-
16th April 2016, 02:27 PM
#2371
Junior Member
Newbie Hubber

Originally Posted by
madhu
ராகவ் ஜி...
நெஞ்சிருக்கும் வரை படம் அந்தக் காலத்தில் நான் பார்த்ததில்லை. ஆனால் வானொலியில் "எங்கே நீயோ நானும் அங்கே" பாடல் இரு வெர்ஷன்கள் ( ஒன்று நார்மல் மற்றது சோகம் ) கேட்டிருக்கிறேன். அனேகமாக நார்மல் பாட்டுதான் கேட்பேன். ஆனால் பிற்காலத்தில் படம் பார்த்தபோது சோகப்பாட்டு மட்டும்தான் இருந்தது. இப்போதும் நெட்டிலும் எங்கேயும் அந்த நார்மல் வெர்ஷன் வீடியோ இல்லை. ( ஆடியோ கிடைக்குது )
அது படத்தில் இருந்துச்சா இல்லையா ?
padaththile ore version. Muthu Raman kudichittu varum podhu. intha maathiri paadalgalthaan aambilaigalai kalyanam pannikkave thoondi ,kuzhiyil thallugirathu. Susilavin maya jalam.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
madhu thanked for this post
-
16th April 2016 02:27 PM
# ADS
Circuit advertisement
-
16th April 2016, 03:13 PM
#2372
டியர் வாசு சார் மற்றும் ராகவேந்தர் சார்,
அலைகள் படத்தின் "ஊமைப் பெண்ணை பேசச்சொன்ன உறவோ" பாடலை விவரமாக எழுதி மனதை கனக்க வைத்து விட்டீர்கள். உங்கள் இருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். யாராவது ஒரு எழுத்து வேந்தர் இப்பாடலைப் பற்றி எழுத மாட்டார்களா என்று ஆவலோடு காத்திருந்தேன். அபூர்வங்களைத் தோண்டியெடுத்து தருவதை வாடிக்கையாக கொண்ட நீங்கள் இருவரும் அதை செவ்வனே செய்து விட்டீர்கள்.
'கண்ணிலே என்ன உண்டு' மெட்டை நிராகரித்து இந்த மெட்டை தேர்ந்தெடுத்த ஸ்ரீதர் ஒரு ஜீனியஸ். சிச்சுவேஷனுக்கு தகுந்த ட்யூனை செலெக்ட் செய்வதில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிரார்.
நானும் ஓடியனில் தான் பார்த்தேன். முதல்முறை பார்த்தபோதே இப்பாடல் மனதில் இனம்புரியாத பாதிப்பை ஏற்படுத்தியது. கௌரவம், பூக்காரி, பாக்தாத் பேரழகிஎல்லாம் பார்த்த பிறகு மீண்டும் அலைகள் பார்த்தேன், (இந்தப் பாடலுக்காகவே). நெகிழ்ந்து போனேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் அந்த நினைவுகளை உள்ளத்தில் ஏற்படுத்திய உங்கள் இருவருக்கும் நன்றிகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th April 2016, 04:39 PM
#2373
Senior Member
Senior Hubber
பாவம் ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் பாடல் கேட்டு எல்லாரும் மனம் கனத்து இருக்கிறார்கள்..எனில் ஒரு பாஸ்ட் சாங்க் போட்டு விட்டுடலாமா 
ஆக்சுவலா நேத்திக்கு ஸ்ரீ ராம நவமிக்குப் போட்டிருக்க வேண்டியது.. ஏன்னாக படம் பெயர் ஜானகி ராமுடு..
அதிரண்டி மாமா அதிரண்டி லோ.. புதிரண்டி.. சம்திங் சம்திங் லோ...
நாகார்ஜுன் விஜயஷாந்த்தி.. எஸ்பி பி. சுசீலாம்மா..என ப் போட்டிருக்கிறது சுசீலாம்மா தானா.. இரண்டு பேர் வாய்ஸும் டிஃபரண்ட்டாக இருப்பது போல் பிரமை..
வாசு தமிழ் டப் வந்ததா பார்த்திருக்கிறீரா..
Last edited by chinnakkannan; 16th April 2016 at 04:45 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th April 2016, 07:03 PM
#2374
டியர் வாசு சார்,
பத்து மணி ஸ்பெஷல் காட்சிகள் ஆய்வில் அன்றைய தெலுங்கு டப்பிங் படங்களின் சூறாவளியை தங்களுக்கே உரித்தான நடையில் நகைச்சுவை மிளிர தந்திருந்த விதம் அட்டகாசம்.
சென்னையில் இவை ரெகுலர் ஷோக்களிலேயே வந்து ஒருவாரம் ஓடி வசூலை அள்ளின. எல்லாப்படங்களும் ஒரே மாதிரியாக இருந்தும் திரும்ப திரும்ப இவற்றுக்கு கூட்டம் குவிந்ததுதான் ஆச்சரியம். அதற்குக் காரணம் தியேட்டர்களில் இப்படங்களுக்கு வைக்கப்படும் ஸ்பெஷல் ஸ்டில்கள். படத்தில் இடம்பெறும் "அந்த மாதிரியான" காட்சிகளை மட்டும் கொண்டு அந்த ஸ்டில்கள் தயாரிக்கப்படும். நம்ம ஆட்களுக்குத்தான் அது போதுமே. அரங்கை நிறைத்துவிட மாட்டார்களா. தமிழ்ப்படங்கள் தாய்க்குலத்தை நம்பியே ஓடின என்றால், இப்படங்கள் தாய்க்குலத்தை நம்பாமலே ஓடி அசத்தின.
நீங்கள் சொன்ன படங்களோடு இன்னும் நினைவுக்கு வரும் சில படங்கள்
ஜாக்பாட் ஜாங்கோ
பெண்ணின் சவால்
கராத்தே கமலா
ராஜ்மகால் ரகசியம்
கப்பல்தீவு காதல் ராணிகள்
ஜில்ஜில்மேனி செக்ஸ் ராணி (பயங்கர திகில்)
ரைபிள் ராஜா
இப்படி நிறைய. எல்லாவற்றுக்கும் ஒரே திரைக்கதைதான்.
இவை போக மலையாள படங்களும் நிறைய வந்து ரசிகர்கள் பாக்கெட்டை கொள்ளையடித்தன. அந்த சமயத்தில் வந்த படங்களென்று பார்த்தால்
அவளோட ராவுகள்
சத்திரத்தில் ஒரு ராத்திரி
ரதி நிர்வேதம்
மழு (மழு என்றால் மலையாளத்தில் கோடரி என்று அர்த்தமாம். ஆனால் அதுக்கு தமிழ் விநியோகஸ்தர் கொடுத்த டைட்டில் 'மாமனாரின் இன்ப வெறி'.... கொடுமை)
உங்கள் ஆய்வில் மூன்று பிரிவாக மாயாஜால யுகம், ஜேம்ஸ்பாண்ட் யுகம், லேடி ஜேம்ஸ்பாண்ட் யுகம் என்று பிரித்து ஆய்ந்திருக்கிறீர்கள். எப்படி எந்த ஒரு ஆய்வையும் டாக்டரேட் அளவுக்கு உங்களால் பண்ண முடிகிறது என்று எனக்கு ஆச்சரியம்.
அடுத்த அதிரடி ஆய்வு என்ன (சொல்ல மாட்டீர்கள். பதித்த பின்னர்தான் தெரியும்)
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
16th April 2016, 10:36 PM
#2375
Senior Member
Diamond Hubber
காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள். ...தொடர்கிறது.
மிக்க நன்றி ஆதிராம் சார்!
தங்கள் ஊக்கப்படுத்தலுக்கும், உற்சாகப்படுத்தலுக்கும் நன்றி. எந்த ஒரு பதிவுக்கும் மேலதிக விவரங்களை மிகச் சரியாக தந்து பதிவுகளை தாங்கள் மேம்படுத்துவதற்கும் மிக்க நன்றி.
ஒரே ஒரு குறை. உங்களை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். நடிகர் திலகம் திரியிலும் சரி....மதுர கானங்களிலும் சரி! அடிக்கடி காணமல் போய் விடுகிறீர்கள். அதனால் இழப்பு எங்களுக்குத்தான்.
தங்களுடைய விவரப்பதிவுகளுக்கு நான் முதல் ரசிகன் என்றே சொல்லலாம். விடுபட்டுப் போன அல்லது மறந்து போன நினைவுகளை 'அட... ஆமாமில்லே... ஆதிராம் சரியாக நினைவு கூர்ந்து விட்டாரே' என்று நான் பலமுறை ஆச்சரயப்படுமளவிற்கு நீங்கள் விஷய ஞானம் உள்ளவர் என்பது நித்ய உண்மை. நிச்சயமாக இதை நான் வெறும் புகழ்ச்சிக்கு சொல்லவில்லை.
மது அண்ணா, நீங்கள், ராகவேந்திரன் சார், கோபால் போன்ற அனைவரும் நிச்சயம் காலைக் காட்சிகளை கண்டு மகிழ்ந்திருக்கிறோம். பொதுவாக சிட்டியில் உள்ளவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கம்மி. சிட்டி தள்ளி உள்ள பகுதிகளிலும், நடுத்தரமான கடலூர், சிதம்பரம், விழுப்புரம் போன்ற நகரங்களிலும் இந்த காலை 10.30 மணிக் காட்சி மிகவும் பிரசித்தம். 'எப்படா சனி, ஞாயிறு வரும்' என்று தவம் கிடப்போம். வெள்ளிக் கிழமைதான் தியேட்டர் வாசலில் அது சம்பந்தமான போஸ்டர் ஒட்டுவார்கள்.
மறந்து போன, இது போன்ற, மேலும் உள்ள டப்பிங் படங்களை நீங்களும், மது அண்ணாவும் அட்டகாசமாக தந்து விட்டீர்கள். கொஞ்சம் 'டீப்'பாக சிந்தனை செய்த போது இன்னும் சில படங்கள் கூட ஞாபகத்துக்கு வந்தன. தெலுங்குப் படங்கள் அல்லாது கன்னடப் படங்களுக்கும் இத்தகைய பெருமை உண்டு.

அதில் முக்கியமானது விஷ்ணுவர்தன், துவாரகீஷ் நடித்த 'கள்ளா குள்ளா' என்ற படம் நிஜமாகவே நல்லா 'கல்லா' கட்டியது. கடலூர் முத்தையாவில் ரெகுலர் ஷோவாக கலக்கி எடுத்து பின் காலைக் காட்சியாகவும் இன்னொரு ரவுண்ட் வந்தது. செம என்டெர்டெயின்மென்ட் மூவி. கலர் வேறு.
அப்புறம் கன்னட ராஜ்குமார் நடித்த 'மயூரா' என்ற 'அரச' படம் தமிழ் பேசி ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றது. ராஜ்குமாரின் லாவகமான வாள்வீச்சு படத்தை தூக்கி நிறுத்தியது. பிரம்மாண்டமான தயாரிப்பு.

'சகோதர சவால்' என்ற கன்னடப்படம் 'சகோதர சபதம்' என்று வெளிவந்து விஷுணுவர்த்தன், ரஜினி நடிப்பில் நன்றாக ஓடியது. ரஜினி அப்போது தமிழில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தை தயாரிப்பாளர்கள் விடுவார்களோ! செமையாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தெலுங்கில் கிருஷ்ணாவும், என்.டி.ஆரும் இணைந்து நடித்த 'கடவுள் படைத்த மனிதர்கள்' (தெலுங்கில் 'தேவுடு சேசின மனுஷுலு') அந்த மாதிரி இன்னொரு படம். நாயகி ஜெயா மேடம்.
அப்புறம் நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் மூவி 'வைரக் கிரீடம்'
ராமகிருஷ்ணா இன்னொரு ஆக்ஷன் ஹீரோ. இவர் நடித்து வெளிவந்த 'பைட்டர் பகவான்' சக்கைப் போடு போட்டது.
ரஜினியின் வளர்ச்சி காலத்தில் அவர் நடித்த மொழி மாற்றுப் படம் 'இன்ஸ்பெக்டர் ரஜினி'. 'உங்க சௌத்ரியை எங்கள் இன்ஸ்பெக்டர் ரஜினி முந்திட்டார்' என்று அப்போதைய ரஜினி ரசிகர்கள் எங்களிடம் செம காமெடி பண்ணினர்.

பிறகு ரஜினியும், என்.டி ஆரும் இணைந்த படம்' என்ற விளம்பர வாசகத்தில் வெளிவந்து தோல்வியைத் தழுவிய 'டைகர்'. ரஜினிக்கு ஜெயசுதாவின் தங்கை சுபாஷிணியும், ராமாராவிற்கு ராதா சலூஜாவும் ஜோடி
என்.டி.ஆர் தனியே ஹீரோவாக நடித்த 'ராயல் டைகர் ராமு',
என்.டி.ஆர், வாணிஸ்ரீ ஜோடியில் 'சிம்மக்குரல்'.
கிருஷ்ணா நடித்த 'ரத்த சம்பந்தம்'
லேடி ஆக்ஷன் மூவி 'பொல்லாத பெண்'. இதில் லதா, சரத்பாபு ஜோடி.
இன்னும்

கௌபாய் குள்ளன்,
ஜூடோ சுந்தரி,
லேடி பைட்டர் ரேகா,
நேபாளத்தில் சி.ஐ.டி 999,
'டெத் ரைட்ஸ் எ ஹார்ஸ்' ஆங்கிலப்படத்தின் தழுவலான, மிக பாப்புலரான 'ரிவால்வார் ரீட்டா',
துப்பாக்கி ரங்கன்,
கத்திக்குத்து கந்தன்,

டூபான் மெயில் (இந்தப் பெயரில் மஞ்சுளா நடித்த தெலுங்கு தழுவல் ஒன்றை பார்த்திருக்கிறேன். 'அழகி'க்கு ஹீரோ நரசிம்ம ராஜு. கிரிபாபு, விஜயலலிதாவும் உண்டு )
டூபான் க்வின்
இப்படி நிறைய.
ஆதிராம் சார்,
இன்னொரு படம் தங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
'நகரத்தில் திருடர்கள்' என்று ஒரு படம் வந்ததே...நினைவிருக்கிறதா?...படுபயங்கரமான படம். காலைக் காட்சி பார்த்துவிட்டே நடுங்கிப் போய் வீட்டுக்கு வந்தேன் வேர்க்க விறு விறுக்க.
இன்னும் கூட சில நினைவுக்கு வருகின்றன.
பூதம் எனது நண்பன்,
மாய சக்தி,
ராக்கெட் ராணி,
நாக சக்தி
இப்படியும் படங்கள் காலை காட்சியாக உலா வந்தன.
மலையாளத்தில் வின்சென்ட் நடித்த (அவரது நூறாவது படம் என்று நினைக்கிறேன்) 'பிக்னிக்' என்ற படம் பார்த்ததும் உண்டு.

நம்ம கமல், லஷ்மி நடித்த 'பொன்னி' என்ற படம் கூட பின்னாளில் கமல் ஸ்டாரான பிறகு 'கொல்லிமலை மாவீரன்' என்று வெளிவந்தது.

அப்புறம் கமல் நடித்த 'ஏழாம் இரவில்' என்ற மொழி மாற்றுப் படமும் இந்தக் காலைக் காட்சி லிஸ்ட்டில் சேருமே. கமலுக்கு கோராமை மேக்-அப். இது இந்தியிலும் 'பியாசா சைத்தான்' என்று மொழி மாறியது

இதுவல்லாமல் நேரிடையாகவே வந்த இந்திப்படம்... பேய்ப்படம் ஒன்று 'தர்வாஜா'. ஐயோ! குலை நடுங்க வைக்கும் படமல்லவா அது.
இன்னும் நிறைய இருக்கிறது. ஞாபகம் வர,வர தரலாம்.
இதெல்லாம் செம ஜாலியான காலங்கள். பின் இவைகளின் காலம் போய் நீங்கள் சொன்ன மாதிரி மலையாள 'A' சர்டிபிகேட் படங்களே பின்பு காலைக்காட்சி படங்களாய் நெடுநாள் கோலோச்சின. இந்தப் படங்கள் வெறும் முக்கால் மணி நேரத்தில் முடிந்து விடும். இவைகளிலும் சண்டைக் காட்சிகள் உண்டு. உடலுறவு சண்டைக் காட்சிகள்.

நீங்கள் குறிப்பிட்ட 'மழு' (ஆயுதம்) நிஜமாகவே நல்ல படம். பாலன் கே.நாயரின் கடின உழைப்புக்கு ஒரு சான்று அந்தப் படம். 'பாப்பாத்தி' ரதி தேவி மருமகள். சந்தர்ப்பவசத்தால் ஒருமுறை மருமகளுக்கும், மாமனாருக்கும் ரசாபாசம் நடந்துவிட (இது படத்தில் டீசென்ட்டாகவே இருக்கும்... அது கூட படத்தின் முக்கால்வாசி பாகத்திற்குப் பிறகு... சுகுமாரன் என்ட்டர் ஆவதற்கு முன் ) நம்ம ஆளுங்க அதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முண்டு உடுத்திய 'பாப்பாத்தி' ரதிதேவியின் போஸை எட்டு சீட் போஸ்டராக ஒட்டி,'மாமனாரின் இன்ப வெறி'யாக மாற்றி, தமிழகத்தையே காம வெறி பிடிக்கச் செய்து விட்டார்கள் பாவிகள். அந்தப் படத்தில் கடும் கிராமத்து உழைப்பாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார் நாயர்.
அது போல ஜெயபாரதியின் முதுகை மட்டும் பெரிதான போஸ்டராக்கி 'இதோ இவிட வரே' படத்துக்கு பெரியவர் முதல் சிறியவர் எல்லோரையும் வரச் செய்து விட்டார்கள். நல்ல வேளை. 'சோமனின் காமம்' என்று இதற்கு தமிழில் பெயர் சூட்டாமல் விட்டார்களே! அதுவரை பிழைத்தோம்.
சரி! சப்ஜெக்ட் வேறு திசை நோக்கி பாய எத்தனிக்கிறது. நிறுத்திக் கொள்வோம்.
எது எப்படியிருந்தாலும் சரி! எழுபதுகளின் வெயிலில் தியேட்டர்களின் கதவுகளைத் திறந்து வைத்து, காற்றுக்காக அங்கேயே ஏங்கி, வேர்த்து நின்று விஜயலலிதா, கிருஷ்ணா, ஜோதி இவர்களின் பழுப்பு கலர் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளையும், குதிரையோட்டங்களையும் ரசித்த காலங்களை காலாகாலத்துக்கும் மறக்க முடியாது.
காலைக்காட்சி அல்லாது மீதி மூன்று ஷோக்களும் என் 'இதய தெய்வ'த்தின் படங்களுக்கே முதலிடம். அதிலும் 'ஞான ஒளி'க்கு பிரதான இடம் அன்றும் இன்றும் என்றும். அப்புறம்தான் மற்ற படங்கள் எல்லாம்.
காலைக்காட்சிகள் நினைவை மீண்டும் கிண்டி விட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Last edited by vasudevan31355; 17th April 2016 at 09:35 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
17th April 2016, 12:42 AM
#2376
Senior Member
Senior Hubber
//அதில் முக்கியமானது விஷ்ணுவர்தன், துவாரகீஷ் நடித்த 'கள்ளா குள்ளா' என்ற படம் நிஜமாகவே நல்லா 'கல்லா' கட்டியது. கடலூர் முத்தையாவில் ரெகுலர் ஷோவாக கலக்கி எடுத்து பின் காலைக் காட்சியாகவும் இன்னொரு ரவுண்ட் வந்தது. செம என்டெர்டெயின்மென்ட் மூவி. கலர் வேறு// மதுரையில் சிந்தாமணியில் கள்ளனும் குள்ளனும் என்று பார்த்த நினைவு..மாட்னி ஷோ.அப்போது பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். பார்த்துவிட்டு பின் செய்ண்ட்மேரிஸ் ஸ்கூலில் ஏதோ ஒரு கண்காட்சிக்குப் போய்விட்டு 12 ஏ மஹால் டு ஆரப்பாளையம் பஸ் பிடித்து எட்டு மணிக்கு வீடுவந்த நினைவு..
மதுரையைப் பொறுத்த வரை காலைக் காட்சி என்றால்பதினொரு மணிக் காட்சி தான்..அதுவும் பழைய படங்கள் தான்..ரெகுலராகவே இந்த மலையாளப்படங்கள் வாடகைக்கு ஒரு இருதயம், இன்ப தாகம் (ஈட்டா), அவளுடே ராவுகள் (சென் ட்ரல் என நினைவு) மா இ வெ(மீனாட்சி என நினைவு) ..போட்டிருந்தார்கள்.. பட் நான் எதுவும் பார்த்ததில்லை..சீரியஸாகவே..
ஏனெனில் தமிழில் விட்டுப்போன சிவாஜி படங்கள் எனத் தொடர்ந்து பார்த்திருந்தபருவம் பத்து,ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ.. காலேஜ் போன பிறகு தான் கொஞ்சம் அக்கரைக்குச் சென்று படம் பார்க்க முடிந்தது..காலேஜ் கட்டடிப்பது என்பது சனிக்கிழமை மட்டுமே.. மார்னிங்க் ஷோமோஸ்ட்லி சென் ட்ரல் என நினைக்கிறேன்.. பேய் ப் படம் ஹிந்தி என்றால் நினைவில் வருவது புராணா மந்திர்.. அப்புறம் த்ரில்லர் பஹேலி..இதுவும் சென் ட்ரல் தான் ..
காலேஜ் முடித்து ப்ரொபஷனல் கோர்ஸ் சேர்ந்த பிறகு பார்த்த படம் ஒன்று நினைவில் சுந்தரம் ஏ.சி.யில் (அண்ணா நகர்) ஹீரோ.. ஐ திங்க் ஹிந்திப்படத்தில் நான் பார்த்த ஐந்தாவதோ ஆறாவதோ படம்.
மலையாளம் எப்போது பார்த்தேன் என நினைவில்லை..பார்த்த தியேட்டர் நினைவிருக்கிறது.. தங்கம். படம் சலனம்..லஷ்மி மோகன் ப்ளாக் அண்ட் வொய்ட்..தூஷிக்கிறான் என்பது போல ஒரு பாட்டுவரும்..
தேவி தியேட்டர் வொர்க்*ஷாப் ரோட்டிலேயே கொஞ்சம் ஆறு முச்சந்தி தாண்டி சிம்மக்கல் போகும் பாதையில் ஆட்டு மந்தைக்கு முன்னால் ஒரு பெரிய பஸ் ஷெட் வித் லாட் ஆஃப் எம்ப்டி ஸ்பேஸ் இருக்கும் சிலபல பஸ்கள் ரிப்பேர் செய்யப் படுவதை அரைடிராயர் வயதில் பார்த்திருக்கிறேன்..பிற்காலத்தில் அந்த பஸ் ஷெட் மாறி அங்கு தீபா ரூபா தியேட்டர்கள் குட்டியாய் வந்தன..அங்கு தான் நீங்கள் சொன்ன சில படங்கள் ஏ ரெகுலர் ஷோபோடுவார்கள்..குப்பை தியேட்டர் ஏசி மற்றும் விலை அதிகம் (பாக்கெட் மணிக்குக்கட்டாது) எனில் ஸ்ரீதேவியே சரணமாக இருந்த நாட்கள்..
ம்ம் உங்க அளவுக்கு காலைக் காட்சி பார்த்ததில்லை வாசு..
.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2016, 12:46 AM
#2377
Senior Member
Senior Hubber
பரமேஸ்வரியில் யாதோங்கி பாரத் 200 நாட்களுக்கும் மேல் ஓடியதாக நினைவு. ஷோலேயும் அப்படியே.. காலேஜ் டயமா பள்ளி டயமா தெரியவில்லை.. அவுர் கோன் என்ற திரைப்படம் பரமேஸ்வரியில் திரையிடப் பட அதைப்பார்த்த என் நண்பன் என்னிடம் கதைகதையாகச் சொல்ல ஆ என க் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.. (மார்ச்சுவரிக்குள்ள அந்த ஹீரோவோட ஃப்ரெண்ட் போய் ஒவ்வொரு பாடியாப் பாப்பான் பாரு..அப்பஒரு பாடியத்தெறக்கறச்சே ஒருகை வந்துஅவ்னைத் தொடுமா..
அப்புறம் என்ன ஆகுண்டா.. - விரல் நகம் கடித்தபடி நான்..
ம்ம் ஒண்ணும் ஆகாது..இல்லை அந்த ஃப்ரெண்ட் ஷாக்லயே ஹார்ட் அட்டாக் வந்து செத்துடுவான்..
பிற்காலத்தில் ராதா நடித்து அதுவே அதே இரவில் லோ வேறுபெயரோ வந்த நினைவு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2016, 04:33 AM
#2378
Senior Member
Diamond Hubber
ராகவ் ஜி...
ஊமைப் பெண்ணின் தாக்கம் எப்போதுமே அடி மனதில் இருக்கும். இப்போ நீங்க கிளறி விட்டுட்டீங்க...
ஆரம்ப வரிகளில் ஃப்ரேமுக்குள் தெரியும் சந்திரகலாவின் பிம்பம் "ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன" என்ற வரிகள் வரை மௌனமாக சிலை போலிருந்து விட்டு "உறவோ.." என்ற வார்த்தையிலிருந்து வாயசைக்கும் விதத்தில் ஸ்ரீதரின் அனுபவம் பேசும்.
நான் ஒரு லிரிக்ஸ் பித்தன் என்பதால் சில வார்த்தைகளை சரி செய்து பாடல் வரிகளை மீண்டும் எழுதுகிறேன் ( உங்க அனுமதியுடந்தான் )
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
வெறும் கனவோ
கூண்டுக் கிளி போல வாழ நினைத்தேன்
தாங்கும் கையொன்று கண்டேன்
மீண்டன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று
வேண்டி வரம் கேட்டு நின்றேன்
இது நினைவோ வெறும் கனவோ
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
பெண்ணின் மனசாட்சி பேசும்போது
என்னை நீ காண முடியும்
கண்களில் தீர்த்தங்கள் அபிஷேகமானால்
உண்மை உனைத் தேடி அடையும்
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
பாலும் சிலர் கண்ணில் நீராகத் தெரியும்
காணும் கண் செய்த தவறு
பாவையின் பாவங்கள் ஏதேனும் இருந்தால்
யாவும் நான் கொண்ட அழகு
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
நினைவோ.. கனவோ..கனவோ..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2016, 04:45 AM
#2379
Senior Member
Diamond Hubber
சிக்கா... நீங்க சொன்ன "காலம் எனக்கொரு பாட்டெழுதும்" பாடலுக்கு இசை அமைத்தவர் ஒரு பிரபலத்தின் தந்தை.. தெரியுமில்லே ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th April 2016, 06:39 AM
#2380
Junior Member
Newbie Hubber

Originally Posted by
madhu
சிக்கா... நீங்க சொன்ன "காலம் எனக்கொரு பாட்டெழுதும்" பாடலுக்கு இசை அமைத்தவர் ஒரு பிரபலத்தின் தந்தை.. தெரியுமில்லே ?
மது அண்ணா,
திலீப்பின் பெருமைக்குரிய ஆனால் துரதிருஷ்ட சாலியான தந்தை குலசேகரை பற்றி பாகம் ஒன்றில் அலசும் போது ,இந்த பாடலை குறிப்பிட்டு தங்கள் புதிருக்கு விடையளித்திருந்தோம்.
சேகர் ஒரு திறமைசாலி. முழு ரகுமான் இல்லாவிட்டாலும் முக்கால் ரகுமான் என்று அவரை நன்கு தெரிந்தவர்கள்,அறிந்தவர்கள்,புரிந்தவர்கள் கூறுவார்கள்.
ஏ.கே .வேலன், நீர்க் குமிழியில் பாலச்சந்தரும் புதுசு, வாய்ப்பை ஏற்க தயங்கிய குமாரும் புதுசு என்பதால் அனுபவசாலி சேகர் சேர்த்து கொள்ள பட்டார். குமாரின் ஆரம்ப கால சாதனைகளில் சேகரின் பெயரும் எழுத பட்டே ஆக வேண்டும். வண்ண விழி மேடை, என்னதான் பாடுவது,நேற்று நீ போன்ற பாடல்கள் சேகரின் கை வண்ணமே.தவிர பின்னணி ,இணைப்பு இசை எல்லாமே சேகரின் தலையில்.
சேகர் ,தமிழில் ஒரு படம் கூட சொந்தமாக இசைக்கா விட்டாலும், மலையாளத்தில் தீவிர இசை ரசிகர்களை தீவிரமாக கவர்ந்து போற்ற படுபவர். இவரின் நூறு பாடல்களும் மலையாள தேசத்து பிரத்யேக மண்ணிசை சாதனை சரித்திரம்.
புகழேந்தியும் ,இவரும் ரொம்ப நெருக்கம். அவரிடம் சொல்வாராம் ,நாம ஜெயிக்காட்டாலும்,நம்ம பசங்க ஜெயிப்பாங்க.திலீப் ஜெயித்த பிறகு தன் தந்தையை நினைத்ததை விட காதன் ஹசரி போன்றவர்களை நினைத்தது , ஹூம்.... என்ன சொல்ல? ராஜகோபாலும்,குலசேகரனும் கல்லறையில் சுழன்றிருப்பார்கள்.
Last edited by Gopal.s; 17th April 2016 at 07:49 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks