தங்கி காலைகிளம்பி இப்போது ரூவி..

    வெய்யில் அந்த வஹிதா சேண்ட்ஸில் சாரி டைபோ வஹிபா சேண்ட்ஸில் சர்வ சாதாரணமாய் இருந்தாலும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் குளிர்ந்து 3 மணிக்கு ஹ்ஹ்ஹ் எனக் குளிரி கம்பளியை இழுத்துப் போர்த்துக் கண்ணை மூட குறுக்கே கனவில் வந்த தமன்னாவை ஸீயூ டுமாரோஎன அனுப்பிவிட்டு(அரைமனதாக) தூங்கியது ஒரு அழகிய அனுபவம்.. ஸாரி சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போட்டதற்கு..

    வந்தால் வழக்கம் போல் வாசு சார் நான் எழுத நினைத்திருந்ததை (அய்யா சாமி ஆவோஜி சாமி) எழுதிவிட்டார்..ம்ம் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு வாசு சார்.. நன்றி.. ஆனால் வேறு விதமாக எழுத நினைத்திருந்தேன்..(இன்னும் சில அவர் பாடிய பாடல்களுடன்..)

    கிருஷ்ணா ஜி.. திடீரென குரங்கு குசலா எனப் பதிவெல்லாம் வந்த போது கொஞ்சம் பயம்மாய்த் தான் இருந்தது.. மற்றபடி நீங்கள் இட்ட பதிவுகளில் நான் கற்றுக் கொண்டது அதிகம். நீங்கள்.எழுதிய பதிவுகளில் நாம் மனதளவில் நெருங்கியதும் அதிகம் (ஹைய்யா வழக்கம் போல சமாளிச்சுக் குழப்பியாச்சு ).. இந்த இடம் ரிலாக்ஸ் பண்ண வரும் இடம் என்பதில் நானும் உடன்படுகிறேன்..ஜாலியாகவே இடுங்கள் உங்கள் இஷ்டப் படி..

    சரி சரி ஹோம் வொர்க் பண்ணிவிட்டு சாயந்திரம் வர்றேன்.. இப்பக் குளிக்கணும் ரெண்டாம் முறையாக...
    Last edited by chinnakkannan; 5th October 2014 at 08:20 PM.

  12. #3828
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    vaasu sir

    விஸ்வநாதன் ராமமூர்த்தி பற்றி திரு ஆரூர் தாஸ் தின தந்தி பத்திரிகையில் வெளியிட்டு இருந்த கருத்தை ஓட்டி ஒரு ஐயப்பாடு எழுந்தது அதை வெளியிட்டு இருந்தேன் . அவர்களது முதல் படம் ஜெனோவா என்று அதில் சொல்லி உள்ளார் . அவர்களது முதல் படம் பணமா(1952) ? அல்லது ஜெனோவா(1953) வா
    Genova- M.S.Viswanathan alone.

    Panam- M.S.V-T.K.R Combo for the first time.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #3829
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    குடியிருந்த கோயில் - 1968

    மெல்லிசை மன்னரின் இசையில் பாடகர் திலகம் - இசை அரசி - இசை அரக்கி மூவரின் கூட்டணியில் மக்கள் திலகத்தின் சிறப்பான பாடல் காட்சிகள் என்றென்றும் இசை பிரியர்களின் மனதில் ஒலித்து கொண்டிருக்கும் பாடல்கள்
    என்பதில் ஐயமில்லை . பாடல்கள் - படமாக்கப்பட்ட விதம் - இசையின் தாக்கம் -மனதை மயக்குகிறது .


    1. உன் விழியும் என் வாளும் ; மக்கள் திலகத்தின் அட்டகாசமான உடை அலங்காரம் - புதுமையான முறையில் கையில்
    வாளுடன் காதலி ராஜஸ்ரீயுடன் பாடும் இந்த பாடல் காட்சி பிரமிக்க வைக்கிறது .பாடகர் திலகம் - இசை அரக்கி இருவரின் குரலில் .....சூப்பர் . வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .

    2. என்னை தெரியுமா ; ஒரு மேடை பாடகராக மக்கள் திலகம் -உலக பேரழகனின் துள்ளல் பாடல் .நான் புதுமையானவன் - உலகை புரிந்து கொண்டவன் - சத்தியாமான வரிகள் .

    3. நீயேதான் எனக்கு மணவாட்டி - பாடகர் திலகம் - இசை அரசி இருவரும் கலக்கிய காதல் பாடல் .இளமை ததும்பும்
    இனிய காதல் பாடல் .- காதலர் தின பாடல் .

    4. நான் யார் நான் யார் - புலவர் புலமை பித்தனின் அறிமுக தத்துவ பாடல் . மக்கள் திலகத்தின் அபார நடிப்பு .சூப்பர் .

    5. துள்ளுவதோ இளமை - கிளப் பாடல் . மெல்லிசை மன்னரை புகழ வார்த்தைகள் இல்லை .பாடகர் திலகம் - இசை அரக்கி இருவரின் குரலில் மக்கள் திலகத்தின் வரலாற்று புகழ் பாடல் .

    6. ஆடலுடன் பாடலை கேட்டு - பாடகர் திலகம் - இசை அரசி இருவரின் தேன் குரலில் - மக்கள் திலகம் - எல். விஜயலட்சுமி இருவரின் பஞ்சாபி நடனம் - உலக தமிழ் பட ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .

    7. குங்கும பொட்டின் மங்கலம் - பெண் பாடலாசிரியர் ரோஷன் பேகம் அவர்களின் முதல்பாடல் . இதுவும் காதலர் தின
    பாடல் . அத்தனை காதல் ரசம் சொட்டும் மென்மையான காதல் கீதம் .

    ஒரே படத்தில் 7 வித்தியாசமான பாடல்கள் - இனிமையான இசை - மனதை மயக்கும் மதுர கானங்கள் .

    MY CHOICE NO 1

  14. #3830
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Krishna,

    Welcome back and pl.Go ahead. You can do whatever you wish but dont over do like what you did last week. This is my open request.You can not expect my honesty and openness from others. I will putforth my ideas with a meaning only. Have a theme coordination and do relevant articles max one or two per day not 50 or 60 incoherent ones (kuravan Etc). This is my humble suggestion.You already did it correct today.
    Last edited by Gopal.s; 5th October 2014 at 05:20 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •