-
22nd June 2016, 02:57 AM
#11
Junior Member
Newbie Hubber
டீ.பீ. ராமச்சந்திரன் நினைவு கூறல் அருமை.சீர்காழியை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.குரல் மட்டும் சற்று இளமை மிளிர்ந்திருந்தால் டீ.ம்.எஸ் க்கு சவால் விட்டிருப்பார் திரையிசையில். இவருடையது பிர்க்கா சாரீரம். (டீ.எம்.எஸ் சற்றே பிசிறு தட்டும் கார்வை சாரீரம்) ஆனால் உணர்வுகளை கொட்டி ,தமிழின் அழகு மிளிர பாடும் அற்புத பாடகர். தோற்பது போல பாட மறுத்து ,திருவிளையாடல் (பாலமுரளி) ,தவப்புதல்வன் (உலகின் முதலிசை) போன்ற படங்களில் வாய்ப்புகளை மறுத்தார். ஆனால் டீ.எம்.எஸ் ஈகோ பார்க்காமல் இவரிடம் தோற்பது போல அகத்தியரில் பாடினார்.
இவரின் உற்சாக, காதல் உருக்க ,குத்து பாடல்களை ரொம்ப கவனிக்காமல் விட்டு ,அசரீரியாகவே ஆக்கி விட்டோம்.
இன்பம் எங்கே என்ற ஜாலி பாடல் ஒரு கிழி கிழிக்கிறார் .
சுப்பு ஆறுமுகத்தின் பாடல் டீ.கே.ராமமூர்த்தி இசையில் காதலின் துடிப்பை, உருக்கத்தை,மேன்மையை,மென்மையை குழைத்து தேனாக சீர்காழி பாடலுடன் சேர்ந்து இழைவார்.
டீ.ஆர்.பாப்பாவின் இதமான கூத்தாடும் குத்துக்கு சீர்காழியின் எகத்தாள ,ஜெகஜ்ஜால குரல் மாயம்.
Last edited by Gopal.s; 22nd June 2016 at 03:00 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd June 2016 02:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks