-
24th August 2015, 09:20 AM
#2511
Junior Member
Veteran Hubber

Originally Posted by
jaisankar68
Very good idea Jaishankar sir, my humble request is to create a new thread. Third person will find difficult to follow this series as it gets mingled with other posts.
-
24th August 2015 09:20 AM
# ADS
Circuit advertisement
-
24th August 2015, 02:30 PM
#2512
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
joe
எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .
நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .
காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .
இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்
http://www.mayyam.com/talk/showthrea...M-MGR-(Part-2)
கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.
நண்பர் திரு.ஜோ அவர்களுக்கு,
நியாயமான பேச்சு. இதைத்தான் நானும் விரும்புகிறேன். பலமுறை வலியுறுத்தியும் இருக்கிறேன். தங்களது கருத்து எனக்கு மேலும் நம்பிக்கையூட்டுகிறது.
‘கை நீட்டி பேச உனக்கு உரிமை உண்டு. ஆனால், உன் விரல் என் மூக்கை தொடக்கூடாது’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதுதான் உரிமையின் எல்லை. நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சாதனைகளை சொல்வதை தடுக்கவோ, குறை கூறவோ யாருக்கும் உரிமை கிடையாது. குறுகிய காலத்தில் அவர் அதிக படங்களில் நடித்தார் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.
ஆனால், இந்த எண்ணிக்கையை கடைசிவரை மக்கள் திலகம் எம்ஜிஆரால் வெல்ல முடியவில்லை என்று கூறும்போதுதான், நண்பர்களையும் மனதில் கொண்டு தர்மசங்கடத்துடன் பதிலளிக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் ஏற்படுகிறது. நல்லெண்ணத்துடன் கூடிய தங்களின் ஆலோசனையை நடிகர் திலகம் திரியிலும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
திருவாரூர் அருகே வடபாதிமங்கலம் என்று ஒரு ஊர். அந்த ஊரைச் சேர்ந்தவர் வடபாதிமங்கலத்தார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.எஸ்.தியாகராஜ முதலியார். பெருநிலக்கிழார். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தக்காராக இருந்தவர்.
1940-களின் இறுதியில் அந்தக் கோயிலில் ஒரு பவுராணிகர் உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கோயிலுக்கு வந்து, திராவிட இயக்க கருத்துக்களை வலியுறுத்தும் துண்டறிக்கைகளை பக்தர்களுக்கு விநியோகித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
உபந்யாசகர், ‘கோயிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் வரவேண்டும். அப்போதுதான் அவர்களின் உடலில் சில விசேஷ கதிர்கள் பாயும்’ என்று கூறியபோது அந்த இளைஞர் குறுக்கிட்டு, ‘அப்படியானால், பெண்களும் அப்படி வரலாமா?’ என்று அதிரடியாய் கேட்க, உபந்யாசகர் தனது கையில் அணிந்திருந்த தோடாவை திருகி விட்டுக் கொண்டு பதில் சொல்லாமல், மேற்கொண்டு பிரவசனத்தை தொடர்ந்தார்.
‘மாமிச உணவு கூடாது. உயிர் கொலை பாவம். தாவரங்களில் கிடைக்கும் காய்கறி நமது நகங்கள் போன்றது. அவற்றை பறித்து உண்பது அவற்றைக் கொல்வதாகாது...’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘‘கீரையை வேரோடு பறித்து உண்கிறோமே? தாவரங்களுக்கும் உயிர் உண்டே? அது கொலைதானே?’ என்று இளைஞர் மடக்க, அருகே உள்ள வெள்ளிச் சொம்பில் இருந்த பாலை எடுத்து மிடறு விழுங்கினார், உபந்யாசகர்.
நிலைமை மோசமடைவதைப் பார்த்ததும், தக்கார் தியாகராஜ முதலியார் தனது ஆட்கள் மூலம் அந்த இளைஞரையும் அவரது நண்பர்களையும் வெளியே அனுப்பினார். காலச் சக்கரம் சுழன்றது. அந்த சுழற்சியில் தமிழக முதல்வராகி விட்ட அந்த இளைஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
பொறுப்பும் பதவியும் வந்து சேர, தீ விபத்து காரணமாக பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த அதே திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தேரை புதுப்பித்து, ஓடாத தேரை ஓடச் செய்தவர் கலைஞர் கருணாநிதி.
உபந்யாசகரை மடக்கி கேள்விகளால் திணறடித்தார் என்றேனே. அந்த உபந்யாசகர் யார் தெரியுமா? நாளை கூட அவரது பிறந்த தின விழா. புரட்சித் தலைவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்தான் அவர்.
2000-ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது, ஒரு காலத்தில் தான் கேள்வி கேட்டு மடக்கிய மடக்கிய வாரியார் சுவாமிகளின் சிலையை காங்கேய நல்லூரில் திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் கூட பக்குவமும் முதிர்ச்சியும் நிறைந்த இந்த அணுகுமுறைதான் நான் விரும்புவது. அதைத்தான் நீங்களும் வலியுறுத்தியுள்ளீர்கள்.
இதை ஏன் சொன்னேன் என்றால், நீங்கள் திமுக ஆதரவாளர், கலைஞரைப் பிடிக்கும் என்று தெரியும். கலைஞரை மட்டுமல்ல, தேங்காய் போட்டு உங்கள் தாயார் சமைக்கும் வெறும் குழம்பும் பிடிக்கும் என்று கடற்புறத்தான் கருத்துக்களில் படித்த நினைவு.
அரசியல் ரீதியாக அவருடைய செயல்பாடுகளில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் கலைஞரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கடும் உழைப்பு, தோல்வியில் துவளாமை, நகைச்சுவை உணர்வு போன்ற பன்முக ஆற்றல்கள் எனக்கும் பிடிக்கும். இதை பல பதிவுகளில் தெரிவித்தும் இருக்கிறேன்.
அரசியல் ரீதியாக எதிர்நிலையில் உள்ளவன் நான் என்று கூறியிருக்கிறீர்கள். ஏன் பிரித்து பேசுகிறீர்கள்? நீங்கள் திமுகவாக இருந்தாலும் கூட, அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் வந்தவர்கள், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாமெல்லாம் ஒரே நிலையில் உள்ளவர்கள்தான்.
இங்கே உள்ள எல்லா நண்பர்களையும் வேண்டுகிறேன்.
அவரவர் அபிமானத்துக்குரியவர்களின் புகழை பாடுவது நமது கடமை, அதில் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நடப்போம்.
பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
joe thanked for this post
-
24th August 2015, 02:32 PM
#2513
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ravichandrran
கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.
MSG FROM MR.HARIDAS - Coimbatore
நன்றி திரு.ரவிச்சந்திரன். தகவல் அளித்த திரு.ஹரிதாஸ் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th August 2015, 02:36 PM
#2514
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
jaisankar68
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
அருமை நண்பர்களே,
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் ... ... ... இது நான் மட்டும் எழுதும் தொடரல்ல. எம்.ஜி.ஆர் பற்றிய எனது எண்ணங்களை நம் திரியின் நண்பர்களுடனான பகிர்வு. சில நுணுக்கமான சிந்தனைகளை அசைபோட அனைவரையும் அழைக்கிறேன்.
இந்தத் தொடரை நாம் அனைவரும் சேர்ந்து தான் நடத்தப் போகிறோம். வரலாற்று அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படாமலே போயிருக்கின்றன. அவற்றை அலசி ஆராயும் ஒரு சிறு முயற்சியே இது. இந்தக் கட்டுரைத் தொடருக்கு நம் நண்பர்கள் பலரும் இத்திரியில் பதிவேற்றிய நம் இதய தெய்வத்தின் புகைப்படங்களை தொடர்புடைய இடங்களில் பொருத்திட யாரும் தடை சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவற்றைப் பொருத்தமாகப் பதிவிட இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
நன்றி திரு.ஜெய்சங்கர் சார். ஏற்கனவே தாங்கள் அறிவித்தபடி, தொடரை ஆரம்பித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். தொடருங்கள். ரசிக்க காத்திருக்கிறோம்.
பேராசிரியர் அவர்களும் ஏற்கனவே அறிவித்தபடி திராவிட இயக்க வரலாற்றை எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th August 2015, 02:38 PM
#2515
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
சென்னை சரவணாவில் இன்று முதல் (21/08/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பணம் படைத்தவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டில் சரவணாவில் இணைந்த 19 வது வாரம்.
இந்த ஆண்டில் சரவணாவில் வெளியாகும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் 19 வது படம்.

சரவணா திரையரங்கில் புதிய சரித்திரம் படைத்திருக்கும் புரட்சித் தலைவரின் படங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
24th August 2015, 02:50 PM
#2516
Junior Member
Diamond Hubber
இந்த அகிலமே சொல்லும் தலைவா நீங்கள் தான் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் மன்னர் என்று ஒளிவிளக்கு இடைவெளி இல்லாமல் செய்யும் சாதனைகளுக்கு முன்னால் எந்த ஒரு உலக மொழி திரைப்படம் இனி முந்துமா என்பது மில்லியன் டாலர் கேள்வி நன்றி திரு ரவி சந்திரன் சார்

Originally Posted by
ravichandrran
கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.
MSG FROM MR.HARIDAS - Coimbatore
-
24th August 2015, 03:57 PM
#2517
Junior Member
Diamond Hubber
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு ஞாயிறு தின இனிய காலை வணக்கம்.
மெல்போர்னில் தற்சமயம் காலை 11:30.
இன்று போல் என்றும் வாழ்க.
மெல்போர்னில் குடும்ப நண்பர் ஒருவரது இல்லத்து திருமணத்தில் பங்கேற்க வந்திருக்கிறேன்.
மணமகன் தமிழகத்தை சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்.
மணமகள் ஆஸ்திரேலியாவை சார்ந்த ஆங்கில பெண்மணி.
தமிழக முறைப்படி, மணமகள் புடவை மற்றும் பொட்டணிந்து, வேதிகர் மந்திரம் ஓத, நாதஸ்வரம் முழங்க, தாலிகட்டி இப்பொழுதுதான் முடிந்தது.
என்ன ஆச்சர்யம் பாருங்கள்...
தாலி கட்டியதும், நாதஸ்வரத்தில் முதலில் வாசித்த பாடல்,
'ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்'
...அன்பே வா
அதை தொடர்ந்து,
'பூமழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த'
...நினைத்ததை முடிப்பவன்
'திருநிறைச்செல்வி
மங்கையற்கரசி
திருமணம் புரிந்தாள் இனிதாக'
...இதயவீணை.
எனது நண்பர்கள் என்னை தேடி நான் அமர்ந்திருந்த மேஜைக்கு வந்து விட்டனர், தலைவரின் பாடல் என்று தெரிந்ததும்.
முகநூல் நண்பர்களை நினைவு கூர்ந்தேன்.
எனக்கு இருப்பு கொள்ளவில்லை.
உடனே திருமண மண்டபத்திலிருந்து சில நிமிடங்களுக்கு வெளியேறி, முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த பதிவை எழுதினேன்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy venkat rao fb
-
24th August 2015, 04:02 PM
#2518
Junior Member
Diamond Hubber
" அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய தம்பி எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் எம்.ஜி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .
நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.
ஆனால்என் தம்பி எம்ஜியார் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது தம்பி எம்ஜியார் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.
ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன். "
= அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)
courtesy chandran veerasamy fb
-
24th August 2015, 04:07 PM
#2519
Junior Member
Diamond Hubber
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.
மெல்போர்னில் தற்சமயம் மதியம் 01:45.
இன்று போல் என்றும் வாழ்க.
......
பி.கு.
இப்பதிவு சற்று நீளமான பதிவாக அமைந்து விட்டது.
பொருத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்.
.....
புரட்சி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்கள், எப்படி சமீபத்தில் தலவரின் பாடல்களுக்கு ரசிகர்களானார்கள்?
எப்படி தலைவரின் சாதனகளையும், பெருமையையும் உணர்ந்தார்கள்?
ஒரு குடும்பத்தில் அதன் குடும்பதலைவரை தவிர மற்றவர்கள் புரட்சி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்கள், ஒரு காலத்தில்.
அந்த குடும்பதலைவரின் துணைவியார், குறிப்பாக எந்த நடிகருடைய ரசிகராக இல்லாவிடினும், புரட்சி தலைவரின் படங்களை விட, நடிகர் திலகத்தின் படங்களை விரும்பி பார்த்தவர்.
முன்பெல்லாம் இவர்களது வாயிலிருந்து வரும் பாடல்கள், நடிகர்கள் கமல், மாதவன், சமீபத்தில் தணுஷ்'ன், 'why this kolaveri' போன்ற பாடல்களாக இருக்கும்.
ஏறத்தாழ ஓராண்டு காலமாக MGR Vizha 2015வை மெல்போர்னில் நடத்த வேண்டி வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
கடந்த மூன்று மாதங்களாக, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட வேலைகள் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அதிலிருந்து அந்த குடும்பத்தினரின் வாயில் வரும் பாடல்கள் அனைத்தும் தலைவரின் பாடல்கள் ஆகி வருகின்றன.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற MGR the Legend II நிகழ்ச்சியின் சிறப்புகளை அறிந்த அந்த குடும்பத்தினருக்கு தலைவரின் பாடல்கள் மீது இருந்த விருப்பம் இன்னும் அதிகரிக்க தொடங்கின.
அந்த குடும்பத்தினர் வேறு யாருமல்ல.
எனது குடும்பத்தினரே.
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து களைப்பாக வீடு திரும்பி ஓய்வெடுக்கவிருந்த என்னை, 'தலைவரின் பாடலை YouTubeல் பார்க்கலாமே' என்று கூறி டிவி முன் அமர வைத்து விட்டார்கள்.
அவ்வளவுதான்...
இரவு 8 மணிக்கு தலைவரின் பாடல்களை பார்த்து ரசிக்க தொடங்கிய பின், களைப்பெல்லாம் எங்கோ பறந்து போய்விட்டது.
இரவு 12 மணிக்கு, டிவியை நிறுத்தினோம்.
இந்த மூன்று மணி நேரம், எந்த பாடல்கள் மெல்போர்னில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு பொருத்தமாக இருக்கும், என்று எங்களிடயே ஒரே ஆராய்ச்சிதான்.
அதுமட்டுமல்ல...
'எம்ஜிஆர் என்ன அருமையாக ஸ்டெப் செய்கிறார்'
'இந்த பாடலில் மிகவும் இளைத்திருக்கிறாரே?'
'எத்தனை கருத்துக்கள் இந்த பாடலில்'
...ஒரே புகழ்பாட்டுதான்!!!
இதுதான் நடந்தது!!!
எப்படி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்களை, தன்பக்கம் ஈர்த்து கொண்டார் பார்த்தீர்களா?
அதுதான் தலைவரின் சிறப்பு.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy venkat rao fb
-
24th August 2015, 04:11 PM
#2520
Junior Member
Diamond Hubber
தமிழ் சினிமாவின் முதல் மக்கள் நாயகன் , மக்களை வசீகரிக்கும் முகம், அன்றைய சமூகத்தின் நிலையை எடுத்து காட்டுகின்ற பாடல்கள் , முதல்வன் ஆனாலும் சமூகத்தில் இருக்கின்ற கடை நிலை மனிதனையும் மதிக்க தெரிந்தவர் , எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலில் எதிர் கட்சி தலைவர்களை ஏசி பேசாத பண்பாளர் .
இவை அனைத்தும் தான் எம்.ஜி.ஆர் அவர்களை மக்கள் மனதில் உச்சாணி கொம்பில் ஏற்றி அவர் இறக்கும் வரைக்கும் அவரையே முதல்வர் ஆக்கியது என்று சொன்னால் மிகையாகாது .
Bookmarks