-
9th December 2014, 09:51 PM
#2041
Senior Member
Diamond Hubber
டி.ஆர்.ராஜகுமாரி
அபூர்வ தகவல்கள் - 7
cinema express

"கனவுக் கன்னி', "ஆடும் மயில்', "பாடும் குயில்', "கோயில் சிற்பம்', "தந்த பொம்மை' என்றெல்லாம் அக்கால சினிமா பத்திரிகைகள் டி.ஆர்.ராஜகுமாரிக்கு கவர்ச்சிப் பட்டங்கள் அளித்தன. அழகான கண்களும் கொஞ்சும் மொழியும் கொண்ட இவர் சேலையணிந்து உடல் முழுவதும் மறைத்து நடித்தாலும், அதையும் மீறிய ஒரு கவர்ச்சி இவரிடம் இருந்தது.
5.5.1922 வெள்ளிக் கிழமையன்று தஞ்சாவூரில் ராதாகிருஷ்ணப் பிள்ளை-ரங்கநாயகி தம்பதிக்கு பிறந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. இவரது இயற்பெயர் "ராஜாயி' என்பதாகும். பள்ளியில் 3ஆம் பாரம் (8ஆம் வகுப்பு) வரை இவர் படித்துள்ளார். இவர் தனது குடும்பத்தினர் நலனையே குறிக்கோளாகக் கொண்டு, திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தார்.
டி.ஆர்.ராஜகுமாரியின் குடும்பமே ஒரு கலைக் குடும்பமாகும். டி.ஆர்.ராஜகுமாரியின் தாய்வழிப் பாட்டி குசலாம்பாள் கர்நாடக பாடகியாக விளங்கியவர். டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி பிரபல கதாநாயகி நடிகையாவார். எஸ்.பி.எல்.தனலக்ஷ்மியின் மகள்களான ஜோதிலட்சுமியும் ஜெயமாலினியும் கவர்ச்சி நடிகைகள். டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு சித்தி டி.எஸ்.தமயந்தியும் நடிகை. டி.எஸ்.தமயந்தியின் மகள் குசல குமாரியும் நாயகி நடிகையாவார். டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பி டி.ஆர்.ராமண்ணா சிறந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் ஆவார். டி.ஆர்.ராமண்ணாவின் முதல் மனைவி பி.எஸ். சரோஜாவும், இரண்டாவது மனைவி ஈ.வி.சரோஜாவும் நாயகி நடிகையர். ஈ.வி.சரோஜாவின் சகோதரர் ஈ,வி.ராஜன் (ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்) தயாரிப்பாளர்.
படப்பிடிப்பின் போது சரியான நேரத்தில் வந்து, தயாரிப்பாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் டி.ஆர்.ராஜகுமாரி. சினிமாவிற்கு வந்த பின்பே நாட்டியம் ஆட கற்றுக் கொண்டார்.
தமிழ் நட்சத்திரங்களில் டி.ஆர்.ராஜகுமாரிதான் முதன் முதலாக சினிமா தியேட்டர் கட்டினார். "ராஜகுமாரி' என்று அவர் பெயரிலேயே அமைந்த இந்த தியேட்டரை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார். சென்னை, தியாகராயநகர், பாண்டிபஜாரில் "ராஜகுமாரி' தியேட்டர் இருந்த இடம் இன்று வணிக வளாகமாக மாறிவிட்டது.
தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, மு.கருணாநிதி ஆகியோருடன் கலைத் தொடர்பு கொண்டவர் டி.ஆர்.ராஜகுமாரி. பாசம், பெரிய இடத்துப் பெண், குலேபகாவலி, பணக்காரி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துள்ளார். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த சந்திரலேகா படத்தில் வி.என்.ஜானகி ஒரு நாடோடிப் பெண்ணாக நடித்துள்ளார். மு.கருணாநிதி வசனம் எழுதிய மனோகரா, புதுமைப் பித்தன் ஆகிய படங்களில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்துள்ளார்.
"மனோகரா' படத்தில் சிவாஜியின் நடிப்பு போற்றப் படுவதற்கு, டி.ஆர்.ராஜகுமாரியின் பாத்திரமும் நடிப்பும் ஒரு காரணமாகும். குளிர்ந்த நீராக இருந்த மனோகரனை (சிவாஜியை), கொதிக்கும் நீராக மாற்றியது வசந்தசேனை (டி.ஆர்.ராஜகுமாரி) தானே.
"மனோகரா' படத்தில் சிவாஜிக்கு, வில்லி சித்தியாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, "அன்பு' படத்தில் நல்ல சித்தியாக நடித்துள்ளார்.
பி.பானுமதி தன்னைவிட வயதில் குறைந்த சிவாஜியுடன் நடித்ததைப் போலவும், செகார் ஜானகி தன்னைவிட வயதில் குறைந்த ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்ததைப் போலவும், தன்னைவிட வயதில் குறைந்த டி.ஆர்.மகாலிங்கத்துடன் ஜோடியாக "இதய கீதம்' படத்தில் நடித்துள்ளார் டி.ஆர்.ராஜகுமாரி. இப்படத்தின் நாயகி, நாயகனுக்கு அக்காள் போல் உள்ளார் என்று, இப்பட வெளியீட்டின்போது விமர்சனம் எழுந்தது.
"மதனமாலா' (1947) என்ற படத்தின் நாயகி டி.ஆர்.ரஜினி என்பவர் பவளக்கொடி படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முதல் நாயகி நடிகையான டி.பி.ராஜலக்ஷ்மி என்பவர் இதய கீதம் படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்கள் ஏற்று நடித்த ஒரே படம் "விஜயகுமாரி' என்ற படம். ராஜகுமாரி என்ற பெயரில் இளவரசியாகவும், தூயமணி என்ற பெயரில் தீவுவாசிப் பெண்ணாகவும் இரு வேடங்கள் ஏற்று இப்படத்தில் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி. இந்த "விஜயகுமாரி' படத்தின் எடிட்டர் எம்.ஏ.திருமுகம்.
டி.ஆர்.ராஜகுமாரி நடித்த முதல் சமூகப் படம் "விகடயோகி'.
இவர் பிறமொழிப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும்,"சந்திரலேகா' இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப் பட்டது. 1948இல் உருவான சந்திரலேகா 1949இல் செக்கோஸ்லேவேக்கியாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.
தமிழ்த் திரைப் படங்களிலேயே 110 வாரங்கள் திரையிடப்பட்ட ஒரே படம், டி.ஆர்.ராஜகுமாரியும் தியாகராஜ பாகவதரும் இணைந்து நடித்த "ஹரிதாஸ் படம் மட்டுமே. ஓடிய தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் "ஹரிதாஸ்' மட்டுமே.
டி.ஆர்.ராஜகுமாரி "கச்ச தேவயானி' படத்தில் குளத்தில் குளித்துவிட்டு உடலில் ஈரப்புடவையுடனும், இடுப்பில் குடத்துடனும் வரும் காட்சியும், "சந்திரலேகா' படத்தில் ரஞ்சனின் தழுவலில் இருந்து ராஜகுமாரி மயங்கியவர் போல் நடித்து நழுவும் காட்சியும், அன்றைய பத்திரிக்கைகளில் பரபரப்பான விமர்சனங்களாயின. "கச்ச தேவயானி' படத்தை 30 முறை பார்த்தேன் 40 முறை பார்த்தேன் என்று அக்காலத்தில் ரசிகர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். "கச்ச தேவயானி' படத்தில் தேவகுருவின் மகன் கச்சனும் அசுரகுருவின் மகள் தேவயானியும் காதல் புரிந்து புராண காலத்திலேயே கலப்பு மணம் செய்துள்ளனர்.
"பிரபாவதி' படத்தில் நாயகன் ஹொன்னப்ப பாகவதருடன், டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி நாயகியாக நடித்து ஒரு டூயட் பாடியிருந்தாலும், டி.ஆர்.ராஜகுமாரியும் துணை நாயகியாக நடித்து நாயகனுடன் ஒரு டூயட் பாடியுள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி தனது தம்பி டி.ஆர்.ராமண்ணாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வாழப்பிறந்தவள், குலேபகாவலி, புதுமைப் பித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
வி.நாகையா திரைக்கதை எழுதி நடித்து இயக்கிய "என்வீடு' படத்தின் நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். மேலும் டி.ஆர்.ராஜகுமாரி நாயகியாக நடித்த "பணக்காரி' படத்திலும் வி.நாகையாதான் நாயகன்.
"தங்கமலை ரகசியம்' படத்தில் பி.எஸ்.வீரப்பாவுக்கு மனைவியாகவும், நாயகி ஜமுனாவுக்கு சித்தியாகவும் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி.
டி.ஆர்.ராஜகுமாரி சொந்தக்குரலில் பாடி நடிக்கக் கூடியவராக இருந்தாலும், சில படங்களில் இவருக்கு வேறு பாடகிகள் பின்னணி பாடியுள்ளது ஒரு அபூர்வ நிகழ்ச்சியாக உள்ளது. "புதுமைப் பித்தன்' படத்தில் வரும் "மனமோகனா மறந்து போவேனா' என்ற பாடலை டி.ஆர்.ராஜகுமாரிக்காக பி.லீலா பாடியுள்ளார். "தங்கமலை ரகசியம்' படத்தில் டி.ஆர்.ராஜகுமாரிக்காக மூன்று பாடல்களை ஜிக்கி பாடியுள்ளார்.
"குலேபகாவலி' படத்தில் வரும் "வில்லேந்தும் வீரரெல்லாம்' என்ற பாடலில் டி.ஆர்.ராஜகுமாரிக்காக பி.லீலா குரல் கொடுத்துள்ளார்.
இவர் நடித்த 25 படங்களில் மொத்தம் 94 பாடல்கள் பாடியுள்ளார். இதில் இவர் தனித்து 54 பாடல்கள் பாடியுள்ளார். மற்றவர்களுடன் இணைந்து 40 பாடல்களை பாடியுள்ளார்.
லலிதா - பத்மினி சகோதரிகள் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த பவளக்கொடி, விஜயகுமாரி, இதய கீதம், அமர கீதம் ஆகிய 4 படங்களில் நாட்டியமாடியுள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "அன்பு' படத்தில் லலிதாவும் பத்மினியும் நடித்துள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "விஜயகுமாரி' படத்தில் வைஜெயந்திமாலா நாட்டியமாடியுள்ளார்.
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த "வானம்பாடி'(1962) படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்துள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி நடித்தது மொத்தம் 32 படங்கள். இதில், 21 படங்களில் நாயகியாகவும், 11 படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.
1959 இல் தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி விருது' அளித்தது.
ராஜகுமாரியாக நடித்து, ராககுமாரியாக பாடி ரசிகர்களை மகிழ்வித்து, தம் குடும்பத்தாருக்காக திருமணம் செய்யாமலேயே தியாககுமாரியாக வாழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரி தமது வீட்டிற்கு "கன்யாகுமரி பவனம்' என்று பெயர் வைத்திருந்தார். எண்: 77, அபிபுல்லா ரோடு, மதறாஸ்- 17 என்ற முகவரியில் வசித்து வந்த ராஜகுமாரி, தனது 77 ஆவது வயதில் 20.09.1999 இல் மறைந்தார்.
- சிவ.குகன்
டி.ஆர்.ராஜகுமாரி நடித்த படங்கள்
மந்தாரவதி (1941) சூரியபுத்ரி (1941) கச்ச தேவயானி (1941) மனோன்மணி (1942) சதி சுகன்யா (1942) சிவகவி (1943) குபேர குசேலா (1943) பிரபாவதி (1944) ஹரிதாஸ் (1944) சாலிவாஹணன் (1945) வால்மீகி (1946) விகடயோகி (1946) பங்கஜவல்லி (1947) சந்திரலேகா (1948) கிருஷ்ண பக்தி (1949) பவளக்கொடி (1949) விஜயகுமாரி (1950) இதய கீதம் (1950) வனசுந்தரி (1951) அமரகவி (1952) வாழப் பிறந்தவள் (1952) பணக்காரி (1953) என் வீடு (1953) 24. அன்பு (1953) மனோகரா (1954) குலேபகாவலி (1955) புதுமைப்பித்தன் (1957) தங்கமலை ரகசியம் (1957) தங்கப் பதுமை (1959) பாசம் (1962) வானம்பாடி (1962) பெரிய இடத்துப் பெண் (1963)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th December 2014 09:51 PM
# ADS
Circuit advertisement
-
9th December 2014, 10:18 PM
#2042
Senior Member
Senior Hubber
வாசு..
கோபால் சாரின் பாராட்டுக்களுக்கு என் நன்றியைத் தெரிவியுங்கள்..ம்ஹூம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றும் கூறுங்கள்..அவரிடமிருந்து அவையில் ஹை இண்டலக்ட் என்று பேர் வாங்கும் வரையில் எழுதிப் படுத்துவேன் எல்லாரையும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..… அவரும் சொல்ல மாட்டார் - நான் நிறைய எழுத வேண்டுமென்பதற்காக..(மேதாவி எனத் தமிழ்ப்படுத்திப் பார்க்கக் கூடாது எனச் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஹானர்!) (சாரை அடுத்த பாராவில் போட்டிருக்கிறேன் வாசு சார்.(ஓ இந்தப் பாராவிலேயே வந்துடுத்தோ!))
//இப்படியா போட்டுத் தாக்குவது மீண்டும் போட்டாலும் கூட.// ஹி ஹி..இதான் வாசு சார்.. தாங்க்ஸ் ஜி.
அப்புறம் எப்போதுமே உங்களுக்கு ஒரு கண்ணில் கூலிங்க்ளாஸூம் ஒரு கண்ணில் பவர் க்ளாஸூம் போடுவது வழக்கமாகிவிட்டது!..ம்ம்(ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பழைய வசனமோன்னோ..)
எழுதுங்கள் படித்தபிறகு வைத்துக்கொள்கிறேன்.
அம்புடன்
சி.க..
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
9th December 2014, 10:19 PM
#2043
Senior Member
Senior Hubber
தொழில் பாட்டுக்கள் – 8
**
மிருகம் என்றால் என்ன..? (அடப்பாவி என நெற்றிச் சுழித்தல் தெரிகிறது!)
ஐந்தறிவு உள்ளவை மிருக வகை.. ஆறறிவு கொண்டவன் மனிதன்.. அவனுக்கும் ஒரு அறிவுகுறையும் தருணம் எது..
விருப்பங்கள் தீயவாய் உள்ளத்தில் தோன்ற
மிருகம் எழுந்திடு மே
என்பார்கள் ஆன்றோர்கள்!
திருமூலர் என்ன சொல்கிறார்..
இந்த உள்ளம் என்றவொன்று மனிதனுக்கு இருக்கிறதே..அது ஒரு காடாம்..அதில் பலவித மிருகங்கள் அவ்வப்போது அலைந்து கொண்டிருக்கின்றனவாம்..என்ன டைப் மிருகங்கள்…
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுக்குள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைகள் ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குள் பால் இரண்டு ஆமே..
அது என்ன திகைக்கின்ற சிந்தை.. டபக்குன்னு சிந்தனை ஸ்தம்பிக்க வைக்கிறது என்ன விஷயமாக்கும்..யெஸ்..ஓஹ்..இந்த நடன மங்கை எவ்வளவு அழகு எத்துணை அழகாய் நாட்டியம் ஆடுகிறாள் என்பது ரசனை., இதுவே அவளுடன் ஓரிரவு துயில் கொள்ளலாம் என நினைத்தால் அது காமம்.. இது ஒரு சிங்கம்
ஓ நீங்க கிச்சாமி மாமாக்கு உறவா.. நாங்க அவர் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி மதுரையில இருந்தோம் என முன்பின் தெரியாதவரிடம் சொல்வது பேச்சுத் தொடர்பை வளர்க்கும் காரியங்கள்.. அதே சமயத்தில் அந்த மு.பி தெரியாத ரயிலில் சந்தித்த மனிதரிடம் நான் இன்னான், நான் இந்த வேலை எனக்கு இவ்வளவு சம்பளம் என் உறவுகள் பெயர் இன்னின்ன எனச் சொல்வதென்பது வெகுளித்தனம் இன்னொஸன்ஸ் என்று தமிழில் சொல்வார்கள்.. வெள்ளந்தி மனப்பான்மை இதுவும் ஒரு சிங்கம்
அழகில் மயங்கினேன், பாட்டில் மயங்கினேன், பேச்சில் மயங்கினேன், நடிப்பில் மயங்கினேன் என்று வகைவகையாக மயக்கங்கள் உண்டு.. அப்படி மயக்கம் என்பது மூன்றாவது சிங்கம்..
அது என்ன நான்கு நரிக்குட்டிகள்.. மனம், புத்தி சித்தி அகங்காரம்.. இந்த நகைக்கின்ற நகைவாங்கி, நகைபட்டு நகையாய் நகைக்க வைக்கின்ற (ஹையா புரியாத மாதிரிச் சொல்லியாச்சு) நெஞ்சுக்குள்ளே இந்த நான்கு நரிக்குட்டிகள் இருக்கின்றனவாம்.(.சித்தின்னா ராதிகாவால்லாம் கேக்கப்படாது ரவி..)
வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்னா..(யோவ் வள்ளுவர் எங்கிருந்துய்யா வந்தார் இங்க)
கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒந்தொடி கண்ணே உள..
காண்பது,கேட்பது, உண்பது, உயிர்வாழ்வது, உற்றுக் கேட்பது என இந்த ஐம்புலன்களும் ஒரு பெண்ணின் வசம் உள்ளன என்று சற்றே மயக்க சிங்கம் வந்தப்ப எழுதிவிட்டார்..
ஆக இந்த ஐம்புலன்களையும் ஐந்து ஆனைகள் என்கிறார் திருமூலர்.. இதனால பலவிதமான ஆசைகள் மனசுல அலைபாயவைக்கும்.. ஜோன்னு கடல்ல விடாம கரையத்தொட்டுத்தொட்டு திரும்பற அலைகள் மாதிரி மனசுல ஆசை அலைகளுக்கு ஓய்வேது..
இந்த ஐம்பொறிகளால நமக்கு ஆணவம் நச்சு என க் குற்றத்தன்மைகள் வந்து சேரும் என்கிறார்..
ஆக மனமென்னும் காட்டுக்குள்ள இருக்குற மிருகங்கள் இப்படி.. நிஜக்காட்டுக்குள்ள மிருகங்கள் எப்படி இருக்கும்..
நான் மதுரைக்காரன்.. பக்கா சிட்டி மேன்..(மெட்ராஸ் லாம் ஒருகாலத்தில் கனவு) எனில் மதுரை தான் சிட்டி..அங்கே மிருகங்கள் என்று பார்த்ததெல்லாம் கோடி வீட்டு சோமுவின் பாமரேனியன் ஜிம்மி, பி.4 போலீஸ் ஸ்டேஷன் அருகே பசும்பால் கிடைக்கும்.. சமயத்தில் மாடையே ஒரு ஓரத்தில் கட்டி க் கறந்து நுரை பொங்கப் பொங்க பிளாட்பாரத்தில் ஒரு பெஞ்ச்சில்\ வாயகன்ற பாத்திரத்துடன் இருக்கும் கடையில் விடுவார்கள்.. ஸோ மாடு.
அப்புறம் ச்சும்மா சலனப்பட்ட கண்களோட பார்க்கும் பருவமங்கை மாதிரி சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் தாவிச்செல்லும் பக்கத்து வீட்டுப் பூனை..கூடவே ஷ்ஷீ என விரட்டிய பக்கத்து வீட்டு நங்கை.. இந்தப்பக்கம் ஆட்டுமந்தையில் எதிர்காலம் தெரியாமலேயே உற்சாகமாகத் துள்ளியிருந்த ஆடுகள், பெருமாள் கோவில் மீனாட்சி அம்மன் கோவில் ஆனை..இவ்வளவு தான்
மற்றபடி சிங்கம் பார்த்தது அடிமைப் பெண் புலி பார்த்தது நவராத்திரி மற்றும் சில காட்டுப் படங்கள் தான்..முதன் முதலில் நேரில் பார்த்தது எங்கே..
ஒரே ஒருதடவை.. அரசரடி மைதானத்தில் விவரம் அறியாத வயதில் வீனஸ் சர்க்கஸோ ஜெமினி சர்க்கஸோ வந்திருக்க அம்மா அண்ணன் கூட்டிச் சென்ற நினைவு வெகு வெகு புகையாக..
யெஸ் சர்க்கஸ்..
கலர்கலராக வாழ்க்கையின் வண்ணங்களை முன்கூட்டியே சொல்லும் வண்ணம் இருந்த கூடாரம்..உள் செல்கையில் பளபளா விளக்குகள், பளபள (சற்றே குறைந்த) உடைகளுடன் பெண்கள், கட்டு மஸ்தான ஆண்கள்..குள்ளமாய்ச் சிரிக்க வைக்கவேண்டுமென்பதற்காக மெனக்கெடும் பஃபூன்.. அழகாய் வட்டமாய்க் கட்டப்பட்ட சாரப் பலகைகள்.. அப்புறம் இதோ
எதிர்பார்த்த சிங்கம்,புலி கரடி யானைகளின் அணிவகுப்பு..
உயிர் துச்சமாய் இந்தக் கோடியிலிருந்து அந்தக்கோடியில் தாவும் சாகசர்கள்..
அன்ஃபார்ச்சுனேட்லி ஒரே ஒருதடவை தான் பார்த்திருக்கிறேன் சர்க்கஸை..பின் பார்த்ததெல்லாம் திரைப்படங்களில் தான்..
கலகலத்த சோகமதைக் காட்டாமல் ஆடை
பளபளத்து மின்னிற்றே பார்..
நிஜமாகவே அன்றைய நாட்களில் அவ்வளவு மிருகங்களுக்கும் சாப்பாடு., ஆட்கள் குமரிகள் சம்பளம் பயிற்சி கூடாரம், ரயில் செலவு, எனக் கைக்கொண்டு சர்க்கஸ் நடத்தியவர்கள் திறமை மிக்கவர்கள் தான்..
மாறுகின்ற காலத்தில் மாறாமல் நின்றவர்க்கு
ஆறுதல் சொல்லிடலா மா..
கஷ்டம் தான்.. சில காலம் முன்னால் கூட இணையத்தில் ஒரு நண்பர் சர்க்கஸ் சமீபத்தில் பார்த்தேன்..ஒன்றும் மாற்றமே இல்லை.. ஏன் இப்படியே இருக்கிறார்க்ள் என்பது போல் எழுதியிருந்தார்..
ஜேம்ஸ் பாண்ட் படங்கள் டையமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர், ஆக்டோபஸ்ஸி – ராஜ்கபூர் படம் (பெயர் மறந்து விட்டது) நினைவுக்குவருகின்றன..
கொஞ்சம் சிறந்த சிந்தனாவாதி மாதிரி சிந்தித்து டி.வி பார்த்தபடி (ஆன் செய்யாமல்!) யோசித்ததில் தின வாழ்க்கையே ஒரு வித சர்க்கஸ் போலத் தான் இருக்கிறது.!
*
குறும்புத் தனம் பொங்கி வழியும் ந.தி, கண்களில் குறும்பு மின்னும் தேவிகை – சர்க்கஸ் காரம்மா என வந்த படம் குலமகள் ராதை.. பாடல் எத்தனை தடவை பார்த்தாலும் எத்தனை தடவை கேட்டாலும் எத்தனை தடவை போட்டாச் சொன்னாலும் அலுக்காதாக்கும்..
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
http://www.youtube.com/watch?feature...&v=7-MeOefFKHs
*
ஹை.. கலர்ப்படம். இளமை ம.தி...ப்ளஸ் க.பை சர்ரூ போதாக்குறைக்கு காஞ்ச் வேற.. சஸ்பென்ஸ் குறையாமல் இருந்த சர்க்கஸ் படம் பறக்கும் பாவை..இந்தப் பாடலும் தான் வெகு அழகு..
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
*
அப்புறம் வரட்டா..
Last edited by chinnakkannan; 10th December 2014 at 12:31 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th December 2014, 10:47 PM
#2044
Senior Member
Seasoned Hubber
சி.க
அடேயப்பா இப்பொழுதெல்லாம் உமது எழுத்து அசுர வேகத்தில் சும்மா தூள் கிளப்புதே .. ஹ்ம்ம்ம் கலக்குங்க
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th December 2014, 01:02 AM
#2045
Senior Member
Senior Hubber
ராஜேஷ்.. மிக்க நன்றி..
*
அங்கிட்டு ஆரம்பிக்கறப்ப வந்து ந.தி பற்றி எழுதவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று நண்பருக்கு நண்பர் எழுதியிருக்கிறார்..
ஆரம்பிக்கறச்சே தான் எழுதணுமா ஏன் இப்பவே எழுதிப்பார்த்தால் என்ன என்று யோசித்தால்.. ம்ஹூம் ஒன்றுமே தோன்றவில்லை..
எல்லாரும் எல்லாவற்றைப் பற்றியும் வெகு சிறப்பாக எழுதியாயிற்று.. ந.தி படங்கள், பாடல்கள், இணைந்து நடித்தவர்கள், நடை உடை பாவனை, உடனிருக்கும் பாத்திரங்கள் நடிகையர் துணை நடிகைகள் நகைச்சுவை நடிகர்கள் என.. என்னதான் விட்டு வைத்திருக்கிறார்கள்..எல்லாரும்..அதுவும் ந.தியின் தீவிர பக்தர்கள் விதவிதமாய் எழுதிப் பார்த்துவிட நானோ சிறுவன்..துகளிலும் துகளான குட்ட்டி ரசிகன்..நானென்ன எழுத இயலும்..
ஊற்றாகக் கற்பனை உள்ளத்தில் பொங்காமல்
ஆற்றாமை கொண்டதே நெஞ்சு..
யோசிக்க யோசிக்க வேதனை அதனால் சற்றே மேலெழும்பும் கோபம்
சீறி வரும் நோக்குகொண்ட சீர்மிக்க மங்கையின் பார்வை போல், சர்ரென்றுச் சீறும் ராக்கெட் வெடியைப் போல், சீறிப் பாய்ந்து வால் முறுக்கிவிட இலக்கில்லாமல் சுழலும் காளையைப் போல்,, இன்னும் பல சீற்றங்களை உள்ளடக்கி எழும்பும் போது பல கைகள் விரித்து அங்குமிங்கும் ஒரே சமயத்தில் அழிக்கும் சுனாமியைப் போல.க்க்க் கோபம் வருகிறது ..என்னைப் பற்றி எனக்கே..
ஹை.... கோபத்தை ப் பற்றி எழுதினால் என்ன… இங்கிட்டு அப்படியே கொஞ்சம் பாட் கொடுத்தா த்ரெட்ல எழுதினதுக்கு ஜஸ்டிஃபையும் ஆகிவிடுமோன்னோ. (கண்ணா சமர்த்துடா நீ).
என்றால்….முதலில் கண் தெரிகிறது சிவக்கண் சிவந்த கண் துடிக்கும் நடிப்பில் ஒற்றைக் கண்.. சிவாஜி கண்..
பொங்குதேர்வாவி அஞ்சிறைத் தும்பி
காவும் செப்பாது கண்டறியுமோ
பயிரியர் செரிய…அரிய கூந்தலும் உளவோ
நீயறியும் பூவே…( நினைவிலிருந்து எழுதுகிறேன்)
நக்கீரர் நை நை என்று பேசப் பேசக் கொஞ்சம் கொஞ்சமாய் அடிவயிற்றிலிருந்து கனன்று மேலெழும்பும் கோபம் மெல்ல மெல்ல க் கன்னச் சதைகளில் ஏறி துடிக்கவைத்து கண்கள் மூக்கு வாய் என்று எல்லாம் துடிக்கத் துடிக்க குரல் உச்சியிலேறி பின் திறக்கும் நெற்றிக்கண்ணில் தெறிக்கும் கோபம்.. ந.தி.. மறக்க முடியுமா..
*
கண்ணா எங்க
போய்ட்டான்
போய்ட்டானா… …. எனச் சீறி.. அவன் என்னைக் கண்டிக்கறச்சே நா அவனைக் கண்டிக்கக் கூடாதோ எனக் கொள்ளும் கோபம்..வேறொண்ணுமில்லைடி..கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து ஆத்த விட்டுப் பறந்து போய்டுத்து எனத் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளப் பார்க்கும் கோபம்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த்..கெளரவம்.. ந.தி.. மறக்க முடியுமா…
*
அப்படியே போனேன்..ஹ…ஹா. அரிவாளால போட்டேன் ஒரு போடு ஒரு தலையில்லை நிறைய தலை உருண்டுச்சு(வசனம் மறந்து விட்டது) பழிவாங்கிட்டேன்.. பழிவாங்கிட்டு இங்க வந்தா நீ போலீஸ் உன்னைத் துரத்தி வருதுன்னு சொல்ற ஹஹ்ஹா.. அவங்க உன்னைத்தேடல்ல என்னைத் தேடி வந்திருக்காங்க..– மிரட்டல், உருட்டல், முழிக்கும் விழிகள் முரட்டு உடல் கலைந்த தலை குலைந்த ஆடையுடன் எதிரில் ஆட்டுக்குட்டியென நடுங்கிக் கொண்டிருக்கும் சாவித்திரியிடம் பேசும் கோபக் கார ந.தி.. நவராத்திரி.. மறக்க முடியுமா..
*
நா மரியாதையாத் தான் கூப்பிட்டேன் ஃபாதர்..அவன் வரமாட்டேன்னான்.. ஒரே அறை விட்டேன் ஓரே ஒண்ணு தான் ஃபாதர்..- எனக் கோபமாய்ச் சொல்லும் ஆண்ட்டனி என்ற அருண்.. ஞான ஒளி ந.தி மறக்க முடியுமா..
*
அரங்கனுக்குத் தானே திருப்பணி செய்கிறேன்..என்னை எதற்குக் கப்பம் கட்டவேண்டும் என்கிறான் சோழன்..ம்ம் நான் அவனுக்குப் பாடம் கற்பிக்கிறேன்.. எனச் சீறும் திருமங்கை மன்ன சீற்றம்..விழிகளில் தெறிக்கும் கோபம்… மறக்க முடியுமா..
*
மனைவி மகள் களங்கப்பட்டதை மறைத்து நாடகமாட,அது தெரிந்துவிட குமுறிப் பொங்கியெழுந்து பாடலாய்ப் பெருகும்கோபம்…
குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும்
அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்குப் புரியும்
காட்டுக்கதை வீட்டில் கூட நடக்குது கண்ணா
கடவுள் கண்ணை தீபப் புகை மறைக்குது கண்ணா
எனக் குழந்தையிடம் பாடும் நீ.என்ன கண்ணனா நான் என்ன கம்சனா ஜெனரல் சக்ரவர்த்தி ந.தி கோபம் மறக்க முடியுமா..
*
அழகாய் நாட்டியமாடி மேடையிலும் மனதிலும் நாட்டியமாடிப் பின் மாறிவிட்ட நங்கை தானாய் வந்து வம்புக்கிழுக்க…கண்களில் சீற்றம்.. நான் எங்கயும் ஓடல்ல.. இந்தத் தில்லானாவ வாசித்து உன் கால ஒடிக்கல..பாக்கலாமா பாக்கலாம் எனச் சீற்றத்துடன் வெளியில் சென்று திரும்பி அதே சீற்றத்துடன் பாக்கலாண்டி எனச் செல்லும் சிக்கல் சண்முக சுந்தரமாய் வாழ்ந்த ந.தி.. மறக்க முடியுமா..
*
முதல் மரியாதையில் மனைவி கணவனை எதிர்ப்பதற்காக சொந்தத்தை அழைத்து விருந்துபோடும் போது வரும் ந.தியின் கண்களில் கனலாய்ச் சுழலும் கோபம்.. கர்ஜனை மறக்க முடியுமா
*
கோபத்தில் தங்கையுடன் இருந்த காதலனைக் கொன்றுவிட்டேன் எனத் தவிக்கும் ந.தியின் நடிப்பு அன்புக் கரங்கள்..மறக்கமுடியுமா..
*
இன்னும் பல ந.தியின் கோப நடிப்பாற்றல்கள் வரிசை கட்டி நிற்கின்றன..வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆலய மணி பைலட் ப்ரேம் நாத் எனப் பல மனதில் முட்டி மோதுகின்றன.. நீங்கள் எழுத மாட்டீர்களா என்ன..
*
பாடல்போடலாமெனத்தேடினால் வாசு சார் அக்குவேறு ஆணிவேறாக அலசிய லிங்க் தான் கிடைத்தது..அதுவும் வொர்க் ஆகவில்லை..
உங்கள் அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணெதிரே பெண்ணிருக்க
பெண்ணெதிரே கொஞ்சம் வரலாமா
கோபம் வரலாமா கொஞ்சம் வரலாமா
எனில் வேறு பாட் போட்டு விட்டேன்..
மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மகாராணி அவனை ஆளுவாள்…
http://www.youtube.com/watch?feature...&v=DBVdIzzgwgc
(வாசக தோஷ சந்தவ்யஹ..)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th December 2014, 07:25 AM
#2046
Senior Member
Seasoned Hubber
சி.க. சார் ... ஆசை தீர கோபப் படுங்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th December 2014, 08:23 AM
#2047
Junior Member
Newbie Hubber

Originally Posted by
chinnakkannan
வாசு..
கோபால் சாரின் பாராட்டுக்களுக்கு என் நன்றியைத் தெரிவியுங்கள்..ம்ஹூம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றும் கூறுங்கள்..அவரிடமிருந்து அவையில் ஹை இண்டலக்ட் என்று பேர் வாங்கும் வரையில் எழுதிப் படுத்துவேன் எல்லாரையும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..… அவரும் சொல்ல மாட்டார் - நான் நிறைய எழுத வேண்டுமென்பதற்காக..(மேதாவி எனத் தமிழ்ப்படுத்திப் பார்க்கக் கூடாது எனச் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஹானர்!) (சாரை அடுத்த பாராவில் போட்டிருக்கிறேன் வாசு சார்.(ஓ இந்தப் பாராவிலேயே வந்துடுத்தோ!))
சி.க..
சி.க சார்(நீங்கள் விரும்புவதால் சேர்க்கிறேன்),
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் என்னை புரிந்து கொள்ளுங்கள். தமிழர்களின் மடமையை கண்டு எனக்கு கொதிப்பே உண்டு. (என் நகைசுவை உணர்வை,எழுத்தை எல்லாவற்றிலும் காட்ட இயலாது). பாரதியை,புதுமைப்பித்தனை,அசோகமித்ரனை,புறக்கணித ்த சமூகம், ருத்ரையா,மகேந்திரன் போன்ற சத்யஜித்ரே,அடூர் கோபாலகிருஷ்ணன்,ஷ்யாம் பெனெகல் இவர்களுக்கு நிகரான திரை மேதைகளை புறக்கணித்து பாவம் தேடி கொண்டது. அற்ப அரசியல் சுயநல காரணங்களால் மூளை சலவை செய்யப்பட்டு ,சிறு வயது முதலே பொய்களை கேட்டு வளர்ந்த ஒரு தவறான தலைமுறை (மாறவும் விரும்பாத)பிரிந்து நின்ற தமிழ் சமூகம் ,சிவாஜி போன்ற நிகரற்ற மேதைகளுக்கு அளிக்க வேண்டிய கௌரவத்தை கிடைக்காமல் செய்து தமிழர்களை தலை குனிய வைத்தது. இவற்றுக்கு தமிழன் என்று தலை நிமிர்த்தும் நாம் தார்மீக பொறுப்பேற்றே ஆக வேண்டும். நல்லவேளை பார்க்கவில்லை என்ற தங்கள் வேடிக்கையான வினோத புறக்கணிப்பால் நான் சற்றே தடுமாறி ,ஒரு பதிவை சிறிதே கோபத்தில் இட்டேன். (தங்கள் புறக்கணிப்பு ருத்ரையா மரணத்தில் முடிந்தது)தாங்கள் இன்னும் மறக்கவில்லை. நான் மறந்து மேற்சென்று விட்டேன்.
எனக்கு யார் மீதும் தனிப்பட்ட கசப்புணர்வோ,வெறுப்புணர்வோ கிடையவே கிடையாது. அந்தந்த தருணங்களின் உண்மை வெளிப்பாடு. கசக்கலாம்,இனிக்கலாம்,புளிக்கலாம்,துவர்க்கலாம் ,ஆனால் வாழ்வை அசல் சுவையாக்கும்.
-
10th December 2014, 09:12 AM
#2048
Senior Member
Seasoned Hubber
காலை வணக்கம்
சில தினங்களுக்கு முன் ராட்சசியின் பிறந்த நாள் ..
இதோ ராட்சசி கலக்கும் கன்னட பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th December 2014, 11:53 AM
#2049
Senior Member
Diamond Hubber
//அப்புறம் எப்போதுமே உங்களுக்கு ஒரு கண்ணில் கூலிங்க்ளாஸூம் ஒரு கண்ணில் பவர் க்ளாஸூம் போடுவது வழக்கமாகிவிட்டது!..ம்ம்(ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பழைய வசனமோன்னோ..)
எழுதுங்கள் படித்தபிறகு வைத்துக்கொள்கிறேன்''.
அய்யய்யோ!
என்ன தப்பு செய்தேன்னு தெரியலையே கண்ணா!
ஒரு கண்ணுல வெண்ணெய் புரியுது. கோபால் வெண்ணைய்னு புரியுது.
ஒரு கண்ணுல சுண்ணாம்பு. யாராக்கும் அது? அந்த மாதிரி தப்பெல்லாம் வாசு பண்ணவே மாட்டானே!
சி.க வேற எல்லாப் பதிவையும் கோபமா வேற போட்டிருக்கார். சாது மிரண்ட ராமச்சந்திரன். ம்.. என்ன நடக்கப் போகுதோ!
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
Last edited by vasudevan31355; 10th December 2014 at 06:02 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th December 2014, 11:55 AM
#2050
Senior Member
Diamond Hubber
//ஜேம்ஸ் பாண்ட் படங்கள் டையமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர், ஆக்டோபஸ்ஸி – ராஜ்கபூர் படம் (பெயர் மறந்து விட்டது) நினைவுக்குவருகின்றன..//
Bookmarks