Results 831 to 840 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகள் ....

    படத்தின் அறிமுக காட்சியில் புரட்சி நடிகராக - சட்ட மன்ற உறுப்பினராக - சிறு சேமிப்பு துணை தலைவராக விழாவில் பங்கேற்று பேசும் காட்சி.


    லாரி ஓட்டுனராக மக்கள் திலகம் நடித்த காட்சிகள் . லாரியில் இடம் பெற்ற கனவு பாடல் . குண்டுமணி மற்றும் நடராஜனிடம் கால்களாலே பந்தாடும் ரம்மியமான காட்சிகள் .

    பார்வையற்ற தங்கை புஷப்லாதாவிடம் பூக்கள் பற்றி கண்டு பிடிக்கும் காட்சி மிகவும் அருமை .ஏ .வி எம் ராஜனுடன் அறிமுக இடத்தில குடியை பற்றி இடம் பெற்ற வசனங்கள் பிரமாதம்
    .

    தங்கைக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொதிக்குமிடத்தில் மக்கள் திலகம் உணர்ச்சி கரமான காட்சிகள்

    தங்கையின் கொடுமைக்கு காரணமான -தன் நண்பன் ஏ.வி.எம். ராஜனை கண்டு பிடித்து அவரையே தங்கைக்கு மண
    முடித்து வைக்கும் காட்சி - தவறான வழியில் செல்லும் ராஜனை திருத்த முயன்று அவர் செய்யாத கொலைக்கு இவர் பழி ஏற்று கொலைகாரனை கண்டு பிடிக்கும் காட்சிகள்


    தங்க பதக்கத்தின் மேலே ..
    நான் அளவோடு ரசிப்பவன்
    நான் செத்து பிழைச்சவண்டா
    சூப்பர் பாடல்கள் .
    விண்வெளி கதாகலாட்சேபம் - மக்கள் திலகம் அபாரமாக நடித்து ரசிகர்களை பரவசபடுத்தினார் .

    ஒரு நாள் கூத்துக்கு ...பாடல் - சிறப்பான இசையில் மக்கள் திலகத்தின் நடனம் சூப்பர் .
    கிளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாக இருந்தது .
    44 ஆண்டுகள் நிறைவு பெற்ற எங்கள் தங்கம் இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் காட்சியளிக்கிறது .

    9.10.1970 வெளிவந்த எங்கள் தங்கம் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்த காவியம் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •