-
12th August 2011, 09:07 AM
#11
Senior Member
Diamond Hubber
நீரால் உடல்கழுவி நித்தம்நித மூவேளை
சோறால் குடல்கழுவும் சோம்ப பிறவிமலை
சேறாம் இடர்கழுவ சேர்ந்தாயே அண்ணலடி
மாறாச் சுடர் தழுவவே.
நாறென வெள்லெலும்பை நன்கிணைத்து கட்டிவைத்து
நாறிடும் மூட்டைச் சதையொட்டி நீர்க்குருதிச்
சேரனதான எண்சான் உடம்பில் உன் நினைவே
சீருரும் தாமரை யாம்.
தொப்புள் கொடிபுடிச்சி தொத்திவந்த இப்பிறப்பு
எப்ப தொடக்கியதோ எப்போ தடங்கிடுமோ
செப்பவே யாரிருக்கா செப்பனிடா பாதையிலே
செப்பாமே போகுதே தப்பு.
எம்பாவக் கப்பலில் எங்கோ புறப்பட்டோம்
சம்சாரக் கடலில் சருகாய் இடர்ப்பட்டோம்
வெம்பினை காத்து வெரட்டுதே எம்மையே
தம்மபயம் எந்தருளை தா.
நான் கேட்டு உள்வாங்கியதை கொடுத்திருக்கிறேன். பிழையிருந்தால் திருத்தலாம். அடிக்கடி கேட்டு, இருக்கும் நான்கு வெண்பாக்களில் மூன்று (1, 3, 4) மனப்பாடம் ஆகிவிட்டது.
Last edited by venkkiram; 12th August 2011 at 09:28 PM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
12th August 2011 09:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks