எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - வேலை சுமையினில் ,இணையத்திற்கு வர முடியவில்லை - தாமதமாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு மன்னிக்கவும் - திரு குமார் அவர்கள் தொடங்கி வைத்துள்ள இந்த 15 வது பாகம் பல வெற்றிகளை கடப்பதுடன் , NT திரியுடன் இணைய ஒரு பாலமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் - நாம் ஏற்காத வரையில் , நம்மை யார் திட்டினாலும் , அந்த திட்டுக்கள் நமக்கு சொந்தமாகுவதில்லை - அப்படி திட்டுபவர்கள் தான் அந்த கடும் வார்த்தைகளுக்கு சொந்தமானவர்கள் .. இப்படி எடுத்துக்கொண்டு சென்றால் நம் திரிகளில் மாற்று கருத்துகளுக்கு இடமே இருக்காது - என்னை பொறுத்த வரையில் மக்கள் திலகமும் , நடிகர் திலகமும் இரண்டு creativities . அந்த கலைத்தாய் தான் creator - யாரை வருத்தி பேசினாலும் - அந்த கலைத்தாயை திட்டுவதர்க்குத்தான் இணையாகும் . ஆரோக்கியமான நட்பிற்கு இந்த ஆண்டு ஒரு வித்தாக இருக்கட்டும் .

அன்புடன்
ரவி