-
6th May 2011, 10:23 AM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
Murali Srinivas
சதீஷ்,
நடிகர் திலகத்தையும் அவரது ரசிகர்களையும் பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்து வந்த மணியன் அண்ட் கோவிற்கு சரியான அடியாக அமைந்தது படத்திற்கு திரண்டிருந்த கூட்டமும் அவர்கள் அரங்கில் செய்த அலப்பறையும். அதுவரை எதிர்மறையாக எழுதிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது இதழ் அந்த சிறப்புக் காட்சியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. "மதுரையில் இப்போதும் சிவாஜிக்கு வலிமையான ரசிகர் மன்றங்கள் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள்."
ரசிகர் ஒருவர் எழுதியிருந்த ஸ்லோகனும் சுவையான ஒன்று. "சரித்திரங்கள் மறைவதில்லை.சகாப்தங்கள் முடிவதில்லை." அதே போல் இந்த படத்திற்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. "திரைக்கதை பாதி வேலையை பார்த்துக் கொள்ள கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க,டைரக்டர் என்ற கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபேரஷன்தான்."
நன்றி சதீஷ். நினைவலைகளில் மீண்டும் நீந்த வாய்ப்பளித்த உங்களுக்கு. Tidbits வழங்கிய சாரதிக்கும் நன்றி
அன்புடன்
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
கல்தூண் திரை அரங்குகளில் வெளியாகி சரியாக ஓரிரண்டு வருடங்கள் முடிந்தவுடன் என்று நினைவு. சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது "வளத்த கடா முட்ட வந்தா" பாடல் துவங்கப் போகிறது... எனது தந்தை திடீரென்று என்னைக் கூப்பிட்டு "சைக்கிளை எடுத்து வெளியில் வை நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டும்" என்று கூறினார். நான் வேண்டா வெறுப்புடன் முணுமுணுத்துக் கொண்டே (முக்கியமான காட்சியல்லவா!) சைக்கிளை எடுத்து வெளியில் வைத்து ஸ்டாண்ட் போட்டு, ஞாபகமில்லாமல், சைக்கிளைப் பூட்டாமல் வீட்டினுள் ஓடி வந்து விட்டேன். அற்புதமான பாடலையும், காட்சியையும் தவற விடக்கூடாதே என்று! என் வீட்டிலுள்ள அனைவரும் - என் தந்தையையும் சேர்த்து - அந்தக் காட்சியில் ஐக்கியமாய் விட்டுக் கடைசியில் பாடல் முடிந்தவுடன் திடீரென்று நினைவு வந்தவனாய் வெளியில் ஓடினால், வாசலில் சைக்கிளைக் காணவில்லை! அது என் நீண்ட நாள் கனவு சைக்கிள் - BSA Deluxe - ரொம்ப ஆசையாய் வைத்திருந்த சைக்கிள். அதற்கப்புறம் கிடைக்கவேயில்லை.
அன்புடன்,
பார்த்தசாரதி
-
6th May 2011 10:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks