-
2nd April 2012, 02:08 PM
#11
Senior Member
Seasoned Hubber
புதிய பறவை திரைப்படத்தை நவீன ஒலி மயமாக்கலில் ஈடுபட உள்ளதாக வந்துள்ள தகவல் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபக்கம் சற்று நெருடலாக உள்ளது. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஈடிணையற்ற மேதைகளின் உழைப்பில் நிகரில்லாத இசையமைப்பில் வந்தபடம் புதிய பறவை. எந்த அளவிற்கு நடிகர் திலகம் அந்தப் படத்திற்கு காரணமோ அதே அளவிற்கு மெல்லிசை மன்னர்கள் பங்கு வகித்த படம். தற்போதைய டிஜிட்டல் கர்ணனில் பின்னணி இசை ஏமாற்றமே. இருந்தாலும் படத்தின் புராண கதையமைப்பில் மக்கள் அதைப் பொருட் படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் புதிய பறவை அப்படியல்ல படம் முழுதும் பின்னணி இசை கொடி கட்டிப் பறந்த படம். குறிப்பாக பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் முடிந்த வுடன் கிளப்பில் நடிகர் திலகம் சௌகார் உரையாடும் போது பின்னணியில் ஹென்றி டேனியலின் குரலில் ஒலிக்கும் பாப்பிசை அந்தக் காட்சிக்கு ஜீவனுள்ளதாய் இருக்கும். இது போல் படம் முழுவதும்.
சொக்கலிங்கம் சார், நீங்கள் இறங்குவது விஷப் பரீட்சை. புதிய பறவை படத்தை அவசர கதியில் செய்ய வேண்டாம். ஐந்து ஆண்டுகளானாலும் பரவாயில்லை. ஒரிஜினல் இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்களிடமே முழுப் பொறுப்பையும் தந்து விடுங்கள். [என்ன தான் அவர்களே செய்தாலு்ம் அந்த ஒரிஜினாலிட்டி வராது என்பது வேறு விஷயம்], இருந்தாலும் அவர்கள் இருவரும் இறையருளால் நம்முடன் உள்ளதால் அவர்கள் நிச்சயம் சிறப்பாக செய்து தருவார்கள். இனிமேல் வேறு யாரிடமும் தந்து விஷப் பரீட்சை செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் மட்டுமல்ல பல்லாயிரம் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதையும் மீறி செய்வீர்களானால் நிச்சயம் மிகப் பெரிய கலைஞர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகத் தான் இருக்க முடியும்.
Last edited by RAGHAVENDRA; 2nd April 2012 at 02:11 PM.
-
2nd April 2012 02:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks