Page 234 of 397 FirstFirst ... 134184224232233234235236244284334 ... LastLast
Results 2,331 to 2,340 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2331
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    CK & Raj: I cannot think of a tfm song in Lavangi raagam. Here is an attempt by music director (Bombay) Ravi in the Malayalam movie NAKHAKSHATHANGAL (1986); Jayachandran reciting a poem by O.N.V. Kurup...



    Here is Prince Aswathi Thirunal Rama Varma (of the Travencore Royal Family) demonstrating Lavangi:


  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2332
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,
    உங்களுக்காக சில கடிதப் பாடல்கள்:















    மிகச் சமீபத்தில் தான் ராகவேந்திராவும் 'சேரன் பாண்டியனி'ன் 'காதல் கடிதம் வரைந்தேன். வந்ததா' எனக் கேட்டிருந்தார்.
    Last edited by kalnayak; 22nd December 2014 at 10:36 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. #2333
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    விகடன் குழும தலைவர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் மறைவு சற்று தாமதமாக தெரிய வந்தது . மேலும் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் நமது பதிவுலக அருமை நண்பர் திரு கோபால் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதும் இன்று தான் தெரிய வந்தது. திரு கோபால் அவர்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் பதிவு இது

    gkrishna

  6. Likes Russellmai liked this post
  7. #2334
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசுவின் முள்ளும் மலரும் கதாபாத்திரங்கள் விவரிப்பு அருமை.
    எஸ் ஆர் தசரதன் மிக சிறந்த நடிகர் . கமல் கால கட்டத்தவர் . A P நாகராஜன் அவர்களிடம் பல படங்களில் உதவி இயக்குனர் ஆக பணி புரிந்தவர் .
    கமலஹாசனே பல பேட்டிகளில் இவரதுத் தனித்திறமைக் குறித்துத் தெரிவிக்கும் அளவிற்கு நடிப்பில் பெயர் பெற்றவர்.



    நீ ஒரு மகாராணி திரை படத்தில்

    gkrishna

  8. #2335
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thank you Vasu,c.k,Krishna.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #2336
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    முள்ளும் மலரும்' பங்களிப்பாளர்கள்...

    தொடர்கிறது....

    மகேந்திரன் என்ற மாயஜாலம். (1)



    திரைக்கதை வசனம் இயக்கம் மூன்று பொறுப்புகளையும் ஏற்றவர் இயக்குநர் மகேந்திரன்.

    இதுவரை வெளி வந்த தமிழ்ப்படங்களில் இருந்து இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட பாணி இது.


    அதற்கு முன்னால்...

    பொதுவாகவே தமிழ்ப்படங்கள் இன்றுவரை மசாலா மாயைகளே. பாடல்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விலகி, பின் வசன நடையில் மயங்கி, பிறகு உச்ச நட்சத்திரங்கள் என்ற ஆதிக்க முதலைகளின் வாயில் சிக்குண்டு வெளியே வர இயலாமல் இன்று வரை நிலை தடுமாறுகின்றன. மிகப் பெரிய நிறுவனகளின் அடிமை இயக்குனர்களே அப்போதெல்லாம் சிறந்த இயக்குனர்களாக மதிக்கப்பட்டார்கள். பிரம்மாண்டத்திற்கும், பட வெற்றிகளுக்கும் மட்டுமே உத்திரவாத இயக்குனர்கள் அவர்கள். இவர்களே பெரிய இயக்குனர்களும் கூட. சுந்தர்ராவ் நட்கர்னி, எல்லீஸ் ஆர் டங்கன், எஸ்.எஸ்.வாசன், பீம்சிங், ஏ.சி.டி , நீலகண்டன், ஸ்ரீதர், கே.சங்கர், ராமண்ணா, ராஜசேகர், எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, சங்கர், இப்போதைய லிங்கா ஃபேம்(?!) ரவிக்குமார் வரை பணம் கட்டினால் ஜெயிக்க வைக்கும் உத்திரவாதக் குதிரைகள். நல்ல படம் பண்ணுவதைக் காட்டிலும் 'நல்லா' பணம் பண்ணி தயாரிப்பாளர்களின் கல்லா நிரப்பும் சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. அதனால் இவர்கள் நல்ல படங்களே அளிக்கவில்லை என்றும் கூறி விட இயலாது. நம் தமிழ் மண்ணின் ரசனைக்கேற்ப சில சமயம் கொஞ்சம் அதையும் மீறி இவர்கள் சில முயற்சிகள் எடுத்து வெற்றி கண்டதுண்டு. உதாரணம் ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்', சங்கரின்' ஆலயமணி' என்று கொள்ளலாம். சிவாஜியா? பீம்சிங், ஏ.சி.டி... எம்.ஜி.ஆரா? நீலகண்டன், திருமுகம்... ரஜினியா? எஸ்.பி.எம், ராஜசேகர், சுரேஷ் கிருஷ்ணா.... கமலா? சிங்கீதம் சீனிவாசராவ், கே.விஸ்வநாத், கமல் என்று பாமரனும் சொல்லும் அளவிற்கு உச்ச நடிகர்களை இயக்கி இன்றுவரை கூட ரசிகர்களிடையே கலவரங்களை கருத்து வேறுபாடுகளை ஸ்ட்ராங்காக விதைத்துவிட்ட புண்ணியம் இவர்களுக்கு உண்டு. (இதில் விஸ்வநாத் தனிரகம். இசைநாத ரசிகர்களுக்கு மட்டும் விஸ்வநாத் பரப்பிரம்மம்.)

    மகேந்திரன் மாதிரி முயற்சிகள் எடுக்காமலில்லை. சிலர் எடுத்தது உண்டுதான். உதாரணமாக நிமாய்கோஷ் இயக்கிய 'பாதை தெரியுது பார்', எஸ்.பாலச்சந்தரின் 'அந்த நாள்' பீம்சிங்கின் 'யாருக்காக அழுதான்?' போன்ற படங்களைச் சொல்லலாம். இயக்குனர்கள் காலம் இல்லாமல் நடிகர்கள் காலமாக இருந்ததால் (இப்போது கூட அப்படித்தான் இருக்கிறது) இயக்குனர்கள் என்று தனியாக சிரத்தையாகப் பேசப்பட வைக்க இயலவில்லை. தோல்வியில் துவண்டு வேண்டாம் விஷப் பரிட்சை என்று ஓடத்தான் இவர்களால் முடிந்தது. இதற்கே பீம்சிங் மிகப் பெரிய வெற்றிப்படங்களின் இயக்குனர். எஸ்.பாலச்சந்தர் ஆங்கிலப் படங்களின் திரைக்கதை பாணியைக் கொண்டு வந்து முக்கியமாக (பிளாஷ் பேக் யுத்திகள்) புது முயற்சிகளுக்கு அடிக் கோலிட்டார். அப்போது புதுமை வேண்டும் என்று படிப்பறிவோடு கலைத்தாகம் கொண்டு அலைந்த அறிவார்ந்த ரசிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒரு சதம் கூட தேறாது. இந்த நிலையில் புது முயற்சிகளுக்கு ஆதரவும் மிகக் குறைவு. முயற்சி எடுத்தவர்கள் இன்னும் குறைவு.

    இப்படிப்பட்ட நிலையில் நகத்தைக் கடித்தபடி ஒரு இயக்குனர் வந்து தமிழ்ப் பட உலகின் தலை விதியை 'கல்யாணப் பரிசு', 'நெஞ்சில் ஓர் ஆலயம்' என்ற அற்புத படங்களை சோகம் பிழியக் கொடுத்து இயல்பு கெடாத அளவான வசனங்களுடன், இயக்குனர்களின் பங்கை, அவர்களுக்கிருக்கும் மரியாதையை தமிழ்ப்பட உலகிற்கு எடுத்துக் காட்டத் தொடங்கினார். 'புதுமை இயக்குனர்' என்று பெயர் பெற்று இயக்குனர் ஒருவருக்கு ரசிகர்கள் மன்றம் தொடங்கும் அளவிற்கு இவரது ஆதிக்கம் வளரத் தொடங்கியது. இது தமிழ் சினிமா ஆரோக்கியத்தை நோக்கி எடுத்து வைத்த அடுத்த அடி என்றும் சொல்லலாம்.


    இந்த நிலையில் 'ராகினி கிரியேஷன்ஸ்' பாலச்சந்தர் என்ற அற்புதமான மனிதர் 1965 களில் அதுவரை இருந்த சினிமா சரித்திரத்தை மாற்றி எழுத நாடக மேடையிலிருந்து சினிமா மேடையில் கால்தடம் பதித்து கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கொள்ள ஆரம்பித்து இயக்குனர் என்பவர் யார் என்று எல்லோருக்கும் புரிய வைக்கத் தொடங்கினார். (இந்தக் கால கட்டத்திற்கு முன்னால் ஸ்ரீதரும் சில சோதனை முயற்சிகள் எடுத்து தோல்வியுற்று துவண்டு போய் இருந்தார். தவிரவும் அவராலும் ஒரு ஆரம்பகால முழுமையான இயக்குனராக பின்னாட்களில் பரிமளிக்க முடியாமல் பல சறுக்கல்களைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் இருந்த சரக்கும் தீர்ந்து விட்டதோ என்ற சந்தேகமும் வந்துவிட்டது. ஸ்ரீதர் என்ற தனித்தன்மை அவரிடம் தொடராதது பெரும் குறை}

    உச்ச நட்சத்திரங்கள் இல்லாமல், காட்சி பிரம்மாண்டங்கள் இல்லாமல், வண்ணங்கள் தெளிக்காமல், சண்டைக் காட்சிகள் வைக்காமல் இயல்பான வசனங்களோடு நம்மிடையே உலா வரும் மனிதர்களை ஓரளவிற்கு திரையில் உலா வர வைத்தார் பாலு. ஆனால் இவரது படங்களின் கதா பாத்திரங்கள் அதிபுத்திசாலித்தனமான கட்டமைப்பைக் கொண்டதாய் இருந்தது ஒரு வீக்னெஸ். ஒரு சாதா கேரக்டர் கூட சோதா போல் இல்லாமல் மேதை அளவிற்கு பேசும் வசனங்கள் முன்னிலை வகித்ததால் கேரக்டர்களின் இயல்புத் தன்மை குறைந்து பாலச்சந்தர் என்ற தனி மனித இயக்க முத்திரை அதிகமாகி 'இது பாலச்சந்தர் படம்' என்று பாமர ரசிகன் சொல்லுமவிற்குக் கூட வளர்ந்து இருந்தாலும், கலை ஆர்வலர்களை சிலாகித்துப் பேச வைத்தாலும், தனிமனித மேதாவித்தனம் அங்கு வெற்றி பெற்று இயல்புநிலை பின்னுக்குத் தள்ளப்பட்டது என்பது என் தாழ்மையான கருத்து.

    ஆனால் எது எப்படி இருந்தாலும் 'இயக்கம் என்றால் அது பாலச்சந்தர் தான்' என்று ஒட்டு மொத்தத் தென்னகத்தையும் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட முதல் பெருமை 'இயக்குனர் சிகரம்' பாலச்சந்தர் அவர்களையே சாரும்.

    ஜெயகாந்தன், பீம்சிங் கூட்டணி யதார்த்த படங்களில் (ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள்) தனியாக கொடி கட்டி பரிமளிக்கத் தொடங்கி மசாலா மாயையில் மயங்கிக் கிடந்த ரசிகர்களை ஓரளவிற்கு தன் பக்கம் வரவழைத்தது. இந்தப் படங்கள் மிக நல்ல முயற்சி என்றாலும் பாராட்டுதல்களை, அவார்டுகளைக் குவித்தாலும், 'டப்பு' குவிப்பதில் மண்ணைக் கவ்வின. சாதாரண பாத்திரங்கள் திரையில் உலாவுவதும், இயற்கையான சம்பவங்கள் என்ற போர்வையில் சதா சாப்பிட்டுக் கொண்டே, நடந்து கொண்டே சுரத்தே இல்லாமல் பேசுவதும் படம் பார்ப்பவர்களின் பொறுமையை நிரம்ப சோதனை செய்தன. நான் முன்பு சொன்னது போல உச்ச நட்சத்திரங்கள் தங்களுக்குப் பிடித்தமான இயக்குனர்களை வைத்துக் கொண்டு அனைவரும் ரசிக்கும்படியான பொத்தம் பொதுவான ரசிக்கத் தகுந்த படங்களை கமர்ஷியலாகக் கொடுத்து தங்களுடைய 'இமேஜு'ம் போகாமல் பார்த்துக் கொண்டு வெற்றி கண்டு வந்தனர்.

    ஆக ஒன்று மகா மேதாவித்தனம்... இன்னொன்று அறுவை என்ற நல்ல ரசமான ரகம்... இன்னொன்று என்றுமே அழியாத மசாலா மாயை.... மூன்று பிரிவுகள். ஒன்று ஏறினால் ரயில் ரகம். ஒன்று இறங்கினால் ஜெயில் ரகம். இன்னொன்று பாதுகாப்பான பொதுவான பஸ் பயணம்.


    இப்போது மகேந்திரனுக்கு வந்து விடுவோம்.

    இந்த சூழ்நிலையில்தான் வறண்ட பாலைவனத்தின் (வறண்ட பாலைவனம் இல்லை... அற்புதமான பாலைவனம்தான். வேண்டுமானால் சினிமாவைக் கலையாக, உயிராகப் பாவிக்கும் புதுமை விரும்பிகளின் புலம்பல்கள் என்று பொருள் கொள்ளலாம்... நமது கோபால் சார் போல.) பால் வெள்ளமாக பொங்கி வந்தார் இயக்குனர் மகேந்திரன் பாலு மகேந்திரா என்ற தேனையும் சேர்த்து அள்ளி எடுத்துக் கொண்டு எந்த பந்தாவும் இல்லாமல் எந்த ஆடம்பரமும் இல்லாமல் கமர்ஷியல் பிளஸ் ஆர்ட் என்ற சக்சஸ்ஃபுல் பார்முலாவைக் கையில் எடுத்துக் கொண்டு.

    மகேந்திரன் கற்று நமக்களித்த மாய வித்தைதான் என்ன?

    ரொம்ப சுலபான வித்தை

    ஒரு அடிமட்ட பாமர ரசிகனைக் கூட ஒரு கலா மேதையான ரசிகனுடன் ஒன்றாக அமரவைத்து, இருவரையுமே ஒரு சேர படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒன்ற வைத்து, அணு அணுவாக ரசிக்க வைப்பது.

    இந்த பார்முலாவைத்தான் மகேந்திரன் இலகுவாகப் புரிந்து கொண்டு, அதை அற்புதமாக எடுத்துக் கொண்டு வந்து 'முள்ளும் மலரும்' என்று அனாயாசமாகச் சாதித்தார். முள், மலர் என்ற இருதரப்பு குணங்கள் கொண்ட ரசிகர்களையும் ஒன்றாக இன்புற வைத்தார் படத்தின் தரமோ இயல்பு நிலையோ சிறிதும் கெடாமல், பாதிக்காமல்.

    ஒரு படம் ஆர்ட் பிலிம் என்ற முத்திரை குத்தப்பட்டு பாமரர்களால் ஒதுக்கி தள்ளி விட்டுவிடப் படக் கூடாது. கமர்ஷியல் அயிட்டங்கள் பிடிக்காது என்ற கலா ரசிகனை இழந்து விடவும் கூடாது. (இந்த இடத்தில் கமர்ஷியல் அயிட்டங்கள் என்று நான் குறிப்பது அவிழ்த்துப் போட்டு ஆடும் காபரேவையோ, கண்றாவி சண்டைக் காட்சிகளையோ, குத்துப் பாட்டுக்களையோ அல்ல. காட்சியோடு ஒன்றி, கதாபாத்திரங்களோடு ஒன்றி அதாவது வலுவில் ஒன்றாமல் தானே தன்னையுமறியாமல் இடைவேளையில் கேண்டீன் கூடச் செல்ல மனமில்லாமல் ரசித்து ரசித்து சுகமாக படத்துடன் ஐக்கியமாகிவிடுவது. படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்த காட்சிகளின் பிடிகளிலேயே உழன்று கொண்டிருப்பது). இப்படி இருவரையும் சமநிலைப்படுத்த வேண்டும்.

    என் நண்பர் ஒருவர் என்னிடம் இது பற்றிக் கூறும் போது கேட்டார்.

    'ஏன்? ஸ்ரீதர் இல்லையா? 'காதலிக்க நேரமில்லை' இரு தரப்பு ரசிகர்களும் ரசித்த படமாயிற்றே' என்று.

    நான் சொன்னேன்....

    'நான் சொல்ல வந்து அதுவல்ல... நீங்கள் கேட்கும் கேள்வியும் தவறல்ல. 'காதலிக்க நேரமில்லை' கவிதையல்ல... காவியமல்ல.... கலாட்டா... கலாட்டா எல்லோருக்கும் பிடிக்கும். இதில் ரசிகன் என்பவன் அந்த நேரத்திற்கு இருநிலைப் பட மாட்டான். சோப்புக் குமிழ் காற்றில் வானவில் வண்ணங்களுடன் பறக்கும் போது எந்த மனிதனும் விரலால் அதை தொட்டு ரசிப்பான். ஆனால் 'முள்ளும் மலரும்' அப்படியா?'

    என்றேன்.

    அவர் உங்களைப் போலவே புரிந்து கொண்டார்.


    பிறகு தொடரட்டுமா?
    Last edited by vasudevan31355; 22nd December 2014 at 12:32 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes Russellmai, kalnayak liked this post
  11. #2337
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மகேந்திரன் என்ற மாயஜாலம். (1)

    [B][SIZE=2][COLOR="blue"]திரைக்கதை வசனம் இயக்கம் மூன்று பொறுப்புகளையும் ஏற்றவர் இயக்குநர் மகேந்திரன்.
    வாசு

    இயக்குனர் மகேந்திரன் பற்றி நீங்கள் எழுதி உள்ள கருத்தை ஓட்டியே திரு மகேந்திரன் அவர்கள் தன்னை பற்றி கொடுத்த வாக்கு மூலம்



    சினிமாவை வெறுத்து ஓடிய எனக்கு, என்றுமே அது காதல் திருமணமாக இருந்ததில்லை. சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான். அந்த உன்னதமான ஊடகத்தில் நான் நுனிப்புல் மேய்ந்தவன் என இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார்.

    கோவை, குஜராத்தி சமாஜத்தில் சனிக்கிழமை, இயக்குநர் மகேந் திரனின் சினிமாவும் நானும் நூல் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர் மகேந்திரன், பின்னணிப் பாடகி ஜென்ஸி, கவிஞரும் பாடலாசிரியருமான அறிவுமதி, எழுத்தாளர் பாமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மௌனமே சிறந்த மொழி

    நிகழ்ச்சியில் இயக்குநர் மகேந்திரன் பேசியதாவது: மெளனத்தை விட சிறந்த மொழி இருப்பதாகத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்தசமயம் எண்ணங்களை, மெளனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். உதிரிப்பூக்கள் போன்ற எனது படங்களில் மெளனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள். உண்மைதான், எனது படத்துக்குப் பெரும்பாலும் வசனம் எழுதியது இளையராஜாதான். மெளனங்களை நான் வசனங்களாக வடித்தபோது, இசையால் ஒவ்வொரு இடத்தையும் நிரப்பியவர் இளையராஜா.

    100 ஆண்டுகள் கடந்தும் டூயட் பாடல்கள் இருப்பது தமிழ் சினிமாவின் சுமையாக இருக்கிறது. சினிமாவின் இயல்புத் தன்மையை பாடல்கள் கெடுத்து விடும். அதே சமயம், நான் இளையராஜாவின் பாடல்களுக்கு அடிமை. பல நேரங்களில் மன இறுக்கத்துக்கு மருந்தாக இருந்தவை ராஜாவின் பாடல்களே. திரைக்கதை எழுதும் போதும், மனஉளைச்சலை உணரும்போது அவரது இசையும் பாடல்களுமே மனத்தை அமைதிப்படுத்தும். நீங்கள் கேட்க நினைக்கும், அனைத்து கேள்விகளுக்கும் சினிமாவும் நானும் புத்தகத்தில் பதில்கள் கூறியுள்ளேன்.

    தமிழ் சினிமா மீது வெறுப்பு!

    ஏன் குறைவான படங்களை கொடுத்தீர்கள்? 12 படங்களைக் கொடுக்க இவ்வளவு காலம் ஏன்? என்பதற்கெல்லாம் எனது பதில் இதுதான்: தமிழ் சினிமாவைத் தவிர வேறு எதையுமே பார்க்காமல் இருந்தவன், யதேச்சையாக இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்த்தேன். அதன்பின் தமிழ் சினிமாக்கள் மீது வெறுப்பு வந்துவிட்டது.

    இங்கு பல உன்னத கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் உருவாக்கப்படுவது சினிமாவாக இல்லை. காலத்தின் கட்டாயத்தால் வெறுப்புடன் இதனை ஏற்றுக்கொண்டேன்.

    இந்தப் பிழைப்பு வேண்டாமென, பலமுறை சினிமாவை விட்டு ஓடியிருக்கிறேன். நான் செய்த தவறுகளுக்குத்தான் நான் பொறுப்பே தவிர; நான் செய்த நன்மைகளுக்கும், சாதனைகளுக்கும் நான் பொறுப்பல்ல. இது தன்னடக்கமில்லை, எனது வாக்கு மூலம்.

    காதல் திருமணம்

    சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருமே ஆசை, விருப்பம், லட்சியம், போராட்டம் ஆகியவற்றைக் கடந்து, வெற்றி பெறுவார்கள். அது அவர்களுக்குக் காதல் திருமணம் போன்றது. ஆனால், நான் சினிமாவை வெறுத்தவன். என்றுமே சினிமா எனக்குக் காதல் திருமணமாக இருக்கவில்லை. கட்டாயத் திருமணமாகத்தான் இருந்துள்ளது.

    ஓடிச் சென்றவனை விடாமல் பிடித்துக் கொண்டதற்காக, சினிமாவுக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், அந்த சினிமாவை இதுவரை அன்போடு நெருங்கவில்லை என்றார்.
    gkrishna

  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, kalnayak, vasudevan31355 liked this post
  13. #2338
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு

    மகேந்திரனின் முள்ளும் மலரும்,உதிரி பூக்கள் பற்றி எல்லோரும் சொல்வார்கள். அவருடைய 'பூட்டாத பூட்டுகள் ' .அதிலும் அந்த கதாநாயகி சாருலதா .

    தோற்றே போய் இருக்கக் கூடாத கலைஞன், தோற்று போயிட்டார். அதற்கு அவர் தான் காரணம். ஆனால் நஷ்டம் தமிழ் ரசிகர்களுக்கு.



    மகேந்திரனின் இயக்கத்தில் சில படங்கள் பூஜை மற்றும் விளம்பரத்துடன் நின்ற நினைவு

    '1 2 3 4'
    'புன்னகை என்ன விலை'
    'உதிராத பூக்கள் '

    நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த சாசனம் நிறைய ஊர்களில் வெளியாகவே இல்லை
    gkrishna

  14. Likes Russellmai liked this post
  15. #2339
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் கிருஷ்ணா! நன்றிகளும் கூட. இயல்பு நிலைக்கு வந்தாகி விட்டதா?
    Last edited by vasudevan31355; 22nd December 2014 at 12:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #2340
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    வணக்கம் கிருஷ்ணா! நன்றிகளும் கூட. இயல்பு நிலைக்கு வந்தாகி விட்ட்டதா?
    கொஞ்சம் கொஞ்சம் ஆக வந்து கொண்டு இருக்கிறது .. இருக்கிறேன்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •