-
2nd December 2014, 12:24 AM
#3111
Junior Member
Diamond Hubber

அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962_ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.
இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அப்போது "உலகின் தலைசிறந்த நடிகர்" என்று அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோவுக்கும் , நடிகர் திலகத்துக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர்_நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
நடிகர் திலகத்தை, மக்கள் திலகம் வரவேற்ற அந்த அறிய புகைப்படம் உங்களுக்காக
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
2nd December 2014 12:24 AM
# ADS
Circuit advertisement
-
2nd December 2014, 07:59 AM
#3112
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
1000 முத்ததான பதிவுகள்
வாழ்த்துக்கள் சிவாஜி செந்தில்
பல முத்தான பதிவுகளுடன் மேலும் பல ஆயிரங்கள் (1000) உயரட்டும்
இனிய நண்பர் சிவா
அன்பிற்கினிய நண்பரும் புள்ளிவிவரங்களை நடிகர்திலகம் திரைப்பட சாதனைகளின் ஆதாரங்களை அள்ளித்தருவதில் இத்திரியின் பெரும்புள்ளியுமான தங்களின் வாழ்த்துக்கள் என்னை துள்ளி எழச்செய்து மகிழ்விக்கிறது. உளமார்ந்த நன்றிகள்.. நீங்கள் உட்பட இத்திரியின் ஜாம்பவான்களும் எழுத்து மாயக்கலை இந்திரஜித்துக்களும் தங்களின் தன்னலமில்லாத உழைப்பின் மூலம் போட்டுத்தந்த நடிகர்திலகத்தின் உறுதியான புகழ் பாதையில் அவரது ஈடு இணையில்லாத பெருமைகளை என் சக்திக்கு முடிந்தவரை பறைசாற்றியபடியே நடந்து கடந்திட உங்கள் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கின் றன. நன்றிகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
2nd December 2014, 08:19 AM
#3113
Junior Member
Veteran Hubber
நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் நீள்வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று ஒளிர்ந்து மிளிர்ந்த கோள்கள்/சந்திரன்கள்
தண்ணொளி நிலவுக் கோள் 8கலைநிலவு ரவிச்சந்திரன்
கலைநிலவு ரவிச்சந்திரன் அவர்கள் நடிகர்திலகம் போலவே தனது காதலிக்க நேரமில்லை முதல் படத்திலேயே Stardom Overnight புகழடைந்தவர். அடுத்தடுத்து வெள்ளிவிழா படங்கள் கொடுத்து 'வெள்ளிவிழா' நாயகராக வளர்ந்தவர். 'சின்ன வாத்தியார்' என்று மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் பாணியில் சண்டைக்காட்சிகளில் பொழுது போக்கு அம்சங்களில் கலக்கினாலும் நடை உடை ஒப்பனைகளில் நடிகர்திலகத்தின் ஸ்டைலையே கடைப்பிடித்து நடிப்புச்சூரியனின் ஒளிபெற்ற சந்திரனாக வலம் வந்தார். நடிகர்த்திலகத்துடன் இரண்டே படங்கள்தான்(மோட்டார் சுந்தரம் பிள்ளை மற்றும் கவரிமான்) இணைந்தார். தனிப்பட்ட வகையில் நான், மூன்றெழுத்து அதே கண்கள் இதயக்கமலம் குமரிப்பெண்.....பின்னாளில் ஊமைவிழிகள் இவருக்குப் புகழ் சேர்த்த படங்கள். இருப்பினும் ஒரு சூரியனாக பிரகாசிக்க முடியாமல் சந்திரனாகவே தேய்பிறை கண்டது சிறிது வருந்தத்தக்கதே. நளினமான நடன அசைவுகளில் முத்திரை பதித்து இன்றும் சின்னத்திரையில் தொடர்ந்து ஒளிபரப்பாகும் ரசிக்கத்தகுந்த இனிய பாடல் காட்சிகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்! நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்து பெருமை தேடிக்கொண்டவருக்கு எமது நன்றிகள்
இயல்பான நடிப்பில் காதல்மன்னர் ஜெமினிகணேசன் கோடு போட்டபோது அதில் ரோடு போட்டு அசத்தினார் நடிகர்திலகம்.
மோட்டார் சுந்தரம்பிள்ளை:
இன்றளவும் இயல்பு நடிப்பின் இலக்கணமாகத் திகழும் நடிகர்திலகத்தின் பெருமைமிகு இலக்கியக் காவியம். தனக்கென்று எந்தப் பாடல்காட்சிகளும் இல்லாது வளர்ந்துவரும் இளம் கலைநிலவுக்காக இரண்டு பாடல் காட்சிகளை பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து தனது எதிர்கால ஜோடிகள் ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு தந்தையாக நடித்து பாத்திரப் படைப்பின் நடிப்பை முழுமை பெறச்செய்வதில் இப்புவியிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைவேந்தன் தான் ஒருவரே என்பதை நடிகமேதை அய்யமற ஆணித்தரமாக நிரூபித்த உணர்ச்சிக்காவியம்
சின்ன வாத்தியார்?!
Watch the impeccable original dancing style of Ravi!
Last edited by sivajisenthil; 2nd December 2014 at 06:38 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd December 2014, 12:31 PM
#3114
Junior Member
Veteran Hubber
9. நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் கிரண வெப்பத்தில் பூமியின் நீர்ப் பரப்பிலிருந்து உருவான மழை மேகம் சி(வாஜி) குமாரர் என்றழைக்கப்பட்ட சிவகுமார்
சூரியன் இவ்வுலகிற்கு பயன்தர உருவாக்கிய இன்றியமையாத வாழ்வாதாரம் நீர் தரும் மழை மேகங்களே! நடிப்புக் கதிரவனால் உருவான மழைமேகமே சி(வாஜி) குமாரர் என்றறியப்பட்ட
சிவகுமார் !
நடிகர்திலகத்தின் எதிரொலியாக வளர்ந்து அவர் மறைவிற்குப் பின்னரும் அவரை நினைவுகூறும் வண்ணம் தான் என்றுமே நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்புப் பள்ளியின் மாணவரே என்று நடிப்புமழை பொழிந்து பறைசாற்றியவர் சிவகுமார். கந்தன் கருணையில் பால்வடிமுக முருகப்பெருமானாக நடிகர்திலக வீரபாகுவையே ஆட்கொண்டவர்.....உயர்ந்த மனிதன் விளையாட்டுப்பிள்ளை படங்களில் மகனாக வளர்ந்தவர்.........மோட்டார் சுந்தரம் பிள்ளையில் ..........பசும்பொன்னில் மானம் காத்த மருமகன்.....நடிப்புச்சூரியன் வலம் வந்துகொண்டிருக்கும் வரை வான்மேகமும் மழை தந்துகொண்டே இருக்கும்! சிவகுமார் அவர்கள் நடிகர்திலகத்தின் பிரதிபலிப்பாக பெருமை சேர்த்துப் பெருமை பெற்றமைக்கு நன்றிகள்!
தனது TMS குரலை தந்து இளம்நடிகரை உயர்த்திய உயர்ந்த மனிதர் நடிகர்திலகமே
தென்னாட்டு சிங்கமே ! நெஞ்சம் கலங்கி கண்கள் பனிக்கின்றனவே !
But....NT always comes back! This time besides the planets of his orbital pathway ...NT Sooriyan wants to see the plants (flora and fauna) on earth flourished green and lush because of his acting sunlight through camera-photosynthesis!! What are these plants....wait and watch!!
Last edited by sivajisenthil; 2nd December 2014 at 01:59 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd December 2014, 03:21 PM
#3115
Junior Member
Newbie Hubber
சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .
நடிகர்திலகத்தின் காதல் காட்சிகள் , Duets என்று எல்லாவற்றையும் அலசி விட்டேன்.
1952 முதல் 1960 வரை அவர் பலதரப்பட்ட கதைகள் , படங்கள், பாத்திரங்கள், நடிப்பு முறைகள் என்று அவர் focus சென்று விட்டதால் ,இந்த கால கட்டத்தில் பத்மினியோடு அவர் நடித்த ராஜாராணி,புதையல்,உத்தம புத்திரன்,தெய்வ பிறவி காதல் காட்சிகள் சிறந்தவையாகின்றன. ஆனால் இந்த கால கட்டத்தில் romance ,intimacy ,chemistry (தெய்வ பிறவியில் ஒரு காட்சியில் கழுத்தில் சொறிந்து கொள்ளும் சிவாஜியின் குறிப்பறிந்து பத்மினி சொறிந்தே விடுவார்.) இருக்குமே அன்றி erotism அன்றைய காலகட்டங்களில் யார் படத்திலும் இல்லை.ஜமுனா, மாலினி,வைஜயந்தி, சாவித்திரி ,கிரிஜா போன்றோருடன் ஒன்றிரண்டு காதல் காட்சிகள்,காதல் பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.
1961-1965- அவர் உடல் அமைப்பு ஒத்து வராததால் காதல் காட்சிகள் மிக அபூர்வம். அப்படி வந்தவை தேவிகா,சரோஜாதேவி, ஜமுனா சம்பத்த பட்ட நிச்சய தாம்பூலம், பலே பாண்டியா, இருவர் உள்ளம்,கல்யாணியின் கணவன்,அன்னை இல்லம்,ஆண்டவன் கட்டளை,புதிய பறவை,நவராத்திரி,சாந்தி,நீலவானம் படங்களில் இடம் பெற்றவை.
அதற்கு அடுத்த காலகட்டமான இளைத்து இளமை மீண்ட திராவிட மன்மதனின் இளமை திருவிழா காலமான 1966-1974. இந்த கால கட்டத்தில் அவரின் குறிப்படும் இளம் ஜோடிகளாக (அப்போதும் அவர் எங்கே பத்மினியையும்,சரோஜாதேவியையும் விட்டார்?)கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா,வாணிஸ்ரீ, பாரதி,காஞ்சனா,உஷா நந்தினி,மஞ்சுளா போன்றோரை குறிப்பிடலாம். உங்களுக்கே தெரியும் பாரதி,காஞ்சனா ஆகியோர் one movie wonders .கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த பெரும்பாலானவை performance oriented not romance centric . ஆனாலும் கே.ஆர்.வியின் செல்வம்,ஊட்டி வரை உறவு, ஜெயலலிதாவின் கலாட்டா கல்யாணம், தெய்வ மகன், எங்க மாமா ,சுமதி என் சுந்தரி , ராஜா போன்ற படங்களில் romance பாடல்கள்,காட்சிகள் நன்கு வந்திரூக்கும். உஷாவின் பொன்னூஞ்சல் படத்தை பாடல்கள், காதல் காட்சிகளுக்காக பல முறை பார்த்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் மஞ்சுளாவுடன் இரண்டே படங்கள் எங்கள் தங்க ராஜா,என் மகன் என்ற இரண்டு. எங்கள் தங்க ராஜாவின் கல்யாண ஆசை, இரவுக்கும் cute duets என்ற அளவில் சரி.
இங்கேதான் நம் வாணி வருகிறார். இணைகிறார்.இசைகிறார்.பிணைகிறார், பின்னுகிறார்,என் தூக்கத்தை கெடுத்த அத்தனை பட காட்சிகளின் ஜோடி.
1968- 1974 -உயர்ந்த மனிதன்,நிறை குடம், வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன்,வாணி ராணி .
பின்னால் 1975-1979- ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை ,நல்லதொரு குடும்பம்.(பாவ பூமியை மறப்போம்,மன்னிப்போம்) என்று அப்பப்பா!!!
என்னை ஏன் இந்த ஜோடி இத்தனை ஆட்கொண்டது?
1)Best physical compatibility in features (மூக்கு ),உடலமைப்பு,நிறம்,உயரம் என்று பிரம்மா சிவாஜிக்காக தயார் பண்ணிய pair .
2) நடிப்பிலும் ,ஓரளவு குறை சொல்ல முடியாமல் ஈடு கொடுத்தவர்.
3) நடித்த அத்தனையிலும் romance,erotism முன்னிலை படுத்த பட்டு, ultimate romantic sivaji classic வசந்த மாளிகை ஜோடி.
4)பாடல்கள் (வெள்ளி கிண்ணந்தான்,கண்ணொரு பக்கம்,மயக்கமென்ன ,இனியவளே,மேளதாளம்,எத்தனை அழகு,அலங்காரம்,ரோஜாவின் ராஜா, சிந்து நதிக்கரை )மட்டுமின்றி ,காட்சிகள் உயர்ந்த மனிதன் மர காட்சி,நிறைகுடம் வர்ணனை காட்சி,வசந்த மாளிகை plum காட்சி, வாணி ராணி உருளல், ரோஜாவின் ராஜா தியேட்டர் காட்சி, இளைய தலைமுறை பத்து நிமிட முத்த காட்சி, நல்லொதொரு குடும்பம் படுக்கை காட்சி என காட்சிகளுக்கும் குறைவே வைக்காத காதல்.
5) வாணிஸ்ரீ ,நடிகர்திலகத்திடம் தன்னை ஒப்படைத்து மெய் மறப்பார்.
6)அவர் அடுத்து என்ன பண்ணுவார் என அறிந்து தயாராய் reaction காட்டுவார். நல்லதொரு குடும்பத்தில் உதடு துடிப்பும், சிவகாமியின் செல்வனின் காது கடியும், உதாரணங்கள் .
7)நடிகர்திலகமும் 100% involvement ,interest எடுத்து காதல் காட்சிகளில் நடித்தவை வாணிஸ்ரீ சம்பத்த பட்ட படங்களிலேயே. (மன்னிக்க வேண்டுகிறேன்,மடி மீது, நெஞ்சத்திலே,பத்து பதினாறு முத்தம் முத்தம் -OK ,ஆனால் வாணியுடன் special )
8)இருவருமே காமெராவை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்வது போல ரசிகர்களின் (அனைத்து வயதினரும்)உணர் நிலை.
9)நடிகர்திலகத்தின் மிக சிறந்த இளமை நாட்களில் அமைந்த மிக சிறந்த ஜோடி.
10)வாணிஸ்ரீ ,சிவாஜியின் best admirer ,ரசிகை என்பதால் அவருடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்து அவருக்கு அனைத்திலும் ஈடு கொடுத்தவர்(சிவாஜிக்கும் ,வாணிஸ்ரீயின் grace &elegant poise,dressing sense பிடிக்கும்.).
என் உணர்வில் கலந்த அற்புதமான ஜோடி.
Last edited by Gopal.s; 4th December 2014 at 07:17 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
2nd December 2014, 03:32 PM
#3116
Junior Member
Newbie Hubber
முதல் படத்திலிருந்தே தமிழர்களின் ஒரே ஒப்பற்ற முன்னோடி சிவாஜி ,
கதை போக்கிற்கு இசைவாக பல positive energy உள்ள பாடல்களை பாத்திரங்களின் தன்மையை ஒட்டி ,பிரசார வாடை இல்லாமல் கொடுத்துள்ளார். சும்மா சில உதாரணங்கள்.....(samples )
தேச ஞானம் கல்வி , கா கா கா ,நாணயம் மனுஷனுக்கு அவசியம்,மணப்பாறை மாடு கட்டி,நான் பெற்ற செல்வம், இந்த திண்ணை பேச்சு வீரரிடம், வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே, உள்ளதை சொல்வேன், எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,எங்களுக்கும் காலம் வரும், சமாதானமே தேவை, ஓஹோஹோ மனிதர்களே ,ஆண்டவன் படைச்சான், கவலைகள் கிடக்கட்டும், பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ,வாழ நினைத்தால் வாழலாம்,யாரை எங்கே வைப்பது என்றே,புத்தன் வந்த திசையிலே போர்,கையிருக்குது காலிருக்குது முத்தையா, உலகம் இதிலே அடங்குது ,அறிவுக்கு விருந்தாகும் ,ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,ஒளி மயமான எதிர்காலம்,கேள்வி பிறந்தது அன்று, போட்டது முளைச்சுதடி கண்ணம்மா,ஆறு மனமே ஆறு,ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,ஒண்ணாயிருக்க கத்துக்கணும் ,வாழ்ந்து பார்க்க வேண்டும்,பார்த்தா பசுமரம், கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கல்வியா செல்வமா,தெய்வம் இருப்பது எங்கே,நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு,இனியது இனியது உலகம்,நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு, ஒரு நாள் நினைத்த காரியம், நான் தன்னம் தனிக்காட்டு ராஜா,ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா,ஆனைக்கொரு காலம் வந்தா,இதோ எந்தன் தெய்வம்,அம்பிகையே ஈஸ்வரியே,சுதந்திர பூமியில் பலவகை,நீங்கள் அத்தனை பேரும்,நான் நாட்டை திருத்த போறேன்,நல்லவர் குரலுக்கு,நாளை என்ன நாளை,உலகம் வெறும் இருட்டு,தங்கங்களே நாளை தலைவர்களே,இரண்டு கைகள் நன்கானால்,என்னை யாருன்னு நெனச்சே.
போதுமா, இன்னும் வேணுமா, நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?
Last edited by Gopal.s; 4th December 2014 at 07:17 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd December 2014, 04:07 PM
#3117
Junior Member
Newbie Hubber
எல்லோரையும் மயக்கிய மங்கை என்று நடிகர்திலகத்தால் புகழ பட்ட தங்கை
என்ற pathbreaking சிவாஜி anti -sentiment படத்தை 1967 (கடலூர்),1971(சொரத்தூர் ஜோதி) யில் பார்த்த பிறகு மறுமுறை நேற்று பார்த்தேன்.
என்னை ஆச்சர்ய படுத்தியது .Hats off sivaji &Thirulokchandar . formatting &execution அருமை.
ஆனால் u tube இல் மசமசவென்று உள்ளது. நல்ல DVD எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை.பழைய இருவர் உள்ளம் நிலையிலே இன்று இப்படம்.
இப்படம் ஒரு மூன்று வெவ்வேறு புள்ளிகளில் நகரும். ஆனால் இணைப்பிலே ஒரு logic ,nerrative surprise என்ற ஒரு professional perfection கொண்ட திரைக்கதை.
சிவாஜி- அவர் துயர் மிகுந்த இளமை பருவம் -தங்கை- அவர் பிரச்சினை.
அழகான முக்கோண குறுக்கீடுகளாய் நல்லெண்ணம் கொண்ட குடும்ப காப்பாள டாக்டரம்மா கே.ஆர்.விஜயா ,தோழமையுடன் கூடிய சம நிலை well wisher காஞ்சனா, ஊசலாடும் சிவாஜி அருமையாய் வந்திருக்கும்.
சூதாட்டம், அது சார்ந்த சில குழப்பங்கள் ,திருப்பங்கள், நல்லெண்ண போலீஸ் பாலாஜி என்ற action ,பொழுதுபோக்கு சார்ந்த இன்னொரு track .
ஆனால் அனைத்தையும் வழி நடத்துவது protogonist சிவாஜியின் எண்ணங்கள்,தேவைகள், குழப்பமான ethics ஆகியவை.
நடிகர் திலகம் இந்த படத்தில் பாத்திரம் உணர்ந்து நடித்த வசீகர பாங்கு சொல்லி மாளாது.
restraint மிகுந்த extravert பாத்திரம்.
மிக துயரங்களுக்கு ஆட்பட்ட, சிறையில் ஆங்கிலம் உட்பட எல்லா அறிவும் பெற்றும், சமூக அங்கீகாரம் இன்றி வறுமையில் உழன்று சூதாடினாலும் போதுமென்ற மனமும், தேவைகளின் பாற்பட்டு சூதாட்ட பிடியில் சிக்கி அதுவே தொழில்,ஆசை, பொழுது போக்கு என்ற addiction நிலைக்கு தள்ள படுவது , எந்த வித inhibition இல்லாத தன் நிலையை புரிந்த, தாழ்வு மனப்பான்மை இல்லாத extravert .
என்ன ஒரு execution ,style ,perfection . திரைக் கதையின் மூன்று புள்ளிகளிலும் பாத்திரத்தை நூல் கோர்க்கும் துல்லியத்துடன் கையாண்டிருப்பார்.
கே.ஆர்.விஜயா, காஞ்சனா ,பாலாஜி,மேஜர் அனைவருமே நல்ல துணை பாத்திரங்கள்.
எம்.எஸ்.வீ. இசை முதல் பாடல் தவிர மற்ற ஐந்தும் அருமை.(கேட்டவரெல்லாம் , தண்ணீரிலே,சுகம், இனியது, நினைத்தேன் உன்னை) பாடல்களின் lead scenes (ஏற்கெனெவே எழுதி விட்டேன்) .
எனக்கு மிக மிக பிடித்த காட்சிகள் .
மேஜர்-கே.ஆர்.விஜயாவுடன் காரில் பயணிக்கும் ,இனியது பாட்டுக்கு முந்திய காட்சி.
மழையில் நனைந்து காஞ்சனா வீட்டிற்கு செல்லும் காட்சி.
பிரிண்ட் மச மச வென்று இருந்ததால் கேமரா ,எடிட்டிங் பற்றி விமரிசிப்பது கஷ்டம்.
சிவாஜியின் குறிப்பிட வேண்டிய படங்களில் ஒன்று தங்கை. என் பாலாஜி வரிசை- ராஜா,தீபம்,தங்கை, தியாகம், நீதி.
Last edited by Gopal.s; 4th December 2014 at 07:15 AM.
-
2nd December 2014, 05:34 PM
#3118
Last edited by sss; 2nd December 2014 at 05:42 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd December 2014, 08:00 PM
#3119
Junior Member
Veteran Hubber
10. நிலைத்து நின்று கதிரொளி பரப்பும் நடிப்புச் சூரியனாரின் கிரண வெப்பத்தில் உருவான மழை மேகம் பொழிந்த நீர் ஓடைகளாக வழிந்து ஆறுகளாக ஓடிக் கலந்த கடல்பரப்பே நடிகர்திலகத்தால் தீபம், தீர்ப்பு படங்கள் வாயிலாக மறுவாழ்வு பெற்று அவர் நடிப்பின் நிழலிலேயே நாட்டாமையாக உயர்ந்த விஜயகுமார் அவர்கள்.
நடிகர்திலகத்துக்கு தம்பியாக நடிக்க உகந்த முகவெட்டு கொண்டவர். மாங்குடி மசாலா மைனராக முடிந்திருக்க வேண்டியவர் திரைவாழ்வில் தீபம் ஏற்றி உயர்வடைய வைத்தார் நடிகர்திலகம். குணச்சித்திரப் பாதையில் நடிகர்திலகத்தின் நடிப்புப் பள்ளியின் இன்னொரு மாணவராக சேரன் பாண்டியன் நாட்டாமை படங்களின் மூலம் நடிப்புத் திறனை உயர்த்தி நடிகர்திலகத்திற்கு பெருமை சேர்த்திட்டவருக்கு எமது நன்றிகள்
Last edited by sivajisenthil; 2nd December 2014 at 08:19 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd December 2014, 11:47 PM
#3120
Junior Member
Diamond Hubber
சிவாஜிகணேசன் நடித்த "ஜல்லிக்கட்டு'' படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.
சிவாஜியுடன் "ஜல்லிக்கட்டு'' படத்தில் நடித்த சத்யராஜ-க்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜ-ம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.
எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.
சிவாஜியுடன் நடித்த "ஜல்லிக்கட்டு'' அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.
கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.
அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.
இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், "தலைவா! ஷாட் ரெடி'' என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. "ஏண்டா! உங்க `தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?'' என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்' ஆகியிருக்கிறார்.
நானும் பிரபுவும் `தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜி சாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது அவரே செட்டில் "தலைவா'' என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் "வாங்க தலைவரே!'' என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.
மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.
நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.
ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.
"ஜல்லிக்கட்டு'' படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.
படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். "ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே'' என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.
விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தினதால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். "மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க'' என்றார்.
கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்' நியாயமானதுதான்.
பார்த்ததுமே "வாங்க கவுண்டரே!'' என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், "நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்'' என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.
"ஜல்லிக்கட்டு'' படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் "வேதம் புதிது'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks