-
8th December 2011, 01:52 PM
#11
Senior Member
Veteran Hubber
'மனிதரில் மாணிக்கம்'
இப்படத்தில் நடிகர்திலகம் கௌரவத்தோற்றம் என்றுதான் பெயர். ஆனால் படம் முழுவதும் வருவார். கதாநாயகன் ஏ.வி.எம்.ராஜனுக்கு ரொம்பவே சீரியஸ் ரோல் என்பதால், தனது ஜோவியலான, வித்தியாசமான நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்துபவர் நடிகர்திலகம்தான். ஞாபக மறதிக்காரரான டாக்டர் ரோலில் வெளுத்து வாங்கியிருப்பார்.
(இப்படத்தைப்பார்த்து இதே போல ஒரு ரோலில் நடிக்க வேண்டுமென்று தான் விரும்பியது, 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட 'சுயம்வரம்' படத்தில் நிறைவேறியதாக நடிகர் கார்த்திக் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருந்தாலும், இரண்டு பேருடைய பெர்பாமன்ஸுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையும் கார்த்திக் ஒப்புக்கொண்டிருந்தார்).
சட்டை போடாமல் வெறும் பனியன் மட்டும் அணிந்து, அதன் மேல் கோட்டுப்போட்டுக்கொண்டு, தாடையில் குறுந்தாடியுடன் தோன்றும் அந்த ரோல், அதுவரை நடிகர்திலகம் செய்திராதது. பயங்கரமாக சண்டை நடந்துகொண்டிருக்கும்போது, மாஸ்ட்டர் ராமுவின் கையைப்பிடித்துக்கொண்டு, சண்டையில் அடிபட்டு விழும் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே நடந்துபோகும் இடம் ஒன்று போதும் அவருடைய அப்பாவித்தனத்தைக்காட்ட.
கையில் கத்தியுடன் மிரட்டும் பிரமீளாவின் மிரட்டலுக்குப்பயந்து 'ஐ.வி.ஸிங் ஃபார் யூ' பாடலுக்கு ஆடும்போதும் செம கிளாப்ஸ் வாங்குவார். இறுதிக்காட்சியில் 'லவ் இஸ் காட்' என்று சல்யூட் அடித்து படத்தை முடித்து வைப்பதும் நடிகர்திலகம்தான்.
1973 டிசம்பர் 7 அன்று இப்படம் வெளியானது. சரியாக 15 நாட்கள் கழித்து 22-ம் தேதியன்று 'ராஜபார்ட் ரங்கதுரை' வெளியானது. சென்னை பைலட் தியேட்டரில் ரா.ரங்கதுரை வெளியானதால், மனிதரில் மாணிக்கம் அத்தியேட்டரில் ரிலீஸாகும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்று போடப்பட்டது. வடசென்னையில் ஏழுகிணறு பகுதியில் இருந்த, (புதுப்படங்கள் அபூர்வமாகவே வெளியாகக்கூடிய) ஸ்ரீ முருகன் தியேட்டரில் வெளியானது. அந்த தியேட்டர் அதிபர் திரு பரமசிவ முதலியார் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்.ரசிகர், என்றாலும் நடிகர்திலகத்தின் பழைய படங்கள் நிறைய அந்த தியேட்டரில்தான் பார்க்க முடியும். மனிதரில் மாணிக்கம் புதிய ரிலீஸாக அந்த தியேட்டரில்தான் பார்த்தோம். கிரௌனில் 'கௌரவம்' ஓடிக்கொண்டிருக்க, ஸ்ரீ கிருஷ்ணாவில் 'ராஜபார்ட் ரங்கதுரை' வெளியானது. கௌரவமும், ராஜபார்ட்டும் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அகஸ்தியாவில் 'சிவகாமியின் செல்வன்' ரிலீஸாகி விட்டது. ரசிகர்களுக்கு ஒருபக்கம் கொண்டாட்டம். இன்னொருபக்கம், இப்படி கியூவில் படங்கள் ரிலீஸாகிறதே என்ற வருத்தம்.
பின்னர் வீடியோ யுகம் வந்த பிறகு, வீடியோ கேஸட்டில்தான் மீண்டும் 'மனிதரில் மாணிக்கம்' பார்க்க முடிந்தது.
-
8th December 2011 01:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks