- 
	
			
				
					15th September 2015, 07:44 AM
				
			
			
				
					#1781
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							 
 
 திராவிட இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுடன் நடிகர் திலகம்.
 
 இன்று அண்ணாவின் பிறந்த நாள். அண்ணா அவர்களின் இதயத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டு விட்டவர் நடிகர் திலகம். அரசியல் அவர்களைக் கொள்கை ரீதியாகப் பிரித்தாலும் நட்பு ரீதியாகப் பிரிக்க முடியவில்லை. எத்தனையோ சூழ்ச்சிகளை இருவருமே அடையாளம் கண்டு கொண்டு தங்களுடைய பரஸ்பர நட்புணர்வைப் பேணி வந்தனர். அண்ணா இறுதியாகப் பங்கேற்ற உயர்ந்த மனிதன் விழாவில் அவரைக் கலந்து கொள்ளாமல் செய்ய சதித்திட்டங்களை முறியடித்து பிடிவாதமாக கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை நடிகர் திலகத்திற்கு அளித்தார்.
 
 அண்ணா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய கடைசி அதிகார பூர்வமான நிகழ்ச்சி நடிகர் திலகத்தின் 125வது படமான உயர்ந்த மனிதன் விழாவேயாகும்.
 
 அன்பு நண்பர் ஆவணத்திலகம் பம்மலாரின் உபயத்தால் பொம்மை மாத இதழில் வெளியான கட்டுரையின் நிழற்படங்கள் நம்முடைய பார்வைக்கு.
 
 
	
		
			
			
				நடிகர் திலகத்தின் 125வது படவிழா
 
["உயர்ந்த மனிதன்" விழா : 15.12.1968 : சென்னை]
 
வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜனவரி 1969
 
முதல் பக்கம்
   
மூன்றாவது பக்கம்
   
நான்காம் பக்கம்
   
ஐந்தாம் பக்கம்
   
ஆறாம் பக்கம்
   
[இந்த விழாத் தொகுப்புக் கட்டுரை மொத்தம் ஆறு பக்கங்களைக் கொண்டது.]
 
அன்புடன், 
பம்மலார்.
			
		 
 
 
 
 
 
 
 
				
				
				
					 
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
	 
- 
		
			
						
						
							15th September 2015 07:44 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					15th September 2015, 07:55 AM
				
			
			
				
					#1782
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							திரு முத்தையன்
 மனிதனும் தெய்வமாகலாம் திரைப்படத்தின் நிழற்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. இப்படத்தின் இவ்வளவு தெளிவான நிழற்படங்கள்  இணையத்தில் இதுவே முதன் முறை. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					15th September 2015, 02:14 PM
				
			
			
				
					#1783
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  vasudevan31355  
 
 கலை சார்,
 
 பொதுவாக நான் வசூல் போன்ற விவரங்களில் அதிகம் தலையிடுவதில்லை. வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் சமீபத்திய 'சிவந்த மண்' பற்றிய தங்களது பதிவுகள் என்னையே நோக வைத்தது என்பது உண்மை. 'ஓஹோ' என்று ஓடிய ஒரு படத்தை, வசூலில் பிரளயம் நடத்திய ஒரு படத்தை, கண்கூடாக அதன் வெற்றியை நம்மைப் போன்றவர்கள் நேரிடையாக பார்த்த ஒரு படத்தை நஷ்டமடைய வைத்த படம் என்றும், தோல்விப் படம் என்றும்  அதுவும் நீங்கள் முத்திரை குத்த முயற்சிப்பது வருத்ததிற்குரியது. ஆயிரம் ஆதாரங்கள் கிடக்கட்டும். நாம் அந்தக் காலக் கட்டத்தில் அதன் வெற்றியை நேரிடையாகப் பார்த்தவர்கள். அதை நாம் இப்போது உள்ள தலைமுறைக்கு சரியான முறையில் சொல்லுவதே சிறந்த கடமையாகும். பைத்தியக்காரத்தனமாக செட்களைப் போட்டு,  வரைமுறை இல்லாமல் செலவு செய்து விட்டு அத்தனை செலவுகளுக்கும் 'சிவந்த மண் 'ஓடி, 'நடிகர் திலகம்' என்ற அட்சயப் பாத்திரம் வசூல் செய்து, அதற்கு மேல் லாபம் ஈட்டி, கல்லா நிறைய வேண்டும் என்பது ஸ்ரீதரின் ஆசை. அந்த ஆசையை அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே ஈடு செய்தது 'சிவந்தமண்'.
 
 இதற்கெல்லாம் மேலே ஒன்று.
 
 'நடிகர் திலகம்' பொய் பேச மாட்டார். மனதில் பட்டதை சரியென்றாலும், தவறென்றாலும் முகத்துக்கு நேரே உண்மையை உரைத்து விடுவார். அவருடன் பழகியவன் என்ற முறையில் இதை நன்கறிந்தவன் நான்.
 
 அவர் 'சிவந்தமண்' படத்தைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்து.
 
 'அள்ளி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு கை சிவந்தது
 ஆனந்தந்தால் ஸ்ரீதருக்கு கண் சிவந்தது'.
 
 
 
 திரு.வாசு சார்,
 
 நேற்று நான் திரியை பார்க்க முடியவில்லை. அதனால், பதில் அளிக்க முடியவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
 
 சிவந்த மண் திரைப்படத்தை தோல்விப்படம் என்று நான் சொல்லவில்லை சார். நன்கு வசூல் ஆன படமும் கூட. ஆனால், முதலீடு அதிகம் என்பதால் எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை. சொல்லப்போனால் நம்நாடு திரைப்படத்தை விட வசூல் குறைவுதான். அதுவும் கூட நாங்களாக ஆரம்பிக்கவில்லை. திருச்சி பாஸ்கர் அவர்களும், ஆதிராம் அவர்களும் தேவையின்றி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்ததால்தான் இந்த பதிலை அளிக்க வேண்டி வந்தது.
 
 அதிலும் கூட சிவந்த மண்ணை விட நம்நாடு அதிகம் வசூல் என்பதற்கு எங்கள் நண்பர்கள் வெளியிடும் ஆவணங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்றாலும் சிவாஜி ரசிகர்களால் ஆவணத் திலகம் என்று போற்றப்படும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களே சிவந்தமண்ணை விட நம்நாடு திரைப்படம்தான் (ஓவர் ஆல் தமிழ்நாடு) அதிகம் வசூல் செய்தது என்று திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
 
 சிவாஜி ரசிகரே சொல்லிவிட்டாரே, அதுவும் ஆவணங்களை வைத்திருப்பவர் என்ற அடிப்படையில்தான் துணிந்து தைரியமாக சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். திரு.எஸ்.வி.யிடம் பம்மலார் சிவந்தமண்ணை விட நம்நாடு வசூல் அதிகம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றுதான் எனக்கு தகவல். ஆனால், சில மணி நேரங்களில் திரு.ஆர்.கே.எஸ்.பதிவை பார்த்ததும் இதென்ன புதுக்குழப்பம்? என்று நினைத்தேன். எங்கோ தவறு நடந்திருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை.
 
 பொய் சொல்வது மனசாட்சிக்கு விரோதம் என்பது இருக்கட்டும். ஒரு முறை பொய் சொன்னோம் என்று தெரிந்து விட்டால், நமது முகம் தெரியாவிட்டாலும் கூட, அதன் பிறகு நமது எழுத்துக்கு என்ன மரியாதை கிடைக்கும்?
 
 இனி நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது. ஒரே வழி, திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் உண்மையை வெளியிடுவதுதான். இதற்காக அவர் திரிக்கு வரவேண்டும் என்று அவசியம் இல்லை. செப்டம்பர் 21ம் தேதி அன்று அவருக்கு பிறந்தநாள். அவருக்கு எல்லாரும் வாழ்த்து தெரிவிப்போம். அதற்கு நன்றி சொல்ல அவர் வருவார். கடந்த ஆண்டு நான் பிறந்த நாள் வாழ்த்து சொன்னபோது எங்கள் திரிக்கு வந்து  எனக்கு நன்றி தெரிவித்தார். 22ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன்.
 
 தங்கள் மீதும் திரு.ராகவேந்திரா சார் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. உங்கள் இருவருக்கும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்.
 
 நம்நாடு படம் சிவந்தமண்ணை விட அதிகமாக வசூல் செய்தது என்று திரு.எஸ்.வி.யிடம் பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த தகவல் எனக்கு கிடைத்தது.  அதனால்தான், துணிந்து அதை நான் பகிர்ந்து கொண்டேன். நானாக கற்பனை செய்து சொல்லவில்லை. அப்படி நான் பொய் சொல்வது உறுதியானால், மக்கள் திலகம் திரியிலும், மதுரகானம் திரியிலும், இங்கும் வந்து ‘நான் பொய் சொல்லிவிட்டேன். எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று பகிரங்கமாக கோரி அத்துடன் திரியில் இருந்தும் வெளியேறி விடுகிறேன். நன்றி.
 
 திரு.ராகவேந்திரா சார், நண்பர்களுக்குள் மன்னிப்பு கோருவது தேவையில்லை என்று கூறியுள்ள உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி சார். இருந்தாலும் தவறு செய்தால் மன்னிப்பு கோர தயங்க மாட்டேன்.  வாசு சாருக்கு அளித்துள்ள வாக்குறுதியை உங்களுக்கும் நான் அளிக்கிறேன்.
 
 இந்த விவகாரத்தில் உண்மை வெளிவந்த பிறகாவது நீங்கள் கூறியுள்ளதை போல திரு.பாஸ்கர் அவர்களும் திரு.ஆதிராம் அவர்களும் தேவையற்ற ஒப்பீடுகளை தவிர்க்க வேண்டும். நன்றி.
 
 அன்புடன் : கலைவேந்தன்
 சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th September 2015, 02:17 PM
				
			
			
				
					#1784
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 
 நண்பர் கலை,
 
 சிவந்த மண்  நம் நாடு பற்றிய வசூல் சர்ச்சையில் அதே போல் நீங்களும் தகவல் சரிதானா என்று தெரியாமல் சுவாமி இதை வினோத்திடம் பிஎம் மூலமாக தெரிவித்தார் என்று சொல்லியிருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமல்ல கண்டனக்குரியதும் கூட. நீங்கள் இதுவரை நேரில் சந்திக்காத அலைபேசியில் கூட உரையாடாத ஒருவரைப் பற்றி ஒரு தவறான தகவலை பரப்புவது எந்த விதத்தில் சரி? இதன் மூலம் ஒரு சிவாஜி ரசிகர் எங்கள் படம்தான் அதிக வசூல் என்று ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஒரு விளம்பர தேடல் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்? இல்லை சிவாஜி ரசிகர்கள் மத்தியில் அவர் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணமா? நண்பர் சுவாமி நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளினால் மிகுந்த வருத்தம் அடைந்திருக்கிறார்.
 
 
 அன்புடன்
 
 
 
 நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,
 
 நான் ஏற்கனவே எனது முந்தைய பதிவில் கூறியிருந்தபடி, தங்களுக்கு பதில் அளித்து விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், பிஎம். சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறீர்கள்.  அதனால் பதில் அளிக்கிறேன். தாங்களும் ஒவ்வொரு பதிவிலும் உண்மைக்கு மாறாக எதையாவது சொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். என் மீது சேறு வீச வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நியாயம் எல்லாம் எங்கே தெரியப் போகிறது?
 
 இருந்தாலும் உண்மை புரிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம். நான் கூறியிருந்தது இது.
 
 //திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.//
 
 இதில் பம்மலார் எஸ்.வி.க்கு பி.எம்.அனுப்பினார் என்று எங்கு நான் சொல்லியிருக்கிறேன்?  திரு.எஸ்.வி.யிடம் பம்மலார் ஒப்புக் கொண்டதை பிஎம் தகவல்கள் மூலம் நான் அறிந்தது கொண்டேன். அவ்வளவுதான். நானும் எஸ்.வி.யும் பிஎம்.மூலம் அவ்வப்போது தொடர்பு கொள்வது உண்டு.
 
 திரு.வாசு சாருக்கும் திரு.ராகவேந்திரா சாருக்கும் சொன்ன பதிலை பார்த்திருப்பீர்களே. அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை உங்களுக்கும் அளிக்கிறேன். 22ம் தேதி வரை காத்திருக்கிறேன். அதுவரை பதிவுகள் இடமாட்டேன். 23ம் தேதி பதிவிடுவேன்.
 
 சாதனை சிகரங்களில் இடம் பெற்றுள்ள ராஜா, ராஜராஜசோழன், திருவருட்செல்வர் ஆகிய படங்கள் பற்றிய உங்கள் தவறான தகவலை நான் சுட்டிக்காட்டியிருப்பதை மறுக்காததற்கும் நன்றி.  இதை நண்பர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் கவனிக்கட்டும்.
 
 அன்புடன் : கலைவேந்தன்
 சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
 
 
 
 
				
				
				
					
						Last edited by KALAIVENTHAN; 15th September 2015 at 08:42 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					15th September 2015, 02:18 PM
				
			
			
				
					#1785
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு,
 
 21-ம் தேதி தங்களுக்குப் பிறந்தநாள். கடந்த ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். எங்கள் திரிக்கு வந்து நன்றி தெரிவித்தீர்கள். இங்கே நான் விட்டிருக்கும் சவாலால் இந்த ஆண்டு அந்த தேதியில் திரிக்கு வந்து உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாத நிலைமை.
 
 எனவே, இப்போதே முன்னதாகவே தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாக திரு.முரளி தெரிவித்துள்ளார். மன்னிக்க வேண்டும்.  மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்று மனதால் கூட நான் நினைக்க மாட்டேன். ஆனால், நீங்கள் திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாகத்தான் எனக்கு தகவல். என்ன நடந்தது என்ற உண்மையை விளக்க வேண்டும் என்று அன்போடு கோருகிறேன். 22-ம் தேதி வரை உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.
 
 தங்களுக்கு மீண்டும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். நன்றி.
 
 அன்புடன் : கலைவேந்தன்
 சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th September 2015, 02:19 PM
				
			
			
				
					#1786
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							என்னை மன்னிப்புகோர சொல்லியுள்ள நண்பர் திரு.டிஏ சினிமா அவர்களுக்கு,
 
 நான் சொல்வது பொய் என்றால் நிச்சயம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன் வாசு சாருக்கும் ராகவேந்திரா சாருக்கும் வாக்குறுதி அளித்தபடி திரியில் இருந்தும் விலகுகிறேன்.
 
 அப்புறம்..... நீங்கள் எங்கள் திரிக்கு வந்து சொன்ன பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு திரு.சைலேஷ் அவர்கள் உங்களுக்கு பல முறை (12 முறை)  நினைவூட்டல் செய்துள்ளார். உண்மையை வெளியிட்டு அவர் அறிவித்துள்ள பரிசுகளை பெற்றுக் கொள்ளலாமே.
 
 அன்புடன் : கலைவேந்தன்
 சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					15th September 2015, 03:55 PM
				
			
			
				
					#1787
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  KALAIVENTHAN  
  அதுவும் கூட நாங்களாக ஆரம்பிக்கவில்லை. திருச்சி பாஸ்கர் அவர்களும், ஆதிராம் அவர்களும் தேவையின்றி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்ததால்தான் இந்த பதிலை அளிக்க வேண்டி வந்தது.  
 
 இந்த விவகாரத்தில் உண்மை வெளிவந்த பிறகாவது நீங்கள் கூறியுள்ளதை போல திரு.பாஸ்கர் அவர்களும் திரு.ஆதிராம் அவர்களும் தேவையற்ற ஒப்பீடுகளை தவிர்க்க வேண்டும். நன்றி.
 
 அன்புடன் : கலைவேந்தன்
 சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
 
 
 
 அன்புள்ள நண்பர் கலை அவர்களுக்கு,
 
 முதலில் நீங்கள் 'இன்ன தேதி வரை பதிவிடுவதில்லை', 'அந்த தேதி வரை பதிவிடுவதில்லை' என்பதுபோன்ற விரதங்களை கைவிடுங்கள். உங்கள் நீல வண்ண பதிவுகளால் திரிகள் களைகட்டுகின்றன என்பதோடு, விவாதப்பொருளும் கிடைக்கிறது. திரிகள் என்பதே விவாதிப்பதற்குத்தான் என்பதை நம்புபவன் நான்.
 
 அடுத்து நண்பர் திருச்சி பாஸ்கர் அவர்களும் நானும் ஒப்பீடு விவாதத்தை துவங்கியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
 என்னைப்பொருத்தவரை இந்த வசூல் விவரங்களை எப்போதும் விவாதிக்க விரும்பாதவன்.
 ஆனால் படம் ஓடிய நாட்கள் பற்றியும் அதுபற்றிய செய்தித்தாள் விளம்பரங்களையும் அதிகம் விரும்புபவன். நம்புபவன். காரணம் அவை தயாரிப்பாளர்களால், விநியோகஸ்தர்களால் கொடுக்கப்பட்டவை என்பதால். இப்போது வரக்கூடிய சிற்சில தியேட்டர் பெயர் தவறுகள் கூட அப்போதைய செய்தித்தாள் ஆவணங்களில் இருக்காது.
 ஆனால் வசூல் விபரம் பற்றிய நோட்டீஸ்கள் ரசிகர் மன்றங்களால் வெளியிடப்படுபவை. ஆர்வம் காரணமாக தங்கள் தரப்பு நடிகர்களின் வசூலை கூட்டி சொல்வது சகஜம். (எல்லா தரப்பு ரசிகர்களிடம் உள்ள நடைமுறை வழக்கம்) என்பதால் அதிகம் நம்பகத்தன்மை அற்றவை.
 
 இப்போதும் சொல்கிறேன் சிவந்த மண், நம்நாடு குறித்து வசூல் ஒப்பீட்டை துவங்கியது நான் அல்ல. இரண்டு படங்களின் 100-வது நாள் விளம்பரங்கள் பற்றியே நான் குறிப்பிட்டேன்.
 
 முதலாவது சிவந்தமண் 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்பது (இது 100 சதவீதம் உண்மை).
 
 இரண்டாவது நம்நாடு 100-வது நாள் விளம்பரத்தில் தியேட்டர் பெயர்கள் இல்லை. நடிகர்கள், டெக்னீஷியன்கள் பெயர்கள் மட்டுமே உள்ளன என்பது (இது 200 சதவீதம் உண்மை)
 
 இது ஏன்?. சிவந்தமண்ணை விட நம்நாடு குறைவான தியேட்டர்களிலேயே 100 நாள் ஓடியுள்ளது என்ற உண்மை தெரிந்துவிடக்கூடாது என்பதற்கா என்றும் கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.
 
 இந்த விஷயத்தில் மிகக்குறைவான விவாதத்தில் ஈடுபட்ட என்னை, இந்த விவாதத்தை  துவக்கியதாக நீங்கள் சித்தரிப்பது புரியவில்லை. உண்மையில் வசூல் விவாதத்தை நான் துவக்கியிருந்தால் அதை மனப்பூர்வமாக, தைரியமாக, நேர்மையாக ஒப்புக்கொள்வேன். பின்வாங்க மாட்டேன்.
 
 எப்படியோ நண்பர்களின் இடைவிடாத வாதங்களுக்குப்பின், "சிவந்த மண் தோல்விப்படம் என்று நான் சொல்லவில்லை. நன்றாக வசூலாகவில்லை என்று சொல்லவில்லை. தயாரிப்பு செலவு அதிகமாகிவிட்டது" என்பது வரையில் நீங்களாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					15th September 2015, 09:22 PM
				
			
			
				
					#1788
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
	 
- 
	
			
				
					15th September 2015, 09:28 PM
				
			
			
				
					#1789
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							சைலேஷ் பாசு சார்,
 மத நம்பிக்கையைப் புண்படுத்துவதை யார் செய்தாலும் நாம் வரவேற்பதில்லை. எம்.ஜி.ஆர். அவரையே கடவுளாக வழிபடும் நீங்கள், அவருடைய உருவத்தை இன்னோர் கடவுளின் உருவத்தில் பொருத்துவது சரியாகப் படவில்லை. இது நிச்சயம் மதநம்பிக்கை உள்ளோர்க்கு மன வருத்தம் உண்டாக்கும். எம்.ஜி.ஆர். அவர்களும் இதை விரும்ப மாட்டார்.
 இதைப் புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.
 அன்புடன்
 
 
 
 
				
				
				
					
						Last edited by RAGHAVENDRA; 15th September 2015 at 09:32 PM.
					
					
				  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					15th September 2015, 09:30 PM
				
			
			
				
					#1790
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							வாசு சார்
 அட்டகாசம், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் திருடன் நடிகர் திலகம் மட்டுமல்ல தாங்களும் தான். அவர் நடிப்பாலும் ஸ்டைலாலும் நம் மனதைக் கொள்ளையடிக்கிறார். தாங்கள் அவற்றின் ஸ்டில்களை அளித்து நம் மனதைக் கொள்ளையடிக்கிறீர்கள்.
 
 தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
	 
Bookmarks