Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஒரு அருமையான பாடல். நல்ல சிச்சுவேஷனும் கூட. ஆனால் நல்ல நடிகை இருந்தும் அவரின் அன்றைய உருவத்தால், அவருக்கு பொருத்தமில்லா நடனத்தால் இப்பாடல் உரிய பலனை அடையாமல் போனது. சுசீலா அம்மாவின் அற்புதமான பாடலின் சூழலை உணர்ந்த குரல் பாவங்கள். அதற்கேற்ற அந்த பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்கள் கருணையோடு பரிதாபப்பட்டு நெகிழச் செய்யும் மன்னரின் துள்ளாட்டத்தோடு கூடிய உருக வைக்கும் இசை.



    திருடனான கணவன் திருந்தி வாழும் போது வறுமைக்கு உள்ளாகிறான். மனைவியும், குழந்தையும் உணவு கூட இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை. நல்லவனாய் மாறினாலும் திருடன் என்ற முத்திரை மாறாததால் சமூகம் அவனுக்கு வேலை தர மறுக்கிறது. பாலின்றித் தவிக்கும் தன் குழந்தையின் நிலைமை கண்டு அவன் துடிக்கிறான். தவிக்கிறான். மனைவி அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் படுக்கையில் விழுகிறான். அரண்டு பிதற்றுகிறான். அவன் உடல்நிலை மோசமாகிறது. படுக்கையில் படுத்தபடியே 'யாராவது வேலை கொடுங்களேன்' என்று அரற்றுகிறான். அவனை படுக்கையில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் மனைவி அவனை கட்டிலுடன் சேர்த்து சேலையால் கட்டிப் போடுகிறாள் அழுதபடியே. ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர, டாக்டர் மருந்து எழுதித் தந்து சத்துள்ள ஆகாரமாக அவனுக்குத் தரச் சொல்லி செல்ல, மனைவி செய்வதறியாது நிற்கிறாள் வறுமையின் கொடுமையை நினைத்தபடியே.

    இப்போது அவள் ஒரு முடிவெடுக்கிறாள். ஹோட்டலில் நடனமாடி, வருவாய் ஈட்ட முடிவு செய்து, அட்வான்ஸும் வாங்கி கணவனுக்கு மருந்துகள் வாங்கி வருகிறாள். கணவன் இவையெல்லாம் 'எப்படி வாங்கினாய்?' என்று வினவ, தான் வேலைக்குப் போவதாகக் கூறுகிறாள். கணவன் அதை எண்ணி துயரமடைகிறான். அவள் கணவனிடம் வேலைக்குப் போவதாகத் சொன்னாளே ஒழிய, தான் ஹோட்டலில் நடனமாடிச் சம்பாதிப்பதாகச் சொல்லவில்லை.

    இப்போது அவள் ஹோட்டலில் நடனமாடச் செல்ல, வீட்டில் தனியே இருக்கும் கணவனிடம் வருகிறான் அவனுடைய பழைய பாஸ். அவனை மறுபடி திருட்டுத் தொழிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் திருந்தியவனோ தீர்மானமாக அதற்கு மறுக்க, அவனுடைய கொள்ளையர் தலைவன் அவன் மனைவி ஹோட்டலில் பல பேர் அறிய மானத்தை விட்டு நடனமாடி சம்பாதிப்பதை விட திருடுவது எவ்வளவோ மேல் என்று அவன் மனைவி நாட்டியமாடுவதை அவனிடம் போட்டு உடைக்க, அதைக் கேட்டு அதிர்ந்து, உறைந்து போகிறான் கணவன். கோபம் தலைக்கேற தான் பாஸுடன் ஹோட்ட்டலுக்கு புறப்படுகிறான்.

    அங்கே கணவனுக்காக தன் மானத்தையே விட்டு நடனமாடுகிறாள் அவன் மனைவி.


    திருந்திய திருடனான கணவன் வேடத்தில் நடிகர் திலகம். கேட்கவே வேண்டாம். மனைவி ரோலுக்கு கே.ஆர்.விஜயாதான். கொள்ளைக்கார பாஸ் பாலாஜி.

    ஹோட்டலில் நடனமாடும் ரோல் சற்றும் பொருந்தா விஜயா. உடல் பருமன் உடன் பயமுறுத்துகிறது. மரியாதைக்குரிய நாயகி என்று பெயர் எடுத்தது விட்டதால் உடல் முழுதும் மறைத்த கோபிகாஸ்திரி கவர்ச்சி டிரெஸ் விஜாவிற்கு சூட் ஆகவில்லை. இந்த மாதிரி நடனமும் அவ்வளவாக அவருக்குப் பழக்கமில்லை.


    என் ஆசை என்னோடு
    சலங்கை தரும் ஓசை உன்னோடு
    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா ஹா ஹா மயக்கந்தான்
    ஓஹோஹோ
    அஹா அஹா அஹாஹா
    அஹா அஹாஹா

    (என் ஆசை என்னோடு)

    கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
    கோலத்தின் அலங்காரம் பழகாதவள்
    பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
    பாவத்தை பிறர் காண சகியாதவள்
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

    கேட்டால்.....

    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
    ஓ மயக்கந்தான்

    (என் ஆசை என்னோடு)

    மதுக் குடத்தினில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல
    வடித்த பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல
    மணமுள்ள மலர் காண கொடியானவள்
    வாழ்கின்ற துணைக்காக கனியானவள்
    வழி கண்டு சபை தேடி சிலையானவள்
    மானத்தின் நிழலோடு கலையானவள்
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு

    கேட்டால்....

    உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
    ஓ மயக்கந்தான்
    (என் ஆசை என்னோடு)

    'புன்னகை அரசி'யை புறந்தள்ளிவிட்டு பாடலை முழுவதும் ஆக்கிரமிப்பது இசையரசியே. பாடலின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதை நம் உள்ளங்களில் உணர்வோடு உணர்த்தும் வித்தையில் கைதேர்ந்த குரல்காரி இந்த பார் போற்றும் பாடகி. நடிகையின் முக பாவங்களையும், உடல் பாவங்களையும் ஒரே ஒரு குரல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

    'ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
    ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு'

    என்று வரிகள் முடித்து

    'கேட்டால்'........

    என்று ஒரு வார்த்தை கேட்டு, சிறிது நிறுத்தி,

    'உலகமே ஆடும் பெண்ணோடு
    மயக்கந்தான் ஹா மயக்கந்தான் ஓ மயக்கந்தான்'

    என்று தபேலா வாத்தியங்களுக்கிடையே சுசீலா பாடும் இந்தப் பாடல் என்னுள் ஆழப் புதைந்தது. 'நடிப்புத் திருடன்' என்ற பிரளய சுனாமியால் இந்த பாடல் காணாமல் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்பதும் ஒரு புறம் உண்மையே. இருந்தாலும் மதுர கானங்கள் இதையெல்லாம் வெளிக்கொணரத்தானே உருவாக்கப்பட்டது?

    கதையறிந்து, காட்சியறிந்து காவிய வரிகள் படைக்க கண்ணதாசனை விட்டால் யார்? விரசம் எதிர்பார்க்கும் பத்து ஆண்களுக்கு மத்தியில் பத்தினி ஒருத்தி தன் மானத்தையும் காத்துக் கொண்டு, அதே சமயம் நாட்டியமும் ஆட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் காலத்தின் கோலத்தை நினைத்து தன் நிலையை எண்ணிப் பாடும் வரிகள் அருமை. 'அனைத்தும் பெண்ணே' என்பதை 'உலகமே ஆடும் பெண்ணோடு' என்ற ஒரே வரியில் கலக்கிய இவனல்லவோ கவி!

    மனைவியை ஹோட்டலில் நடனமாடும் கோலத்தில் பார்த்துவிட்டு அவளைத் 'தரதர'வென வீட்டுக்கு இழுத்து வந்து,ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் மறுபடி கத்தி, துப்பாக்கி எடுத்து திருட்டுத் தொழிலுக்குப் போவதை பலவேறு முக பாவ உணர்ச்சிகளால் நமக்கும் அவளுக்கும் உணர்த்தும் நடிகர் திலகத்தின் பேராற்றல் நடிப்பு எப்பேற்பட்டதையும் மறக்கடிக்கச் செய்யும் மாயா ஜால வித்தை. அதை வெல்ல எவரால் முடியும்?


    ராகவேந்திரன் சார்,

    உங்களுக்காகவே இந்தக் காட்சியையும் சேர்த்து பாடலுடன் இணைத்துள்ளேன். மூலவர் இல்லாமலா?

    ('Youtube'-ல் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இன்று நான் அப்லோட் செய்தது)

    arumai ji

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •