Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு தமிழ் படங்களின் காதல் காட்சிகளில் முதலிடத்தில் வருவது வசந்த மாளிகை பிளம் காட்சி . அடுத்து சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு,அடுத்து மடி மீது தலை வைத்து அன்னை இல்லம்,அடுத்து வைஜயந்தி-சிவாஜி இரும்புத்திரை,அடுத்து பத்மினி-சிவாஜி தில்லானா மோகனாம்பாள்,தெய்வப்பிறவி,புதையல்,அடுத்து நாலு பக்கம் அண்ணன் ஒரு கோயில்.

    ஜீப்பில் அண்ணனும் அண்ணியும் ஏறி செல்லும் போதே அண்ணனின் விஷம பார்வை வார்த்தைகள்.ஆரம்பமாகி விடும்.(பறக்கறதை தடுக்க கூடாது ) அண்ணி ,அனாயசமாக ,ஓடற ஜீப்பிலே நெருப்பு பத்த வைப்பாங்க. அண்ணியை பாத்தாலே பத்திக்குமே, அந்த பச்சை வண்ண புடவையில் .(அதனாலேயே அண்ணனோட வார்த்தை ,செயல்கள் கொஞ்சம் பச்சையாகவே இருக்கும்) ஜெர்க்கின்னில் அண்ணன் அழகுன்னா அழகு .ஜோடி பார்த்தாலே ராசா- ராணிக்கு ஆதிவாசிகளை போல் நாமும் திருஷ்டி கழிப்போம்.

    பிறகு ஆதிவாசிகளின் மோதிர சடங்கு. நடனம். அண்ணன் ,ஆரம்பத்தில் மிதமான பிகு பண்ணி ஆரம்பிப்பார்.அதகளம். சுறுசுறுப்பு, அழகுணர்ச்சி, பாங்கு ,தாள இசைவு அனைத்தும் கொண்ட முழுமை. ஒரு இடத்தில் அண்ணியுடன் ஆடிக்கொண்டே கண்ணை சுழற்றுவார் பாருங்கள் ,அண்ணனால் மட்டுமே முடியும். ஆதிவாசிகள் வரிசையில் குதித்து மித ஓட்டத்துடன் கைகளை புறத்தே வீசி ஒரு ஸ்டெப் பண்ணுவார் பாருங்கள் ,அடடா??? மாமாவின் பின்னணி காட்சியை எங்கோ கொண்டு வைக்கும் (அடியம்மா ராசாத்தி இந்த காட்சிக்கா?)

    மழை வந்த பிறகு மனசு நனைய ஆரம்பிக்கும். ஆனால் உடனே அதை தணலாக்கும் அண்ணன். புதிய பறவையிலும் இப்படி ஒரு காட்சியில் கண்ணியமான சிட்டு குருவியாவார் அண்ணன். இந்த படத்தில் முழுசாக கெட்டு திருந்திய கேஸாச்சே?காதலுடன் காமமும் தகிக்க வேண்டாமா தனிமையில்?

    ஆடும் கதவை மூடும் அண்ணன் ,பார்வையில் படும் படியா அண்ணி முந்தானையை பிழிவது? அண்ணனின் பார்வையில் அப்படியே காமம் தகிக்கும்.passion கலந்த ஒரு erotic பார்வை.இப்படி ஒரு காந்த பார்வை உலகத்தில் எவனுக்கய்யா வாய்க்கும்?(குடிமகனே பாடலின் இரண்டாவது சரணம் interlude வரும் போது அந்த ஒரு வினாடி பார்வை ஈர்ப்பு, கலைமகள் பாடலில் ஒரு விகசிப்புடன் கூறிய குழப்ப பார்வை, போங்கப்பா) பிறகு நின்று கொண்டு பசி தீர்க்கும் பிளம் கடிப்பார் பாருங்கள், கடிக்க ,சுவைக்க நினைத்ததை அவர் செய்திருந்தால் கூட நமக்கு அப்படி ஒரு கிக் ஏறுமா என்று தெரியாது. அப்படி.... அப்படி ....

    பிறகுதான் அண்ணன் யாருமே எதிர்பார்க்காத ஒன்றை செய்வார். கொள்ளிக்கட்டை எடுத்து சிகரெட் பற்ற வைப்பது.பிறகு ஒதுங்கி போகும் அண்ணியை ஸ்ஸ் ...ஸ்ஸ்ஸ் என்று அழைக்கும் கிக்கான அழைப்பு. இங்கே வா என்ற பார்வை அழைப்பு. தூது விட்டு தன் மனதை அவிழ்ப்பது. (பாலமுருகன் வசனம் அருமை)அண்ணிக்கு இது புரிந்ததால் சங்கடம்,நாணம்,விழைவு, மெல்லிய காதல் உணர்வு, குழப்பம்,சம்மதம்(மயக்கமும்,மௌனமும்) என்று கலப்புணர்வுகளை அண்ணி ,அண்ணனின் காம காதலுக்கு தோதாக அனுசரித்து வெளியிடுவார் பாருங்கள்,ஜோடின்னா இதுதான்யா ஜோடி என கூவ தோன்றும்.

    இதற்கு பின்னணி இசையில் மாமா செய்யும் ஜாலம் ,காட்சியை எங்கோ தூக்கி நிறுத்தும்.

    இந்த காட்சி நம் மனதை ரசவாத வித்தை செய்து ,நமக்கும் இருக்கும் காதலுணர்வை தட்டி எழுப்பி தவிக்க விடும்.
    Last edited by Gopal.s; 24th June 2016 at 02:10 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •