Page 271 of 400 FirstFirst ... 171221261269270271272273281321371 ... LastLast
Results 2,701 to 2,710 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2701
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வினோத் சார் , பாராட்ட வார்த்தைகள் இல்லை . உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது , " கருத்து வேற்றுமைகள் வரலாம் , சில தேவைகளுக்காக பல உண்மைகள் மறைக்கப்படலாம் ,ஆனால் அவைகள் ஒரு நல்ல நட்பை பாதிக்காது , அது வேறு , இது வேறு " . மற்றவர்களை பாராட்டுவதில் நீங்கள் வகிக்கும் முதன்மைத்தன்மையை யாராலும் எட்டி பிடிக்கமுடியாது . நல்ல தேக ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன் .

    ===========

    நன்றி திரு.ரவி சார்,

    கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள் காரணமாக மக்கள் திலகத்தின் சாதனைகளை, சாதாரண நடிகனாக இருந்து மாநிலத்தின் முதல்வராக உயர்ந்த உலகின் முதல் நடிகரின் பெருமைகளை மறைக்க சிலர் முயற்சி செய்யலாம். அதற்கு நாங்கள் கண்ணியம் கெடாதபடி, நாகரிகமாக ஆதாரங்களுடன் பதில் அளிக்கலாம். அது வேறு.

    அவை எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், நமது நட்புக்கு பழுது ஏற்படாதபடி, எங்கள் திரிக்கு வந்து திரு.வினோத் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தங்களின் பரந்த மனப்பான்மைக்கும் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன். நன்றி. பணிகள் காரணமாக மதுரகானத்துக்கு வரமுடியவில்லை. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபடி, தங்களின் அற்புதமான ‘திருக்குறளும் திரை இசையும்’ தொடரை மீண்டும் தொடங்கி விட்டீர்களா?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
    ======================


    திரு கலை சார் - நீங்கள் கேட்டுக்கொண்டதை மீறினால் நான் ஒரு நல்ல நண்பனாக இருக்க தகுதி அற்றவன் . உங்களுக்கு முடிந்தபோது அங்கும் வாருங்கள் - பொதுவாக பேச , யார் மனமும் புண் படாமல் பேச மதுர காணத் திரியைப்போல அருமையான திரி ஒன்று எங்குமே இருக்க முடியாது - இந்த மகத்தான சேவையை செய்த திரு வாசுவை புகழ வார்த்தைகள் இனி தமிழில் கிடைத்தால் தான் உண்டு .

    நாம் எல்லோரும் இணைந்து இருவரில் ஒருவரை மட்டும் புகழ்ந்து , உண்மைகளை மட்டுமே பதிவிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரோக்கியம் குறைந்துகொண்டே வருகிறதே என்றுதான் நான் மிகவும் வருந்துகிறேன் . "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ? " என்று கேட்டோம் ஒரு நாள் - பல வருடங்களுக்கு பிறகு அந்த கேள்விக்கு நல்ல பதில் கிடைத்தது . ஆனால் அப்படி கேள்விகேட்டவ்ர்கள் நம்மிடையே இன்று இல்லை . இன்று வேறு விதமான கேள்வி , அதே தாக்கத்துடன் , அதே வேதனையுடன் !! என்று தணியும் இந்த மனகசப்புகள் நம் இருவரிடையே ?? நல்ல பதில் நாம் மறைந்த பிறகு கிடைத்தால் , நாம் படும் வேதனைகள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பிரயோசனம் ? தூக்கி எரிய வேண்டிய இந்த மனகசப்புக்களை ஏன் நாம் இருவரும் உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம் ?? இருவருமே ஒத்துக்கொள்ள முடியாத சில உண்மைகள் - அவைகள் அப்படியே இருந்து விட்டு போகட்டும் - அவைகளை தர்பாரில் இழுத்து கொண்டுவந்து ஏன் தலை குனிய வைக்க வேண்டும் ?

    போதும் கலை சார் - நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளும் ( காஷ்மீர் உட்பட ) தீர்ந்து விடும் ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை போல தெரிகின்றது . எவ்வளவு நாட்கள் இன்னும் நாம் மனத்தால் ஒன்று படாமல் இருக்கப்போகிறோம் ?

    உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - அதற்கு எனக்கு திறமையோ , தகுதியோ இல்லை - எல்லாம் தெரிந்த நீங்கள் ஒரு பாலமாக இந்த இரண்டு திரிகளுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் ஆசை . நட்பு என்பது கட்டப்பட வேண்டிய ஒன்று , கலைக்க பட வேண்டிய ஒன்று அல்ல .

    அன்புடன்
    ரவி
    ===============

    நன்றி திரு.ரவி சார்,

    தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. சர்ச்சைகள் எனக்கும் பிடிக்கவில்லை சார். நேற்று முன் தினம் மீனவ நண்பன் படம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். சர்ச்சைகளால் முடியவில்லை.

    நான் எல்லாம் தெரிந்தவன் அல்ல சார். உங்களைப் போன்ற நல்லவர்கள் தெரிவிக்கும் உயர்ந்த கருத்துக்களை நான் மனதில் பதிய வைத்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போது எடுத்து விடுகிறேன், அவ்வளவுதான். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    பணிகள் காரணமாக மதுரகானத்துக்கு வரமுடியவில்லை. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபடி, தங்களின் அற்புதமான ‘திருக்குறளும் திரை இசையும்’ தொடரை மீண்டும் தொடங்கி விட்டீர்களா?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

    ======================

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2702
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    "இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
    மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
    மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"


    ஊக்கமே குரு

    பகுதி 1

    வயதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

    முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா? என்று பணிவோடு கேட்டார்.

    மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது என்கிற அலட்சிய மனப்பாங்கு!

    வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி! என்றார் முதலாளி.

    மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

    பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே.. என்று மனம் புழுங்குகிறோம்.

    நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

    ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்.??

    பகுதி 2

    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.


    நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.

    சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.


    தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.

    உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
    மரம்மக்க ளாதலே வேறு.


    மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.


    பகுதி 3












  4. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  5. #2703
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    நாரதர் யாரோ அறியேன்... பைரவி ராகம் மனதை மயக்கும்போது தாஸேட்டனி குரல் மட்டுமே கேட்குது. படம் தெர்லீங்க..


    மது அண்ணா! என்னால் நம்பவே முடியவில்லை. நிஜமாகவே உங்களுக்குப் படம் தெரியவில்லையா? இல்லை உங்கள் கேள்வி எனக்குத்தான் புரியவில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறது.

    தமிழிலும், மலையாளத்திலும் நேரிடையாக எடுக்கப்பட்ட மெரிலேண்டின் 'சுவாமி ஐயப்பன்' படத்தில் தான் அந்தப் பாடல்.

    1975 ஆம் ஆண்டு வந்த படம். இரு மொழிகளிலும் சக்கை போடு போட்டது.

    தமிழ் நடிகர்களும், மலையாள நடிகர்களும் கலந்து ஒருசேர நடித்திருப்பார்கள்.

    நம் ஜெமினி, ஏ.வி.எம்.ராஜன், லஷ்மி, பாலாஜி, வி.கே.ஆர், மனோகர், மாஸ்டர் சேகர் எல்லோரும் உண்டு அப்படியே மலையாள கும்பல் திக்குரிச்சி, ஆப்ரஹாம்,பகதூர், ராணிச்சந்திரா, உன்னி மேரி, ஸ்ரீவித்யா
    என்று உண்டு.

    நீங்கள் பதிந்துள்ள பாடலில் நாரதராக நடித்திருப்பவர் ஹரி என்று மலையாளத் திரைப்பட உலகில் அழைக்கப்படும் ஹரிகேஷன் தம்பி என்ற மலையாள நடிகர். இவர் டப்பிங் குரலுக்கு மிகவும் புகழ் பெற்றவர். தெலுங்கில் சிரஞ்சீவி உட்பட பல நடிகர்களுக்கு டப்பிங் தந்தவர். கிட்டத்தட்ட 1000 படங்கள். நிறைய மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். நாகார்ஜுனா, மோகன்பாபு, அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், கேப்டன் ராஜு, தேவன் என்று பிரபல நடிகர்களுக்கெல்லாம் டப்பிங் கொடுத்தவர்.

    இதோ உங்களுக்காக 'சுவாமி ஐயப்பன்' மலையாளப் படத்தில் தேவராஜ் மாஸ்டரின் இசையில் அதே பாடல் வேறு டியூனில். ஆனால் தமிழ் போல இனிமை இல்லை. பாடியவரும் அதே தாஸேட்டன் தான். நடித்திருப்பவரும் அதே ஹரிதான்.

    'ஹரிநாராயண கோவிந்தா
    ஜெயநாராயண கோவிந்தா'

    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai liked this post
  7. #2704
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    தங்கள் மீள்வருகைக்கு நன்றி! மிக சந்தோஷமாக இருக்கிறது. தங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி! வேலைநிறுத்த டென்ஷன் காரணமாக உங்கள் பதிவுகளை இன்னும் நான் படிக்கவில்லை. நிதானமாக படித்துவிட்டு எழுதுகிறேன். நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2705
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மது அண்ணா! என்னால் நம்பவே முடியவில்லை. நிஜமாகவே உங்களுக்குப் படம் தெரியவில்லையா? இல்லை உங்கள் கேள்வி எனக்குத்தான் புரியவில்லையா? ஆச்சர்யமாக இருக்கிறது.

    தமிழிலும், மலையாளத்திலும் நேரிடையாக எடுக்கப்பட்ட மெரிலேண்டின் 'சுவாமி ஐயப்பன்' படத்தில் தான் அந்தப் பாடல்.
    அய்யகோ ! வெட்கம்.. வெட்கம்... மன்னிச்சுக்குங்க வாசுஜி... அது ஸ்வாமி ஐயப்பன் படம் என்று தெரியும்.

    வாசுஜி... நேரில் உரையாடும் சமயத்தில் பேசுவது போல எழுதினால் அது சில சமயங்களில் முழுக் காரணத்தையும் காட்டாமல் கவுத்துப் போட்டுவிடும் என்று அறியாமல் போனேன்..

    நான் சொல்ல வந்தது என்னவென்றால் இனிமையான பாடலைக் கேட்கும்போது காட்சியைக் காணத் தோன்றவில்லை என்னபதைத்தான்.. ( திரையில் தோன்றும் படம் என்று சொல்லியிருக்கணும்..)

    மாஸ்டர் சேகர் நடித்த இந்தப் படத்தைப் பார்த்து "அரிவராசனம்","சபரிமலையில் வண்ண", "ஸ்வாமியே சரணம் சரணம் என்னையப்பா", "அன்பு வடிவாக நின்றாய்" எனும் பாடல்களுடன் லட்சுமி ஆடும் மாதுரியின் "தங்கப்பதுமை" பாடல் வரை எல்லாமும் ரசித்தது நினைவில் இருக்கிறது.

    ஆனால் நாரதராக நடித்தவர் பெயர் தெரியவில்லை. அதை உருப்படியாக எழுதத் தெரியாமல் போச்சு !

    தாங்க்ஸ்-ஓ- தாங்க்ஸ்

  9. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  10. #2706
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!


    அதே 'அய்யகோ! வெட்கம்! வெட்கம்' எனக்கும். எனக்கு எப்படி இது புரியாமல் போயிற்று? அப்போதே ஒரு சந்தேகம் வந்தது. என்ன அண்ணா 'தாஸேட்டனி குரல் மட்டுமே கேட்குது' என்று சொல்லியுள்ளாரே என்று பல தடவை படித்துப் பார்த்தேன்தான். மரமண்டைக்கு ஏறல. இன்னொரு காமெடி வேற. 'குரல் மட்டுமே கேட்குது' அப்படின்னு வேற எழுதுனீங்களா? படம் சரியா தெரியுதான்னு வேற உத்துப் பார்க்கிறேன். நல்லாவே தெரியுது. 'நாரதர் நல்லாத்தானே ரவுண்ட்ஸ் உடுறாரு' அப்படின்னு வேற நினச்சு 'மது அண்ணா சிஸ்டம் எதாவது ப்ராபளம் போல...ஆடியோ மட்டும் கேக்குது போல' அப்படின்னு வேற யோசிக்கிறேன். நாராயணா!நாராயணா!

    கொஞ்சம் பொறி தட்டாம போச்சு. தோல்வி எனக்குத்தான். மன்னிச்சுக்கோங்க!
    Last edited by vasudevan31355; 18th August 2015 at 06:46 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes madhu liked this post
  12. #2707
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    ஒரு 15 மார்க் கேள்வி ஒன்றை ரொம்பக் கஷ்டமா கேட்டுட்டீங்க. தேறுவனான்னு தெரியல. திருவிளையாடல் நாரதர் யாருன்னு சொல்ல கொஞ்சம் டைம் வேணும். நெஜமாவே ரொம்பக் கஷ்டம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes madhu liked this post
  14. #2708
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதோ 'நவக்கிரக நாயகி' படத்தில் 'சோ' அவர்கள் மீண்டும் நாரத முனி வேடத்தில்.

    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes Russellmai, madhu liked this post
  16. #2709
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    தங்கள் புதிய தொடருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    'தெய்வ நம்பிக்கை' தலைப்பில் தாங்கள் அளித்துள்ள கிருஷ்ணர், அவர் பக்தை கதை ரசனைக்குரியது. பலனை எதிர்பாராமல் கடவுளை, அவர் சொன்னதை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் எல்லா செல்வங்களும் தானே கேட்காமல் ஓடிவருமல்லவா ?

    அந்த மேஸ்திரி கதை (ஊக்கமே குரு) மிகவும் அருமை! ஏமாற்ற நினைப்பவன் ஏமாந்து போவான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தர முடியாது.

    மூன்று மதங்களுக்கான முத்தான பாடல்களுக்கு நன்றி! குரல்களுக்கும் நன்றி!

    இந்த மாதிரி நீதி நெறிக் கதைகளை அளிப்பதற்கென்றே பிறந்தவர் தாங்கள்.

    ஆமாம்! சென்ற பதிவில் ஏன் குசலகுமாரியையும், சரளாவையும் மறந்து விட்டுவிட்டீர்கள்? இது நியாயமில்லை.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #2710
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'குமார சம்பவம்' படத்தில் நாரதராக டி .கே.பாலச்சந்திரன். ('நீதி' படத்தில் ஜெயகௌசல்யாவின் கணவராக வருபவர்)



    ஜேசுதாஸ் குரலில் நாரதர் 'சத்யம் சிவம் சுந்தரம்' பாடுகிறார்.

    நடிகர் திலகமே தெய்வம்

  18. Likes Russellmai, madhu, raagadevan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •