-
4th January 2017, 08:52 PM
#11
Senior Member
Diamond Hubber
நாட்டில் என்னென்னவோ அக்கிரமங்கள் நடக்குமாம். பணப் பதுக்கல், கொள்ளை, கொலை, ஊழல், கூழைக்கும்பிடு, காலில் விழுந்து கெஞ்சல், பகட்டுக் கல்யாணங்கள், பதவி மோகம், லஞ்சம் என்று. இதற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை. தண்டனை இல்லை. கண்ணெதிரே கொலைகாரர்களும், கொள்ளையர்களும் நடமாடுகிறார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் சிலை அகற்ற மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு எழுகிறார்கள். எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. இதற்கெல்லாம் நீதி இல்லை. ஆனால் நீதி மன்றம் நடிகர் திலகத்தின் விஷயத்தில் மட்டும் தீவிரம் காட்டுகிறது. எல்லாவற்றையும் விட நடிகர் திலகம் முக்கியமாய் படுவதற்கு நாம் ஓரளவிற்கு பெருமை கூட பட்டுக் கொள்ளலாம் போல. சே! என்ன நாடு இது!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th January 2017 08:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks