Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள வாசு சார்,

    தாங்கள் எத்தனை முறை ராஜாவைப் பற்றி எந்தெந்த கோணங்களில் எழுதினாலும் படிக்க படிக்க சுவையே தவிர சலிப்பில்லை. எப்படி ராஜாவை எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் சுவாரஸ்யமாக இருக்குமோ அது போலவே.

    ராஜாவில் நமது விஸ்வம் பங்களிப்பு பற்றிய உங்களது வர்ணனை அருமை. கதாநாயகன் அறிமுகம் ஆவது வரையில் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு செல்வார். அலட்டிக் கொள்ளாத அலட்சிய நடிப்பு நம்மை மிகவும் கவரும். கைது செய்யப்பட்டு கமிஷனர் முன் நிறுத்தியபோதும் கமிஷனர் சிங்கப்பூரில் இருக்கும் கடத்தல் மன்னனின் போட்டோவைக் காட்டி மிரட்டும்போது கொஞ்சம் கூட பயமின்றி அசால்ட்டாக பதிலளிக்கும் அழகே தனி.

    லாக்கப்பில் ராஜாவுடன் அறிமுகம் ஏற்பட்டதும் அதற்கெனவே காத்திருந்தவர் போல பொறுப்பை ராஜாவின் தோளில் சுமத்தி விட்டு மறைந்து விடுவார். அதிலிருந்து ராஜாவின் அட்டகாசம்தான் படம் முழுக்க. க்ளைமாக்சுக்கு சற்று முன் மீண்டும் விஸ்வத்தின் அட்டகாசம் தொடரும். மீண்டும் அறிமுகம் ஆகும்போதே கமிஷனரிடம் அவர் போனில் பேசும் அலட்சியம். "கமிஷனர் சார், என்னை ஏமாற்ற முடியாது. ஒருத்தர் குரலை ஒருமுறை கேட்டுவிட்டால் மறக்க மாட்டேன்" என்று சர்வ அலட்சியமாக சொல்வதும் "எங்க தொழிலில் பாவ புண்ணியம் பார்க்க கூடாது சார்" என்று கமிஷனரையே மிரட்டுவதும்,

    க்ளைமாக்சில் ராஜாவின் அம்மாவாக தன்னால் கடத்தி வரப்பட்ட பண்டரிபாய் பாபுவின் அம்மா என்று அறிந்து தடுமாறுவதும், தன் அனைத்து நம்பிக்கைகளும் தகர்ந்து போய் பாஸின் முன் நிலைகுலைந்து நிற்கையில் அப்போது அங்கு வரும் ஜம்புவின் (கே.கண்ணன்) விளக்கத்தால் மீண்டும் விஸ்வம் விஸ்வரூபம் எடுத்து, தன்னை ஏமாற்றிய சகோதரர்களை சாட்டையால் விளாசுவதும் என 'விஸ்வம்' மனோகரின் பங்கு ராஜாவில் மகத்தானது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •