-
23rd August 2015, 11:25 PM
#2501
Junior Member
Diamond Hubber
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
89046
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd August 2015 11:25 PM
# ADS
Circuit advertisement
-
24th August 2015, 04:06 AM
#2502
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th August 2015, 04:14 AM
#2503
Junior Member
Seasoned Hubber
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
அருமை நண்பர்களே,
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் ... ... ... இது நான் மட்டும் எழுதும் தொடரல்ல. எம்.ஜி.ஆர் பற்றிய எனது எண்ணங்களை நம் திரியின் நண்பர்களுடனான பகிர்வு. சில நுணுக்கமான சிந்தனைகளை அசைபோட அனைவரையும் அழைக்கிறேன்.
இந்தத் தொடரை நாம் அனைவரும் சேர்ந்து தான் நடத்தப் போகிறோம். வரலாற்று அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படாமலே போயிருக்கின்றன. அவற்றை அலசி ஆராயும் ஒரு சிறு முயற்சியே இது. இந்தக் கட்டுரைத் தொடருக்கு நம் நண்பர்கள் பலரும் இத்திரியில் பதிவேற்றிய நம் இதய தெய்வத்தின் புகைப்படங்களை தொடர்புடைய இடங்களில் பொருத்திட யாரும் தடை சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவற்றைப் பொருத்தமாகப் பதிவிட இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
Last edited by jaisankar68; 24th August 2015 at 04:16 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th August 2015, 04:25 AM
#2504
Junior Member
Seasoned Hubber
எம்.ஜி.ஆர்.
அன்னிய மொழி எழுத்துக்கள் தான். ஆனால் அந்த எழுத்துக்கள் அடையாளம் காட்டும் மனிதரோ சிறுதும் அன்னியமின்றி நம் அத்தனை பேரின் இதயங்களிலும் உறவாக ஒட்டிக் கொண்டிருக்கும் நம் நாயகர். கலைத்துறையில் முடிசூடா மன்னர். அரசியல் துறையிலும் தன் வாழ்நாள் முடியுமட்டும் அசைக்க முடியாத முதல்வர். அது மட்டுமல்ல இன்று வரை , அதாவது, தனது நடிப்புலக வாழ்வைத் துறந்து 38 ஆண்டுகள், புவி வாழ்வை விட்டு 28 ஆண்டுகள் கடந்த பின்னும் திரையுலகம், அரசியல் இரண்டிலும் அவர் ஓர் அசைக்க முடியாத சக்தி. இன்னமும் அவர் பெயரைச் சொல்லித்தான் சினிமாவிலும், அரசியலிலும் கைத்தட்டலும் ஓட்டுகளும் வாங்க வேண்டிய நிலை. சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் வயோதிகர்கள் வரை எம்.ஜி.ஆர் என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்ச்சி அடையும் அளவுக்கு அவர்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகத்தின் மகத்துவத்தை வரும் காலச் சந்ததிக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்தத் தொடர்.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
24th August 2015, 04:58 AM
#2505
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம்
புரட்சி நடிகர்
மன்னாதி மன்னன்
நடிகர் பேரரசர்
பொன்மனச் செம்மல்
இதய தெய்வம்
புரட்சித் தலைவர்
வறுமைக்கு வைத்தியம் செய்த டாக்டர்
இப்படி எத்தனை எத்தனையோ பட்டங்கள் . ஆனால் அவையாவும் அதிர்ஷ்டதேவதை அள்ளித் தந்த வெகுமதியல்ல. எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரமான உழைப்பவரே உயர்ந்தவர்கள் என்னும் மூலமந்திரத்தின் முதிர்ந்த விளைவு. அவரது வாழ்வு ஒரு பரமபத விளையாட்டை போன்றது. விழுவது போலத் தெரியும். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றி வீரராக மீண்டும் எழுந்து வருவார். தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் , செயல் திறனுக்கும் அவரது வாழ்வு ஒரு பாடம். அவர் மேல் வீசி எறியப்பட்ட அம்புகள் யாவும் முனைமளுங்கிப் போனன. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகும் அவர் மேல் அம்புகள் வீச ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வாழ்ந்த போதே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பொய்யான பல குற்றச்சாட்டுகள் , கேலி விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் வைக்கப்பட்டன. அலட்சியம் ஒன்றையே அவற்றுக்கு பதிலாக அளித்தார் நம் எம்.ஜி.ஆர். ஏராளமான மக்களுக்கு அவர் தெய்வம். அவரைச் சந்தித்த / சிந்தித்த அத்துணை மனிதர்களிடத்திலும் ஏதாவது ஒரு செய்தியை , நெகிழ்வை விட்டுச் சென்றிருக்கிறார் அந்தக் கோமகன்.
கம்ப ராமாயணத்திலே ஒரு நிகழ்வு. மிதிலை நகரிலே இளவல் இலக்குவன், விசுவாமித்திரர் புடை சூழ ஜானகி தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. நகர மாந்தர்கள் அவரை ஆவலுடன் தரிசிப்பதை கம்பன் அழகாக வர்ணிப்பார் அவரது தோளைக் கண்டவர்களின் கண்கள் தோளை விட்டு அகலாது . அவரது பாதத்தைக் கண்ட கண்கள் அந்தத் பாதார விந்தங்களிலேயே சரணாகதியடைந்து விடும். அவரது நீண்ட நெடிய கரங்களைக் கண்டவர்களும் மற்ற அவயவங்களைக் காணும் எண்ணமற்று அதிலேயே மனம் ஒன்றி மற்றவற்றை மறந்து மதிமயங்கி நிற்பதாக கம்பன் கவி காட்டும். அது போல மக்கள் திலகத்தின் மகத்துவத்தின் ஒரு பகுதியை கண்ணுற்ற மாந்தர் அதிலேயே திளைத்து அதிலேயே ஒன்றி மற்றவற்றை மறந்து திளைக்கும் நிலையை பலரிடமும் காண முடிகிறது. அவரிடம் விரோதம் பாராட்டுவோரும் ஏதாவது ஒரு விதத்தில் அவரைப் பாராட்டுவது என்பது மிகச் சாதாரணமாக இருக்கிறது.
இன்னமும் அவரது பெயரால் புத்தகங்கள், கட்டுரைகள் அவரது புகழ்பாடி வெளிவந்த வண்ணம் உள்ளன. வசைபாடியும் வருகின்றன. அவற்றில் காணப்படக் கூடிய பல முரண்பாடுகளை ஆராய்ந்து புறந்தள்ளுவதும் நமது கடமையாகிறது.அவரது வாழ்வில் அறியப்படாத பல விஷயங்களை அறிந்து கொள்வதும் நமது கடமையாகிறது. இது தொடர்பாக அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவேற்றுவதன் மூலம் பல அரிய செய்திகள் பகிரப்படும்.
Last edited by jaisankar68; 24th August 2015 at 05:07 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th August 2015, 05:30 AM
#2506
Junior Member
Seasoned Hubber
1. என் தம்பி எம்.ஜி.ஆர்.

1972ஆம் ஆண்டு ராணி வார இதழில் மக்கள் திலகத்தின் தமையனார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் எழுத இப்படி ஒரு தொடர் வெளிவந்தது. பின்னர் 1984, 1987ஆம் ஆண்டுகளிலும் அது மறுபடியும் பிரசுரமானது. அத்தருணங்களில் அக்கட்டுரையின் முதல் அத்தியாயத்தில் தந்தையின் மடியில் எம்.ஜி.ஆர் என்று குறிப்பிடப்பட்டு ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. பின்னர் 1988ஆம் ஆண்டு அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் ஆனந்த விகடன் இதழுக்கு மறக்க முடியாத புகைப்படங்கள் என சிலவற்றைத் தேர்வு செய்து கொடுக்கும் போது அதே புகைப்படம் எம்.ஜி.ஆர் வழிபடும் புகைப்படங்களில் ஒன்றாக காட்சியளித்தது.(மடியில் குழந்தையுடன் எம்.ஜி.ஆரின் தந்தை, தாய், மகாத்மா காந்தியடிகள் மற்றும் மக்கள் திலகத்தின் துணைவியார் சதானந்தவதி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கியது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது-) தந்தையின் மடியில் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எம்.ஜி.ஆர் வழிபட்டாரா என அப்போது சில விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் அது அவரது சகோதரியின் புகைப்படம் என எம்.ஜி.ஆர் பேரன் வலைத்தளம் மூலம் அறிவிக்கப்பட்டது. நமக்குக் கிடைத்த வரையில் மக்கள் திலகத்தின் முதல் புகைப்படம் எது. அவரது தந்தை மற்றும் தாயாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏதாவது உண்டா ? என் தம்பி எம்.ஜி.ஆர் தொடரில் வெளியிடப்பட்ட புகைப்படம் எம்.ஜி.ஆருடையதா? அல்லது அவரது சகோதரியுடையதா? தவறுதலாக வெளியிடப்பட்டிருந்தால் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் ஏன் அதனை மறுக்கவில்லை. பின்னர் வெளியான மணியன் அவர்களின் காலத்தை வென்றவன் நீ தொடரிலும் அது மக்கள் திலகத்தின் புகைப்படம் என்றே குறிப்பிடப்பட்டது. இது தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.
Last edited by jaisankar68; 24th August 2015 at 05:35 AM.
-
24th August 2015, 05:39 AM
#2507
Junior Member
Platinum Hubber

Originally Posted by
jaisankar68
எம்.ஜி.ஆர்.
அன்னிய மொழி எழுத்துக்கள் தான். ஆனால் அந்த எழுத்துக்கள் அடையாளம் காட்டும் மனிதரோ சிறுதும் அன்னியமின்றி நம் அத்தனை பேரின் இதயங்களிலும் உறவாக ஒட்டிக் கொண்டிருக்கும் நம் நாயகர். கலைத்துறையில் முடிசூடா மன்னர். அரசியல் துறையிலும் தன் வாழ்நாள் முடியுமட்டும் அசைக்க முடியாத முதல்வர். அது மட்டுமல்ல இன்று வரை , அதாவது, தனது நடிப்புலக வாழ்வைத் துறந்து 38 ஆண்டுகள், புவி வாழ்வை விட்டு 28 ஆண்டுகள் கடந்த பின்னும் திரையுலகம், அரசியல் இரண்டிலும் அவர் ஓர் அசைக்க முடியாத சக்தி. இன்னமும் அவர் பெயரைச் சொல்லித்தான் சினிமாவிலும், அரசியலிலும் கைத்தட்டலும் ஓட்டுகளும் வாங்க வேண்டிய நிலை. சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் வயோதிகர்கள் வரை எம்.ஜி.ஆர் என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்ச்சி அடையும் அளவுக்கு அவர்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகத்தின் மகத்துவத்தை வரும் காலச் சந்ததிக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்தத் தொடர்.
Congratulations Jai Sankar sir.
Excellent Article about our Makkal Thilagam M.G.R
All the Best.
Last edited by esvee; 24th August 2015 at 05:42 AM.
-
24th August 2015, 07:30 AM
#2508
Junior Member
Platinum Hubber
-
24th August 2015, 08:23 AM
#2509
Junior Member
Seasoned Hubber
திரு ஜோ
தங்களுடைய கருத்து மிகவும் ஏற்புடையது . நடிகர் திலகம் திரியிலும் உங்கள் கருத்தை பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
joe thanked for this post
joe liked this post
-
24th August 2015, 08:29 AM
#2510
Junior Member
Seasoned Hubber
திரு ஜெய் சங்கர்
தங்களின் புதுமையான முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
நம் மனதில் என்றென்றும் வாழ்வார் .
Bookmarks