Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முக நூலில் அன்று எழுதியது :

    **

    ”ஏதோ எனக்குத் தெரிஞ்சதை வாசிச்சேன் பாஸ்கரன்..”

    “ம்ம் அதையும் பார்த்தேன் நீ அந்த ராகத்துல ஆரம்பிச்சு நடுல இன்னொரு ராகத்தையும் கலந்தே”
    “ஓ சரியாச் சொல்றேளே..உங்களுக்கு வீணை வாசிக்கத் தெரியுமா..”

    “ம்..கொடு”

    “ஆஹா ரொம்ப நல்லா வாசிக்கறீஙக் பாஸ்கரன்..எப்ப கத்துக்கிட்டீஙக..”

    “ஒரு வீணைக் கச்சேரிக்குப் போனேன். அங்கே வீணைச்சத்த்துக்கு மேல பஞ்ச் அடிக்கற சத்தம் தான் எனக்கு ஜாஸ்தியா வந்த்து..எழுந்திருச்சு கேட்டே விட்டேன்.. என்னய்யா வாசிக்கற நீன்னு..அதுக்கு வித்வான் ஞான சூன்யங்கள்ளாம் கச்சேரிக்கு வரக்கூடாது அப்படின்னார்.. ஞான சூன்யங்கள்ளாம் கச்சேரி மட்டும் பண்ணலாமான்னு கேட்டேன்..அதற்கு அந்த வித்வான் முதல்ல நீ வீணை கத்துண்டு வா.. அப்புறம் அதுக்கு பதில் சொல்றேன்னார்..
    அதுக்காகவே தேடிப் பிடிச்சு கத்துண்டு கச்சேரி பண்ணேன்..அதுக்கு அந்த வித்வானும் வந்தார். பலபேர் முன்னிலைல என்கிட்ட நீ ஜெயிச்சுட்டேன்னார்..”

    “வாவ் சூப்பர் பாஸ்கரன்”

    “இல்லை இவளே..அவருக்கு முன்னால நான் தோத்துட்டேன்..அவருக்கு பலபேர் முன்னிலைல்ல தன்னோட தோல்வியை அக்செப்ட் பண்ணிக்கற தைரியம் இருந்த்து. அதுல இருந்து நான் வீணை வாசிக்கறதையே விட்டுட்டேன்..”
    “இப்ப எதுக்காக வாசிச்சீங்க பாஸ்கரன் எனக்காகவா”

    “இது நான் தோத்த இடம் இவளே.. நீ சுந்தரத்தைத் தான் காதலிக்கறேன்னு சொன்ன இடம்.. நான் சுந்தரத்துட்ட தோத்த இடம் அதான் வாசிச்சேன்..”
    “பாஸ்கரன்..”

    *

    மேற்கண்ட உரையாடல் இடம்பெற்ற சீரியல் வந்தே மாதரம்.. பாரிஸ்டர் பாஸ்கரனாக சோ. தேவி ல்லிதா ஹீரோயின்..

    எப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் காட்சி அது. பாரிஸ்டர் பாஸ்கரனாக.. குடிகார அறிவு ஜீவியாக அற்புதமாக நடித்திருப்பார் சோ.

    *

    சின்னக்கண்ணனாகிய ஏகலைவனாகிய எனக்குத் தான் எத்தனை துரோணர்கள்.. அதில் நான் கண்டிராத ஆனால் அனுபவித்த எழுத்துக்கள், நடிப்பு, குணம் இவற்றிற்குச் சொந்தக்காரர் சோ.என் மானசீக குரு.எழுத்துக்களில் நகைச்சுவை கலந்து எழுதுவதாகட்டும், சீரியஸான வசனமாகட்டும் ( நான் சமாளிச்சுண்டுட்டேன் ஓய்- சாஸ்திரம் சொன்னதில்லை) அவருக்கிணை அவர் தான்.

    வெவ்வேறு தலைவர்களைப் பற்றி எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் தனது ஆஃபீஸ் பற்றியும் அதைப்பற்றிய ஆட்கள் பற்றியும் எழுதியிருப்பார்.. ஹிலாரியஸ்.

    வெகு சின்ன வயதில் மதுரை வீட்டிற்கு திலகர் திடலில் நிறைய பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் கூட நான் விரும்பிச் சென்ற ஓரிரண்டு கூட்டங்கள் சோவினுடையவை.. அந்த கணீர்க்குரல்.. நேரில் தொலைவில் பார்த்தாலும் நின்று ஒலிபெருக்கியில் ரசித்துக் கேட்ட்து இன்னும் நினைவில்.

    வால்மீகி ராமாயணம் இவர் எழுதிய உரை முழுக்கப் படித்திருக்கிறேன்.என்ன அழகாக எழுதியிருந்தார்.. நடு நடுவில் கம்ப ராமாயணக் கம்பேரிசன்.. மகாபாரதம் பேசுகிறது என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.. படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

    பத்து வருடங்களுக்கு முன்னால் என நினைக்கிறேன்..மனைவியின் ஒன்று விட்ட சகோதரியின் வீட்டிற்குச் சென்றால் இந்த்த் தெருவில் தான் இருக்கிறார் சோ என்றார். நன்றாகத் தெரியுமென்றும் சொன்னார்..பட் இண்ட்ரோ பண்ணுங்க எனக் கேட்காம ல் விட்டுவிட்டேன்.. கொஞ்சம் வெட்கம் தான்..ம்ம் ஐ மிஸ்ட் தட் சான்ஸ்.

    இன்னும் இன்னும் நிறைய எழுதலாம் என் குரு நாதர்களில் ஒருவரான சோவைப் பற்றி பின் வருகிறேன்..

    அவர் போய்விட்டாரா..யார் சொன்னது..என்னைப் போன்ற ஏகலைவன்களில் நெஞ்சினில் என்றென்றும் உயிர்த்திருப்பார்.
    .
    மேலே போய் எல்லாரையும் மகிழ்விப்பீர் குருவே..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •